recent posts...

Friday, September 19, 2008

சென்னைக்கு Metro வருதாமே?

சென்னை திருசூலம் ஏர்ப்போர்ட்டிலிருந்து, ஆலந்தூர், K.K. Nagar, வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், கீழ்பாக்கம், வழியாக சென்ட்ரலும்,

சென்ட்ரலிலிருந்து, எழும்பூர், LIC, ஆயிரம் விளக்கு தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை,வேளச்சேரி, கிண்டி, பரங்கிமலை (ஜோதி) வழியாக திருசூலமும் சென்னை மெட்ரோ ரயில் கவர் பண்ணுமாம்.

2014ல் முடிவடையும், இந்த திட்டத்துக்கு, 10,000 கோடி வரை செலவு ஆகும் (இப்போதைய எஸ்டிமேட் படி. 2004 எஸ்டிமேட் படி 5040 கோடி ;) ).
40% இந்திய அரசும், தமிழ் நாடு அரசும் செலவு செய்யுமாம், மிச்சம் ஜப்பான் வங்கியிடம் இருந்து கடன் வாங்கப்படும்.

பல இடங்களில், பூமிக்கு அடியிலும், சில இடங்களில், பூமிக்கு மேல் பாலங்களிலும், ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்படுமாம்.

தில்லியில் சிறப்பாய் மெட்ரோ ரயில் அமைத்த DMRC (Delhi Metro Rail corp) சென்னையிலும் திட்டத்தை அமுல் படுத்தப் போகிறார்களாம்.

முதல் கட்ட திட்டங்களும், நிலம் அகப்படுத்த பேச்சு வார்த்தைகளும் துவங்கி விட்டார்களாம்.

சென்னைக்கு நல்ல காலம்தான்.

(தண்ணிப் ப்ரச்சனையாமே சென்னைல? மழை இல்லியாம், ரொம்பக் கஷ்டமாம்.
அப்படியே, கடல்நீர் சுத்திகரிப்புக்கு எதையாச்சும் யாராச்சும், ஜப்பான்லயோ, கொரியாலயோ, கடன் வாங்கி அமல் படுத்தினா நல்லாருக்கும்.
இல்லன்னா, அட்லீஸ்ட் பெரிய பெரிய பூங்காக்கள், காடுகள் சென்னை சுத்தி உள்ள இடங்களில் அமைக்க ஏதாச்சும் ஏற்பாடு பண்ணா 2014க்குள் தானாய் மழை வரலாம்).

மெட்ரோ திட்டத்தின் வரை படம்:


ப்ராஜக்ட் ஸ்டேட்டஸ் இங்கே காணக் கிட்டும்.

2 comments:

பாபு said...

இந்த திட்டத்தை தாம்பரம் வரை விரிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.
டெல்லி மெட்ரொ திட்டத்தில் எங்கள் கம்பெனி மூலமாக எனக்கும் தொடர்பு (ரொம்ப குட்டி )இருந்தது.

SurveySan said...

மீனம்பாக்கம் வரை மெட்ரோ வருதுன்னா ஏதாச்சும் கனெக்ஷன் குடுக்காமயா போயிடுவாங்க?