எனக்கு கிரிக்கெட்டு மேல அவ்ளோ ஈடுபாடு இருந்ததில்லை.
தலையே போனாலும், ஒரு நிமிடம் கூட அந்த பக்கம் இந்த பக்கம் நகராமல், எந்த டீம் ஆடினாலும் கண் கொட்டாமல் பார்க்கும் நண்பர்களுக்கு மத்தியில் எனக்கு இந்த 'நோய்' வராதது ஆச்சரியம் தான்.
நண்பர்களில் சில தீவிரவாதிகளூம் உண்டு.. 1998ல, ஏதோ ஒரு மேச்ல சச்சின் 130 அடிச்சாராம். அத்த பாக்கும்போது நம் ப்ரெண்டு, மஞ்ச டீ-ஷர்ட் போட்டிருந்தாராம். அன்னிலேருந்து, அதே கண்ராவி மஞ்ச டீ-ஷர்ட் போட்டுக்கிட்டுதான் எல்லா மேட்ச்சையும் பாப்பாரூ இவரு.
இன்னும் சிலதுகள், தீவிரத்தின் உச்சத்துக்கே போயிடுவாங்க. சேம்பிளுக்கு சில வகையராக்கள்:
-> தரைல உக்காந்து பாத்தாதான் இந்தியா ஜெயிக்கும்
-> அம்மா கிச்சன்லயே இருக்கணும்
-> கோவிந்து லேட்டா வரக் கூடாது. லேட்டா வந்தாலும், வரும்போதே 'மச்சி, சச்சின் அவுட்டாடா' னு இளிச்சுக்கிட்டே வரக் கூடாது.
-> எதுத்த அணி ஆளு பவுளிங்க் போட ஓடி வரும்போது யாரும் கொட்டாவி, தும்மல் இதேல்லாம் கூடாது.
-> சச்சின் 50 கிட்டயோ, 100 கிட்டயோ இருக்கும்போது, அவசரமா முச்சா வந்தாலும் யாரூம் எழுந்துக்கக் கூடாதூ
-> மேட்ச் ந்டூல கரெண்ட் கட் ஆயிட்டு உடனே வந்தா நல்ல சகுனம்.
இன்னும் சொல்லிட்டே போகலாம், உங்களுக்கு தெரிஞ்சதும் சொல்லுங்க...
சரி, அத்த வுடுங்க...
இன்னைய மேட்டருக்கு வருவோம்.
2007 உலகக் கோப்பைல இந்தியாவுக்கு நடந்த சோகம் உங்களுக்கே தெரியும். வெந்த புண்ணுல வேல பாச்சாம மேட்டர பாப்போம்..
இந்தியா, படு தோல்வியால் வேளியேறியதில், என் 'தீவிரவாத' நண்பர்களுக்கு செம கடுப்பு.
-> ப்ளேயர்ஸ் எல்லாரையும் நாடு கடுத்தணும்
-> அவங்களுக்கு குடுத்த சம்பள பணம் திரும்பப் பெறணும்
-> விளம்பரங்களில் நடிக்க தடை விதிக்கணும்
இப்படி இலவச ஐடியாஸ் அள்ளி வீசராங்க.
எலே, வெளையாட்டுல வெற்றி தோல்வியெல்லாம் சகஜமடா. எல்லாரும் ஜெயிக்க முடியாதுடா.
நீ கூட தான் சம்பளத்துக்கு ஆணி புடுங்கர. சில சமயம், சரியா புடுங்காததால, பின் விளைவுகள் நெறைய வருது. அதுக்காக 'தார்மீக' பொறுப்பேத்துக்கிட்டு 'என் சம்பளத்த கொறச்சிடுங்கன்னு' சொல்லிருக்கியா என்ன? :)
இப்படியெல்லாம் கேட்டா அடிக்க வராங்க்ய.
நீங்க என்ன சொல்றீங்க?
நல்லா யோசிச்சு தீர்ப்பு சொல்லுங்க (ஹ்ம், இந்தியா 2007 கப் ஜெயிக்குமான்னு சர்வே போட்டிருக்க வேண்டியது. இன்னைக்கு நெலம இப்படீ ஆயிடுச்சூ:) )
-> மினி-கதைகள படிச்சாச்சா? (ஷைலஜா, சர்வேசன், உஷா, நானானி, பெனாத்தல், ஷக்தி இவங்க மினி-கதையெல்லாம் இருக்கு))
-> என் மினி-கதை "சீனு" படிச்சீங்களா? (ஹிஹிஹி - படிச்சு அழூதுட்டேன்னு ரெண்டு ரசிகர்கள் சொல்லீயிருக்காங்க :) ))
-> அரட்டை அடிச்சீங்களா?
-> என் மறுபக்க அலசல் பாத்தீங்களா? (weirdity)
வாழ்க வளமுடன்!
10 comments:
அவங்களுக்கு குடுத்த சம்பள பணம் திரும்பப் பெறணும்
-> விளம்பரங்களில் நடிக்க தடை விதிக்கணும்
i agree!
// தரைல உக்காந்து பாத்தாதான் இந்தியா ஜெயிக்கும்//
//எதுத்த அணி ஆளு பவுளிங்க் போட ஓடி வரும்போது யாரும் கொட்டாவி, தும்மல் இதேல்லாம் கூடாது.//
//சச்சின் 50 கிட்டயோ, 100 கிட்டயோ இருக்கும்போது, அவசரமா முச்சா வந்தாலும் யாரூம் எழுந்துக்கக் கூடாதூ//
அட மண்டுகளா!! உங்களையெல்லாம் 100 பெரியார்ஸ் வந்தாலும் திருத்தமுடியாதுடா...
//i agree! //
I dont agree :)
//அட மண்டுகளா!! உங்களையெல்லாம் 100 பெரியார்ஸ் வந்தாலும் திருத்தமுடியாதுடா... //
I will pass on the message :)
தலைப்புல ஒரு 0 கூட சேத்துட்டீங்க போல இருக்கே??
Radha Sriram,
தமிழ்மணத்துல சேத்ததுக்கப்பரம் தான் கவனிச்சேன்.
மாத்தினா லிங்க் ப்ரேக் ஆயிடும். அப்படியா விட்டாச்சு :)
20007 கண்டிப்பா கப்பு நமக்குத்தான். :)
20007?
anony, 20007 is a mistake. can't fix it now :(
btw, 55 votes so far in the polling.
இன்னொன்னையும் சேர்த்திருக்கலாம்
> சந்தோசம். போயி வேல வேட்டிய பாக்கலாம்.
யாழினி அத்தன்,
அடடா, அப்படியெல்லாம் சந்தோஷப் படக் கூடாதுங்க.
என்ன இருந்தாலும் இல்லன்னாலும் நம்ம தேசப் பற்றுன்னு ஒன்னு இருக்கே, அது கொஞ்சம் எட்டிப் பாக்கத்தான் செய்யுது :)
Post a Comment