recent posts...

Tuesday, September 02, 2008

Google Chrome - ஏமாற்றவில்லை

ஆட்டக் கடிச்சு, மாட்டக் கடிச்சு இப்ப மனுஷனையே கடிக்க வந்த மாதிரி கூகிள் இப்போ புது browserம் பண்ணிட்டாங்க.

எல்லாத்தையும் ஒரு நேர்த்தியா பண்ற பசங்க, இவர்களின் search engine, adsenseக்கு அப்பரம், எதையும் பெருசா சொல்லிக்கர அளவுக்கு பண்ணலை என்பது என் கணிப்பு.
Google Finance ஆகட்டும், ஜி.மெயில் ஆகட்டும், ஜி.டாக் ஆகட்டும் ஆஹா ஓஹோன்னு பெருசா ஒண்ணும் கண்ணுல படல.
google docsம், picasaவும் கூட அந்த வகைதான்.

இப்ப, Browser ஒண்ணு விட்டிருக்காங்க.

Google Chromeனு பேரு.
நெருப்பு நரி (firefox) மாதிரி, இதுவும் open sourceஆக கிடைக்குமாம்.

இப்பதான் தரவிரக்கம் பண்ணி கொஞ்சம் வெளையாடிப் பாத்தேன். சில விஷயங்கள் பிடிச்சிருந்தது.

நல்ல விஷயங்கள்:
+ ரொம்ப சிம்ப்பிள் interface. menu கூட கிடையாது. மேலே வெறும் உரல் அடிக்க ஒரு இடம் அதுக்குப் பக்கத்துல, குட்டி பட்டன்ஸ் அம்புடுதேன். ப்ரவுஸரை விட, அதை உபயோகித்து பாக்கர பக்கங்கள்தான் ப்ரதானம் என்பதால், ப்ரவுஸரில், மிகத் தேவையானதை மட்டுமே வைத்திருக்கிறார்களாம். நல்லது.
+ உரல் அடிக்கும் இடத்திலேயே, தேடும் வசதியும் உள்ளது. அடிக்க அடிக்க, நாம் அடிக்க நினைக்கும் முழு வார்த்தையை காட்டிக்கிட்டே வராங்க. நல்லது.
+ வேகம் ஓ.கே.
+ டமில் எல்லாம் நல்லாவே தெரியுது
+ பெருசா ஒரு குற்றமும் முதல் ப்ரயோகத்தில் கண்ணுல படல
+ படங்களின் மேல் right-clickஇனால் வரும் 'copy image url' நல்ல வசதி. IEல இது இல்ல. நெருப்பு நரீல இருக்கு.

கெட்ட விஷங்கள்:
- most visited பக்கங்களை ப்ரவுஸர் முதல் பக்கத்தில் திறந்ததும் படம் போட்டு குட்டி குட்டி பொட்டீல காட்டராங்க. இது கொஞ்சம் வில்லங்கமான விஷயம். நல்லால்ல சொல்லிப்புட்ட்டேன். :)
- அடிக்கடி உபயோகிக்கும் சில விஷயங்கள் எல்லாம் எப்படி பண்றதுன்னு கண்டுபிடிக்கரதுக்குள்ள தாவு தீந்திடுச்சு. save, print இந்த மாதிரி.
- தினகரன் பக்கம் போனா, ஜாங்கிரியா தெரியுது. font எல்லாம் எப்படி எடுத்துப் போடணும்னு பாக்கணும்
- ஈ.கலப்பை ஏதோ ப்ரச்சனை பண்ணுது. மேலே, 'ஏமாற்றவில்லை'ன்னு அடிக்கரதுக்குள்ள தாவு தீந்ததால, IEக்கு மாறிதான் இந்தப் பதிவே போட்டேன்
- microsoftஐ போட்டு பாடாய் படுத்தினார்கள். அவர்களின் IEல் எல்லா தேடு இஞ்சின்களையும் சேர்க்க வேணும்னு. chromeல எப்படி மத்த தேடு இஞ்சின்களை இணைக்கரதுன்னு தெரியல. நேரா கூகிளுக்குப் போவுது :(

ஸோ? தீர்ப்பு?

wait for DVD.. சீ. I mean, wait for a few more months. Nothing big to rave about in Google Chrome. so, stay with FireFox or IE. :)


Interesting Reads:

1) Five reasons why Chrome will crash and burn

2) Five reasons Chrome will take over the world


18 comments:

CVR said...

நம்ம பதிவுல ப்ளிக்கரில் இருந்து தொடுக்கப்பட்ட படங்கள் முழுமையா தெரியுதான்னு பாத்து சொல்லுங்க தல!!
நெருப்புநரியில ஒழுங்கா தெரியுது ஆனா எக்ஸ்ப்ளொரருல பாதிதான் தெரியுது :(

Veera said...

நீங்க சொல்ற மாதிரி தமிழ் எழுத்து அடிக்கறதுக்குள்ள தாவூ தீந்துருது, இந்த கமெண்ட் கூட நோட்பேட்-ல டைப் செஞ்சு ஒட்டுனதுதான். :)

இப்பத்தான் க்ரோம் வந்துருக்காரு, மாற்றங்கள் இனிமேல் வரும்னு எதிர்பார்க்கலாம்.

SurveySan said...

CVR, உங்க பேஜ் சூப்பரா தெரியுது நரிலயும், க்ரோம்லயும்.
IE ல சரியா இல்ல.

so, that means, you are following the HTML standards :)

CVR said...

liked it!
my blog looks fine with complete pictures :D

typing in tamil is a nightmare...impossible in its current form :-|

SurveySan said...

வீரசுந்தர், ஈ.கலப்பை ப்ரச்சனை நம்ம யூனீகோடு ஆளூங்க யாராச்சும் எடுத்துச் சொன்னாதா கூகிளுக்கு உடனே தெரியவரும்னு நெனைக்கறேன்..

சரி செஞ்சூடுவாங்க. ஆனா, நெருப்புநரியிலிருந்து விலகிச் செல்ல, க்ரோமில் பெருசா ஒண்ணும் தெரியல.

CVR said...

//ஆனா, நெருப்புநரியிலிருந்து விலகிச் செல்ல, க்ரோமில் பெருசா ஒண்ணும் தெரியல///
true...
no key differentiating factor...

but the new clean UI is neat(atleast for now).will get me hooked atleast for a change :)

SurveySan said...

cvr,

//but the new clean UI is neat(atleast for now).will get me hooked atleast for a change :)//

did you figure out a way to turn off 'most visited' ?

that will haunt you sometimes. ;)

Veera said...

நெருப்பு நரியில விலகிச் செல்ல இப்போதைக்கு க்ரோம்ல ஒண்ணும் இல்ல. ஆனா க்ரோம் ஒரு ஓபன் சோர்ஸ், தவிர ப்ளக்-இன்ஸ் செய்யறதுக்கான வசதியும் இருக்கு. ப்ளக்-இன்ஸ்-தான் நெருப்புநரியோட வெற்றிக்கு முக்கியமான காரணம். இதப் பார்க்கும்போது, க்ரோம் நெருப்பு நரிக்கு ‘டஃப் ஃபட்' குடுக்கும்னு எதிர்பார்க்கலாம். தவிர, “க்ரோம்” கூகிளாண்டவருக்கிட்ட இருந்து. இது ஒண்ணு போதாதா!? ;-)

SurveySan said...

//க்ரோம் நெருப்பு நரிக்கு ‘டஃப் ஃபட்' குடுக்கும்னு எதிர்பார்க்கலாம்.//

in the end IE will win :)

Veera said...

//in the end IE will win :)//

Comedy pannatheenga. :P

IE8 solreengala!?

SurveySan said...

வீரசுந்தர்,

IE8 இன்னும் முயற்சிப் பண்ணல.
IE7 ஓ.கே. ஆனா, download பண்ண, நெருப்பு நரி மாதிரி சுலபமான முறை இல்லை.

கத்துப்பாங்க. இனி சுதாரிச்சுப்பாங்க. IE9 பக்காவாயிடும் ;)

மஹாராஜா said...

hotmail use panna mudiyala..
romba kashtama irukku...

திவாண்ணா said...

//wait for DVD.. சீ.//

:-))))))))))))))))))))

இலவசக்கொத்தனார் said...

survey

there is an option called incognito window. you dont have to be so threatened by the most visited! :))

SurveySan said...

Maharaja,

hotmail works for me.

SurveySan said...

திவா,

:)

SurveySan said...

இலவசக்கொத்தனார்,

just tried incognito window.
what a concept :)

but, hope there is some preference somewhere to hide 'most visited'. who on earth came up with the idea? :)

SurveySan said...

added two new links to the post.

1) Five reasons why Chrome will crash and burn

2) Five reasons Chrome will take over the world