recent posts...

Tuesday, September 02, 2008

My dear friend Ganesh

சமீபகாலமா டச் விட்டுப் போனாலும், சின்ன வயசுல ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்டு.

அதுவும், படிப்பு முடியர காலத்துல, ரொம்பவே க்ளோஸ்.

அப்பரம்,வேலை, ஊரு விட்டு ஊரு பாயரது எல்லாம் ஆனப்பரம், கணேஷைப் பாக்கரது ரொம்பவே கொறஞ்சு போச்சு.

இப்பெல்லாம், கோயிலுக்குப் போறதே, அங்க ஓ.சியில கிடைக்கர புளியோதரை, தயிர் சாதத்துக்குத்தாங்கர அளவுக்கு, பயபக்தி கரைய ஆரம்பிச்சிடுச்சு.

ஆனா, எப்ப கோயிலுக்குப் போனாலும், மொதல்ல கணேஷைப் பாத்து ஒரு சல்யூட் போட்டுட்டுத்தான் அடுத்த வேலை பாக்கரது. அந்த விபூதி வாசனை ஒரு வசிய மருந்துதான்.

படிக்கர காலத்துல, எங்க வீட்டுக்கிட்ட ஒரு பெரிய மரத்துக்குக் கீழ ஒரு குட்டி கணேஷ் இருப்பாரு. நின்னு மத்தவங்கள மாதிரி கன்னத்துல போட்டுக்கிட்டு, தலைல குட்டிக்கிட்டு, தோப்புகரணம் போட்டுக்கிட்டு, நின்ன எடத்துலயே செருப்ப கழட்டி வச்சிக்கிட்டு சர்னு சுத்தரதெல்லாம் எனக்குப் பிடிக்காது. கூச்சமா இருந்ததா கூட இருக்கலாம்.

கணேஷை, பாத்துட்டும் பாக்காம போரதுதான் என் பழக்கம்.

அந்த மரத்தடி கணேஷ், வருஷம் ஆக ஆக, புது சொக்கா, புது உண்டியலு, புது பூசாரி, புது சுத்துச் சுவரு, புது ஆறடி சுவரு, புது கோயிலு, புது கோபுரம், புது ஸ்பீக்கரு, புது மேனேஜ்மண்ட்டுன்னு வளந்த வளர்ச்சி அபாரம்.

ஆனா, குட்டி கணேஷ் மட்டும், மாத்தாம அப்படியே வச்சிருக்கிரது ஒரு ஆறுதல்.

இப்ப ஊருக்குப் போனாலும், போய் ஒரு எட்டு எட்டிப் பாத்துட்டு வந்துடரது.

வேலை கெடைச்சதும், மொத மாச சம்பளம் கொண்டு வந்து கொடுக்கரதா கணேஷ் கிட்ட சொன்ன மாதிரி ஞாபகம், இன்னும் செய்யல.
உண்டியல்ல போட்டா, வீணாக்கிடுவாங்களோன்னு ஒரு பயம்.
வருஷம் ஓடிப்போச்சு.

ஹ்ம்!

கணேஷ், ஐ லைக் யூ. ஐ மிஸ் யூ.
ப்ளீஸ் டேக் கேர் அஸ் ஆல்!

எல்லாருக்கும், கணேஷ் சதுர்த்தி விஷ்ஷஸ்.

கீழ இருக்கரது, சுடச் சுட, இப்ப க்ளிக்கினது ;)

வால்-பேப்பரா போட்டுக்கிட்டா, சகல நன்மைகளும் உண்டாகும்னு, கணேஷ் சொல்றாரு. போட்டுக்கங்க! :)




என் flickrலும் பாக்கலாம்.

5 comments:

கோவி.கண்ணன் said...

Surveyசன் ,

நீங்கள் என்னிடம் விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து பதிவிடுவீர்களா என்று கேட்டீர்கள் ... இட்டாச்சு

பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள் !

திவாண்ணா said...

கணினியை இப்ப அலங்கரிக்கிறார்.
நன்னி!

SurveySan said...

Kovi, Danks!

SurveySan said...

Diva,

Danks!

SurveySan said...

a friend of mine said the 1st pic looks blurred?

அப்படியா?

ஹ்ம் வயசாவுது ;((