விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் உண்ணா-நிலை (உண்ணாவிரதம்) பற்றி அறிந்திருப்பீர்கள்.
சாகும்-வரை உண்ணாநிலை இருக்கப் போகிறேன் என்று அறிவித்தவர், நாலு நாட்கள் முடிந்ததும், தனது சகாக்களின் தீவிர வேண்டுதலின் காரணத்தினாலும், ராமதாசின் அறிவுரைப் படியும், தனது உண்ணா நிலையை முடித்துக் கொண்டாராம்.
மேல் விவரங்கள் இங்கே.
உண்ணாவிரதம் ஒன்றும் நமக்குப் புதிதல்ல.
காந்தியின் முக்கிய ஆயுதத்தில் உண்ணாவிரதமும் ஒன்றாக இருந்தது. பதினேழு முறை உண்ணாவிரதம் இருந்திருக்கிறாராம்.
மூன்று நாட்கள் முதல் மூன்று வாரம் வரை நீண்டிருக்கிறதாம் இவரின் உண்ணா நிலை நாட்கள்.
வெற்றிகரமாக, இவர் நினைத்தது நடக்கும் வரை தன் உண்ணாவிரதத்தை விடாமல் கடைபிடிப்பாராம். முக்கியமாக, இனவெறியாட்டம் தலையெடுத்தப் போது, இவரின் உண்ணாவிரதம் பெரூம் தாக்கத்தை ஏற்படுத்தி, பல உயிர் அழிவை தடுக்க உதவியது.
காந்திக்குப் பிறகு, நமது ஊர் அரசியல்வாதிகள், பலரும் பல ஆயிரம் முறை உண்ணாவிரதம் என்ற ஸ்டண்ட்டை அடித்து அரங்கேற்றியுள்ளார்கள்.
சொல்லி வைத்த மாதிரி, இவங்க வற்புறுத்தினாங்க, அவங்க வற்புறுத்தினாங்கன்னு, ஆட்டத்தை ரெண்டு மூணு நாளுல கலச்சிருவாங்க.
இப்படி கலைக்கிரது ஒண்ணும் தப்பில்லை.
அவங்க, கருத்தை ஊர் கேக்க, உண்ணாநிலை நல்ல ஒரு விளம்பரத் தளமா இருந்து உதவுது.
ஆனா, இப்படி அடிக்கடி ஆளாளுக்கு உ.நி செஞ்சு செஞ்சு, நம்ம பொதுசனத்துக்கு, உ.நி மேல் ஒரு பெரிய அனுதாபம் எல்லாம் மலையேறி பல காலமாயிடுச்சு.
க்ளைமாக்ஸ்ல என்னா நடக்கும்னு ஈஸியா புரிஞ்சிடர விஜய் படம் மாதிரி, இப்ப வரும், உ.நி'க்கள் மேல் சுவாரஸ்யமும் பெரிய நாட்டமும் இல்லாமல் தான் மக்கள் இருக்கிறார்கள்.
அங்கே நிமிஷத்துக்கு ஒரு குண்டு வெடிச்சு, குழந்தைகளும் பெண்களும் பதுங்கி பதுங்கி ஓடிக்கொண்டிருக்க, இங்கே வில்லு, படிக்காதவன் பாத்து பொழுது கழிக்கரவங்கதான் எல்லாரும்.
அந்த காலத்துல காந்தி உ.நி இருக்கும்போது, ஊர் மக்கள் எல்லாருமே, பங்கு கொள்ளும் விதமாக, அவரை சுத்தி ஒக்காருவாங்க. நேர்ல வர முடியாதவங்க, வீட்ல வெளக்கை எரிச்சு வெப்பாங்களாம், ராத்திரி முழுக்க.
இலங்கைத் தமிழர்கள் ப்ரச்சனைக்கும், ஏதாவது தீர்வு வரணும்னா, உலகளாவிய லெவலில், தமிழர்கள், தங்கள் கலக்கத்தை வெளிக்காட்டணும்.
மௌன ஊர்வலங்கள் மூலமும், லோக்கல் ஊடகங்கள் மூலவும் ஆதரவு திரட்டணும்.
அமெரிக்க வாழ் டமிலர்கள், ஒபாமா பதவியேற்புக்கு செல்லும் வழியில், பெரிய பேனரை, பிடித்து அவருக்கு தெரிவிக்கலாம்.
அத்த விட்டுட்டு, நமக்கெல்லாம், புளிச்சுப் போன, உ.நி செய்வதால், யாதொரு ப்ரயோஜனமும் இல்லை.
அதுவும் இல்லாம, இந்த உ.நியைத் தொடர்ந்து, சில விஷ ஜந்துக்கள் செய்யும், பஸ் எரித்தல், கடை உடைத்தல் எல்லாம், சாமான்யனுக்கு எரிச்சலை கிளப்பும் செய்கைகள்.
இப்ப, அடுத்ததாக, டோட்டல் தமிழகமே ஸ்தம்பிக்கும் விதத்தில் ஒரு பந்த் நடத்தணும்னு பேசிக்கிட்டு இருக்காங்களாம்.
ஆட்சியில் இருப்பவர்களே, இப்படி போராட்ட வழியில் தான் தங்கள் எதிர்பை தெரிவிக்கணும்னா, என்னாங்க ஊரு இது?
பொதுமக்களாகிய நாம், இதில் ஒரு மாற்றம் கொண்டு வரணும்னு நெனச்சா, நூதனமா ஏதாவது செஞ்சாதான் உண்டு.
உதாரணத்துக்கு:
டமிலர்கள் அனைவரும், ஒரு மாசத்துக்கு,
அ. டி.வி பெட்டியை மொத்தமாக ஆஃப் செய்து விடுதல்.
ஆ. எந்த ஒரு புதிய பொருளையும் வாங்காது இருத்தல்
இ. சொந்த வாகனங்களை பூட்டி வைத்து, பெட்ரோல் உபயோகிக்காமல் இருத்தல்
ஈ. நேஷனலைஸ்ட் வங்கியிலிருந்து, பணத்தை மொத்தமும் உருவி, வேறு மாநில வங்கிகளுக்கு மாற்றுதல்
இன்னும் ஐடியாஸ் அள்ளி வீசுங்க.
என்னமோ போங்க.
ஆமாங்ங்ங்ங், திருமாவின் உ.நி பத்தி நீங்க என்னா நெனைக்கறீங்க?
24 comments:
போட்டு விட்டேன் ஓட்டு
வாக்குப் பொட்டியிலும்
பதிவின் சுட்டியிலும்:)!
பாவம் குருமா ச்சே திருமா. அவரே தனது கட்சி கரைவதை தடுக்க ஏதேதோ Stunt அடித்து பார்க்கிறார். ஒன்னும் நடந்த பாடில்லை.
ஈழத்தமிழர் பிரச்சனையாவது கை கொடுக்குமா என்று பார்க்கிறார்.
//இப்படி அடிக்கடி ஆளாளுக்கு உ.நி செஞ்சு செஞ்சு, நம்ம பொதுசனத்துக்கு, உ.நி மேல் ஒரு பெரிய அனுதாபம் எல்லாம் மலையேறி பல காலமாயிடுச்சு.
க்ளைமாக்ஸ்ல என்னா நடக்கும்னு ஈஸியா புரிஞ்சிடர விஜய் படம் மாதிரி, இப்ப வரும், உ.நி'க்கள் மேல் சுவாரஸ்யமும் பெரிய நாட்டமும் இல்லாமல் தான் மக்கள் இருக்கிறார்கள்//
நாட்டில் நிலையை எண்ணி வருத்தம் இருந்த போதும் இந்த நடைமுறை உண்மை சிரிப்பை வரவைத்தது.
இவற்றை இவர்கள் புரிந்து தான் செய்கிறார்களா??புரியாமல் செய்கிறார்களா??
இதை அவர்கள் கோமாளிக் கூத்து என விமர்சிக்காமல் இருப்பார்களா??
ராமலக்ஷ்மி நன்றி.
தீர்வுக்கு நூதன ஐடியாஸ் ஒண்ணும் அள்ளி வீசிலியே? ;)
Rajaraman,
///ஈழத்தமிழர் பிரச்சனையாவது கை கொடுக்குமா என்று பார்க்கிறார்.///
ஈழத்தமிழர் ப்ரச்சனையை வைத்து ஆதாயம் தேடுவது உண்மையென்றால், அது படுகேவலம் ;(
யோகன் பாரிஸ்,
////இதை அவர்கள் கோமாளிக் கூத்து என விமர்சிக்காமல் இருப்பார்களா////
அரைகுறையா சப்புன்னு முடியும் உ.நிக்களை கோமாளிக் கூத்துன்னு சொல்றது தப்பில்லை.
//அ. டி.வி பெட்டியை மொத்தமாக ஆஃப் செய்து விடுதல். //
நல்லா ஐடியா கொடுக்கிறீங்க போங்க:)
ராஜ நடராஜன்,
///நல்லா ஐடியா கொடுக்கிறீங்க போங்க:)///
கண்டிப்பா வர்க்.அவுட் ஆகர ஐடியான்னு பட்சி சொல்லுது ;)
பொதுமக்கள் ஒவ்வொருத்தரும் ஒத்துழைச்சு எதையாச்சும் செய்யலன்னா இதுக்கெல்லாம் விடிவே கிடையாது.
திருமா போன்ற தமிழ் தலைவர்கள் இலங்கை தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதம்/போராட்டம் இருந்தால் உடனே வோட்டுக்காகனு சொல்லிடவேண்டியது, தமிழுக்கும் தமிழ் மொழிக்கும் ஒருத்தன் நல்லது பண்ணினா உடனே வோட்டுக்காகனு வச பாடவேண்டியது,
இதை நாங்கள்
வன்மையாக கண்டிக்கிறோம்
தாமிரபரணி,
சாகர வரைக்கும் கால வரை இறுதியற்றன்னு பில்ட்-அப்பெல்லாம் கொடுக்காம, அடையாள உ.விரதம்னு சொல்லி இருந்திருந்தா, கொஞ்சம் மரியாதை இருந்திருக்குமோ என்னமோ.
ஓவர் பில்ட்-அப் கொடுத்தா இதுதான் ப்ரச்சனை.
மக்கள் இது பத்தி என்ன சொன்னாலும் கேப்பார்கள். அரசியல்வாதிகள்? அவர்களை செய்யச்சொல்லுங்கள்...மக்களும் செய்வார்கள். குறைந்த பட்சம் ஒரு மாதம் எந்த விழாக்களும் வேண்டாம்.
பொன்னாடைகளை விரித்து போத்தக் கூட அவகாசம் கொடுக்காமல் அப்படியே வாங்கி..வாங்கி பின்னால் கொடுப்பதைவிட அந்தக்க்காசை இலங்கைத் தமிழர் நிதிக்குக் கொடுக்கலாம். (உண்மையில் அவைகள் அப்படியே வாங்கிய கடைகளுக்கேப் போய் ரீஃபண்ட் வாங்கி சம்பந்தப்பட்டவர் பாக்கெட்டுக்கே போகும் அவலத்தை என்ன சொல்ல?)
பொதுக்கூட்டங்களுக்கு செலவிடும் மின்சாரத்தை சேமிக்கலாம்.
இன்னும் என்னென்னவோ செய்யலாம்.
அவர்களை ச்ய்யச் சொல்லுங்கள், நாங்களும் செய்வோம். சேரியா?
மொத்தத்தில் உ.வி. என்பதே கேலிக்கூத்தாகிவிட்டது. இரவில் ஒரு வெட்டு வெட்டிவிட்டு பகலில் சோர்வாக படுத்துக்கொள்ளுபவர்களைப் பார்க்கும் போதே.....!!
எனக்குத் தெரிஞ்சி திருமா மட்டும் தான் உண்மையா இலங்கை தமிழர்களுக்காக பாடுபடுறார். மத்த எல்லோருமே அரசியல் தான். எல்லோரும் உண்மையா எதாவது பண்லாம்னா
1) நாம தேர்தல புறக்கணிக்கலாம்
அது நடக்கலேனா,
2) நம்ம MP எல்லாம் செண்ட்ரலுக்கு ஆதரவு தராம இருக்கலாம்.
ஆனா இந்த ரெண்டுமே உண்மையான மனசோட பண்ணனும். பேரும் புகழும் இருக்ற நம்ம சினிமா நடிகர்கள் ஏதாவது பண்ணுவாங்கனு பாத்தா, அஜித் என்ன சொன்னாரு? "சினிமாவ வாழ விடுங்க" னு சொல்லிட்டு போனாரு. எல்லாமே சுயநலமாத் தான் இருக்கு.
எனக்கு தெரிஞ்சி நாம ஒன்னும் பண்ணலேனா கூட பரவாலேங்க, ஆனா இதை வெச்சி அரசியலோ, ஆதாயமோ தேடாம இருந்தாலே நல்லது.
Nanani,
//அவர்களை ச்ய்யச் சொல்லுங்கள், //
avanga seyya maattaangannudhaan nallaa theriyume :(
Truth,
///1) நாம தேர்தல புறக்கணிக்கலாம்///
very good idea. If central fails srilankan tamils, boycotting election is the best thing we could do.
Truth,
///1) நாம தேர்தல புறக்கணிக்கலாம்///
very good idea. If central fails srilankan tamils, boycotting election is the best thing we could do.
நான் கூட இவர் பேசியதை பார்த்து உண்ணாவிரதம் உறுதியா தொடரும்னு நினைத்தேன் (நம்பிட்டேன்)
கிரி,
///நான் கூட இவர் பேசியதை பார்த்து உண்ணாவிரதம் உறுதியா தொடரும்னு நினைத்தேன் (நம்பிட்டேன்)//
hm. its interesting to see 33% think otherwise.
//தீர்வுக்கு நூதன ஐடியாஸ் ஒண்ணும் அள்ளி வீசிலியே? ;)//
பெரிய சாதனை செய்வதாய் நினைத்துக் கொண்டு தேவையில்லாத ரோதனை தருபவர்களால் சோதனை மேல் சோதனைதான், அதாங்க
//இப்ப, அடுத்ததாக, டோட்டல் தமிழகமே ஸ்தம்பிக்கும் விதத்தில் ஒரு பந்த் நடத்தணும்னு பேசிக்கிட்டு இருக்காங்களாம். //
இவங்களைத் திருத்த எந்த நூதன ஐடியாவை நாம யோசிச்சாலும் அதிநூதன ஐடியாவால் திருப்பி அடிக்கறாங்களே:(!
//என்னமோ போங்க//!
நீங்க சொன்னதேதான்!
//இவங்களைத் திருத்த எந்த நூதன ஐடியாவை நாம யோசிச்சாலும் அதிநூதன ஐடியாவால் திருப்பி அடிக்கறாங்களே:(!
//
very True!
can u please tell me how to blog in tamil.
mayavi, create a account with blogger.com.
download ekalappaai to type in tamil.
or use sites like higopi.com to type in tamil.
you can add your site to tamilmanam.net to get hits :)
more useful info here
http://kasilingam.com/wiki/doku.php?id=tamil_blogging
Thanks for you input, i did download ekalappai and intalled it. but how to type in tamil ?? sorry i am very raw to it. hope not wasting ur time.
mayavi,no worries.
launch ekalappai
enter alt+2
and you will be able to type in tamil.
அட உ.விக்கு வந்த கொடுமைய என்னன்னு சொல்றது?
இப்ப பு.தலைவியும் ஆரம்பிச்சுட்டாங்க.
ஆனா, இவங்க பரவால்ல, சாகும்வரைன்னு பில்ட்-அப்பெல்லாம் கொடுக்காம, lunch மட்டூம்தான் ஸ்கிப்பிங்னு முன்னாடியே சொல்லிட்டாங்க.
லன்ச், ஸ்கிப் பண்றது, டமில்நாட்டுல, 70% ஆளுங்க, அன்றாடம் பண்ற விஷயம்தானுங்கோ ;;)
As the election fever spreads across the country, politicians are doing all they can to ensure they do not lose their bastion. AIADMK Chief Jayalalithaa will go on a hunger strike in Chennai on Monday for the Lankan Tamil cause. She will fast from 9 am to 5 pm.
Post a Comment