BayAreaவின் உயரமான மலை இதுதான். இதன் உச்சியில்தான் ஒரு பெரிய டெலஸ்கோப் வச்சு நட்சத்திரம் கோள்களை எல்லாம் ஆராயராங்க.
இந்த இடத்தை பத்திய மேல் விவரங்கள் இங்கே படிச்சுக்கலாம்.
நாங்க இருக்கர வ.கலிஃபோர்னியாவில் Snow பாக்கணும்னா, இந்த மாதிரி ஏதாவது மலை உச்சிக்கு போனாதான் உண்டு.
மேலே போக 25 மைல் ஓட்டணும். கொஞ்ச திகிலான ரூட்டு. சாலை ஓரத்தில் அதள பாதாளம் பல இடங்களில், ஓரச்சுவர் இல்லாமல் இருக்கும்.
திரில்லிங்கா இருக்கும்.
நாங்க மேலே போகும்போது, மலை முழுவதும், பனி மூட்டமும், மேகக் கூட்டங்களும். ஒண்ணுமே கண்ணுக்குத் தெரியாம இருந்தது.
என்னடா கொடுமை இது, உயிரை பணயம் வச்சுக்கிட்டு இவ்ளோ தூரம் ஒட்டிக்கிட்டு வந்தா, இப்படி அல்வா ஆயிடுச்சேன்னு நெனச்சுக்கிட்டே அன்னிக்கு weather என்னான்னு கைத்தொலைப்பேசியில் பாத்தா, இன்னும் ஒரு மணி நேரத்தில் சூர்யன் வந்துடுவான்னு போட்டிருந்தது. சரி வந்ததுதான் வந்துட்டோம், வெயிட் பண்ணிப் பாப்போம்னு வெயிட்டினா, சரியா ஒரு மணி நேரத்தில், சூரியன் மெதுவா வந்து, பனி மூட்டத்தை துடைச்சுப் போட்டுது.
அடேங்கப்பா! அதுக்கப்பரம் பார்த்த காட்சிகள் தான், க்ளிக்கி கீழே போட்டிருக்கேன்.
நான் நின்றிருந்த இடத்துக்குக் கீழே மட்டும் மேகக் கூட்டம். Heavenly scenery!
அதை HDR ஆகவும் க்ளிக்கினேன். சாதா மோடிலும் க்ளிக்கினேன்.
சில படங்கள் பார்வைக்கு. ( 2008ல் சிறந்த படங்களைப் பாத்தீங்களா? )
(click to view in flickr)
1) HDR

2)

7 comments:
பட்டைய கிளப்புது படங்கள்....
//Heavenly scenery!//
உண்மைதான் எனப் படங்களும் சொல்கின்றன.
அருமை.
நல்ல தீனிதான் உங்களுக்கும் உங்கள் காமிராவிற்கும்.
இரண்டாவது படம் மேகத்தில் அமர்ந்து எடுத்ததைப்போல் உள்ளது.
Great scenes. :)
அருமையான புகைப்படங்கள்
flickr க்கு துபாயில் தடை போலிருக்கு.:-(
ரசனையான க்ளிக்குகள் ... jooper
ரொம்ப நல்லாயிருக்கு சர்வேசன்.
ரெண்டாவது படத்த விட முதல் படம் நல்லாயிருக்கு.
photomatix யூஸ் பண்றீங்களா? ரெண்டாவது ஃபோட்டல photomatixனு வாட்டர்மார்க் காணலியே
Post a Comment