எல்லா வருஷம் போலவும் இந்துக்களும் நமது இஸ்லாமிய நண்பர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்து விட்டோம்.
எல்லா வருஷம் போலவும் இஸ்லாமியர்களும் நமக்கு விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களை மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்து விட்டார்கள்.
எல்லா வருஷம் போலவும் 'சில' விஷமிகள் விநாயக சதுர்த்தி கொண்டாடப் படுவதை கிண்டல் அடித்து அகமகிழ்ந்து கொண்டார்கள்.
இல்ல தெரியாமத் தான் கேக்கறேன், வருஷா வருஷம் தொடர்ந்து வரும் இந்த நெக்குல் நையாண்டி எல்லாம் ஏன்? இதிலிருந்து உங்களுக்கு என்னா கெடைக்குது?
இஷ்ட தெய்வத்துக்கு பொறந்த நாள் கொண்டாடரதுல உங்களுக்கு எங்க குத்துது?
இஷ்ட தலைவர்களுக்கு நீங்க பொறந்த நாள் கொண்டாடரதுல்லையா?
இஷ்ட நண்பர்கள்/வீட்டவர்களுக்கு பொறந்த நாள் கொண்டாட மாட்டீங்களா?
வாழ்க்கைல சாப்பிடரத தவர மத்ததெல்லாம் வேஸ்ட்டுன்னு நெனைக்கறவங்களா நீங்க?
இந்த நெக்குல் நையாண்டி எல்லாம் வெறும் புள்ளையாரை மட்டும் குறிவைக்கும் biased நிலை ஏன்?
ரம்ஜான் முடிந்ததும் உங்கள் இஸ்லாமிய நண்பர்களின் வீட்டில், தயங்காமல் பிரியாணி தின்னச் செல்லும் நீங்கள், விநாயக சதுர்த்திக்கு சுண்டல் தின்பதை ஏன் கிண்டல் பண்றீங்க?
இந்த சொறிதல் எதுக்காக?
என்னாத்த சாதிக்கறீங்க இதனால?
எல்லாரின் உணர்வுக்கும் மரியாதை கொடுக்கப் பழகுங்கள். மனிதம் தழைக்க உதவுங்கள்!
மதத்தின் பெயரால் ஏற்றத்தாழ்வு பல இடங்களில் உண்டுன்னு எனக்கும் தெரியும்.
அதர்க்கு தீர்வு, இந்த குத்தல் நையாண்டிகள் கிடையாது என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.
Bridge the Gap, dont blast it - Write Responsibly!
ஸ்ஸ்ஸ். ஹாப்பி வெள்ளி. :)
கருத்த சொல்லுங்க்க, சர்வெலயும் ஒரு வாக்கு வாக்குங்க!
33 comments:
சர்வேயில் ரெண்டும் மூனும் ஒன்னு.
அதை அறியாதோர் வாயில் மண்ணு:-)
ஆகா. நெத்தியடி அடிச்சிட்டீங்களே.
மாத்திட்டேன்.
ஆனா, ரிஜல்ட் பக்கத்துல மாத்திதான் வரும், அது பரவால்ல, அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம் ;)
என்ன ஆச்சு, உங்களுக்கு கிடைக்க வேண்டிய கொழுக்கட்டையை யாராவது பிடிங்கிட்டாங்கள ? பிரியாணி இல்லை என்று சொல்லிட்டாங்களா ?
:)
தனிமனித நம்பிக்கை எதுவுமே தவறு அல்ல, ஒரு குழுவாக இயங்கி அடுத்தவர்களின் நம்பிக்கையை குழைப்பது தான் தவறு ! - கருத்து சொல்லியாச்சு !
அப்பால வர்றேன் !
என்னங்க கோவி......
இதென்ன நாமமா குழைக்க?
குலைக்க:-))))
கோவி,
///என்ன ஆச்சு, உங்களுக்கு கிடைக்க வேண்டிய கொழுக்கட்டையை யாராவது பிடிங்கிட்டாங்கள ? பிரியாணி இல்லை என்று சொல்லிட்டாங்களா ?///
கொழுக்கட்ட பண்ணி கொடுக்கர குடுமபமெல்லாம் சில வரூஷங்களுக்கு முன்னால் அசலூரு போயிட்டாங்க.
பிரியாணி சாப்பிடணும்னா, இந்த நேரத்துல ஊருல இருக்கணும். ரம்ஜாம், பக்ரித் பிரியாணி சாப்பிட்டு சில வருஷங்கள் ஆயிடுச்சு :(
//ஒரு குழுவாக இயங்கி அடுத்தவர்களின் நம்பிக்கையை குழைப்பது தான் தவறு ! - கருத்து சொல்லியாச்சு !
//
அடுத்தவரின் நம்பிக்கை மட்டுமல்ல, எத்த குழைச்சாலும் தப்புதேன் ;)
//அடுத்தவரின் நம்பிக்கை மட்டுமல்ல, எத்த குழைச்சாலும் தப்புதேன் ;)
9:27 PM, September 04, 2008
//
கேட்க நல்லா இருக்கு,
ஒண்ணே ஒண்ணு பிரியல,
விநாயக சதுர்த்திப் பற்றி 'தூற்றி' பதிவு எழுதுபவரிடம் சென்று 'உங்களால் ரம்ஜான் பற்றியும் எழுத முடியாமா ?' என்று கேட்பது எந்த வகையில் சரி ?
// SurveySan said...
நல்லால்ல.
ரம்ஜானுக்கு ஏன் கவுஜ எழுதல?
September 4, 2008 9:34 AM
//
தனக்கு கண்ணு போனாதாக நினைத்துக் கொண்டு அடுத்தவனுக்கும் போக வைக்க முடியுமா என்று கேட்பது தானே ?
புதசெவி !
:)
அது என்ன சுண்டல், பிரியாணினு கம்பேர் பண்றது?
என்கிட்ட சுண்டலா, பிரியாணியானு கேட்டா, மதியம் சாப்பிடற நேரம்னா பிரியாணினு சொல்லுவேன். சாயந்திரம் டீ குடிக்கிற நேரத்துல கேட்டா சுண்டல்னு சொல்லுவேன் :)
கொழுக்கட்டைனு போட்டா இன்னும் கொஞ்சம் ஓட்டு கிடைக்குமில்லை.
கோவி,
////விநாயக சதுர்த்திப் பற்றி 'தூற்றி' பதிவு எழுதுபவரிடம் சென்று 'உங்களால் ரம்ஜான் பற்றியும் எழுத முடியாமா ?' என்று கேட்பது எந்த வகையில் சரி ?
/////
எழுத முடியுமான்னு கேக்கலை. ஏன் எழுதல, அதுக்கு ஏதாவது ஸ்பெஷல் காரணமா இருக்கான்னு தான் tbcdய கேட்டேன்.
அவரு பதில் அதுக்கு திருப்திகரமா இல்லை ;)
யாரும் யாரையும் 'தூற்றக்கூடாது' என்பதே என் விருப்பம்.
வெட்டி,
////கொழுக்கட்டைனு போட்டா இன்னும் கொஞ்சம் ஓட்டு கிடைக்குமில்லை.////
குட்.பாயிண்ட்!
பிரியாணியா கொழுக்கட்டையான்னு கேட்டிருந்தா, கண்டிப்ப்பா நான் பிரியாணிக்குதான் போட்டிருப்பேன்.
'ரெண்டும்' ஓகேன்னு ஒரு ஐட்டம் இருக்கே, சுண்டல் கம்மியா பிடிக்கரவங்க, அத்த குத்திக்க வேண்டியதுதான்.
பிரியாணிப் பிரியர் இல்லன்னா, வாங்கிட்டு பார்சல எனக்கு அனுப்பினா, எனக்கு ஒரு ஆட்சேபணையும் லேது ;)
கோவி,
//தனக்கு கண்ணு போனாதாக நினைத்துக் கொண்டு அடுத்தவனுக்கும் போக வைக்க முடியுமா என்று கேட்பது தானே ?///
ஹி ஹி. அப்படி ஒரு காரணம் வருதுன்னு. நான் கேட்டதுக்கு சாரி!
ஆனா, ஆபீஸ்ல அடுத்தவனுக்கு மட்டும் சம்பள உயர்வு கொடுத்திருக்கீங்களே, எனக்கும் கொடுங்கன்னு கேட்டா, அடுத்தவனுக்கு கொடுத்தத குறைச்சிடுங்க்கன்னு அர்த்தம் ஆகாது ;)
//ஆனா, ஆபீஸ்ல அடுத்தவனுக்கு மட்டும் சம்பள உயர்வு கொடுத்திருக்கீங்களே, எனக்கும் கொடுங்கன்னு கேட்டா, அடுத்தவனுக்கு கொடுத்தத குறைச்சிடுங்க்கன்னு அர்த்தம் ஆகாது ;)//
அண்ணே, நீங்க கேட்டது தலைகீழா .. எனக்கு மட்டும் சம்பளம் குறைச்சிருக்கீங்களே ,அவனுக்கு ஏன் குறைக்கல்ல ..இது தான் நீங்க கேட்டது .
ஜோ/joe,
//அண்ணே, நீங்க கேட்டது தலைகீழா .. எனக்கு மட்டும் சம்பளம் குறைச்சிருக்கீங்களே ,அவனுக்கு ஏன் குறைக்கல்ல ..இது தான் நீங்க கேட்டது .//
ஹ்ம். அப்படியும் வச்சுக்கலாம்.
சமமான ரெண்டு பேர் இருக்கும்போது, எனக்கு மட்டும் குறைச்சா, அது ஏன்னு கேக்கரதுல தப்பில்லை.
//சமமான ரெண்டு பேர் இருக்கும்போது, எனக்கு மட்டும் குறைச்சா, அது ஏன்னு கேக்கரதுல தப்பில்லை.//
எனக்கு மட்டும் ஏன் கொறச்சீங்கன்னு கேக்குறது தப்பில்லை ..ஆனா அவனுக்கும் குறைச்சுடீங்கண்ணா நான் சமாதானமாயிடுவேன் -ன்னு சொல்லுறீங்க பாருங்க ..அங்க தான் உங்க நல்லலெண்ணம் விளங்குது .
நல்ல வேளை TBCD ஒரு கிறிஸ்தவரோ ,இஸ்லாமியரோ இல்லை .
ஜோ/joe,
///அங்க தான் உங்க நல்லலெண்ணம் விளங்குது .///
என் எண்ணம் நல்லெண்ணம்தான், அட்லீஸ்ட் இந்த விஷயத்தை பொறுத்தவரைக்கும்.
குதர்க்கமா எதையும் மீன் பண்ணி கேக்கலை.
tbcdகிட்ட அந்த கேள்வி கேக்கும்போது என் மனசுல இருந்தது "ஆனா வூனான்னா, இந்து மத பண்டிகைகளை டிபிசிடி மாதிரி ஆளுங்க்க கேலி பண்றாங்களே, மத்த மத பண்டிகைகள பண்ண மாட்றாங்களே, அது ஏன்? ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கா? பயமா?" இத்த தெரிஞ்சுக்கத்தான்.
மத்தபடி, மத்த பண்டிகைகளையும் கிண்டல் பண்ணுங்கன்னு நான் சொல்றதா, நீங்க நெனைக்கரதுக்கு நான் என்ன சொல்றதுன்னு தெரியல.
dont read between the lines and dont put words into my mouth ;)
//நல்ல வேளை TBCD ஒரு கிறிஸ்தவரோ ,இஸ்லாமியரோ இல்லை//
புரியல்ல?
இருந்தாதான் என்ன?
ஏக்சுவலி, இருந்திருந்தா, இவ்ளோ கொழப்பமே வந்திருக்காது எனக்கு.
இந்த biased நையாண்டிதான் என் குழப்பத்துக்கு காரணமே ;)
//
இல்ல தெரியாமத் தான் கேக்கறேன், வருஷா வருஷம் தொடர்ந்து வரும் இந்த நெக்குல் நையாண்டி எல்லாம் ஏன்? இதிலிருந்து உங்களுக்கு என்னா கெடைக்குது?
//
அதானே ஏன்???
ஆனா வூனான்னா, இந்து மத பண்டிகைகளை டிபிசிடி மாதிரி ஆளுங்க்க கேலி பண்றாங்களே, மத்த மத பண்டிகைகள பண்ண மாட்றாங்களே, அது ஏன்? ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கா? பயமா?" இத்த தெரிஞ்சுக்கத்தான்
இந்த மாதிரி கேள்வி எல்லாம் நாம கேட்டால் உடனே நம்மளை இந்து மத வெறியன் என்று சொல்லிவிடுவார்கள்
//இந்த நெக்குல் நையாண்டி எல்லாம் வெறும் புள்ளையாரை மட்டும் குறிவைக்கும் biased நிலை ஏன்? //
யாருன்னே தெரியாத பிள்ளையாரை யாராவது சொல்வாங்களா!
வெட்டி வேலை பாக்குறதுக்கு பதிலா உருப்படியா ஏதாவது வேலையை பாருங்கன்னு மனுஷாளைத் தான் சொல்லியிருப்பாங்க
//ரம்ஜான் முடிந்ததும் உங்கள் இஸ்லாமிய நண்பர்களின் வீட்டில், தயங்காமல் பிரியாணி தின்னச் செல்லும் நீங்கள், விநாயக சதுர்த்திக்கு சுண்டல் தின்பதை ஏன் கிண்டல் பண்றீங்க?//
பிரியாணியும் சுண்டலும் எனது இரண்டு கண்கள்.
ஆனால் வருடத்திற்கு ஒருமுறை கண்ணில் காட்டும் போது தான் கோபம் வருகிறது
என்கிட்டே பிரியாணியா,
சுண்டலான்னு கேட்டா பிரியாணிக்கு தான் என் ஓட்டு.
என்ன தான் தலப்பாக்கட்டு பிரியாணி வாரம் ஒருக்கா சாப்பிட்டாலும், பாய் வீட்டு பிரியாணி மாதிரி வராது
இந்த கிண்டலை எல்லாம் லூஸ்ல விடுங்க...இவர் ஒருத்தர் மட்டுமா பண்றார்...ஊர்ல பல பேர் இப்படி தான் திரியறாங்க....நாலு பேர சிரிகர்த்துக்கு தானே நம்ம பிள்ளையார use பண்றாங்க...இத தான் பிள்ளையாரும் லைக் பண்ணுவார் :)....வேற மதத்து கடவுள ஏன் கிண்டல் பண்றதில்லை?...கண்ண குத்திடுவார் னு பயம் தான் :)
meanwhile...நீங்க என் blog ல போட கமெண்ட் க்கு பதில் கூட போடல...ஆபீஸ் ல ஆணி புடுங்கற வேலை ஜாஸ்தி ஆயிடிச்சு...அதான்...போன கமெண்ட் ல பிரியாணி...கொழுகட்டை னு சுவை கூட்டி எழுதி இருக்கேன்ல :)
TBCD இருப்பது மலேஷியா. அது ஒரு முஸ்லிம் நாடு. ஆயிரம் சப்பை கட்டு கட்டினாலும் நிஜ காரணம் இதுதான். எல்லாம் பத்வா பயந்தான்!
mastan, vaal payyan, arun, thenali,
thanG u!
-------
//வி.சதுர்த்தி ஓ.கே, ரம்ஜான் நோ நோ/// -- who are the 6 black sheeps? enna kodumainga idhu?
இந்த ஒருவனே தேவன் என்பதும் ஏன் ரம்ஜானைப் பற்றி எழுதலை என்பதும் ஒட்டலை சர்வேசன்..
மதச்சார்பின்மை வேடம் நல்லாயில்லை...இயல்பாக இருங்க..!!!!
:P
tbcd,
நான் எப்பவும் போல இயல்பாதான் இருக்கேன்.
யாரின் நம்பிக்கையையும் நையாண்டி செய்வதில் எனக்கு ஏற்பில்லை.
ஒருவனே தேவன் or கடவுள் இல்லை, இந்த ரெண்டுல எங்கையோதான் என் நம்பிக்கை இருக்கு.
அதுக்காக, தனித்தனி தெய்வங்கள் வச்சிருக்கரவங்களையும், தெய்வம் இல்லன்றவங்களையும் கிண்டல் செய்வது தவறு என்பதும் என் நம்பிக்கை.
உங்களின், சாய்ந்த நிலைதான் புரியா வியப்பா இருக்கு எனக்கு :)
ஐயா,
உங்களுக்கு விளக்க பிளிச்சிங்க் பவுடர் பத்தாது...
தூங்குபவரை எழுப்பலாம்..
முழிச்சிக்கிட்டே நடிப்பவரை...
யாரின் நம்பிக்கையயை நீங்கள் கேலி செய்ய மாட்டிங்க..ஆனா..டிபிசிடி ஏன் செய்யமாட்டேகிறான் என்று மட்டும் போட்டுப் பார்ப்பீங்க...
நல்ல இயல்புங்க..
அப்படியே பிரிட்ஜிலியே வையுங்க..கெட்டுடுடப் போகுது.. :))))
உங்க சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லையே...:P
என் நிலை குழம்பிய நிலை தான்..நீங்க அதைக் கண்டு இன்னும் குழம்பினால் நான் பொறுப்பல்ல... :P
தனி தனி தெய்வத்தை நீங்க கும்பிடுங்க... மக்கள் மேலே திணிச்சி..இது தான் முதல்லேயிருந்தே இருக்கு என்று மாயயை உருவாக்கி, அவர்களின் அடிப்படையே தெரியாத வண்ணம் உருமாற்றுவது தான் தவறு...
ஃஃஃஃஃ
நீங்க சுண்டல் சாப்பிடுவதில் எனக்கு ஏதூம் பிரச்சனை இல்லை..!!!
நல்லா சாப்பிடுங்க..அப்படியே இங்கேயும் ஒரு பார்சலை தட்டிவிட்டு சாப்பிடுங்க..
//
SurveySan said...
tbcd,
நான் எப்பவும் போல இயல்பாதான் இருக்கேன்.
யாரின் நம்பிக்கையையும் நையாண்டி செய்வதில் எனக்கு ஏற்பில்லை.
ஒருவனே தேவன் or கடவுள் இல்லை, இந்த ரெண்டுல எங்கையோதான் என் நம்பிக்கை இருக்கு.
அதுக்காக, தனித்தனி தெய்வங்கள் வச்சிருக்கரவங்களையும், தெய்வம் இல்லன்றவங்களையும் கிண்டல் செய்வது தவறு என்பதும் என் நம்பிக்கை.
உங்களின், சாய்ந்த நிலைதான் புரியா வியப்பா இருக்கு எனக்கு :)
///தூங்குபவரை எழுப்பலாம்..
முழிச்சிக்கிட்டே நடிப்பவரை...
//
tbcd சார் (சரோஜா பாத்த எஃபெக்டு),
நானும் இதையேதான் உங்களப் பத்தி நெனச்சுக்கிட்டு இருக்கேன்.
நம்ம ரெண்டு பேரையும் அந்த ஆண்டவந்தான் எழுப்பணும் ;)
எந்திரிங்க எந்திரிங்க...
கடவுள் வந்துருக்கேன்.
ஏப்பா? என்ன கூப்பிட்டீங்க?
தல
இதுக்கெல்லாம் பீல் பண்ணி பதிவு போட்டு ஏன் நேரத்தை வீணடிச்சிட்டு இருக்கீங்க.. சும்மா விட்டு தள்ளுங்க எல்லாம் ஒரு அல்ப விளம்பரம் தான்.. இதுல செம காமெடி பதிவே உடன்பிறப்பு அப்படின்னு ஒருத்தர் கலைஞர் பதிவுல போட்டு இருக்குற விளக்க பதிவு தான்.. படிச்சி சிரிச்சி மகிழுங்க இது மாதிரியான மக்களை பாத்து.. இப்போ latest fashion என்னானா இந்து மதத்தை திட்டுறவங்க மிதவாதிங்க/பகுத்தறிவாளர்கள் .. ஏண்டா திட்டுறேன்னு கேக்குறவங்க மத வாதிங்க.. அவங்களையெல்லாம் அந்த அல்லாவும் ஜீசசும் தான் காப்பாத்தனும்..
//TBCD இருப்பது மலேஷியா. அது ஒரு முஸ்லிம் நாடு. ஆயிரம் சப்பை கட்டு கட்டினாலும் நிஜ காரணம் இதுதான். எல்லாம் பத்வா பயந்தான்!//
ஒ இது தான் மேட்டரா.. ரைட்டு விடுங்க..
//இப்போ latest fashion என்னானா இந்து மதத்தை திட்டுறவங்க மிதவாதிங்க/பகுத்தறிவாளர்கள் .. ஏண்டா திட்டுறேன்னு கேக்குறவங்க மத வாதிங்க.. //
அட ஆமாம். இந்த பதிவுக்காக என்னையும் லேபில் பண்றது அப்படிதான்.
இதான் மேட்டரா ;)
சீக்கிரம் புரிஞ்சுப்பாங்கன்னு நம்பலாம்.
இன்னொருத்தர் சொன்னது, விநாயகர் எல்லாம் ஆர்யக் கண்டுபிடிப்பாம், திராவிடர்களின் தெய்வங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டாராம் விநாயகர்.
அப்படி நெனைக்கரவங்க, திராவிட தெய்வங்களின் சதுர்த்தியின் போது, அழகா பதிவு போட்டு வாழ்த்து தெரிவிச்சு, எல்லாருக்கும் சுண்டல் கொடுக்கட்டுமே. பண்டைய வழிபாட்டுமுறையெல்லாம் இன்றைய சமுதாயத்துக்கு எடுத்துச் சொல்லலாமே. எனக்கும் தெரீஞ்சுக்க ஆசதான்.
அத்த வுட்டுட்டு.... ஏன் ஏன் ஏன் ?
;))
குரங்கு, வாங்க கடவுளே.
நீங்க அல்லாவா, ஏசுவா, விநாயகரா?
Post a Comment