தலைப்பை 'ஓப்பனா' விட்டுருக்கோம்.
இதுவரை நீங்க எடுத்த படத்துல எது சூப்பர்னு தோணுதோ, அதை போட்டிக்கு அனுப்பலாம்னு சொல்லியிருக்கு.
இதுவரைக்கும் எடுத்தது எதுவும் 'நச்னு' இல்லன்னா, புச்சா புடிச்சு அனுப்பலாம்னும் சொல்லியிருக்கு.
சரி, நான் எடுத்ததில் எதாவது தேறுதா பாக்கலாம்னு என் ஃபோல்டரை நோண்டிப் பார்த்தேன்.
சுமார் 4000 படங்கள் சென்ற ஆண்டு மட்டும் க்ளிக்கித் தள்ளியிருக்கேன் :)
ஹி ஹி. இதுல ஆச்சரியம் என்னன்னா, ஓரளவுக்கு சிறப்பா வந்த படங்கள், இந்த நாலாயிரத்தில், விரல் விட்டு எண்ணும் அளவுக்கு மிகவும் சொற்பமானவையா இருக்கு ;)
வரும் ஆண்டில், இந்த ஹிட்-ரேஷியோவை பல மடங்கு மேம்படுத்தணும் என்ற குறிக்கோள் இருக்கு. பாப்போம் முடியுதான்னு.
(விளம்பரம்: எல்லாராலையும் எல்லாமும் முடியும்னு நான் அள்ளி வுட்ட success formula அட்வைஸு படிகாதவங்க, இந்த நேரத்துல அத்த படிச்சுடுங்க)
உங்க ஹிட்-ரேட் நெலம எப்படி இருக்கு? எவ்ளோ ஆயிரம் புடிச்சீங்க, எவ்ளோ தேறிச்சு. சொல்லிட்டுப் போங்க.
PiT போட்டிக்கு படம் அனுப்பவதோடு நின்று விடாமல், இந்த மாதிரி ஒரு பதிவையும் போட்டீங்கன்னா interestingஆ இருக்கும் :)
சரி, இனி, ஜல்லடை போட்டு அலசியதில் ஆப்ட சில படங்கள் உங்க பார்வைக்கு.
சென்ற ஆண்டின் சிறப்பான படமாய் நான் எண்ணுவது, மேக்ரோ நுட்பத்தைக் கற்றுணர்ந்து நான் க்ளிக்கிய அரிசி படம். நீல நிற ப்ளாஸ்டிக் மூடி மேல் சில அரிசிகளைப் போட்டு, என் கேமரா லென்ஸை தலைகீழா திருப்பிப் போட்டு மேக்ரோவாக்கிய படம் இது.
இதுவே சென்ற ஆண்டின் என் 'சிறந்த படமாய்' நான் எண்ணுவது.
1. அரிசி: (click to view in flickr)

மற்ற சில கொசுறு படங்கள்:
2. இன்னொரு மேக்ரோ:

3. இது HDR:

4. இது பூ:

5. இது இன்னொரு பூ:

6. இது பிற்தயாரிப்பு:

7. இது கட்டமைப்பு:

26 comments:
முதல் படம் மிக அருமை.
மற்றவையும் நன்றாகவே உள்ளது.
ஜமால், நன்றி.
திரட்டி வாக்கெடுப்புக்கு வாக்காதவங்க வலது பக்கம் வாக்கிடுங்க;
க்யூப் படத்தில் நிழல் மட்டும் எப்படி வண்ணமாக இருக்கு ?
பூ படம் அருமையா இருக்கு.
என் கதையைக் கொஞ்சம் கேளுங்க.....
டிஜிட்டல் வந்தாலும் வந்ததுன்னு எக்கச்சக்கமா எடுத்து வச்சுருக்கு. எண்ண முடியலை. ஆனால் 29 GBன்னு சொல்லுது.
எதைத் தெரிஞ்சுஎடுக்கணுமுன்னு நினைச்சாலே தலை சுற்றல். ஒன்னும் தேறாது போல(-:
கோவி, பாடம் இங்கே இருக்கு
http://photography-in-tamil.blogspot.com/2007/12/selective-coloring-draft.html
துளசி கோபால்,
29GBயா? அடேங்கப்பா. என்னுது 12gb 2தான் ஆயிருக்கு ;)
ஜமாய்ச்சிருக்கீங்க போல.
ஷட்டர் பொத்தான் இருந்த எடத்துல பள்ளமாயிருக்குமே உங்க கேமரால ;)
இருந்தாலும், மனம் தளராமல், ஒரு படத்தை தேடிப் புடிச்சு பதிவேத்துங்க.
3 கெமெராவை வச்சுச் சுத்திச்சுத்தி ஆடி இருக்கேன்:-)
அதுலே ஒரு 10GB நம்ம கோகி. என்னோட மாடல் மியாவ்:-)
ஒரு 7 GB பூக்களும் தோட்டங்களும்.
பார்க்கலாம். எதாவது கிடைக்குதான்னு:-)
//அதுலே ஒரு 10GB நம்ம கோகி. என்னோட மாடல் மியாவ்:-)//
கோகி wild cat ஆகிடப் போவுது, அவ்ளோ ஃப்ளாஷ் அடிச்சா, கடுப்பாயிருக்குமே பாவம்.
யாராச்சும், மேனகா காந்திக்கு ஒரு ஈ.மடல் போடணுமோ? ;)
எல்லாப் படங்களுமே சூப்பர்!. 3ம் 4ம் fantastic.
Amal, Danks!
3rd is the hardest of all pics ;)
10 டிகிரி குளிர்ந்த நீரில் இடுப்பு வரை முழுகி நின்னு எடுத்த படம் அது ;)
in yosemite.
//SurveySan said...
கோவி, பாடம் இங்கே இருக்கு
http://photography-in-tamil.blogspot.com/2007/12/selective-coloring-draft.html
//
பார்த்தேன்...தில்லாலங்கடி வேலை செய்யனும் என்று போட்டு இருக்கு.
அவ்வ்வ்வ்வ்வ்
Boston Bala, தன்யனானேன் ;)
கோவி, ட்ரை பண்ணுங்க. ரெம்ப ஈஜீ!
எவ்ளவோ பண்ணிட்டோம்.
இது பூ://
ஹை...
இது இன்னொரு பூ://
சுப்புருப்பு
உலகம் சுற்றும் வாலிபனா இருக்கீங்களே?
நாலாஆஆஆஆ..யிரம் படங்களா? இவ்வருடம் இன்னும் சில ஆயிரங்கள் கூடிட வாழ்த்துக்கள்:)!
அந்த அரிசிப் படம் முன்னரே ஃப்ளிக்கரில் பார்த்து வியந்திருக்கிறேன். மூன்றாவது படத்தையும் வேறொரு பதிவில் பார்த்துப் பாராட்டிய நினைவிருக்கிறது. என் வோட்டு மூன்றாவதற்கே. மற்றதும் அருமை.
ஆ! இதழ்கள்,
//உலகம் சுற்றும் வாலிபனா இருக்கீங்களே?
//
nah. all in the USA :)
Ramalakshmi,
//என் வோட்டு மூன்றாவதற்கே. மற்றதும் அருமை.
//
Danks! 3rd was the toughest of all ;)
//உலகம் சுற்றும் வாலிபனா இருக்கீங்களே?
//
nah. all in the USA :)//
கடைசிபடம்?
மூன்றாவது படம் அள்ளிக்கிட்டு போவுது. பின்னால் தெரியும் காட்சியைவிட அருகே தெரியும் நீரோடை அற்புதம்! பென்சிலில் கோடு போட்டாற்போல் வழியும் நீர் அள்ளிப் பருகலாம் போலுள்ளது என் வோட்டு இதற்கே!
ஆறாவது படம் போல் நான் ஒரு கண்ணாடி மேஜைவிளக்கு எடுத்திருக்கிறேன். லாஸ்வேகாஸ் ஈஃபில் டாவரும் கூட!!
நாந்தேன் எதை கொடுப்பதுன்னு முழி பிதுங்கிக் கொண்டிருக்கிறேன். கருப்புவெள்ளை அனுப்பலாமா?
ஆ! இதழ்கள்,
its las vegas.
a 1/4 size replica of eifel :)
Nanani,
Danks!
//கருப்புவெள்ளை அனுப்பலாமா?//
oh yeah!
நிஜமாவே பின்னி இருக்கிங்க. இவ்ளோ அழகா படம் எடுக்குற நீங்க அட்வைஸ் பண்றதுல தப்பே இல்ல. கத்துக்கணும். நிறைய இருக்கு. நன்றி சர்வேசன்.
Vijay,
////நிஜமாவே பின்னி இருக்கிங்க. இவ்ளோ அழகா படம் எடுக்குற நீங்க அட்வைஸ் பண்றதுல தப்பே இல்ல. கத்துக்கணும். நிறைய இருக்கு. நன்றி சர்வேசன்.////
Danks! but, as i said, even i have to improve a lot lot.
my hit rate is very less, 4 out of 4000 clicks is not a good standard ;)
எனக்கு அரிசிப் படம் தான் மிகப் பிடிச்சிருக்கு:)
ஜூப்பரு
PoornimaSaran, வால்பையன்,
டாங்க்ஸ்!
Post a Comment