recent posts...

Sunday, September 07, 2008

சிங்கை/மலேஷியப் பதிவர்களுக்கு ஓம்காரின் அருளாசி - முடிவுரை


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மீண்டும் சில சர்ச்சைக்குரிய விஷயங்கள் நம் பதிவுலகில் அலசி ஆராயப்பட்டு தொவைச்சு காயப்போடப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும்.
(நினைவில்லன்னா, டாக்டர பாருங்க ;))

இதில் முக்கியப் ப்ரச்சனையாக என் கண்ணில் பட்டது, வி.சதுர்த்தியை கிண்டலடித்த பதிவுகள்.
டிபிசிடியார் கிண்டலாய் எழுதிய பதிவில், விநாயகனை மட்டும் கிண்டறீங்களே, ரம்ஜானைக் கிண்டலியான்னு கேட்டேன்.
இதைக் கேட்டது, ரம்ஜானைப் போய் கிண்டல் பண்ணுங்க என்ற நோக்கத்தில் அல்ல. கடவுள் நம்பிக்கையை பழிப்பவர்கள், ஒரு கடவுளை மட்டும் பழிக்கும் ஓரவஞ்சனைக்கு ஏதாவது சிறப்புக் காரணம் இருக்கான்னு தெரிஞ்சுக்கத்தான்.
இதே டிபிசிடி ரம்ஜானை மட்டும் கிண்டியிருந்தா, அவருகிட்ட போய், வி.சதுர்த்தி கிண்டலியான்னு கண்டிப்பா கேட்டிருப்பேன்.
(மேலே சொன்னதில் இம்மியளவும் உண்மையில்லன்னா, இதுவரைக்கும் நான் பக்ரிதுக்கும் ரம்ஜான் முடிஞ்சதும் என் நண்பர்கள் வீட்டில் சாப்பிட்ட பிரியாணியெல்லாம் ஜீரணமாகாமல் என் நெஞ்சில் அடைச்சு வெடிச்சு சிதறட்டும்).

டிபிசிடியாரும் நான் கேட்ட கேள்விக்கு சுத்தி வளச்சு பல பதில் சொல்லியிருக்காரு. எல்லாம் எனக்குத் தெரிஞ்சு சப்பைக் கட்டு. எனக்குத் தெரிஞ்சு, டிபிசிடியாருக்கு விநாயகரைப் பிடிக்காமல் போனதுக்கு காரணம், அவரு வடநாட்டுக் கடவுள் என்பது போலவே தெரிகிறது.
அவரு ஏன் வடநாட்டுக் கடவுள் ஆனாருன்னு எனக்கு ஆராய்ச்சி செய்ய நேரமில்லை.
(என் தியரிப்படி கடவுள்கள் எல்லாம் வேறு கிரகத்தவர்கள். அது இப்ப வேணாம், லூஸ்ல விடுங்க :) ).
எல்லாம், ஆரிய/திராவிட பெத்தட்டின் ஃபார்முலாவின் பாதிப்பு இது. பத்த வச்ச பரட்டை நல்லாவே பத்த வச்சிருக்காரு.

கடவுளைப் பிடிக்காதவங்க, ஜாலியா இருங்க. ஆனா, கடவுள் இருக்காருன்னு நம்பரவங்களோட நம்பிக்கையில் குச்சியை விட்டு நோண்டுவது ஏன்?

கேட்டா இந்த நம்பிக்கை மனித குலத்தை அழிச்சு அகல பாதாளத்துக்கு தள்ளிடும் அதனால அட்லாஸ் மாதிரி தூக்கி நிறுத்தறோம்பீங்க. கடவுள் நம்பிக்கை குரங்கிலிருந்து மனுஷன் ஆனதும் ஆரம்பிச்சது. இவ்ளோ ஆயிரம் காலம், மனுஷன் நாசமாத்தான் போயிட்டானா?

வடநாட்டுக் கடவுள் உள்நாட்டு கடவுளை ஓரங்கட்டறாருன்னு நெனைக்கறவங்க, நாலு உள்நாட்டுக் கடவுளைப் பத்தி எழுதுங்க, இல்லன்னா அவர்களுக்கு சதுர்த்தி நடத்துங்க.
அத்த வுட்டுபோட்டு....?

முதலில், தங்கள் வீடுகளில் சுண்டல் சமைப்பதை தடுக்க முடிஞ்சா தடுங்க, அப்பாலிக்கா ஊர் மக்களுக்கு நல்ல சேதி சொல்லலாம். இது பலருக்கும் பொருந்தும்னு நெனைக்கறேன் ;)

கோவிலுக்கு போரது நிம்மதியைத் தருது பல பேருக்கு - அவங்களுக்கு நிம்மதி கிடைக்க வேறென்ன செய்யச் சொல்றீங்க?

அனுராதா மேடம் பதிவுல, தினமும் கடவுளின் படத்தைப் பாத்து தன் நிலையை எண்ணி பல கேள்விகள் கேப்பாங்கன்னு எழுதியிருக்காங்க. அது அவங்களுக்கு ஒரு வடிகாலா இருந்திருக்கு. இப்படி ஒவ்வொருத்தருக்கு ஒரு வடிகால் கடவுள்.
இன்னிக்குத் தேதில, வெறும் பக்தியை மட்டும் நம்பி யாரும், தன்நம்பிக்கையெல்லாம் விட்டுடரது இல்லை. ஸோ, பக்தியால் யாரும் கெடப் போவதில்லை.

நம்பிக்கை, வாழ்க்கையில் பிடிப்பைத் தரும்; தன்நம்பிக்கை துடுப்பாய் இருக்கும்; (© -சர்வேசன், 2008)


நம்ம ஊர்ல, பொடி நடையா நடந்து, பழைய நண்பர்களுடன் அக்கடான்னு ஒக்கார கோயில் படிக்கட்டை விட்டா, என்னா பொது இடம் இருக்குங்க சாரே? ஏதாவது ஒரு எடத்த சொல்லுங்க, நாளைக்கே கோயிலுக்குப் போரத விட்டுடறேன்.

நீங்க எதையும் புரிஞ்சுக்க முயற்சி பண்ண மாட்டீங்கன்னு தெரியும். உங்க பகுத்தறிவு அதுக்கெல்லாம் இடம் தராதுன்னு நேக்குத் தெரியும். இத்தோட நிறுத்திக்கறேன் ;)

இனி, கோவிக் கண்ணன் சாருக்குப் போவோம்.
கோவி, நியாயமான கேள்விகள் கேட்டீங்க. ப்ளாஸ்ட்டர் பாரிஸ்ல பண்ண விநாயகரை கடலில் கரைத்து, விநாயகரை துண்டு துண்டு உடைத்து சின்னா பின்னமாக்குவது சரியா? இயற்கைக்குத் தீங்கில்லியான்னெல்லாம் கேட்டீங்க.
எனக்கும், இது பிடிக்காத விஷயம்தான்.
எனக்குத் தெரிஞ்ச விநாயக சதுர்த்தியில், மாட்டுவண்டியில் விநாயகர் ஜம்னு வருவாரு, லட்டு மாலை போட்டுக்கிட்டு. ராத்திரி பத்து பதினோரு மணிக்கு ஒவ்வொரு வீடா வண்டிய ஓட்டிக்கிட்டு வருவாங்க. ஒவ்வொரு வீட்டிலும், தேங்கா, கற்பூரம் எடுத்துட்டு வந்து காட்டி, லட்டு வாங்கிப்போம்.

இந்த வெயிட்டிங் டைமில், மொத்த தெருமக்களும் டி.வியெல்லாம் மறந்து தெருவில் கூடி, ஜாலியா பேசிட்டு இருப்பாங்க. சில்னு ராத்திரி வெளியில் நின்னு, அக்கம் பக்கம் இருந்த மக்களிடம் ஊர் கதை பேசும் பெருசுகளும், ஓடிப்பிடிச்சு விளையாடிய பொடிசுகளும், தெருவோரம் குவித்த மணலில் கை விட்டு விளையாடிய பெண்-பொடிசுகளும், இப்ப நெனச்சாலும் இனிப்பா இருக்கு.

இந்த மாதிரி, ஊர்-கூடும், விஷயங்கள் நம்ம ஊர்ல வேறென்னங்க இருக்கு?
பகுத்தறிவுப் பொதுக்கூட்டங்களா? மனுஷன் போய் கேக்க முடியுமா அந்த கூட்டத்தையெல்லாம்?

உங்க பதிவுல, விநாயகர் சதுர்த்தி ஏன் பண்ண ஆரம்பிச்சாங்கன்னு, யாரோ ஒரு ஆன்மீகர் ஸ்வாமி ஓம்கார் வந்து அழகா சொல்லியிருக்காரு பாத்திருப்பீங்க.
அவரு என்னா சொன்னாருன்னு சொல்றதுக்கு முன்னாடி ஓம்காரைப் பத்தி சில பாயிண்ட்டு:
ஓம்கார் சார், உங்களை நீங்களே 'ஸ்வாமின்னு' சொல்லிகரது எனக்குப் பிடிக்கல.
அப்பாலிக்கா, சிலை டு சிலை சக்தி மாத்தலாம்னு சொல்றதும் ஏற்பாய் இல்லை.
உங்களுக்கு 108 வயசுன்னு போட்டிருக்கு?
நீங்க மாறு வேஷத்துல வந்த பழைய பதிவர் யாருமில்லியே? ;)


இனி விஷயத்துக்கு வரேன்.

அதாவது, திரு.ஓம்கார் சொல்வது என்னவென்றால் வி.சதுர்த்தி வெள்ளையன் காலத்தில், பொதுக்கூட்டங்கள் நடைபெற தடை போட்டிருந்த காலகட்டத்தில், பொதுமக்களை ஒன்று திரட்ட திலக் உருவாக்கிய மத யுக்திதான் இந்த விநாயகர் ஊர்வலமாம்.
மக்கள் ஒன்று திரண்டு, அப்பரம் என்னாச்சுன்னு உங்களுக்கு நான் சொல்லணும்னு இல்லை.

இன்னைக்கு, கொஞ்சம் இந்த வி.சதுர்த்தி ஊர்வலத்தை பலரும் பல விதமா 'யூஸ்' பண்ணிக்கராங்க.
புள்ளையாரை கடலில் கரைப்பதால், மாசுப் ப்ரச்சனைகள், etc... etc..

இதைத் தடுக்க ஓம்கார் என்னா சொல்றாருன்னா, எல்லா புள்ளையாரையும் கொண்டு வந்து கடல் கரையில வச்சிட்டு, எல்லாத்துக்கும் பொதுவா ஒரு குட்டிப் புள்ளையாரை செஞ்சுட்டு, அந்தப் புள்ளையாரை மட்டும் கடலில் கரைக்கலாம். மத்த புள்ளையாரையெல்லாம், ரீ-யூஸ் செய்யலாங்கராரு.

நல்ல புத்திமதி இல்ல இது? இன்னிக்குத் தான் கவனிச்சேன், இங்கே அமெரிக்கக் கோயில் ஒன்றில் அப்படித்தான் பண்ணினாங்க இன்னிக்கு. பஸ்ல கொண்டு போய், ஒரு பெரிய புள்ளையாரை கடலில் போட்டு, மத்த பிள்ளையாரெல்லம் கோயில்லையேதான் வச்சிடறாங்க.

இதை 2009ல் கண்டிபா செய்யணும்.

இதை உடனே ரூலா போட உள்ளூர்-கோர்ட்டு/சுப்ரீம்-கோர்ட்டு பெரியவா ஏற்பாடு செய்யணும்.

இந்த மாதிரி பல புள்ளையார்கள் இருக்கும்போது, ஒரே ஒரு புள்ளையாரை மட்டும் கரைக்காமல், எல்லாத்தையும் கரைக்கரவங்களுக்கு, புள்ளையார் ஒரு நன்மையும் தரக்கூடாதுன்னு புள்ளையாரைக் கேட்டுக்கறேன்.

கருத்ஸ்?

நன்னி!

பி.கு1: சென்ற பதிவின் சர்வேயில் 19 மதத் தீவிரவாதிகள் வாக்கிருக்காங்க. ரொம்பக் கேவலம் சார்.

பி.கு2: அடுத்த பண்டிகை தீபாவளிக்கு, இப்பவே ஒரு பதிவை ரெடி பண்ண வேண்டி வருமோ? அதுவும் வடநாட்டுப் பண்டிகையோ? டிபிசிடியார் தீவளி கொண்டாடுவீங்களா? இல்லியா? வூட்ல பட்டாசெல்லாம் வெடிப்பாங்களா?

14 comments:

கோவி.கண்ணன் said...

//(மேலே சொன்னதில் இம்மியளவும் உண்மையில்லன்னா, இதுவரைக்கும் நான் பக்ரிதுக்கும் ரம்ஜான் முடிஞ்சதும் என் நண்பர்கள் வீட்டில் சாப்பிட்ட பிரியாணியெல்லாம் ஜீரணமாகாமல் என் நெஞ்சில் அடைச்சு வெடிச்சு சிதறட்டும்).
//

:)

வண்டி வண்டியாக பிரியாணி இருக்கு ! எங்கேயா ? இங்கே...

கோவி.கண்ணன் said...

//உங்களுக்கு 108 வயசுன்னு போட்டிருக்கு?
நீங்க மாறு வேஷத்துல வந்த பழைய பதிவர் யாருமில்லியே? ;)
//
அவர் பின்னூட்டத்தில் விளக்கி இருக்கிறார்.

எப்படியோ ஓம்கார் சுவாமிகளுக்கு நல்ல அறிமுகம் கொடுத்தாச்சு !

இணைய போலிஸ் மாதிரி சந்தேகப்படுறிங்க, நான் படலை !
:)

SurveySan said...

கோவி, லிங்குக்கு நன்றி.
(பிரியாணிக்கும், 108ம்).


ஓம்கார், விஷயம் உள்ளவ்ராய்த் தெரிவதால், கண்டிப்பா, முந்நாள் பதிவராய் இரூக்காது என்று ஆணித்தரமாக நம்பலாமோ? :)

ஓம்காருக்கு பத்து கேள்விகள்னு ரெடி பண்ணி, சில சந்தேகங்கள் தீத்துக்கலாம்னு நெனைக்கறேன் ;)

ஆயில்யன் said...

//, தினமும் கடவுளின் படத்தைப் பாத்து தன் நிலையை எண்ணி பல கேள்விகள் கேப்பாங்கன்னு எழுதியிருக்காங்க. அது அவங்களுக்கு ஒரு வடிகாலா இருந்திருக்கு. இப்படி ஒவ்வொருத்தருக்கு ஒரு வடிகால் கடவுள்.
இன்னிக்குத் தேதில, வெறும் பக்தியை மட்டும் நம்பி யாரும், தன்நம்பிக்கையெல்லாம் விட்டுடரது இல்லை. ஸோ, பக்தியால் யாரும் கெடப் போவதில்லை.//


இதுக்கும் கூட நீங்க (© -சர்வேசன், 2008)போட்டுக்கலாம் !

அருமையான கருத்து! :)

SurveySan said...

ஆயில்யன், மிக்க நன்றி.

எனக்கே திரும்ப படிக்கும்போது, கண்ணுல தண்ணி வந்துடுச்சு. என்னமா தத்துவமெல்லாம் வருதுங்க எனக்கு. ஸ்ஸ் :)

SurveySan said...

21 terrorists so far in the survey results ;)

Unknown said...

//21 terrorists so far in the survey results ;)//

பதிவு படிக்கும் இந்துகளின் எண்ணிக்கை முஸ்லிம்களோடு ஒப்பிடுகையில் மிக அதிகம்.

ஆனால் சர்வேப்படி இந்து தீவிரவாதிகளின் எண்ணிக்கையோ குறைவு.

இதுவே இந்துகள் சகிப்புத்தன்மை அதிகம் அதிகமுள்ளவர்கள் என் காட்டுகிறது!

இதனால்தான் அவர்கள் மீது கல்லடியும் சொல்லடியும் அதிகமாக விழுகிறதோ?

SurveySan said...

thenali, both gang is equally bad.

ரம்ஜான் ஓ.கே, வி.சதுர்த்தி நோ நோ! - 11 votes16.92%)
வி.சதுர்த்தி ஓ.கே, ரம்ஜான் நோ நோ! - 10 votes

Unknown said...

//both gang is equally bad.//

I agree with you.

However, there is no chance of equal 50% voting from these gangs.
Hindu voters must be at least 70% (~ 46 voters). Thus only 20% of them are hard liners. But 56% of Muslim voters are hardliners.

In fact, I believe that number of Hindu voters must be more than 70%, thus, the percentage of hindu hardliners also must be lesser than the above value. So It could be concluded that Hindus are more secular.

SurveySan said...

thenali, i see it like this

Following are good peopple. I dont care what religion they follow.
எம்மதமும் சம்மதம், ரெண்டும் ஓ.கே! (27) (41.54%) ரெண்டும் வேணாம், ஆள விடு. (12) (18.46%)

Following are BAD hardliners. I dont care what religion they follow. They both must change and mature.

ரம்ஜான் ஓ.கே, வி.சதுர்த்தி நோ நோ! (11) (16.92%) வி.சதுர்த்தி ஓ.கே, ரம்ஜான் நோ நோ! (10) (15.38%)

;)

Unknown said...

// i see it like this//

I appreciate!

But whatever the way you see, unfortunately, facts do exist!

SurveySan said...

//But whatever the way you see, unfortunately, facts do exist!//

I know, but survey is not just for hindus and muslims. Its open for ALL humans :)

Anonymous said...

Mr.கிரிடிக்
சர்வேசன்
பிலீசிங் பவுடரு
டோன்டு

நல்ல பேரு வைக்கிரிங்கடா ……

வல பூவுலா ஒங்க ரீலு சுத்தர தெரமா தான் எல்லாருக்கும் தெரியுமே….

அனாலும் திருப்பி திருப்பி சுத்தரது…

அடகுங்கட ….

அப்டியே கரபான் பூச்சி / கொசு … இப்படி எல்லம் பெரு வைக்கரத உட்டுட்டு

மாமா/ மடிசார் மாமி /காபி/ அவா / இவா/ நன்ன சொன்னேல் போங்கோ/ தயிர்வடா/ பேஷ் பேஷ்/

அய்யொ முடியலையே……

உங்க

Jeyendranin Swarnamalya

SurveySan said...

swarnamalya, பதிவுக்கு சம்பந்தமில்லாம ஏன் மத்தவா பேரை இழுக்கறேள்ள்ள்ள்?

மேட்டருக்கு வாங்கோ, இங்க சுத்தரதுல என்ன நோக்கு புடிக்கலை?

அத்த சொல்லுங்கோ மொதல்ல.

?