recent posts...

Monday, November 27, 2006

இன்றைய சர்வே - தேன்கூடி போட்டி முடிவுகள் கணக்கிடும் முறை சரியா?

ஆட்டக் கடிச்சு மாட்டக் கடிச்சு, தேன்கூடுக்கே சர்வேயா என்று எண்ண வேண்டாம்.
சும்மா ஒரு விஷயத்தை தெளிவு படுத்திக்கலாம்னு இந்த சர்வே.

சர்வேக்கு செல்வதர்க்கு முன், இந்த வார போட்டியில் வெற்றி பெற்ற சிறில், சுரேஷ், சிபி, ஷைலஜா வுக்கு என் வாழ்த்துக்கள்.
எல்லார் படைப்பும் அருமை. (ஷைலஜாவின் கவிதை மிக இனிமை).

என் சந்தேகம் என்னன்னா, போட்டியின் ஆக்கங்களை தேர்வு செய்து நடுவர் குழுவுக்கு அனுப்பும் முறை சரியா என்பதே?
இப்ப இருக்கும் method ல், வலைப்பதிவர்கள் விரும்பிய கதைகளே நடுவர்களுக்கு செல்லும் வகையில் உள்ளது.
வலைப்பதிவர் அல்லாத 'வெறும்' வாசகர்கள் விருப்பத்துக்கு பெரிய weightage இல்லை?
வலைப்பதிவர்களுக்கு ஜாஸ்தி weightage கொடுத்தா, பிரபலங்களின் படைப்புகள் மட்டுமே top-10 ல் வரும் சாத்தியம் ஜாஸ்தி ஆகாதா?
வலை பதிவருக்கும், மற்றவருக்கும் equal weightage கொடுத்தா என்ன? இதுக்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கா?

(அடுத்த மாதம் ஒரு கதை எழுதினா என்னன்னு நெனைச்சேன், அதான் இப்பவே கொஞ்சம் rules relax பண்ணி ரெடி ஆகலாம்னு. :) - நாராயண, நாராயண)

நீங்க என்ன நெனைக்கறீங்க? கீழே உங்க ஓட்டை பதியுங்கள்.

6 comments:

சோத்துக்கட்சி said...

அட..நீ வேறய்யா. அடுத்த மாதத்தோட கடைசி போட்டியாக்கப் போறாங்களாம், நானே அதுக்காகத்தான் ப்லாக் எல்லாம் ஆரம்பிச்சு எழுத ஆரம்பிச்சேன்.

அது சரி, இப்ப உள்ள முடிவுகளை பார்த்தீரா?

வாசகருக்கும், வலைப்பதிவர்களுக்கும் உள்ள விகிதாச்சாரத்தை. மலைக்கும், மடுவுக்கும் நடுல இருக்கு.

நடுவர் பத்மாவோட கருத்தையும் பாருங்க. அதுவும் படைப்புக்கு தேர்ந்தெடுத்த பதிவுகள், அவ்வளவு சுவாரசியம் இல்லைன்னு சொல்லியிருக்காங்க.

ம்..என்னவோ, நம்மள மாதிரி ஆளுங்க வேற அவல் தேட வேண்டியதுதான், மெல்லுறதுக்கு. :))

SurveySan said...

நிறுத்தப் போறாங்களா? சரியாப் போச்சு.

அப்ப, நானே போட்டி நடத்தி பரிசு தரேன் :)

வாசகர்கள் ஓட்டு போட்டதுக்கு மதிப்பு கம்மியாத்தேன் இருக்கு.

வேற அவல் கடச்சா சொல்லுங்க.

Anonymous said...

don't blame the tools Survey man.

SurveySan said...

I am not trying to blame the tools, but just trying to set the method right :)

Anonymous said...

வாக்களிக்கும் முறையை எப்படி மாற்றினாலும் கள்ள வாக்குகள் அளிக்க வழி இருக்காதா என்ன ?

SurveySan said...

கள்ள ஓட்டு போட நம்மளுக்கு சொல்லியா தரணும்.
நம்மள மிஞ்ச யாரு இருக்கா.

ஒரு ஈமெயிலுக்கு ஒரு ஓட்டுனு வச்சுக்கிட்டா. கள்ள ஓட்டை முடிஞ்ச வரைக்கும் தவிர்த்துடலாம்.
thenkoodu ஆளுங்க சொல்ற மாதிரி, அப்பவும், kallavottu1@gmail, kallavottu2@gmail என்று வைத்துக்கொண்டு தில்லாலங்கடி செய்யும் சிலதுகள ஒன்னும் பண்ண முடியாது :)