recent posts...

Thursday, September 25, 2008

ஒவ்வொரு ஸ்டேட்டுக்கும் ஒரு மு.க, எதிர்காலத் தேவை!


உணவு தானியங்களின் விலையெல்லாம் கூரைய பிச்சுக்கிட்டு மேலப் போவுது. விலை மட்டும் ஏறினாக்கூட தாங்கிடலாம், ஆனா, உற்பத்திக்கும், தேவைக்கும் ஏணி வச்சா கூட எட்டாத நிலை உருவாகிக் கொண்டு வருகிறது.
தானியங்களைப் ப்ரதான உணவாகக் கொள்ளும், இந்திய ஆசிய மக்களுக்குத்தான் இது பெரும் தலைவலியாய் தெரியும்.

அமெரிக்காவில், தானியங்களை அதிகமாய், உட்கொள்வதில்லை. பெரும்பான்மையானவர்கள் மாமிசம் உண்பவர்கள்.
குறிப்பா, மாடு, பன்றி வகையராக்கள்.

அமெரிக்காவில் உற்பத்திசெய்யப்படும், தானியங்களில், 70% ஆடு,மாடு,கோழி,பன்றிகளுக்குத் தீனியாக கொடுக்க மட்டுமே செலவு செய்யப்படுகிறது.

ஒரு மாடு, 16 கிலோ தானியங்களை உண்டால்தான், ஒரு கிலோ இறைச்சியை உற்பத்தி பண்ணும்.
பயங்கரமான ரேஷியோவா இருக்குல்ல இது?
ஒரு கிலோ மாட்டிரைச்சி என்பது, ஒரு ஆசாமி ஒரே நாள் கபளீகரம் செய்துவிடும் அளவு.

இதே ஆசாமி, இந்தத் தானியங்களை மட்டுமே, டைரக்டா, சமத்தா சாப்டான்னா, 16 கிலோ அரிசி, ஒரு மாசத்துக்கும் மேல வச்சுக்கிட்டு சாப்பிடலாம்.

ஒரு அமெரிக்கன், சராசரியா, ஒரு வருஷத்துக்கு 125கிலோ இறைச்சி சாப்பிடுவானாம்.
அப்ப, அவன் ஒடம்ப வளக்க, 2000 கிலோ தானியங்கள் செலவிடப் படுகிறது.

அடேங்கப்பா, 2000 கிலோ அரிசி/கோதுமை எல்லாம் இருந்தா, நம்மூர்ல ஒரு ஊரே சாப்பிடலாமே?

எல்லா அமெரிக்கர்களும் சேந்து, ஒட்டு மொத்தமா 560,000,000,000 கிலோ தானியங்களை indirectஆ விழுங்கரானுங்க.

இவங்க எல்லாருமே, சைவ உணவு மட்டும் சாப்பிடரவங்களா இருந்திருந்தா, இவர்களின் உணவு உட்கொள்ளல், பலப் பல மடங்கு கீழே இறங்கி விடும்.

அது சரி, இந்த மிருகங்களுக்கெல்லாம் ஏன் தானிய உணவு தரணும்? புல்லை மேய விடலாமேன்னு நீங்க யோசிக்கலாம்.
இறைச்சிக்காக வளர்க்கப்படும் மிருகங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50,000,000,000. இது உலக மனிதர்களின் எண்ணிக்கையை விட எட்டு மடங்கு அதிகம்.
இவ்ளோ மிருகங்களை காட்ல மேய விட, பூமியில் இடம் இல்லை. அதனால், இவைகளை ரூமில் அடைத்துவைத்து, தானியங்களை வழங்குவதுதான் ஒரே வழி.

சரி, அமெரிக்கா எப்படியோ போவுது, நமக்கென்னன்னு நெனைக்கறீங்களா?

இந்தியா, சைனாவில், அமெரிக்கா அளவுக்கு இல்லன்னாலும், இறைச்சி உட்கொள்ளுதல், சமீபகாலத்தில் கூடிக் கொண்டே வருகிறது. மிக விரைவில், மிடில் கிளாஸ்கள் வளர வளர, இறைச்சி உட்கொள்ளுதல் அதிகமாகிக் கொண்டே வரும்.

இந்த டிமாண்டை சரி செய்து லாபம் பார்க்க, உலக இறைச்சிக் கம்பேனிகள், இந்தியாவுக்குள் புகுந்து, மிருகங்களை வளர்த்து, இறைச்சியை விற்கத் தொடங்கும்.

இந்த மிருகத்துக்கெல்லாம் சாப்பாடு போடணும்ல? அப்போ, இந்திய தானியங்களில், பெரும்பான்மை ஆடு,மாடு, பன்னிய வளக்க செலவு செய்யப்படும்.
மனுஷன் தேவைக்கு, தானியங்கள் கிடைக்காமல், அதன் விலையெல்லாம் சடால் சடால்னு எகிரும்.

வருங்காலத்தில், சாமான்யனின் நெலம ரொம்பவே திண்டாட்டம் தான்.
(அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவ மட்டும், எலெக்ஷன் ஆண்டுக்கு முன்னால், ரூ.1க்கு அரிசி கிடைக்கும். இதை அமல்படுத்த, இந்தியா முழுக்க மு.க மாதிரி யாராச்சும் ஆட்சியில் இருக்கணும். ஆனா, அதையும், சொரண்டித் தின்ன நரிக்கூட்டம் ரெடியா நிக்கும். - அது தனிக் கதை . ஹிஹி தலைப்பை தொட்டாச்சுல்ல ;) )

தானியங்களின் நிலமை இப்படின்னா, குடி தண்ணீர் நெலம என்னாகும்?

ஒரு கிலோ மாட்டிறைச்சி உற்பத்தி செய்ய, 10,000 லிட்டர் தண்ணி செலவாகுது.
ஆயிரமாயிரம் கிலோக்கு எவ்ளோ தண்ணி தேவைப்படும்னு நீங்களே கணக்குப் போட்டுக்கங்க.

இந்தக் கணக்கில், இறைச்சியை வெட்டி பேக்கிங் செய்து, குளிர் பதனம் செய்து, லாரிகளில் எல்லா ஊர்களுக்கும் அனுப்ப செலவு செய்யப்படும், பெட்ரோல் விஷயங்களை எல்லாம் கணக்குல எடுத்துக்கிட்டா, கூடிய விரைவில், Marsக்கோ, சனிக்கோ இடம் பெயர வேண்டி வரும்னே தோணுது!

இப்பவே குடிதண்ணிக்கு வருஷத்துல நாலு மாசம் செம திண்டாட்டம். ஆடு,மாடு,பன்னிகளின் தேவை அதிகரிக்கும் வருங்காலத்தில், தண்ணி விலை, பெட்ரோலை விட எகிரும் வாய்ப்பு கண்டிப்பா இருக்கு.

இதெல்லாம் இப்படி இருக்க, இன்னொரு பக்கம், விளை நிலங்கள் ஃபேக்டரியாய் மாறிக் கொண்டு வருகிறது. சோளம் உற்பத்தி செய்யும் ஆட்கள், சோளத்தை மனிதனுக்கு உணவாக விற்காமல், ethanol தயாரிக்க அதிக விலைக்கு விற்று வருகிறார்கள்.

நம்ம ஆயுள் இன்னும் முப்பதோ, நாப்பதோ, இல்ல மிஞ்சி மிஞ்சி போனா, அம்பது இருக்கும். நாம கிட்டத்தட்ட தப்பிச்சிடலாம், ஆனா, வருங்கால சந்ததி நிலமை, ரொம்பவே திண்டாட்டம்தான்.

ஹ்ம். காய்கறியை சாப்பிட ஆரம்பிக்கணுமா இனி? (உவ்வே :) )


மூலம்: Arun Firodia, Economic Times. மூலத்தில், மு.க மேட்டரெல்லாம் இல்லை. ;)
உல்டா: சர்வேசன்

7 comments:

SurveySan said...

related link

http://rajkanss.wordpress.com/2008/09/23/????-?????-1??????-??????/

திவாண்ணா said...

ஏன் சாமி ?
காய்கறிகளும் தான்யங்களும்தான் சாப்பிட்டு இருக்கலாமே. என்ன இப்போ!

SurveySan said...

திவா,

வெரும் காய்கறி சாப்பிட்டு வாழ்க்கைய ஓட்டணுமா?

நம்மால ஆகாதுங்க அதெல்லாம்.

அட்லீஸ்ட், ஆண்டவன் கொடுத்த கோழியாவது, வாரத்துக்கு ஒருதரம் உள்ளத் தள்ளியாகணும் எனக்கு.

:)

Thekkikattan|தெகா said...

நிறைய கசக்கும் உண்மைகளுடன் இருக்கும் பதிவு.

கொட்டகைகளில் வைத்து வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு இடப்படும் தீவனங்களும் அதே தானியங்கள்தானே, ஆனால், முரணாக வளரும் நாடுகளில் மழைக்காடுகள் இருக்குமிடங்களில் இவ் கால்நடைகளை ஃப்ரீ ரேஞ்சிங்காக வைத்து வளர்க்க வேண்டின், நிறைய வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு, ராஞ்சுகள் உருவாக்கப் படுகின்றது அதனால் ஏற்படும் விளைவு...

வனங்களின் இழப்பு மட்டுமில்லாமல் அதே ராஞ்சுகள் உள்ள இடங்களில் தானியங்களை பயிர்வித்து ஒரு மாட்டை வளர்க்கும் காலத்திற்குள் இரண்டு முறை சாகுபடி பண்ணப்பட்டு சேமிப்பு நிகழ்த்தினால் அந்த லோகல் கம்யுனீட்டிக்கு இரண்டு வருடங்களுக்கு போதுமான உணவு கிடைத்துவிடுமாம்.

இப்பொழுது உணவு பற்றாக்குறையும் உற்பத்திவிட்டு ஒருபக்கம் இது போன்ற மேட்டிமை சுரண்டலும் இயற்கையிடம் நிகழ்த்துகிறார்கள்.

இந்தியர்கள் அதிக இறைச்சி உண்ண அட்வான்ஸ்ட் வாழ்த்துக்கள்.

SurveySan said...

தெகா,

////வனங்களின் இழப்பு மட்டுமில்லாமல் அதே ராஞ்சுகள் உள்ள இடங்களில் தானியங்களை பயிர்வித்து ஒரு மாட்டை வளர்க்கும் காலத்திற்குள் இரண்டு முறை சாகுபடி பண்ணப்பட்டு சேமிப்பு நிகழ்த்தினால் அந்த லோகல் கம்யுனீட்டிக்கு இரண்டு வருடங்களுக்கு போதுமான உணவு கிடைத்துவிடுமாம்.////

மிகச் சரி.

ஆனா, மனுஷனை வெஜிடேரியனா ஆக்கணும்னா, இறைச்சிப் பொருட்களுக்கு, அதிகப்படியா tax எல்லாம் போட்டு, எல்லாரையும், வாங்கரதுக்கு முன்னாடி யோசிக்க வைக்கணும்.
செய்வாங்களா?

ரவி said...

இது நல்லா இருக்கு ?!!!

நான் வெஜ் காரவுக மேல இம்புட்டு காண்டு கூடாது ? ஆமாம்...

ஏன் எல்லாரும் அரிசி கோதுமையை தின்னாம இலை தழைய தின்னு மாடு மாதிரியே வாழலாமே ?

SurveySan said...

ரவி,

////நான் வெஜ் காரவுக மேல இம்புட்டு காண்டு கூடாது ////

காண்டு இல்லை. எதிர்காலம் அப்படி கீது என்ன பண்ண?

எனக்கும் சிக்கனோ,மீனோ இல்லன்னா, எதுவும் உள்ள எறங்காது.

ஆனா, இந்த ஸ்டாட்ஸ் எல்லாம் யோசிக்க வைக்குது. நம்மளா மாறப் போரதில்ல. மாற வச்சிடும் இயற்கை ;)