recent posts...

Monday, January 30, 2012

இளையராஜா ரசிகர்களுக்காக

ஜெயா டிவியில் இளையராஜாவின் 'என்றென்றும் ராஜா' பார்த்ததிலிருந்து, தூங்கிக் கொண்டிருந்த சிங்கம் சிலுப்பி எழுந்த கதையா, ராஜா ராஜா ராஜான்னு, அவரின் பாடல்களையும், அவரைப் பற்றிய செய்திகளையும் அசை போட்டபடி இருந்தேன்.

அப்பொழுது கண்ணில் பட்ட இந்த பதிவுகள், இளையராஜாவின் ரசிகர்கள் கண்டிப்பாய் படித்து, பார்த்து, இன்புற வேண்டியவை என்று இங்கு லிங்க்குகிறேன்.

படித்து இன்புறுங்கள்.
source: DG Arts

1) கோபிநாத்தின் - என்றென்றும் ராஜா - ஆசீர்வதிக்கப்பட்டவன்
ஜெயா டிவி நிகழ்ச்சியின் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து சிலாகித்து எழுதியிருக்கும் விதம் ரொம்ப அழகு.

2) இளா பதிவில் - "தென்றல் வந்து தீண்டும்போது" பாடல் பிறந்த கதை.. !
நாசருக்கு, அவதாரம் படத்தில் வரும் 'தென்றல் வந்து தீண்டும் போது' பாடலை ராஜா இசை அமைத்து கொடுத்த கதை. சிம்ப்ளீ சூப்பர்ப். ராஜா ரசிகனுக்கு, புல்லரிக்கும், கண்ணில் நீர் சுரக்கும். ஸ்ஸ்ஸ்ஸ். அடேங்கப்பா. ராஜா ராஜாதான்!!!!

அவரின் தனிப் பட்ட குணம், குறை, நிறைகளை கணக்கில் கொள்ளாமல் பார்த்தால், இளையராஜா நம் சமூகத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வரப்ப்ரசாதம்.
வாழ்க வளர்க. What a Genius he is!

1 comment:

கோபிநாத் said...

நன்றி தல ;-)

நேரடியாக சென்று கிடைத்த அனுபவம் இது 2வது முறை!

ஜெயா டிவியில் நிகழ்ச்சி போடும் போது 2 பாடல்கள் இல்லை.

1. நினைவோ ஒரு பறவை - யுவன்
2. ஜேசுதாஸ் பாடிய - வச்ச பார்வை தப்பாதடி

இந்த செய்தியையும் பாருங்கள்
http://tamil.oneindia.in/movies/specials/2012/01/joining-with-ilayaraja-is-my-dream-aid0136.html


மீண்டும் நன்றி ;-)