இன்று பல இடங்களில் நடக்கும் விவாதம், அப்துல் கலாம் அடுத்த ஜனாதிபதி ஆகலாமா, கூடாதா என்பது. அவர் தனக்கு extension'ல் விருப்பமில்லை என்பதும், அரசியல் கட்சிகள் ஆளுக்கு ஒரு கருத்தை வெளியிடுவதும் தினமும் நடந்து கொண்டிருக்கிறது.
நம் கூட்டத்தின் கருத்து என்ன? அதை கண்டுபிடிக்க ஒரு சர்வே இதோ இங்கே:
(கலாம் வேண்டாம் என்று வாக்களிப்பவர்கள், பின்னூட்டமாக, வேறு யார் இந்த பணிக்கு சரியானவர் என்று கூறுங்களேன், அவங்க லிஸ்ட் எல்லாம் சேத்து, அடுத்த சர்வே ரெடி பண்ணிடலாம்)
2 comments:
ஜனாதிபதி பதவி என்பது நாட்டின் உயர்ந்த பதவி, அதை மீண்டும் அடைவதால் அதைவிட பெரிய கவுரவம் எல்லாம் கிடைக்கப் போவதில்லை. 100 கோடி மக்களில் தகுதியான ஒருவரை கண்டுபிடித்து புதிதாக அலங்கரிப்பதுதான் நல்லது.
மீண்டும் அவருக்கே கொடுத்தால்,
ஐயா கலாமை விட்டால் வேறு ஆள் இல்லை என்பது போல் ஆகிவிடும்.
இந்தியாவின் மானம் காக்க புதியவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இது பரம்பரை சொத்தோ, சம்பாதித்த சொத்தோ அல்ல ஒருவரே அனுப்பவிப்பதற்கு !
அடுத்த ஒரு குடிமகனுக்கும் வாய்பளிக்க வேண்டும்.
நன்றி !
கோவி கண்ணன்,
அருமையான கருத்து.
//மீண்டும் அவருக்கே கொடுத்தால்,
ஐயா கலாமை விட்டால் வேறு ஆள் இல்லை என்பது போல் ஆகிவிடும்.
இந்தியாவின் மானம் காக்க புதியவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இது பரம்பரை சொத்தோ, சம்பாதித்த சொத்தோ அல்ல ஒருவரே அனுப்பவிப்பதற்கு !
//
ஆனால், கலாமை விட அந்த பதவிக்கு பெருமையும், அதனால் நமக்கு பயனும் சேர்க்கும் திறன் கொண்டவர் வேறு யாரும் இல்லை தற்சமயம் என்பதே அடியேனின் கருத்து.
அவர் தைரியம் வேறு யாருக்கு வரும். இதுவரை என் நினைவில் இருந்த ஜனாதிபதிக்கள் எல்லாம் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் மாதிரி செயல் பட்டவர்கள் மட்டுமே..
கலாம், மறுமுறை வந்தால் இன்னும் கொஞ்சம் friction கொடுக்கணும் அரசியல்வாதிகளுக்கு.
RTI க்கெல்லாம் முடிந்ததை செய்தவர் கலாம் தானே?
Post a Comment