தலைப்பை 'ஓப்பனா' விட்டுருக்கோம்.
இதுவரை நீங்க எடுத்த படத்துல எது சூப்பர்னு தோணுதோ, அதை போட்டிக்கு அனுப்பலாம்னு சொல்லியிருக்கு.
இதுவரைக்கும் எடுத்தது எதுவும் 'நச்னு' இல்லன்னா, புச்சா புடிச்சு அனுப்பலாம்னும் சொல்லியிருக்கு.
சரி, நான் எடுத்ததில் எதாவது தேறுதா பாக்கலாம்னு என் ஃபோல்டரை நோண்டிப் பார்த்தேன்.
சுமார் 4000 படங்கள் சென்ற ஆண்டு மட்டும் க்ளிக்கித் தள்ளியிருக்கேன் :)
ஹி ஹி. இதுல ஆச்சரியம் என்னன்னா, ஓரளவுக்கு சிறப்பா வந்த படங்கள், இந்த நாலாயிரத்தில், விரல் விட்டு எண்ணும் அளவுக்கு மிகவும் சொற்பமானவையா இருக்கு ;)
வரும் ஆண்டில், இந்த ஹிட்-ரேஷியோவை பல மடங்கு மேம்படுத்தணும் என்ற குறிக்கோள் இருக்கு. பாப்போம் முடியுதான்னு.
(விளம்பரம்: எல்லாராலையும் எல்லாமும் முடியும்னு நான் அள்ளி வுட்ட success formula அட்வைஸு படிகாதவங்க, இந்த நேரத்துல அத்த படிச்சுடுங்க)
உங்க ஹிட்-ரேட் நெலம எப்படி இருக்கு? எவ்ளோ ஆயிரம் புடிச்சீங்க, எவ்ளோ தேறிச்சு. சொல்லிட்டுப் போங்க.
PiT போட்டிக்கு படம் அனுப்பவதோடு நின்று விடாமல், இந்த மாதிரி ஒரு பதிவையும் போட்டீங்கன்னா interestingஆ இருக்கும் :)
சரி, இனி, ஜல்லடை போட்டு அலசியதில் ஆப்ட சில படங்கள் உங்க பார்வைக்கு.
சென்ற ஆண்டின் சிறப்பான படமாய் நான் எண்ணுவது, மேக்ரோ நுட்பத்தைக் கற்றுணர்ந்து நான் க்ளிக்கிய அரிசி படம். நீல நிற ப்ளாஸ்டிக் மூடி மேல் சில அரிசிகளைப் போட்டு, என் கேமரா லென்ஸை தலைகீழா திருப்பிப் போட்டு மேக்ரோவாக்கிய படம் இது.
இதுவே சென்ற ஆண்டின் என் 'சிறந்த படமாய்' நான் எண்ணுவது.
1. அரிசி: (click to view in flickr)

மற்ற சில கொசுறு படங்கள்:
2. இன்னொரு மேக்ரோ:

3. இது HDR:

4. இது பூ:

5. இது இன்னொரு பூ:

6. இது பிற்தயாரிப்பு:

7. இது கட்டமைப்பு: