recent posts...

Tuesday, September 23, 2008

கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் போட்டி

ரொம்ப நாளா ஒரு ஆசையிருக்கு.

செய்யர கணிப்பொரி வேலை, job satisfaction தருவது நின்னு, சிலப் பல வருஷம் ஆயிடுச்சு.
ஏதோ, காலேல எழுந்தோமா, பாதித் தூக்கத்துலயே, ஆஃபீஸுக்குப் போனமா, பெஞ்ச தேச்சமா, எல்லா மீட்டுங்குக்கும் போய் மண்டைய ஆட்டினமா, வேண்டா வெறுப்பா, வேலைய முடிச்சமா, அஞ்சு மணிக்கு டான்னு வீட்டுக்கு வந்தமான்னு பொழப்பு போவுது.

பள்ளி பயிலும் காலத்துல, நானும் என் க்ளோஸ் ஃப்ரெண்டும், மச்சி ஒரு மூஜிக் கடை வெச்சு, எல்லாருக்கும், பாட்டு ரெக்கார்ட் பண்ணிக் கொடுக்கணும்னு பேசிக்கட்டோம்.
அப்பெல்லாம், அஞ்சோ பத்தோ கொடுத்தா, TDK/Maxell கேசட்ல, ராசா பாட்டு எல்லாம், vinyl தட்டுலேருந்து ரெக்கார்ட் பண்ணித் தருவாங்க. பொழுதன்னிக்கும் அந்த ரெக்கார்டிங் கடையிலயே பொழுத ஓட்டலாம்.

அந்த பெரிய ஸ்பீக்கர்ல வர static சத்தம் ஆகட்டும், அதைத் தொடர்ந்து வரும் SPB ஜானகி குரல்களாகட்டும், யப்பாடா, பொழுதன்னிக்கும் இத செய்யலாம்டா, அதான் வாழ்க்கைன்னு நெனைக்க வச்சுது.

அப்பாலிக்கா, மெத்தப்(?) படிச்சு, எங்கெங்கயோ திரும்பி, 'பொரி'யில் மாட்டியாச்சு.

விடுபட்டுப் போன சந்தோஷங்களை, கொஞ்சம் கொஞ்சமா தேடிப் பிடிச்சு அடைய வேண்டியிருக்கு. இப்ப கொஞ்ச நாளா அடிக்கடி உதிக்கும் ஒரு ஆசை, எப்படியாவது ஒரு குறும்படம் எடுத்து வெளியிடணும்னு.

இப்பதான், எல்லா வசதியும் சுலபமா கெடைக்குதே. camcorder இல்லாதவங்க, செல்பேசியிலையே வீடியோ எடுக்க முடியுது. என்ன குப்பை எடுத்தாலும், வலையேத்த யூ.ட்யூப் காரன் கடைய விரிச்சு ஒக்காந்திருக்கான். முக்கால் வாசி, software ஓ.சியில் கிடைக்குது.

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும், ஒரு உந்துதல் இல்லன்னா, ஒண்ணும் நடக்காதுல்ல?

இப்ப தலைப்புக்கு வரேன்.

கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன், குறும்படப் போட்டி வச்சா, எவ்ளோ பேரு கலந்துக்குவீங்க?

யோசிச்சு சொல்லுங்க.

எப்படி நடத்தலாம்னு, எல்லோரும் கலந்துரையாடி, இதை ஜூப்பரா செய்யலாம்.

நான் ஒருங்கிணைத்தாலும், நானும் ஆட்டையில் குதிக்க ஐடியா இருக்கு. ;) (atleast, பினாமி பேர்லயாவது )

இத ஒருத்தர் தனியா செய்வதை விட, அந்தந்த ஊரில் இருக்கும் சக பதிவர்கள், நண்பர்களுடன், கூட்டு முயற்சியா செஞ்சா, மிகச் சிறப்பா வரும் வாய்ப்புண்டு.
எப்படியும், நடிக்கரதுக்கும், கேமரா இயக்கவும், ஆளைத் தேடியாகணுமே?
சக பதிவர்கள், நண்பர்கள் அருகாமையில் இல்லாதவர்கள், குடும்ப மக்களையும், அலுவலக சகாக்களையும் கூட உதவிக்கு அழைக்கலாம்?

அடுத்த மாசம் ஆரம்பிச்சு, ஒரு மூணு நாலு மாசம், நேரம் எடுத்துக்கிட்டு நடத்தலாம்.

முதல் கட்டமா கதைய அனுப்பச் சொல்லலாம்.
கதையில், சிறந்த 10 கதைளை தேர்ந்தெடுக்கலாம்.
10 கதைகளுக்கு, எல்லோரும், அவரவர் ஸ்டைலில், திரைக்கதை/வசனம் எழுதி, படமாய் எடுத்து அனுப்பும் படி சொல்லலாம்.

தயாரிப்பாளர்கள்/ஸ்பான்ஸர்ஸும் தேடிப் பிடிக்கலாம் (anyone? தயாரிப்பளர்கள் பேர் குறும்படத்தில் வரணும்னு ஒரு ரூல் போட்டிடலாம் ;) ).

மொதல்ல, எவ்ளோ பேரு, ஆட்டையில் குதிப்பீங்கன்னு சொல்லுங்க.
பின்னூட்டத்தில், குறும்படம் எடுக்க, உங்களுக்கு நண்பர்கள்/குடும்பம்ஸ்/சகாக்கள் உதவியெல்லாம் கிட்டுமா? practically possibleஆ? இதெல்லாம் கொஞ்சம் சொல்லுங்க.

அப்படியே கேமராவ மேலிருந்து கீழ் நகத்தி, க்ரேன் ஷாட்ல ஜூம் பண்ணீங்கன்னா, கீழ ஒரு பொட்டி தெரியும்.
ஸ்லோ மோஷன்ல அதுக்கிட்ட ஓடி, ஏதாவது ஒரு ஆப்ஷனை, க்ளிக்கி, 'ஏக்ஷன்' க்ளிக்கினீங்கன்னா, உங்க வாக்கு பதிவாயிடும் ;)

(பொட்டி தெரியாதவங்க, இங்கண க்ளிக்கவும்)


ஒரு நூறு பேராவது (கள்ள ஓட்டு சேர்காமல்), சரின்னாங்கன்னா, அடுத்த கட்டம் பத்தி யோசிக்கறேன் :)

இதற்கு, "குறும் போட்டி"© என்று நாமகரணம் சூட்டுகிறேன் ;)

இந்த ஸ்கிரிப்டை உங்க பக்கத்துல வெளம்பரம் கொடுக்கரவங்களுக்கு, குறும்பட டைட்டில்ல, விளம்பர உதவின்னு உங்க பேரை போடச் சொல்லுவேன் ;)

30 comments:

SurveySan said...

நான் முதலிடம் பெறும் படத்துக்கு ஒரு பரிசு தருவேனாக்கும் ;)


தயாரிப்பு: சர்வேசன் கிரியேஷன்ஸ்னு டைட்டில்ல போடணும்.

உங்க கொம்பேனி பேரு என்ன வெப்பீங்கன்னு சொல்லிடுங்க. :)

☀நான் ஆதவன்☀ said...

நமீதா கால்ஷீட் கிடைக்குமா???.

SurveySan said...

ஆதவன்,

நல்ல கேள்வி.
கெடச்சா சொல்லுங்க, நான் தயாரிக்கறேன் உங்க படத்தை ;)

A Blog for Edutainment said...

Hi. Surveyசன்.. Great Idea.

I added your javascript widget in
A Blog for Short Films


Thanks dear Surveyசன்..

SurveySan said...

blog for shortfilms,

நன்றி.

குறும்படத்துக்குன்னே ப்ளாகா? அருமை.
பாப்போம், ஆளுங்க மாட்றாங்களான்னு.

A Blog for Edutainment said...

Hi. Surveysan - I modified your script with English words. Please do not feel bad about me.

I am using your widget.

Thanks

SurveySan said...

No worries.

thanks,

☀நான் ஆதவன்☀ said...

//ஆதவன்,

நல்ல கேள்வி.
கெடச்சா சொல்லுங்க, நான் தயாரிக்கறேன் உங்க படத்தை ;)//

கிடைச்சா நீங்க என்ன தயாரிக்கிறது, நானே 100 கோடி செலவில ஒரு குறும்படம் தயாரிப்பேன். ஹி ஹி ஹி...

அருண் நிஷோர் பாஸ்கரன் said...

Surveysan, how to add this widget in my page?.

Nice attempt let me try to participate.

Thanks,
Arun

கா.கி said...

நான் மீடியா மாணவனாக்கும்... நான் ஆட்டைக்கு வரேன்... என்னால சுமாரா நடிக்க வரும் ஆனா ரொம்ப personality எதிர்பார்காதீங்க (நான் ஒல்லி)... என் friend cameraman ஒருத்தன் இருக்கான், சென்னைல எடுக்கபோரீங்கன்னா நானும் என் நண்பனும் வருவோம்.... என்கிட்டே சில கதைகளும் இருக்கு...any producers??? கீழ இருக்குற லிங்க் கிளிக்கி ஒரு 10 நிமிஷம் பொறுமையோட இருந்து என் முதல் டாகுமெண்டரி (குறும் படம் இல்ல) பாருங்க... குரல் என்னுடையதுதான்

http://www.youtube.com/watch?v=VBkLwynyBdI

Cable சங்கர் said...
This comment has been removed by the author.
முத்துலெட்சுமி/muthuletchumi said...

100 பேருங்கறது கொஞ்சம் அதிகமா தெரியுதே.. :)

Cable சங்கர் said...

குறும்படம் எடுக்க நிறைய டைரக்டர்கள் வருவார்கள்.ஆனால் தயாரிப்பாளர்கள் தான் கிடைக்க மாட்டார்கள். எனென்றால் இம்மாதிரியான ப்ராஜெக்டுக்கு செய்யும் இன்வெஸ்ட்மெண்ட் திரும்ப வருவது மயிரை கட்டி மலையை இழுப்பது போலாகும். எனக்கு அனுபவம் இருப்பதால் சொல்கிறேன்.

SurveySan said...

அருண்,

//Surveysan, how to add this widget in my page?.

Nice attempt let me try to participate.

Thanks,
Arun///

copy the script in the textarea and you can put it in your html/javascript blogspot widget. or you can create a post and include that script too.

SurveySan said...

karthcick,

//என்கிட்டே சில கதைகளும் இருக்கு...any producers??? //

பெரிய producers எல்லாம் தேவைப்படாத அளவுக்கு, சிம்பிளா எடுக்கர மாதிரி இருந்தாலும் ஓ.கே தான் :)

idea is to entertain and encourage amateur குறும்பட creations.

SurveySan said...

முத்துலெட்சுமி,

//100 பேருங்கறது கொஞ்சம் அதிகமா தெரியுதே.. :)///

100 பேர் இப்ப வந்தாலும், போட்டின்னு வெச்சா ஒரு 25 பேராவது தேறுவாங்க ;)

SurveySan said...

cable sankar,

///குறும்படம் எடுக்க நிறைய டைரக்டர்கள் வருவார்கள்.ஆனால் தயாரிப்பாளர்கள் தான் கிடைக்க மாட்டார்கள்.///

மிகச் சரி. ஆனா, இங்க நான் சொல்றது, பெரிய தடபுடலா இல்லாம, சிம்பிளா, இருக்கும் ஆயுதம் கொண்டு எடுக்கப்படக் கூடிய amateur குறும்படம்.

இதுக்கு தயாரிப்பாளர் எல்லாம் தேடண்ணுமா?
கடைசீல ஒரு பரிசு குடுத்துடலாம்.

நாமக்கல் சிபி said...

நயன்தாரா ஹீரோயினா நடிச்சா நான் சம்பளமே வாங்காம ஹீரோவா நடிக்கிறேன்!

டூயட் சாங்க்ஸ் - நானே எழுதிடுவேன்! (அதுக்கும் சம்பளம் வேண்டாம்)

SurveySan said...

யாரந்த 8 பேரு?

உங்க பேர சொல்லிட்டுப் போங்க, கலந்துரையாடணும் ;))

திவாண்ணா said...

ம்ம்ம்ம்...நல்ல ஐடியாதான். டுபுக்கு செய்ததா ஞாபகம். முயற்சி பண்ணலாம்.

SurveySan said...

//நயன்தாரா ஹீரோயினா நடிச்சா நான் சம்பளமே வாங்காம ஹீரோவா நடிக்கிறேன்!//

தல, டோக்கன் வாங்கணும்.
உங்க டோக்கன் நெ:913

நெறைய பேர் வெயிட்டிங் :)

SurveySan said...

திவா, டுபுக்கு படம் நானும் பாத்திருக்கேன்.

புச்சா, 'நல்ல' படம் எடுக்க எல்லாருக்கும் இந்த வாய்ப்பு ;)

SurveySan said...

அட, 19 பேர் ரெடியா?
ஜமாய்ச்சிடலாம் போலருக்கே.

நான் பங்குகொள்வேன். என்னால் ஒரு குழு உருவாக்க முடியும். (19) (27.54%)

வெட்டிப்பயல் said...

என்னால ஸ்க்ரீன் ப்ளே எழுத முடியும். ஆனா நடிக்க வைக்கறதோ இல்லை நடிக்கறதோ நமக்கு ஆகாத விஷயம் :(

SurveySan said...

//என்னால ஸ்க்ரீன் ப்ளே எழுத முடியும். ஆனா நடிக்க வைக்கறதோ இல்லை நடிக்கறதோ நமக்கு ஆகாத விஷயம் :(//

:) அதுக்குதான் டீம் உருவாக்கணும். நண்பர்கள், சக பாடிகள், இப்படி யாராச்சும் மாட்டாமயா போவாங்க?

Truth said...

சர்வேசன்,
எனக்கு ரொம்ப நாளா ஒரு படம் எடுக்கனும்னு ஆசை இருந்துகிட்டே இருக்கு. கதை எல்லாம் இருக்கு, ஒரு நாலு பேறு போதும் நடிக்க. மியூசிக் எல்லாம் add பண்ண தெரியாது. தனிய அப்றோமா டயலாக் add பண்ணவும் தெரியாது. ஆள செலக்ட் பண்ணமுடியுமானு தெரில. அப்டி செலக்ட் பண்ற பசங்க நல்ல நடிப்பானுங்கலானு கூட தெரியாது. ஆசை மட்டும் இருக்கு. கூடவே பயமும் இருக்கு :)
நான் லண்டன் ல இருக்கேன், யாரவது லண்டன் ல இருந்த கொஞ்சம் என்கூட சேந்துகோங்க ப்ளீஸ்.

~உண்மை

Truth said...

உங்களோட java script-எ என்னோட blog-la add பண்ணி இருக்கேன்.
http://memycamera.blogspot.com/

~உண்மை

SurveySan said...

உண்மை,

லண்டன்ல கண்டிப்பா ஆள் இருப்பாங்க.
26 பேர்தான், கோதால எறங்க தயாரா இருக்காங்க.
கொஞ்ச நாள்ள, எந்தெந்த ஊர்ல எவ்ளோ பெரு இருக்காங்கன்னு, கேட்டு பாக்கறேன்.

உங்கள மாதிரியே எனக்கும் ஆசை இருக்கு, இந்த மாதிரி போட்டி வெச்சுதான், ஆசைய நிறைவேத்திக்கணும். :)

நசரேயன் said...

நானும் ஆட்டத்துக்கு வாரங்க

SurveySan said...

நசரேயன், நன்னி!

சீக்கிரம், அடுத்த கட்டம் பத்தி அறிவிப்பு வுடறென் ;)