இன்னாடா தலைப்பு இதுன்னு ரொம்ப மண்டைய கொடஞ்சு யோசிக்கிறீங்களா?
என்ன எழுதரதுன்னு தெரியாத போதும், யோசிச்சு எழுத நேரம் இல்லாத போதும், சர்வேக்கு ஐடியா இல்லாத போதும், அவசரத்துக்கு கை கொடுப்பது நம்ம புகைப் படங்கள் தான்.
சில நாட்களுக்கு முன் Los Angeles க்கும் San Diego க்கும், இடையில் உள்ள ஒரு குட்டி துறைமுகத்திலிருந்து, வேலு (Whale watch - திமிங்கலம்) பாக்கப் போனோம்.
Gray-திமிங்கலங்கள் இடப்பெயற்சி (migrate) செய்யும் கால கட்டமாம் இது.
ஒரு போட்ல 30 பேர் இருப்போம். சர்ர்ர்ர்னு கடலுக்குள்ள கூட்டிட்டு போனாங்க.
அருமையான நாள் அன்றைக்கு. இதமான வெயில், குளிர்ந்த காற்று அழகான கடல். சும்மா, டைட்டானிக் ரேஞ்சுல போட்டுக்கு முன்னாடி நின்னு ஜம்முனு போனோம்.
ஒரு ரெண்டு மணி நேரம் சுத்தியிருப்போம், வேலுவ காணவே காணோம்.
கேப்டன் (விஜயகாந்த் இல்ல) அப்பப்ப மைக்ல, திமிங்கலம் இங்க தான் இருந்தது, இப்ப காணோம். அதோ அதோ அங்க இருந்துது, இப்ப காணோம். 10 நிமிஷத்துக்கு முன்னாடி கண்டிப்பா இந்த ஏரியால இருந்த தடம் தெரியுது, இப்ப காணோம்.
இப்படி, 5 நிமிஷத்துக்கு ஒரு தரம் அப்டேட்டினே இருந்தாரு.
அப்பறம், இவ்ளோ தூரம் வந்தது வந்தாச்சு, உங்களுக்கு டால்பின்ஸ் (dolphin) காட்டறேன்னு ஒரு ரௌண்ட் அடிச்சு வேற எடம் போனாரு.
இந்த எடத்துல நூத்துக் கணக்குல டால்பின்ஸ் கண்ணுல பட்டுச்சு.. எங்க வருகைக்காகவே காத்திருந்த மாதிரி எங்க போட்டுக்கு முன்னாடி வந்து டேன்ஸ் எல்லாம் ஆடிச்சு.
எவ்ளோ நாள் வேணா பாத்துக்குட்டே இருக்கலாம் அதுங்களோட ஆட்டத்த.
ஒரு பத்து நிமிஷம் அத்த பாத்துட்டு, பை பை சொல்லிட்டு திரும்ப வூட்டுக்கு வந்துட்டோம்.
இதே மாதிரி 3 வருஷத்துக்கு முன்னாடி, வ.கலிபோர்னியால Monterey Bayக்கு (வேலு பாக்க இந்த இடம் ரொம்ப ப்ரசித்தி) வேலு பாக்க போனோம்.
நண்பர்கள் பட்டாளத்தோட போனது நல்லா இருந்தது. அன்னிக்கு வேலு பாத்தோம், ஆனா, வேலு, வெறும் வாலு மட்டும் தான் காட்னாரு. சோம்பேறி வேலர்.
நண்பர்களின் தங்கமணிகள் கடல் காற்று ஒத்துக் கொள்ளாமல், ஒருவர் மாற்றி ஒருவராக, வரிசையாக உவ்வே செய்து முற்றிலும் மறக்க முடியாத சம்பவமாக மாற்றியிருந்தார்கள்.
வேலு பாக்கலாமாடா என்று எப்பொழுதாவது கேள்வி எழுப்பினால், தங்கமணியின் கோப முகம் தான் ப்ளாஷ் அடிக்கும் நண்பர்களுக்கு.
கடந்த வார ட்ரிப்பில் க்ளிக்கின சில படம்ஸ்: (சிலது ஒரிஜினல், சிலது டிஜிட்டலி டச்ட். எதிர்பார்த்த அளவுக்கு ஒண்ணுமே தேறல)
An& ன் 'டச்'சுடன்:
-> க்ரிக்கெட்டு 2007 சர்வேக்கு ஓட்டு போட்டாச்சா?
-> மினி-கதைகள படிச்சாச்சா? (ஷைலஜா, சர்வேசன், உஷா, நானானி, பெனாத்தல், ஷக்தி இவங்க மினி-கதையெல்லாம் இருக்கு))
-> என் மினி-கதை "சீனு" படிச்சீங்களா? (ஹிஹிஹி - படிச்சு அழூதுட்டேன்னு ரெண்டு ரசிகர்கள் சொல்லீயிருக்காங்க :) ))
-> அரட்டை அடிச்சீங்களா?
-> என் மறுபக்க அலசல் பாத்தீங்களா? (weirdity)
வாழ்க வளமுடன்!
5 comments:
கருத்துக்கணிப்பாளன் அவர்களே!
உங்களின் அனுபவங்களையும், படங்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நானும் Monterey Bayக்கு சென்று வந்தேன்.
வாங்க வெற்றி.
வேலு பாத்தீங்களா?
The first picture is yours or?
canadian,
ஆமாங்க first pictureம் நம்மளதுதான்.
கொஞ்சம் கலர் சேத்திருக்கேன் அவ்வளவுதான் :)
An&, thanks for the 'polishing'.
மேகம் எல்லாம் எப்படிக்க சேத்தீங்க? தில்லாலங்கடிதான் போங்க :)
Post a Comment