நம்ம Dr. LLதாஸு ரொம்ப பொறுமையா ஆராய்ச்சி பண்ணி அனைத்து வியர்டு பதிவுகளிலும் சிறந்த வியர்டு பாயின்ட வரிசை கட்டி போட்டிருக்காரு.
[ஆமா, இந்த வியர்டு மேட்டர் ஆரம்பிச்சு வச்சது யாருங்க? அத யாராவது ஆராஞ்சு சொல்லுங்களேன்? ஒரு ஓ.ஓ போடலாம்.]
சுடர் ஒரு பக்கம், மெதுவா மெழுகு வத்தி மாதிரி அழகா எரிஞ்சுக்கிட்டு கை மாறினா, இந்த வியர்டு தீப்பந்தம் மாதிரி கொழுந்து விட்டு எரியுது.
ஒருத்தர் கிட்டயிருந்து அஞ்சு பேர் கிட்ட போறதால, காட்டுத் தீ மாதிரி பறவிடுச்சு.
ஆனா, யார் வியர்டினவங்க, யார் வியர்டாதவங்கன்ற கணக்கெல்லாம் தெரியல. Its spreading like an uncontrollable mob.
இன்னும் வியர்டாதவங்க யாராவது இருந்தீங்கன்னா பின்னூடுங்க, வியர்டர மக்கள்ஸுக்கு, பாத்து அழைப்பு விடுக்க ஈஸியா இருக்கும். :)
புயலுக்கு முன் அமைதி மாதிரி, இந்த வாரம் ஸ்லோ வீக் எனக்கு.
சும்மா இருக்க முடியுமோ? அதான் வந்துட்டேன்.
LLதாஸு பதிவுல கொடுத்திருக்கர வியர்டு லிஸ்ட்லேருந்து, எது வியர்டுக்கெல்லாம் சிகரம்னு நீங்க நெனைக்கறீங்களோ, அதுல ஒரு அஞ்சோ பத்தோ எடுத்து பின்னூட்டுங்க.
எல்லா வியர்டையும் பாத்து, அதுல காமனா வந்த ஒரு 10 வியர்ட எடுத்து, டாப்௧ 10 வியர்டு கண்டுபிடிச்சு.
டாப்ல வர #1 வியர்டிஸ்டுக்கு, "வியர்டஸ்ட் ப்ளாகர் 2007" பட்டம் கொடுத்திடலாம். :)
யாரும் பின்னூடலன்னா, என் இஷ்டத்துக்கு ஒரு பத்த எடுத்து போட்ருவேன்.
LLதாஸு ஏதாவது weird மிஸ் பண்ணியிருந்தா அதையும் போடலாம்.
(அனானி வியர்ட்ஸ் not allowed. only bloggers weirds allowed. but anony's can add other bloggers weirdities)
ஸ்ஸ்ஸ்ஸ். அப்பாடா. சீக்கிரம் அனுப்புங்க. ஏப்ரல் 1st சர்வே போட்டுடலாம்.
சிவாஜி படம் வரதுக்கு முன்னாடி, நம்ம "வியர்டஸ்ட் ப்ளாகர்" பட்டம் கொடுத்திடலாம்.
மினிகதைப் போட்டிக்கு வச்சிருந்த $s, இந்த பட்டவிழா நடக்கும் அன்று, உதவும் கரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நோ $s டு வியர்டர்ஸ் though. but you will get a position in my hall-of-fame links.
( உங்க வியர்டு குணம் தெரிஞ்சப்பறமும் உங்கள தமிழ்மணத்துல வச்சிருக்கரதே பெரிய விஷயம். உங்களுக்கு $ எல்லாம் வேற தரணுமா? :))))))) )
:)
-------------- ---------- ----------------
a few sample weirdities that may be considered for the survey :).
Please add to the list.
-------------- ---------- ----------------
பாத்திரம் விளக்க வச்சிருந்த சாம்பல் எடுத்து சாப்பிட்டுருக்கேன (தம்பி)
திடீர்னு "வீல்"னு ஒரு கத்துக் கத்துவேன் . (கீதா சாம்பசிவம்)
பூனையை உக்காரவச்சு அதுக்குப் படிச்சுக் காமிப்பேன். (துளசி)
செடி, மரத்துகிட்டெல்லாம் பேசுவேன்!!! (ராதா ஸ்ரீராம்)
என் கணினியோடு பேசுவேன். ரொம்ப படுத்தினால் அடிப்பேன். கெஞ்சியபடியே தடவிக்கொடுப்பேன (ரஷ்யா இராமநாதன்)
தனியா பேசிக்குவேன். (கார்த்திக் பிரபு)
ஷாக்' என்பது எப்படி இருக்கும் என்று அதை விரலால் தொட்டுப் பார்த்த அனுபவம் உண்டு. (எ.அ.பாலா)
ரோட்ல போற ஆளுகளைத் திட்டுறது. (தருமி)
வகுப்பில் பெரியாரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு முத்தமிட்டுக்கொண்டிருப்பேன். (மிதக்கும் வெளி)
இறந்த பின்பு மனைவியோடு பேசிக்கொண்டிருப்பேன். நான் போறேன். நீ எல்லாத்தையும் பார்த்துகோ என்று சொல்லுவேன். (முத்துக்குமரன்)
இடி , மின்னல் என்ன கலர்னு பார்த்துக்கிட்டிருப்பேன்....(செந்தழல்)
மொட்டைமாடிக்கு வந்து ஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ ன்னு கத்துவேன்.. (அய்யணார்)
சாப்பிட்ட பிறகு கையை அடிக்கடி முகர்ந்து பார்ப்பேன்(சூர்யா)
-------------- ---------- ----------------
-> Voted for "Made in Pakistan - O.K?" survey?
-> Voted for "Sivaji Film Songs - Ala$al" survey ?
.
11 comments:
//பாத்திரம் விளக்க வச்சிருந்த சாம்பல் எடுத்து சாப்பிட்டுருக்கேன (தம்பி) //
தம்பி பொதுவா புள்ள தாச்சிங்க தான் இதை செய்வாங்க.
following 3 are the scary types
. .
|
===
பூனையை உக்காரவச்சு அதுக்குப் படிச்சுக் காமிப்பேன். (துளசி)
செடி, மரத்துகிட்டெல்லாம் பேசுவேன்!!! (ராதா ஸ்ரீராம்)
என் கணினியோடு பேசுவேன். ரொம்ப படுத்தினால் அடிப்பேன்.
கெஞ்சியபடியே தடவிக்கொடுப்பேன (ரஷ்யா இராமநாதன்)
தனியா பேசிக்குவேன். (கார்த்திக் பிரபு)
Awaiting for the winner .;)
தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன் நன்றி.
http://www.desipundit.com/2007/03/30/wierd/
எல்லெல்.தாஸு, மீ டூ :)
ஆனா, வேற யாரும் இதுவரைக்கும் புது வியர்டு சேக்கல. உங்க லிஸ்ட்லேருந்து நானா பாத்து ஒரு பத்து எடுக்க வேண்டியதுதான்.
டுபுக்கு, நன்றி! நன்றி!
எல் எல்ல் பதிவுல இருந்து பார்த்ததுல
மனதின் ஓசை,
துளசி
மங்கை
நாகை சிவா
அப்புறம்
நான்.[சும்மா]
நன்றி முத்துலெட்சுமி. கணக்குல வச்சுக்கரேன் :)
// Anonymous said...
following 3 are the scary types
. .
|
===//
following 3 என்று நாலு பேரைப் போட்டு இருக்கும் அனானிதான் இருப்பதிலேயே விந்தையான ஆளு. (வியர்டுன்னா விந்தை அப்படின்னு இராம.கி ஐயா பதிவில் படிச்சேன்)
koths,
naanum ippadhaan gavanichen :)
கட் அண்ட் பேஸ்ட் செய்வதன்ன பெரிய விஷயம்.. அதைத்தானே ஆயுள் முழுக்க செய்துகொண்டிருக்கிறேன்.. இதுக்கெல்லாம் ஒரு டாக்டர் பட்டம் .. ம்... ஒரு மேட்டர், நண்பர்கள் மத்தியில் என் பட்டப்பெயர்தான் அது ..;)
கரெக்டாதான் பட்டம் கொடுத்திருக்கேனா? :)
திங்கள் அன்று லிஸ்ட் போட்டுடறேன்.
Post a Comment