recent posts...

Sunday, February 18, 2007

த.வெ.உ புகைப்படப் போட்டி முடிவுகள்

 
போட்டி அமர்க்களமாக நடந்து முடிந்தது.

போட்டியில் கலந்து கொண்ட எல்லா புகைப்படங்களும் சிறந்த தரத்துடன் இருந்தது உண்மை (ஒரு சில புகைப்படங்களில் மட்டும் ஒரு நையாண்டித் திறமை கையாளப் பட்டிருந்தது :)).

சும்மா டைம் பாஸுக்கு போடோ எடுப்பவர் மத்தியில், இவ்வளவு திறமை இருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

199 வாக்குகள் பதிவாயிருந்தன;
வெற்றி பெற்றவர் விவரங்கள் கீழே:


முழு விவரங்கள் இங்கே.

photo_M, _F, _L அனுப்பியது யாரென்று அறிய ஆவலாய் இருப்பீர்கள்.

'(த.வெ.உ) சிறந்த புகைப்பட வித்தகர்' டைட்டிலும், பரிசும் வெல்பவர், photo_M ஐ க்ளிக்கிய நெல்லை சிவா.
வாழ்த்துக்கள் நெல்லை சிவா. கலக்கிட்டீங்க. வெங்காயம் தாமரை ஆனதும், தக்காளி அல்லி ஆனதும் யார் ஐடியாங்க? விளக்கமா பதிவொண்ணு போடுங்க. நன்றி!


photo_F அனுப்பி இரண்டாம் இடத்தை பிடித்தவர் பெருசு. சூப்பருங்க, அந்த வெங்காயக் கண்ணும், அந்த ரைத்தா கட்டிங்ல face வச்சதும், சூப்பரோ சூப்பர். தங்கமணி கிட்ட திட்டு வாங்கி, அவசர அவசரமா நீங்க இதை எடுத்தத பத்தி போட்ட பதிவு படித்தேன். முழு விவரங்களோடு இன்னொரு பதிவு போடுங்க. french-frys கட்டிங்க்ல இருந்த பச்சை உருளைதான் சில சர்ச்சையில் மாட்டிக் கொண்டது :)


photo_L அனுப்பி மூன்றாம் இடத்தை பிடித்தவர் Aparnaa. வாழ்த்துக்கள் அபர்ணா. ஒளிந்து கொண்டு இருக்கும் தக்காளி அழகு. க்ளோஸ்-அப் வெங்காயமும் அழகு. போண்டா போட உதவிய, போட்டிய பத்தின உங்க பதிவும் அழகு. :)

போட்டியின் co-sponsor கடலோடி பரணீயும் நானும் இணைந்து,

$25 முதல் பரிசுக்கும், $75 உதவும் கரங்கள் தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாகவும் வழங்க முடிவு செய்திருந்தோம்.

இது பற்றி நெல்லை சிவாவுக்கு தெரிவித்த போது, தனது $25 ம் நன்கொடையில் சேர்த்து $100 ஆக அனுப்ப விருப்பம் தெரிவித்துள்ளார்.

மொத்தம் $100 உதவும் கரங்கள் நிறுவனத்துக்கு, நமது தேன்கூடு 'சாகரன்' கல்யாண் நினைவாக, இணையப் பதிவர்கள் சார்பில் அனுப்பப் படும்.

கலந்து கொண்டு சிறப்பித்த, வாக்களித்த, விளம்பரப் படுத்திய அனைவருக்கும் நன்றி.

தேன்கூடு, தமிழ்மணம் நிர்வாகத்திர்க்கும் நன்றி.

இம்முறை, புகைப்பட நேர்த்தியை (lighting, framing) விட, புகைப்படத்தில் இருந்த subject வைத்திருந்த (கட்டிங், கார்விங், க்ரியேடிவ் டச்) விதம்தான் பலரையும் ஈர்த்திருக்கிறது.

அடுத்த போட்டி என்ன வைக்கலாம்? ஐடியாஸ் வரவேற்க்கப் படுகின்றன :)

பி.கு: படங்களும் பதிவர்களும் (எல்லோரும் 'படம் எடுத்த கதை'யை சுவாரஸ்யமாக எழுதவும் :) ):
Anamika - photo_A.jpg, Boston Bala - photo_B.jpg, Radha Sriram - photo_C.jpg, Oppaari - photo_D.jpg, Appavi - photo_E.jpg, Perusu - photo_F.jpg, k4kkarthik - photo_G.jpg, Anand - photo_H.jpg, MuthuLakshmi - photo_I.jpg, Jeeves - photo_J.jpg, Usha - Photo_K.jpg, Aparna - photo_L.jpg, Nellai Siva - photo_M.jpg, KrubaShankar - photo_N.jpg, Brindan - photo_O.jpg, Shakthi - photo_P.jpg

சர்வேசனின் ஒரு வரி தீர்ப்பு சொல்லலன்னா நல்லா இருக்காது அதனால, என் வமர்சனம் :)

photo_A - day-lightல் சிம்பிள் ஷாட். வெங்காயம் கட் பண்ணியிருந்தா தூள் கெளப்பியிருக்கும்.
photo_B - ஹிஹி, Valentineன் தாக்கம். வாய் தான் கொஞ்சம் கோணலாயிடுச்சு :)
photo_C - பள பள தக்காளியும், வெங்காயமும் அழகு. பக்கா டாப் angle ஷாட்.
photo_D - வாவ் சொல்ல வைத்த படம்.
photo_E - color இல்லாததனால், பன்ச் மிஸ்ஸிங்.
photo_F - யப்பா, சிம்பிளா நெத்தியடி .
photo_G - சூப்பர். food magazineல போடலாம்.
photo_H - இது professional. நேர்த்தியான framing.
photo_I - 16ல் எனக்குப் பிடித்தது. வெயிலின் அழகு ஒரு +.
photo_J - கீழே இருக்கும் பச்சை கொஞ்சம் தூக்கல். முக்கிய காய்களை திசை திருப்பும் பச்சை.
photo_K - Cக்கு opposite. காய்கறிகள் freshness கம்மி.
photo_L - பளிச் வெங்காயம் அழகு. ஏதோ ஒண்ணு மிஸ்ஸிங்.
photo_M - தடாகம் அழகு. முழுத் தக்காளி ஒளித்திருக்கலாம். உருளையையும் லில்லி ஆக்கியிருக்கலாம்.
photo_N - ஹி ஹி ஹி! camera phoneஆ? out-of-focus.
photo_O - கொடுவா மீசைக்கு ஏற்ற கண்கள் மிஸ்ஸிங். :)
photo_P - குட்டி தக்காளி சீப்பா? தண்ணி தெளிச்சிருந்தா இன்னும் தக தக கூடியிருக்கும். குட் framing.

நன்றீஸ்! நன்றீஸ்! நன்றீஸ்!

வாக்கெடுப்புப் பதிவு
அறிவிப்பு வந்த பதிவு

 

55 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நெல்லை சிவா கார்விங்க் பத்தி பதிவு போட்டப்போவே நினைச்சேன் கார்விங் போட்டோ அவருடையதா தான் இருக்கனும்ன்னு.
மத்தபடி சிலர் வந்து பின்னூட்டத்தில்
வெளிச்சத்தில் கொஞ்சம் வேறுபாட்டு காட்டும் வேலை செய்திருக்கும் சில படங்கள் சிறந்தது என்று சொன்னபோது அதில் என் படத்தின் பெயர் வந்ததே சந்தோஷமாக இருந்தது.
ஒரு வித்தியாசமான் போட்டி வைத்து எங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிகாட்ட வைத்த சர்வேசன் ஜி க்கு நன்றிகள்.

Anand V said...

வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள் !
ஸ்பெஷல் நன்றி சர்வேசன் மற்றும் பரணீ

k said...

Congratulations winners!!!! surveysan u r doin a great job! waitin for the next competition! :)

நெல்லை சிவா said...

அடிச்சாங்க பாரு லெட்சுமி மேடம், நெத்தியடிங்க, சூசகமா கண்டுபிடிச்சிட்டீங்க,

முதல் பார்வையிலே 'அட' சொல்லவைத்தது, நம்ம 'பெருசோ'ட படம் - F தான்.

போட்டோ D,H & I - யும் எனக்குப் பிடித்தன.

இந்தப் போட்டியை சிறப்பாக நடத்திய சர்வேசனுக்கும், பரணிக்கும், வாக்களித்த அனைவருக்கும் முறையே பாராட்டுக்களும், நன்றிகளும் உரித்தாகுக.

Radha Sriram said...

வெற்றி பெற்ற நெல்லை சிவா, பெருசு மற்றும் அபர்ணாக்கு பாராட்டுக்கள். வெற்றி பெற்ற மூன்று படங்களுமே நல்ல creative வா இருந்தது. சர்வேசனுக்கும் ஒரு thanks! போட்டி வச்சதுக்கு..... என்ன எனக்கு ஒரு ஆறுதல் பரிசாவது கிடைச்சிருந்தா இன்னும் கொஞஜம் சந்தோஷமா இருந்திருக்கும் ஹி ஹி(iam a bad loser!) ...எனிவே அடுத்த போட்டிக்கு காமெராவும் கையுமா ரெடி!!!!!

Anonymous said...

First sight itself, i thought either F or M will win the contest,

Good job Surveysan, Keep it up!

ramachandranusha(உஷா) said...

எப்படியோ எனக்கும் ஓட்டுப்போட்ட அந்த நல்லுள்ளத்துக்கு நன்னி நன்னி நன்னி. நானே ஓட்டுப் போட்டுக்கலைங்க:-)
இப்படிக்கு,
லாஸ்ட்டுல பஸ்ட்
பி.கு சர்வேசா, நானும் புகைப்பட போட்டியில் கலந்துக் கொண்ட சோகக்கதையை எழுதுகிறேன்.

SurveySan said...

//ஒரு வித்தியாசமான் போட்டி வைத்து எங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிகாட்ட வைத்த சர்வேசன் ஜி க்கு நன்றிகள்.
//

போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த உங்களுக்கும் நன்றி :)

SurveySan said...

a n&,

//ஸ்பெஷல் நன்றி சர்வேசன் மற்றும் பரணீ //

நன்றி anand. உங்க போடோ சூப்பரா இருந்தது. அந்த ஸ்டவ் டெக்னிக் நல்ல ஐடியா.

SurveySan said...

anamika,

//surveysan u r doin a great job! waitin for the next competition! :) //

I will wait for some creative suggestions before announcing next competition.

SurveySan said...

நெல்லை சிவா,

//போட்டோ D,H & I - யும் எனக்குப் பிடித்தன.

இந்தப் போட்டியை சிறப்பாக நடத்திய சர்வேசனுக்கும், பரணிக்கும், வாக்களித்த அனைவருக்கும் முறையே பாராட்டுக்களும், நன்றிகளும் உரித்தாகுக.//

D,H,I எனக்கும் பிடித்தவை.

போட்டியில் பங்கேற்று க்ரியேடிவ்வா கலக்கின உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

SurveySan said...

Radha Sriram,

//எனக்கு ஒரு ஆறுதல் பரிசாவது கிடைச்சிருந்தா இன்னும் கொஞஜம் சந்தோஷமா இருந்திருக்கும் ஹி ஹி(iam a bad loser!) ...எனிவே அடுத்த போட்டிக்கு காமெராவும் கையுமா ரெடி!!!!!//

loserஆ? உங்க படம் ரொம்ப அழகுங்க. அந்த டாப் ஷாட் ரொம்ப நேர்த்தியா எடுக்கப்பட்டிருக்கு.
அடுத்த போட்டி கூடிய விரைவில் :)

SurveySan said...

அனானி,

//First sight itself, i thought either F or M will win the contest, //

good judgement :)

SurveySan said...

ramachandran usha,

//எப்படியோ எனக்கும் ஓட்டுப்போட்ட அந்த நல்லுள்ளத்துக்கு நன்னி நன்னி நன்னி. நானே ஓட்டுப் போட்டுக்கலைங்க:-)
இப்படிக்கு,
லாஸ்ட்டுல பஸ்ட்//

:) ப்யூட்டி இஸ் இன் த ஐ ஆப் த பிஹோல்டர்.
'நமக்கு நாமே' உபயோகப் படுத்தாத உங்கள் நேர்மையும் வியக்க வைக்குது.

//சர்வேசா, நானும் புகைப்பட போட்டியில் கலந்துக் கொண்ட சோகக்கதையை எழுதுகிறேன்//

வெயிட்டிங் :)

Anonymous said...

uNmaiyil ennaik kavarnthathu Oppaari - photo_D.jpg thaan thalaiva. Framing, contrast, lighting, Shades, creativity.... ஒரு புகைப்பட ஆர்வலன் என்ற முறையில் அவருக்கு என் வாழ்த்துக்கள். ( What is his URL)

SurveySan said...

செல்லா,

//uNmaiyil ennaik kavarnthathu Oppaari - photo_D.jpg thaan thalaiva. Framing, contrast, lighting, Shades, creativity.... ஒரு புகைப்பட ஆர்வலன் என்ற முறையில் அவருக்கு என் வாழ்த்துக்கள். ( What is his URL)
//

என்னையும் மிகவும் கவர்ந்தது ஒப்பாரியின் D.
அவர் URL http://oppareegal.blogspot.com

அவரின் original புகைப்படம் இன்னும் அமக்களமா நச்சுனு இருந்தது. புகைப்பட விதிகள் கருதி, படத்தை ட்ரிம் பண்ணி போடவேண்டியதாயிடுச்சு.
அவர் படம் எடுத்த சொந்தக் கதையை எழுதுவார் என்று நினைக்கிறேன் :)

ஆதிபகவன் said...

உற்சாகமாக பங்குபற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

சர்வேசனுக்கு ஒரு "ஓ".
"Keep it up"

பொன்ஸ்~~Poorna said...

நான் நினைச்ச ரெண்டு படமும் வந்திடுச்சு..

நெல்லை சிவாவுக்கும் பெருசுக்கும் அபர்ணாவுக்கும் வாழ்த்துக்கள்..

போட்டியில் கலந்துகிட்டவங்க எல்லாருமே அவங்கவங்க படத்தோட ஒரு பதிவு போட்டா இன்னும் நல்லா இருக்கும்.. :)

SurveySan said...

ஆதிபகவன்,

//சர்வேசனுக்கு ஒரு "ஓ".

நன்றீஸ்.

//"Keep it up" //

ஓ.கே, மேலயே வச்சிடறேன் :)

SurveySan said...

பொன்ஸ்,

//போட்டியில் கலந்துகிட்டவங்க எல்லாருமே அவங்கவங்க படத்தோட ஒரு பதிவு போட்டா இன்னும் நல்லா இருக்கும்.. :) //

அப்படியே நீங்களும் உங்கள் சேவ் த எர்த், பத்தி ஒரு பதிவு போட்டுடுங்க :)

Anonymous said...

நூறு டாலரா? மின்னாடியே சொல்லப்புடாதா? ம்..ம்..அடுத்த போட்டில பாக்குறேன்.

சூப்பரப்பு..எல்லாந்தேன்..உம்மையும் போட்டோவையும் சேத்துதேன்..

SurveySan said...

அனானி,

//சூப்பரப்பு..எல்லாந்தேன்..உம்மையும் போட்டோவையும் சேத்துதேன்..//

நன்றிங்கண்ணா.. அடுத்ததுல கலந்துக்கங்க.
இந்த மாதிரி நிறைய வைக்கலாம், நமக்கும் பொழுது போவும், தேவயானவங்களுக்கும் தேவயானது கெடைக்கும்.

Anonymous said...

நல்ல முயற்சி; நல்ல போட்டியாளர்கள்; நல்ல முடிவு;

aparnaa said...

congrats வெற்றி பெற்ற நெல்லை சிவா, பெருசு!! சத்தியமா நினைக்கல என் photo க்கு இவளவு vote வரும்னு.just for fun i tried it ..thanks everyone for the votes and thanks suvesan for the contest.
And my spl thanks for k4karthick who encouraged me and made me to post snaps even thought he is also one of the contestent.Thanks lehar!! i thought photo_M,photo_F and photo_G will only win.
those were my choices!! Thanks survesan it was realy a fun!

Anonymous said...

You did a good job, surveysan. Expected results, Wishes for winners and all participants!

- maha

Appaavi said...

நெல்லை சிவா vuku en vaalthukal.

And thanks to Surveysan..

Anonymous said...

பாராட்டுக்கள்! சர்வேசன், சிறப்பாக நடத்தி முடித்தீர். f,l,m மூன்றும்நன்றாக இருந்தன. m கடைசியில் மூக்கை நுழைத்துவிட்டது. 10 நாட்களாக
எல்லோரையும் கலக்கியும்விட்டீர்.
வெற்றி பெற்ற சிவாவுக்கு என் வாழ்த்துக்கள்!! மற்றவர்களுக்கு என்
பாராட்டுக்கள்!! அடுத்த போட்டியில்
ஒருகை பார்த்துவிடலாம்.
நானானி

துளசி கோபால் said...

வெற்றி பெற்ற மூவருக்கும், போட்டியில் கலந்து கொண்ட
அனைவருக்கும் பாராட்டுக்கள்.

துளசி கோபால் said...

ஆங்......... சொல்ல மறந்துட்டேனே.........

சர்வேசனுக்கும் பரணிக்கும் வாழ்த்து(க்)களும் பாராட்டுக்களும்.

SurveySan said...

கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றீஸ்.

இப்பதான் பரணி அவர்கள் தன் சார்பில் $50 http://www.udavumkarangal.org என்ற தளத்தில் online donation செய்து receipt அனுப்பினார்.
நானும் அவ்வழியே $50 அனுப்பி விட்டேன்.

நமக்கு பொழுது போவதுடன் இம்மாதிரி சில சின்ன சின்ன சேவைகள் செய்ய முடிவதும் மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.

நன்றி & வாழ்த்துக்கள் டு everyone!

Anonymous said...

நீங்க ரொம்ப க்ரியேட்டிவ். மிக நன்றாக இருந்தன. இப்படி எல்லாம் யாராவது இருக்கறதாலதான் அப்பப்போ தமிழ்வலைப்பதிவுகளும் பிழைக்கும்னே ஒரு நம்பிக்கை வருது, பல சண்டை சச்சரவுகளுக்கு நடுவில். கெட்டுப்போய்டாமல், விவாதங்களில் எல்லாம் ஈடுபடாமல் எல்லாரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

புகைப்படங்கள் எடுத்தவர்களின் மின்னஞ்சலையோ, வலைப்பதிவுக்கு ஒரு சுட்டியையோ கொடுத்தால் அடையாளம் காண/தொடர்புகொள்ள சுலபமாக இருக்குமே...

SurveySan said...

க்ருபா ஷங்கர்,

//கெட்டுப்போய்டாமல், விவாதங்களில் எல்லாம் ஈடுபடாமல் எல்லாரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.//

முடிந்தவரை அங்கெல்லாம் செல்வதில்லை. ஆனா சர்வே-சன் ஆரம்பிச்சதுக்கு காரணமே, விவாதிக்க/கருத்தறியத் தான். ஆனால், ஆரோக்யமாய் தான் கொண்டு செல்வேன்.

//புகைப்படங்கள் எடுத்தவர்களின் மின்னஞ்சலையோ, வலைப்பதிவுக்கு ஒரு சுட்டியையோ கொடுத்தால் அடையாளம் காண/தொடர்புகொள்ள சுலபமாக இருக்குமே... //

வலைப்பதிவர் முகவரி, புகைப்பட போட்டி அறிவிப்பு வந்த முதல் பதிவில் கொடுத்துள்ளேன். அந்த பதிவுக்கான லிங்கும் இந்த பதிவிலேயே உள்ளது :)

Anonymous said...

வலைப்பதிவர் முகவரி, புகைப்பட போட்டி அறிவிப்பு வந்த முதல் பதிவில் கொடுத்துள்ளேன். அந்த பதிவுக்கான லிங்கும் இந்த பதிவிலேயே உள்ளது :)

அது என்னமோ சரிதான். இருந்தாலும் தோலை உரிச்சு வெச்சுருந்தா சாப்டுட்டுப் போறதுக்கு வசதியா இருக்குமேன்னு பார்த்தேன். ;-)

Boston Bala said...

போட்டிக்கு நன்றிகள் பல :-)

கலக்கிப் போட்டு வெற்றியடைந்தவர்களுக்கு வாழ்த்து!!

SurveySan said...

இதுவரை 3 பேர் தான் 'சொந்தக் கதை' எழுதி இருக்காங்க.
13 மிஸ்ஸிங்?

மக்களே சுவாரஸ்யமா எழுதுங்க, படம் எடுக்கப்பட்ட விதத்தை.:)

Anonymous said...

வெரைட்டியா சூப்பரா இருந்தது போட்டி...அடுத்த போட்டி ஒரு ப்ரீலேன்ஸ் புகைப்பட போட்டி ??? கட்டற்ற மூலம்...:)))

நாங்கள்ளாம் ஆட்டத்துல இறங்குனா அப்புறம் தெரியாது...:)))

செந்தழல் ரவி...

சிநேகிதன்.. said...

வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள் !
வணக்கம் சர்வேசன் சார் அடுத்த முறை புகைப்படபோட்டி வைக்கும் போது எனக்கும் தெரியபடுத்துங்கள். நான் blogற்கு புதுசு.... .
அன்பன்
கலாபாரதி...

சிநேகிதன்.. said...

வணக்கம்..

சிநேகிதன்.. said...

hiii

SurveySan said...

ரவி,

//வெரைட்டியா சூப்பரா இருந்தது போட்டி...அடுத்த போட்டி ஒரு ப்ரீலேன்ஸ் புகைப்பட போட்டி ??? கட்டற்ற மூலம்...:)))
நாங்கள்ளாம் ஆட்டத்துல இறங்குனா அப்புறம் தெரியாது...:)))
//

ப்ரீலேன்ஸா, அதுக்கு தனி ப்ளாக் தான் ஆரம்பிக்கணும். வில்லங்கமான பசங்க நம்ம பசங்க :)

SurveySan said...

கலாபாரதி,

வாங்க வாங்க.

//வணக்கம் சர்வேசன் சார் அடுத்த முறை புகைப்படபோட்டி வைக்கும் போது எனக்கும் தெரியபடுத்துங்கள். //

தெரியப் படுத்திட்டா போச்சு.

k4karthik said...

சர்வேசா... என் சோக கதையை blogல light-a கூவிட்டேன்...

அடுத்த போட்டி எப்போ????

ஒப்பாரி said...

//uNmaiyil ennaik kavarnthathu Oppaari - photo_D.jpg thaan thalaiva. Framing, contrast, lighting, Shades, creativity.... ஒரு புகைப்பட ஆர்வலன் என்ற முறையில் அவருக்கு என் வாழ்த்துக்கள்.//

நன்றி ஓசை செல்லா, எதிர்பார்கவேயில்லை உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி, எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஊக்கம்.

நெல்லை சிவாவிற்க்கும், பெருசு மற்றும் அபர்ணாவிற்க்கும் வாழ்த்துக்கள்.

ஒப்பாரி said...

//என்னையும் மிகவும் கவர்ந்தது ஒப்பாரியின் D.
அவர் URL http://oppareegal.blogspot.com

அவரின் original புகைப்படம் இன்னும் அமக்களமா நச்சுனு இருந்தது. புகைப்பட விதிகள் கருதி, படத்தை ட்ரிம் பண்ணி போடவேண்டியதாயிடுச்சு.
அவர் படம் எடுத்த சொந்தக் கதையை எழுதுவார் என்று நினைக்கிறேன் :) //

நன்றி சர்வேசன் போட்டி நடத்தியதற்க்கும், பாராட்டுக்களுக்கும்.
கதை எழுதியாச்சு வந்து போகவும்.
நான் I-க்கு வாக்களித்திருந்தேன் சில படங்கள் மிக அருமையாக இருந்தது.

ஒப்பாரி said...

thamizhmanNaththil en pathivukaLil maRu mozhi thirattappaduvathillai. eppadi theriyappaduththuvathu.

ஒப்பாரி said...

தமிழ்மணத்தில் என் பதிவுகளில் மறு மொழி திரட்டப்படுவதில்லை. எப்படி தெரியப்படுத்துவது.

SurveySan said...

k4karthik,

//சர்வேசா... என் சோக கதையை blogல light-a கூவிட்டேன்...

அடுத்த போட்டி எப்போ???? //

:) பாத்தேன் உங்க சோகக் கதைய.

அடுத்த போட்டி கூடிய விரைவில். டாபிக் இன்னும் flash ஆகல :)

SurveySan said...

ஒப்பாரி,

உங்க ஒப்பாரியையும் , ஐ மீன், கதையையும் :), வந்து பாத்தேன்.

அந்த glassல யார் தக்காளி தூக்கி போட்டான்னு சொல்லலயே?

SurveySan said...

இன்னும் 8 பேர் சொந்தக் கதை எழுதலயே?

Anamika - photo_A.jpg, Radha Sriram - photo_C.jpg, Appavi - photo_E.jpg, Jeeves - photo_J.jpg, Usha - Photo_K.jpg, KrubaShankar - photo_N.jpg, Brindan - photo_O.jpg, Shakthi - photo_P.jpg

??????

Anonymous said...

சர்வேசன்,

மிக சுவாரசியமான ஒரு போட்டியை நடத்தியதற்கு நன்றி..

//இப்படி எல்லாம் யாராவது இருக்கறதாலதான் அப்பப்போ தமிழ்வலைப்பதிவுகளும் பிழைக்கும்னே ஒரு நம்பிக்கை வருது,

இத நானும் வழி மொழியறேன் ...

k said...

சர்வேசன் by any chance...ஓவியப் போட்டி நடத்துவீங்களா? :)

SurveySan said...

Vicky,

பாராட்டுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. என் பொழுது போக்குக்காக நான் செய்யும் விஷயம் தான் போட்டியெல்லாம்.
பெரிய விஷயமே இல்ல இது :)

SurveySan said...

அனாமிகா,

//சர்வேசன் by any chance...ஓவியப் போட்டி நடத்துவீங்களா? :) //

ஏங்க நல்லா வரைவீங்களா? பேசாம அடுத்த போட்டி என்ன வைக்கலாம்னு ஒரு சர்வே போட்டுடவா?

இத வச்சு ஒரு போட்டி நடத்தலாம்னு ஐடியா இருக்கு. பாப்போம் - http://www.jacksonpollock.org/

நீங்க நல்லா வரைவீங்கன்னா, வரஞ்சு அனுப்புங்க, அரங்கேற்றம் பண்ணிடலாம் :)

k said...

இல்ல.... வீட்ல நிறையா water colors,crayons, color pencils இருக்கு..அதனால கேட்டேன் :))

SurveySan said...

anamika,

//இல்ல.... வீட்ல நிறையா water colors,crayons, color pencils இருக்கு..அதனால கேட்டேன் :)) //

வீட்ல இருக்கர பொருள உபயோகிக்க நான் தான் கெடச்சேனா? :)

அதெல்லாம் உபயோகிக்கலன்னா கெட்டு போகாது, சோ, டோண்ட் வொரி.
உபயோகிக்கலன்னா, கெட்டுப் போர ஐட்டம் ஏதாவது இருந்தா சொல்லுங்க.

:)

1) புகைப்படப் போட்டி
2) பாட்டுப் போட்டி
3) கிறுக்கல் போட்டி
4) ????