recent posts...

Thursday, January 22, 2009

கூகிள் துட்டு தர ஆரம்பிச்சாச்சு?

***************
latest update: Ads stopped working, probably due to the budget limits of the sponsors who subscribe to Tamil/Indie keywords ;)
welcome back, charity ads ;)
***************
ப்ளாக் எழுதர நம்மில் பலருக்கு, பொழுது போக்குடன், கொஞ்சம் சில்லரையும் தேறினால், வருஷத்துக்கு ஏதாவது ஒரு போட்டி வச்சு, வரும் $ஐ மத்தவங்களுக்கு பகிர்ந்து கொடுக்க முடியும்.

சில்லரை நோட்டா மாறினா, புது பீமர் வாங்க தோதுவாவும் இருக்கும். ஜஸ்ட் 95 லட்சம் ரூவாய் தான் லேடீஸ் & ஜெண்டில்மென் :)

வளர்ந்து வரும் எழுத்தாளர்களாகிய நாம், பின்னாளில், புகழேணியில் ஏறி கரன்ஸி மழையில் நனையப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

உங்க நெலம எப்படீன்னு தெரீல, எனக்கு மாசத்து 18 காசு தேறிட்டு வருது. இதே ரேஞ்சுல போனா, 2020க்குள்ள எப்படியும், மாசத்துக்கு ரெண்டு ரூவா வர அளவுக்கு உயர்ந்துடுவேன்.

பெரிய அளவில் சில்லரை தேறாததர்க்கு காரணம், தமிழ் பதிவில் விளம்பரங்கள் போட சுலபமான வழி இருந்ததில்லை.

கூகிள் மாதிரி விளம்பர விநியோகிகள், டமில் பதிவில், அவர்களின் நிரலை போட்டால், அடித்து ஓய்ந்து முடித்த காட்ரீனா புயலால் ஏற்பட்ட வெள்ள நிவாரணத்துக்கு இன்னும் துட்டு கேட்டு வரும் சாரிட்டி விளம்பரங்கள் மட்டுமே காட்டிக்கிட்டு, சில்லரை தேறும் விளம்பரங்களை போடாம ஓர வஞ்சனை செஞ்சுட்டு வந்தாங்க.

இதுக்கு முக்கிய காரணம், டமில் கீ-வேர்டுகளை, எந்த நிறுவனமும் பணம் கொடுத்து வாங்காததால் கூட இருக்கலாம்.

ஆனா, சமீபத்தில், டமில் விளம்பரங்களை, கூகிள் நிரல் தர ஆரம்பித்துள்ளது.

என் பதிவில் பாத்தீங்கன்னா, பதிவின் தலைப்புக்கு மேலே ஒண்ணு, நடூல ஒண்ணு, கீழே ஒண்ணுன்னு , மொத்தம் மூணு வெளம்பரம் போட்டிருக்கேன்.
அப்பன் மகரன்நெடுங்குழைநாதன், அருளிருந்தா, இந்நேரம் உங்களுக்கு, அந்த மூன்றிலும், நம்மூர் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு விளம்பரம் தெரிய வாய்ப்பிருக்கிறது.

மகரநெடுங்குழைநாதனும், கூகிளும் சதி செய்யும் பட்சத்தில், உலகில் ஏதோ ஒரு மூலையில் அடித்து ஓய்ந்த புயலோ வெள்ள நிவாரணத்துக்கோ துட்டு சேகரிக்கும், கூகிளின் ஓசி விளம்பரம் தான் தெரியும்.

நீங்க டமில் பதிவரா? நீங்களும் கூகிள் adsenseஐ முயன்று பாருங்கள்.
நிரலை, adsense தளத்திலேயே உருவாக்கிக் கொள்ள முடியும்.
ஆனா, ஒரு சில layout மட்டுமே வேலை செய்யுது டமில் பதிவுகளில்.
கீழே உள்ள 480_60 எனக்கு வேலை செய்யுது.

உங்களின் கூகிள் ஐடியை XXXXXXக்கு பதிலா போட்டு உபயோகிச்சுப் பாருங்க.

மச்சமிருந்தா, துட்டு தேறும்.

தேறும் துட்டில் ஒரு 25%ஐ உதவும் கரங்கள் மாதிரி ஆளுகளுக்கு அர்ப்பணம் பண்ணுங்க, உங்க உண்டியில் ஃபாஸ்டா நிறைய எல்லாம் வல்ல ம.நெ அருள்புரிவார் ;)

20 comments:

நட்புடன் ஜமால் said...

துட்டு நமக்கு எப்படி அனுப்பபடுகிறது

SurveySan said...

ஜமால்,

இந்தியாவில் எப்படின்னு தெரீல, இங்க அமெரிக்காவில், துட்டு வீடு தேடி வரும் $100 தாண்டியதும்.

செந்தழல் ரவி said...

///100s Pretty Ladies
They are looking for a Husband Marry a Latin Beauty Queen! ///

எனக்கு இந்த விளம்பரம் வருது

SurveySan said...

ரவி, வெவகாரமா இருக்கே வெளம்பரம்.

உரல் என்னாது? ;)

SurveySan said...

எனக்கு carwale.com, matrimony, propertie in Indiaன்னு ரொம்ப தொடர்புள்ள விஷயங்களா வருது.

நிலா பிரியன் said...

Focus Lanka திரட்டியிலும் இணைந்து கொள்ளுங்கள்
http://www.focuslanka.com

Sheae said...

eTamil pays you $1/month to place their ad on the side bar. Check out their terms....eTamil promotion

ஷாஜி said...

என்னோட blog - Google Adsense Support பன்னல. அத்ற்கு அவர்கள் கூறும் காரணம் இதான்..

'Unsupported Language: We've found that the majority of your site's
content is in a language we do not currently support. '

கொஞ்சம் Help பண்ணுங்க பாசு...

ஷாஜி said...

//கூகிள் ஐடியை XXXXXXக்கு பதிலா போட்டு உபயோகிச்சுப் பாருங்க.//

என்னோட கூகிள் ஐடியை எப்படி கண்டுபிடிப்பது...

SurveySan said...

ஷாஜி,

////என்னோட blog - Google Adsense Support பன்னல. அத்ற்கு அவர்கள் கூறும் காரணம் இதான்..

'Unsupported Language: We've found that the majority of your site's
content is in a language we do not currently support. '
////

quick cheat is to create a english blog and use that to obtain the adsense account.

once you create the adsense account, then youu can use their scripts on any blog page.

adsense id is the one which shows up on top once you sign into to adsense.google.com.
value will be like this pub-9999999999999999

good luck.

SurveySan said...

IT DOES WORK! ;)

out of 650+ views on this page, 13 punniyavaangal, found the 'ads' interesting and clicked it.

chillarai in my undiyal.

guys, try adsense. worth a try.

The Rebel said...

I never utilised Google Adsense in my Tamil Blog as there were no genuine ads from google.There are lots of tricks for earning money in adsense but experienced guys wont let them out.You will have to figure it out yourself.

SurveySan said...

Rebel,

good choice.

I am back with 'charity ads' :)

SurveySan said...

ads started working again.

strange phenomenon. i think googlies are debugging ;)

தமிழ்நெஞ்சம் said...

quick cheat is to create a english blog and use that to obtain the adsense account.

தமிழ்நெஞ்சம் said...

அட இடையிடையே சில ஆங்கில keywords ஐ செருகிவிட்டால் அதுக்கு ஏற்றார்போல ஆங்கில விளம்பரங்கள் வருதுங்க

என்னுடைய SQL தொடரில், SQL விளம்பரங்களும், Antivirus பதிவில் அதுசம்பந்தமான விளம்பரங்களும் வந்தன. காரணம் நான் அதில் பயன்படுத்திய ஆங்கில keywords

Antivirus என்பதை வைரசு எதிர்ப்பான் அப்படின்னு போட்டிருந்தால் பொதுச்சேவைதான்.

மாயவரத்தான்.... said...

என்னது, தூய தமிழிலே எழுதினா கூகுள் ஒத்துக்க மாட்டேங்குதா? மக்களே விடக்கூடாது இதை. சரியான சான்ஸ். நம்ம தானாத் தலைவரை கூப்பிட்டா கூகுளுக்கு எதிரா போராட்டம் அறிவிச்சுடுவாரு. ஈழப்பிரச்னையெல்லாம் தள்ளிப் போயிடும்.

Nandhan Sp said...

Hi,

I was reading some immigration stuff today and thought about you.
Do you know this is legal to do? it varies based on the Visa type you have...mail me and i will share what i have found...If you are a GC holder...ignore me..

Thanks.

SurveySan said...

good point nandhan.

for H1B holders it may be illegal to do a 2nd job.

Nandhan Sp said...

Yes it is...

For more details. See Here and Here ..

Thanks for listening.