recent posts...

Thursday, February 08, 2007

சர்வே - கலப்புத் திருமணம் - ஊருக்கு உபதேசமா இல்ல உண்மைச் சம்பவமா?

சர்வே போட சரக்கு தீந்து போயிடுமேன்னு ஒரு பக்கம் யோசன வரும்போதெல்லாம், நம் பதிவுலகக் கண்மணிகள், இந்தா புடின்னு தலைப்புக்கான ஐடியாஸ எடுத்து வீசராங்க.

(வானொலி அண்ணா ஸ்டைல்ல படிங்க. யாருன்னு தெரியுமுல்ல?)
போன சர்வேல ஊர்ல இருக்கும் ஜாதிப் பிரச்சனைய பாத்தோம்.
ஜாதி பிரச்சனை முழுசா போகணும்னா நம்ம பேருக்கு பின்னாடி ஜாதி பேர் போட்டுக்கரத நிறுத்தணும்னும் பாத்தோம்.
பேர்ல இருக்கர ஜாதிய தூக்கலாம், ஆனா அவங்கவங்க culture, நல்ல பழக்கவழக்கங்கள் இதெல்லாம் மாத்திக்க வேண்டிய அவசியம் இல்லன்னும் பாத்தோம்.

என்ன, நான் சொல்றது சரிதானே?

ஒரு சிலர் பழக்கவழக்கங்களும் வேணாம்கறாங்க. எல்லா மனுஷனும் ஒரே மாதிரி வாழணுமாம். அதெப்படி சாத்தியமாவும்னு தெரியல.
நம்ப ரோபோ இல்லியே? ரெண்டு கை, காலு, கண்ணு, உணர்ச்சி, மனதில் விருப்பு வெருப்பு, வாயில் சுவைன்னு ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு விதமா இல்ல ஆண்டவன் படச்சிருக்கான் (என்னது? ஆண்டவன் இல்லியா? இருக்கான்னு இந்த சர்வேல தீர்ப்பு சொல்லியாச்சுங்க).

சரி, இப்ப விஷயத்துக்கு வருவோம்.

கலப்புத் திருமணம் (ஜாதி/மதம் மறுப்புத் திருமணம்) செய்து கொள்வது ஜாதிய முழுசா ஒழிக்க ஒரு நல்ல உபாயம். இப்ப ஆரம்பிச்சம்னா இன்னும் ரெண்டு தலைமுறையில சுத்தமா ஜாதிய ஒழிச்சிடலாம்.
ஆனால், இதை ஒரு 'சட்டமா' போட்டுட்டு செய்ய முடியுமா?
காதல் திருமணங்களில் இது மிக சாத்தியம். மனதளவில் ஒருவருடன் ஒருவர் ஒத்துப் போன பின்பு, கலாச்சாரமும், பழக்கவழக்கமும் compromise பண்ணிக் கொள்ளும் பக்குவம் வந்துடும்.

ஆனால், arranged marriageனு வரும்போது, இரு குடும்பங்கள் சேருது - ஐம்பது அறுபது வருடங்கள் ஒண்ணா இருக்க வேண்டிய குடும்பங்கள், திருமணம் மூலமா ஒப்பந்தம் போடும்போது,
ஹேய் நாங்க இந்த சாமி கும்புடுவோம். நீங்க?
நாங்க இத சாப்பிடுவோம், இத சாப்பிடமாட்டோம். நீங்க?
நாங்க வெள்ளிக்கிழமை விரதம் இருப்போம். நீங்க?
நாங்க சேலைய இப்படி கட்டுவோம். நீங்க?
நாங்க பொட்டு வச்சுப்போம், மெட்டி போட்டுப்போம். நீங்க?
நாங்க மாசத்துக்கு ஒரு தபா தான் குளிப்போம். நீங்க?
இன்னும் இப்படி எத்தனையோ விஷயங்கள் ஓரளவுக்காவது ஒத்து போகுதான்னு பாக்க வேண்டி இருக்கு.

செய்யும் தொழிலை வைத்து ஜாதிகளாய் பிரிக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை, ஜாதி என்பது ஒரு குழுவாக கருதப்பட்டு, திருமணம் மாதிரி சமயங்களில் ஒரு identityயாக உபயோகப் படுகிறது.
பின் வந்த கால கட்டத்தில், அரசியல் நோக்காலும், ஆளுமையாலும் நீ பெருசு நான் சிருசு என்று பாகப் படுத்தப்பட்டு இன்னிக்கு இந்த அடிதடி நெலமைல நிக்குது. இன்னும் எங்கெங்க போகுமோ தெரியல.

ஜாதீய ஒழிப்பு வேணும் என்பவர்கள், தன் சுய வாழ்க்கைன்னு வரும்போது, பெரும்பாலும், வெளியில் பேசுவதை வீட்டில் செய்வதில்லை.
குறிப்பா அவங்க வீட்டு கல்யாணம்னு வரும்போது, ஒரு ஐயரோ, ஐயங்காரோ, நாடாரோ, நாயரோ, நாயக்கரோ, குயவரொ, தலித்தோ, தேவரோ அவர் ஜாதியை விட்டு இன்னொரு ஜாதியில் எடுப்பதை யோசிப்பது கூட இல்லை. ஒரே ஜாதி மட்டுமல்ல அதுக்குள்ள இருக்கர உட்பிரிவு கூட அலசி ஆராய்ந்து 100% பொறுந்தினா தான் அடுத்த கட்டமே.(அம்மா திட்டுவாங்க என்ற சப்பைக்கட்டு கட்டுவார்கள்).

நானும் விதி விலக்கல்ல. ( மனதளவில் எந்த வேற்றுமை உணர்வும் இல்லைன்னாலும், Matrimony இனையதளத்தில் தேடும்போது ஜாதி, இனம், குலம், கோத்திரம், மண்ணாங்கட்டி, தெருப்புழுதி இதெல்லாம் தெரிவு செய்த பிறகுதான் பொத்தானை க்ளிக்கினேன் :) )

நீங்க எப்படி? (நீங்க ஏற்கனவே திருமணமானவரா இருந்தீங்கன்னா, உங்கள் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு வரன் தேடும்போது என்ன செய்வீர்கள் என்று சிந்தித்து வாக்களிக்கவும்)



பி.கு: புகைப்படப் போட்டிக்கு இதுவரை 6 பேர் அனுப்பிட்டாங்க. மிச்சம் ஆளுங்க இன்னா பண்றீங்க? தக்காளி கெடைக்கிலியா? ஞாயிறு இரவு 11:59 pm IST க்குள்ள அனுப்பிடுங்கோ. நன்றி!

பி.கு:
(இணையத்தில் கலப்புத் திருமணம்னு தேட்னதுல கிடைத்தது)

One
Two
Three
Four
Five
Six

என்ஸாய்!

72 comments:

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

தலையே போனாலும் கலப்புத் திருமணம்தான் பண்ணுவேன்னு யாரும் முடிவெடுப்பாங்களா
பிடிச்ச பொண்ணு/பையன் யாராயிருந்தாலும் கல்யாணம் பண்ணிக்குவேன், இல்ல என் ஜாதியாப் பாத்துத்தான் பண்ணிக்குவேன். இந்த ரெண்டுல எதாவது ஒண்ணுதான் முடியும் இல்லையா?

SurveySan said...

Vidyasakaran,

//தலையே போனாலும் கலப்புத் திருமணம்தான் பண்ணுவேன்னு யாரும் முடிவெடுப்பாங்களா //

தலையே போனாலும் ஒரே ஜாதீல கல்யாணம் பண்ணுவேன்னு நிறைய பேர் இருக்கோமே. அதே போலதானே இதுவும்? விகிதாசாரம் குறைவா இருக்கும். ஆனா, கண்டிப்பா இருப்பாங்க.

புரட்சிகரமா பேசரவங்கள்ள சிலர் திடமான மனதோடு இருப்பாங்க. கொள்கை முக்கியம்னு வாழரவங்க எவ்வளவோ பேரு இருக்கோமே.

பாப்போம் எவ்ளோ பேர் அதில நம்ம கூட்ட்த்துல இருக்காங்கன்னு.

Radha Sriram said...

என் பசங்கல்லாம் என்ன கேட்டு கல்யாணம் எல்லாம் செய்வாஙகன்னு எனக்கு சுத்தம்மா எதிர்பாற்பில்ல (period!)

//தலையே போனாலும் கலப்புத் திருமணம்தான் பண்ணுவேன்னு யாரும் முடிவெடுப்பாங்களா
பிடிச்ச பொண்ணு/பையன் யாராயிருந்தாலும் கல்யாணம் பண்ணிக்குவேன், இல்ல என் ஜாதியாப் பாத்துத்தான் பண்ணிக்குவேன். இந்த ரெண்டுல எதாவது ஒண்ணுதான் முடியும் இல்லையா?//

மத்தபடி இப்படிதான் எனக்கும் தோணுது

adding to that....one of my husband's friend fell in love with a co -worker,proposed,came to know that she was a divorcee,pursued, got married.....lives happily ever after with 2 kids.this is even better isnt it??!

SurveySan said...

radha sriram,

மேலே vidyasakaranக்கு சொன்ன பதில் உங்களுக்கும் பொருந்தும்.

//என் பசங்கல்லாம் என்ன கேட்டு கல்யாணம் எல்லாம் செய்வாஙகன்னு எனக்கு சுத்தம்மா எதிர்பாற்பில்ல (period!)//

அடுத்த தலைமுறைல கண்டிப்பா arranged marriage குறையும். அப்போ கலப்புத் திருமணங்கள் பெருகும். ஒரு விதத்தில் நல்லதுதான் :)

//one of my husband's friend fell in love with a co -worker,proposed,came to know that she was a divorcee,pursued, got married.....lives happily ever after with 2 kids.this is even better isnt it??! //

proposed and came to know she was a divorcee?
OR
came to know she was a divorcee and then proposed?

hope there was no 'surprise' after proposal :)
இந்த கலப்பும் நன்மையே ! :)

சிறில் அலெக்ஸ் said...

கலப்பு திருமணத்த ஆதரிக்கிறேன்/ ஆதரிப்பேன்.

ஆனா 'தலையே போனாலும்' என எனால இப்ப சொல்ல முடியல (ஏன்னா எனக்கு கல்யாணமாயிடுச்சு)

கலப்புத் திருமணம் செய்ய செஞ்ச முயற்சியெல்லம் (இதுதான் காதல் என்பதா?) வீணாப் போச்சு.

:)))

என் பிள்ளை(கள்)யின் விருப்பத்துக்கு, குறைந்த தலையீட்டுடன் (அப்புறம் எதுக்கு நான் அப்பாவா இருக்கேன் :) ) கலப்பானாலும் கலகலப்பானாலும் செய்துவைப்பேன்.

SurveySan said...

சிறில் அலெக்ஸ்,

//கலப்புத் திருமணம் செய்ய செஞ்ச முயற்சியெல்லம் (இதுதான் காதல் என்பதா?) வீணாப் போச்சு//

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே backgroundல ஓடுதா?
வீட்ல தமிழ்மணம் படிக்க மாட்டாங்களோ? :)
ஹ்ம். எனக்கும் பழசெல்லாம் ஞாபகம் வருது. அது ஒரு கனா காலம்!

//என் பிள்ளை(கள்)யின் விருப்பத்துக்கு, குறைந்த தலையீட்டுடன் (அப்புறம் எதுக்கு நான் அப்பாவா இருக்கேன் :) ) கலப்பானாலும் கலகலப்பானாலும் செய்துவைப்பேன்.
//

கலகலப்பா இருக்க வாழ்த்துக்கள்.

நம்மால முடிஞ்சது, குழந்தைகள தமிழ்மணம் பக்கம் வராம பாத்துக்கரதுதான். அத செஞ்சாலே, ஜாதீனா இன்னாப்பான்னு கேக்காம வளத்துடலாம் :)

Tulsi said...

நான் கலப்புத் திருமணம்தான். ஆனா ஒரே மதம்.
என் மகளுக்கும் கலப்புத்திருமணம்தான், வேறவேற மதம்.
எல்லாரும் சந்தோஷமாத்தான் இருக்கோம்.
அதானே முக்கியம். இல்லீங்களா?

Unknown said...

நம்மால முடிஞ்சது, குழந்தைகள தமிழ்மணம் பக்கம் வராம பாத்துக்கரதுதான். அத செஞ்சாலே, ஜாதீனா இன்னாப்பான்னு கேக்காம வளத்துடலாம் :)//

:-))))

மிக உண்மை.

சேதுக்கரசி said...

இதென்ன.. கல்யாணமாகாதவங்களுக்கு மட்டுமான சர்வேயா? :-D

SurveySan said...

tulsi,

//எல்லாரும் சந்தோஷமாத்தான் இருக்கோம்.
அதானே முக்கியம். இல்லீங்களா?
//

கண்டிப்பா சந்தோஷம்தான் வாழ்க்கைக்கு முக்கியம்.
பணம்,புகழ்,ஜாதி எல்லாம் 2nd preference தான்.

SurveySan said...

செல்வன், வாங்க வாங்க!

உங்கள் கலப்புத் திருமண கதையும் அருமை.

SurveySan said...

சேதுக்கரசி,

//இதென்ன.. கல்யாணமாகாதவங்களுக்கு மட்டுமான சர்வேயா? :-D //

கல்யாணம் ஆனவங்க, இந்த பிரச்சனைய தங்கள் தம்பி,தங்கை,மகன்,மகளுக்கு எப்படி apply பண்ணுவீங்கன்னு யோசிச்சு வாக்களிக்க சொல்லிருக்கேனே.

வாக்குங்க!

சேதுக்கரசி said...

எப்படியிருந்தாலும் ஓகே, நமக்கு பொண்ணு அல்லது மாப்பிள்ளை தான் முக்கியம்னு ஒரு ஆப்ஷன் இல்லாதது ரொம்பவே இடிக்குது எனவே வாக்களிக்கமுடியாமைக்கு வருந்துகிறேன் :)))

SurveySan said...

சேதுக்கரசி,

//எப்படியிருந்தாலும் ஓகே, நமக்கு பொண்ணு அல்லது மாப்பிள்ளை தான் முக்கியம்னு ஒரு ஆப்ஷன் இல்லாதது ரொம்பவே இடிக்குது எனவே வாக்களிக்கமுடியாமைக்கு வருந்துகிறேன் :)))
//

அப்படியெல்லாம் ஜகா வாங்க முடியாதுங்க. நீங்க சொன்ன மாதிரி ஒரு ஆப்ஷன் கொடுத்திருந்தா, எல்லாரும் சக்கு சக்குனு அதுக்குத்தான் குத்துவாங்க.
உங்களுக்கு அந்த மனநிலை இருந்தா, இந்த பதிவ பொருத்தவரைக்கும் ஆப்ஷன் 1 சூஸ் பண்ணலாமே?

அருண்மொழி said...

surveysan,

"கலப்புத் திருமணம்" என்பதை "ஜாதி/மதம் மறுப்புத் திருமணம்" என்று மாற்ற முடியுமா?

SurveySan said...

அருண்மொழி,

//"கலப்புத் திருமணம்" என்பதை "ஜாதி/மதம் மறுப்புத் திருமணம்" என்று மாற்ற முடியுமா? //

வாக்கெடுப்பு பொட்டீல மாத்தரது கஷ்டம். பதிவுல அடைப்புக்குறில போட்டுட்டேன்.
நல்ல definition தான் :)

Anonymous said...

எப்படியிருந்தாலும் ஓகே, நமக்கு பொண்ணு அல்லது மாப்பிள்ளை தான் முக்கியம்னு ஒரு ஆப்ஷன் இல்லாதது ரொம்பவே இடிக்குது எனவே வாக்களிக்கமுடியாமைக்கு வருந்துகிறேன் :)))

Me too

SurveySan said...

anony,

அப்படியெல்லாம் ஜகா வாங்க முடியாதுங்க. நீங்க சொன்ன மாதிரி ஒரு ஆப்ஷன் கொடுத்திருந்தா, எல்லாரும் சக்கு சக்குனு அதுக்குத்தான் குத்துவாங்க.
உங்களுக்கு அந்த மனநிலை இருந்தா, இந்த பதிவ பொருத்தவரைக்கும் ஆப்ஷன் 1 சூஸ் பண்ணலாமே?

Anonymous said...

romba mukkiyam.

Anonymous said...

how many votes so far in the "currently married other caste" category?

SurveySan said...

அனானி, ரொம்ப ரொம்ப முக்கியம்.

சேதுக்கரசி said...

//Me too// என்று சொன்ன அனானிக்கு நன்றி. பார்த்தீங்களா நம்மளையெல்லாம் கண்டுக்கமாட்டேங்கறாங்க!!

//நீங்க சொன்ன மாதிரி ஒரு ஆப்ஷன் கொடுத்திருந்தா, எல்லாரும் சக்கு சக்குனு அதுக்குத்தான் குத்துவாங்க.
உங்களுக்கு அந்த மனநிலை இருந்தா, இந்த பதிவ பொருத்தவரைக்கும் ஆப்ஷன் 1 சூஸ் பண்ணலாமே?//

சர்வேசன், இது நான் சொல்ல வர்றதையே திரிக்கிறதே? நான் என்ன சொல்றேன்:

//எப்படியிருந்தாலும் ஓகே, நமக்கு பொண்ணு அல்லது மாப்பிள்ளை தான் முக்கியம்//

நீங்க என்ன சொல்றீங்க:

//உங்களுக்கு அந்த மனநிலை இருந்தா, இந்த பதிவ பொருத்தவரைக்கும் ஆப்ஷன் 1 சூஸ் பண்ணலாமே?//

ஆப்ஷன் 1 என்ன சொல்லுது:

//கலப்புத் திருமணம் தான் செய்வேன். தலையே போனாலும்//

இந்த என் பின்னூட்டத்தை ஒரு தடவை வேணாலும் படிங்க, ஒம்போது தடவை வேணாலும் படிங்க, கடைசில நான் சொல்றதுக்கும் நீங்க சொல்றதுக்கும் காத தூரம் வித்தியாசம்னு நீங்க புரிஞ்சிக்கிட்டா எனக்கு சரி தான் :-)

அதனால் இதனால் என்ன சொல்லவரேன்னா என்னால இறுதியா உறுதியா வாக்களிக்கமுடியாதுங்கோ :-)

மணிகண்டன் said...

//அடுத்த தலைமுறைல கண்டிப்பா arranged marriage குறையும். அப்போ கலப்புத் திருமணங்கள் பெருகும். ஒரு விதத்தில் நல்லதுதான் :) //

போறபோக்கை பார்த்தா அடுத்த தலைமுறையில திருமணம்கற ஒன்னே இருக்காது போலிருக்கு :))

SurveySan said...

//அதனால் இதனால் என்ன சொல்லவரேன்னா என்னால இறுதியா உறுதியா வாக்களிக்கமுடியாதுங்கோ :-)//

மனசு தான் முக்கியம்னு சொல்றீங்க - சரி.

அப்போ, ஆப்ஷன் 1, ( மனசுக்கு புடிச்சவன ) தலையே போனாலும் கலப்புத் திருமணம் செஞ்சுப்பேன்னு இருக்குன்னு வச்சுக்கங்களேன்.

கலப்புத்திருமணம் செஞ்சுக்க, உங்க மன உறுதி எவ்ளோன்னு பாக்கத்தான் இந்த வாக்கெடுப்பே.

வாக்குங்க!

SurveySan said...

மணிகண்டன்,

//போறபோக்கை பார்த்தா அடுத்த தலைமுறையில திருமணம்கற ஒன்னே இருக்காது போலிருக்கு :))
//

அப்படி நடக்கவும் வாய்ப்பிருக்கு. இப்பவே கல்யாணத்துக்கு முன்னாடி சேந்து வாழர கலாச்சாரம் வளந்துக்கிட்டுதான் இருக்கு.

எல்லாம் நன்மைக்கே! யார் நன்மைக்குன்றது போக போக புரியும் :)

சேதுக்கரசி said...

//ஆப்ஷன் 1, ( மனசுக்கு புடிச்சவன ) தலையே போனாலும் கலப்புத் திருமணம் செஞ்சுப்பேன்னு இருக்குன்னு வச்சுக்கங்களேன்//

மனசுக்குப் பிடிச்சவங்க அதே சாதிமதமா இருந்துட்டாலும் அவங்களை விட்டுட்டு வேற சாதிமதக் காரங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு என்ன வேண்டுதலா? That's the technical problem that I'm finding with the wordings!!

SurveySan said...

//மனசுக்குப் பிடிச்சவங்க அதே சாதிமதமா இருந்துட்டாலும் அவங்களை விட்டுட்டு வேற சாதிமதக் காரங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு என்ன வேண்டுதலா? That's the technical problem that I'm finding with the wordings!! ///

மனசுக்கு புடிச்சவங்க கண்டிப்பா முக்கியம்தாங்க.
இன்னிக்கு தேதில உங்களுக்கு யாரையும் இன்னும் மனசுக்கு புடிக்கலன்னு வெச்சுப்போம்.
நீங்க ஒரு கொள்கைக்காக வேற ஜாதிய சேந்தவர தேடிப்புடிச்சு காதலிச்சு கல்யாணம் பண்ணிப்பீங்களா? அப்படி பண்ணிப்பீங்கன்னா #1, இல்லன்னா இன்னொரு பின்னூட்டம் போடுங்க :)

சேதுக்கரசி said...

//நீங்க ஒரு கொள்கைக்காக வேற ஜாதிய சேந்தவர தேடிப்புடிச்சு காதலிச்சு கல்யாணம் பண்ணிப்பீங்களா? அப்படி பண்ணிப்பீங்கன்னா #1//

இல்லீங்க.. அப்படியெல்லாம் வேண்டுதல் இல்லை! மனசு தான் முக்கியம். மத்ததெல்லாம் அடுத்தபடி தான். மனசுன்னு வந்துட்டா கொள்கையாவது மண்ணாங்கட்டியாவது.

SurveySan said...

//இல்லீங்க.. அப்படியெல்லாம் வேண்டுதல் இல்லை! மனசு தான் முக்கியம். மத்ததெல்லாம் அடுத்தபடி தான். மனசுன்னு வந்துட்டா கொள்கையாவது மண்ணாங்கட்டியாவது. //

சரிதான்.
ஜாதிய ஒழிக்கணும்னு பேசரவங்க பல பேர் இத கொள்கையா வச்சிருக்காங்களானு பாக்க போட்ட சர்வே இது.

உங்களுக்கு அந்த கொள்கை இல்ல. ஒரு none of the above போட்டிருந்தா குத்திட்டு போயிருப்பீங்க. ஹ்ம். குடுக்காம விட்டது என் தப்பு தான் :)

அரவிந்தன் நீலகண்டன் said...

கலப்பு திருமணம்னா என்னங்க? மனுசனுக்கும் சிம்பன்ஸிக்கும் செய்து வைக்க போறியளா? அப்படிப்பட்ட திருமணங்க எல்ல்லாம் ரொம்ப சர்வே எடுக்கிற மாதிரி நடக்குறதா தெரியலையே. ஓ...சாதி மதம் எதுன்னு தெரியாம காதாலாகி கல்லாணம் பண்ணிக்கிறதை சொல்றியளோ? அப்படீன்னா அந்த மாதிரி மனுசப்பயலுவ போடுற தடைகளை மீறி நடக்குற கல்லாணம்தான் நம்முட வீட்டில இரண்டு தலைமுறையாங்க. ஆனது கொண்டு அதுக்குதான் என் ஓட்டுங்க.

அரவிந்தன் நீலகண்டன் said...

அரேஞ்ச்ட் மேரேஜ்ஜூல குடும்பமும் குடும்பமும் ஒத்து வருதாக்கும். எங்க வீட்டுக்கு கிட்ட ஒரு மாட்டுசந்தை இருக்குங்க. அங்க மாடு வாங்க விக்க வருத குடும்பங்க கூட சில சமயம் ப்ரெண்ட்ஸாயிருதாங்க, இல்லன்னா வெட்டிக்கிறாங்க அதுக்கும் இந்த அரேஞ்ச்ட் மேரேஜ்ஜூக்கும் வித்தியாசம் தெரியலீங்க. என்ன மாடு வாங்க விக்க சாதகப்பொருத்தம் இன்னமும் பார்க்கிறதில்லீங்க.

SurveySan said...

அரவிந்தன் நீலகண்டன்,

//அரேஞ்ச்ட் மேரேஜ்ஜூல குடும்பமும் குடும்பமும் ஒத்து வருதாக்கும். எங்க வீட்டுக்கு கிட்ட ஒரு மாட்டுசந்தை இருக்குங்க. அங்க மாடு வாங்க விக்க வருத குடும்பங்க கூட சில சமயம் ப்ரெண்ட்ஸாயிருதாங்க, இல்லன்னா வெட்டிக்கிறாங்க அதுக்கும் இந்த அரேஞ்ச்ட் மேரேஜ்ஜூக்கும் வித்தியாசம் தெரியலீங்க. என்ன மாடு வாங்க விக்க சாதகப்பொருத்தம் இன்னமும் பார்க்கிறதில்லீங்க. //

arranged marriageல பெரும்பான்மை ஒத்து வருதுங்க. சிலதுதான் பிரச்சனையுல முடியுது. கண்கூடா பாக்கரோமே.

அரவிந்தன் நீலகண்டன் said...

இந்த வரதட்சணை கொடுமை, காஸ் சிலிண்டர் வெடிக்கிறது இதெல்லாம் 80 சதவிகிதம் அரேஞ்ச்ட் மாரேஜ்ஜில்தான் வருதுங்கோ. ஆனா மனுசப்பய கல்லாணம் மாட்டு சந்தை வியாபாரமா நடக்குத அழகு (கொடுமை) அரேஞ்ச்ட் மேரேஜுலதானுங்க பெரும்பாலும். காதல்ன்னு வந்துச்சுன்னு வச்சுக்குங்க, 'அப்பன் சேமிப்பும் கரையாது' அப்படீங்கிற மார்க்கெட்டிழந்த தலைவர் பிரபுதேவா வாயசைச்ச வரிகளுக்கு சலாம் போடுறேனுங்க.

வடுவூர் குமார் said...

என்னது இன்னொறு கல்யாணமா?
ஆளைவிடுங்கப்பா!!
:-))

Hariharan # 03985177737685368452 said...

//நம்மால முடிஞ்சது, குழந்தைகள தமிழ்மணம் பக்கம் வராம பாத்துக்கரதுதான். அத செஞ்சாலே, ஜாதீனா இன்னாப்பான்னு கேக்காம வளத்துடலாம் :)//

சத்தியமான விஷயமுங்க. சாதி உணர்வுகள் நீர்த்துப்போகலைன்னும் அது எவ்வளவுக்கு கெட்டியாவும், ஹிப்போக்ரேஸியோடு முக்காடு போட்ட முற்போக்காகவும் உலாவுதுன்னு இணையத்து வலைப்பூக்களில் அறிந்து அதிர்கிறேன்.

திரும்பத் திரும்ப இந்த ஜாதி ஜல்லி ரவுண்டு கட்டி அடிக்கிறாங்க.

கல்யாணம் ஆகிட்டதாலே என்னளவில் இனி ஏதும் புதிதாக ஆகப்போறதில்லை:-))

இன்னொரு டார்ச்சரை (2ம்கல்யாணம்-கூடுதல் பொறுப்புதாங்க) சந்திக்கும் துணிவு எனக்கில்லை :-))

அடுத்த தலைமுறையின் கல்யாணத்தில் எனது தலையீடு/வழிநடத்தல் ஜாதியைப் பிரதானமாக வைத்ததாக இருக்காது. நல்ல குணாதிசயங்கள் என்கிற எல்லா மனிதனுக்குமான அளவீடுகள் பிரதானப்படுத்தப்படும்.

என்னிடம் அடுத்த தலைமுறையினர் அவர்களது வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் முடிவை எடுக்கும் பொறுப்பைத் தரும் பட்சத்தில் :-))

தந்தை எனும் பயமின்றி என்னை அணுகி எது பற்றி வேண்டுமானாலும் பேசி/விவாதிக்கும் நம்பிக்கையை/ உரிமையை அடுத்த தலைமுறைக்குக் கண்டிப்பாகத் தருவேன்.

இம்சை அரசி said...

ரொம்ப பிடிச்சிருக்குன்ற பட்சத்துல கலப்பு திருமணம் ஒண்ணும் தப்பில்லையே. நாம குடும்பம் நடத்தப் போறது ஜாதியோட இல்ல. ஜாதிதான் முக்கியம்னு கல்யாணம் பண்ணிக்கிட்ட எல்லாரும் சந்தோஷமா இருக்கறதும் இல்ல. கலப்பு திருமணம் பண்ணிக்கிட்ட எல்லாரும் கஷ்டப்படறதும் இல்ல.

SurveySan said...

அரவிந்தன் நீலகண்டன்,

//இந்த வரதட்சணை கொடுமை, காஸ் சிலிண்டர் வெடிக்கிறது இதெல்லாம் 80 சதவிகிதம் அரேஞ்ச்ட் மாரேஜ்ஜில்தான் வருதுங்கோ.//

மெய்யாலுமா? அதெல்லாம் சும்மாங்க. எனக்குத் தெரிஞ்ச எல்லா அரேஞ்ச்ட் மாரேஜும் சூப்பரா போயிட்டிருக்கு.
ஆனால், வருங்காலத்தில் காதல் திருமணங்கள் நிறைய உருவானால் நல்லதே.

SurveySan said...

வடுவூர் குமார்,

//என்னது இன்னொறு கல்யாணமா?
ஆளைவிடுங்கப்பா!!
:-)) //

இன்னொரு கல்யாணமெல்லாம் உங்கள பண்ணிக்க சொல்லலீங்க. ரொம்ப ஆசையெல்லாம் கூடாது :)
உங்கள மதிச்சு நடக்கர இன்னொருத்தருக்கு (மகனோ, மகளோ, தம்பியோ, தங்ககய், நண்பனோ,,) கலப்புத் திருமணம் பண்ணி வைப்பீங்களா என்பதே கேள்வியின் சாரம்.

SurveySan said...

ஹரிஹரன்,

//அடுத்த தலைமுறையின் கல்யாணத்தில் எனது தலையீடு/வழிநடத்தல் ஜாதியைப் பிரதானமாக வைத்ததாக இருக்காது. நல்ல குணாதிசயங்கள் என்கிற எல்லா மனிதனுக்குமான அளவீடுகள் பிரதானப்படுத்தப்படும்//

ஜாதி பிரதானமாக இருக்காதுன்னு சொல்றத பாத்தா, கொஞ்சம் ஜாதி பேஸ்ட் influence இருக்கும் என்பது போல்தான் தெரிகிறது. சரியா?

SurveySan said...

இம்சை அரசி,

//ரொம்ப பிடிச்சிருக்குன்ற பட்சத்துல கலப்பு திருமணம் ஒண்ணும் தப்பில்லையே. //

பிடித்திருக்கும் பட்சத்தில், காதலினால் கலப்புத் திருமணம் செய்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை.
ஆனா, கலப்புத்திருமணம் செய்து கொள்வது ஒரு லட்சியமாய்ச் செய்பவர்கள் எவ்வளவுன்னு கண்டுக்கவே இந்த சர்வே.

நீங்கள் எப்படி?

G.Ragavan said...

கலப்புத் திருமணம் என்று சொல்வதே என்னைப் பொருத்தவரை தவறுதான் என்று தோன்றுகிறது.

என்னுடைய இரண்டு வங்க நண்பர்களுக்குச் சமீபத்தில் திருமணம் நடந்தது. இரண்டுமே சாதி பார்க்காமல் நடந்த திருமணங்கள். அவர்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை. விட்டுக்கொடுத்துப் போகும் எண்ணம் இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை.

என்னுடைய அலுவலகத்திலேயே இந்த மாநிலம் விட்டு மாநிலக் கல்யாணங்கள் நிறைய இருக்கின்றன. நிறைய. மென்பொருள் நிறுவணங்களில் வேலை செய்கின்றவர்கள் அனைவரும் இப்படிப் பார்த்திருப்பார்கள்.

எல்லாம் நம்முடைய நடவடிக்கையில்தான் இருக்கிறது. முருங்கை மரத்துக்கு வீட்டில் பார்த்து வைத்தாலும் திருமணம் இனிக்காது. விட்டுக் கொடுத்து அனுசரித்து அணைத்துப் போகின்றவர்களுக்கு எந்த நாட்டிலும் பொருத்தமான துணையைத் தேர்ந்தெடுக்கலாம்...ஜாதி பார்க்காமல்.

கண்டிப்பாகக் கலப்புத் திருமணம்தான் செய்வேன் என்று சொல்கின்றவர்கள் மிகக் குறைவாக இருக்கலாம். ஆனால் இந்தக் காதல் வந்து விட்டால் அப்படிச் சொல்லாதவர்கள் கூட செய்து கொள்கின்றார்கள் என்பதுதான் உண்மை.

அனுபவஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்கின்றவர்கள் பல பிரச்சனைகள் வரும் என்று சொல்வார்கள். ஆனால் அதற்குக் காரணம் அவர்களது பிடிவாதமாகத்தான் இருக்கும். சைவ வைணவக் கலப்பு என்று வைத்துக் கொள்வோம்மே. திருநீறுதான் பூச வேண்டும் என்று அப்பாவும் நாமம் போட வேண்டும் என்று அம்மாவும் சண்டை போட்டால் பிரச்சனை வரும். பையனுக்குப் பிடிக்கிறதைப் போட்டுக் கொள்ளட்டும் என்று இருவரும் விட்டு விட்டால் பிரச்சனை விலகும். இந்த அப்ரோச் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும்.

இம்சை அரசி said...

// நீங்கள் எப்படி?
//

நம்மளுக்கு வாழ்க்கைல இந்த தவிடு, கொள்ளு... ச்சே.... கொள்கைலாம் எதுவும் கிடயாதுங்க :)))

எதுவா இருந்தாலும் நம்ம parents மனசு கஷ்டப்படாம சந்தோஷமா இருந்தா சரி :)

SurveySan said...

ராகவன்,

//கண்டிப்பாகக் கலப்புத் திருமணம்தான் செய்வேன் என்று சொல்கின்றவர்கள் மிகக் குறைவாக இருக்கலாம். ஆனால் இந்தக் காதல் வந்து விட்டால் அப்படிச் சொல்லாதவர்கள் கூட செய்து கொள்கின்றார்கள் என்பதுதான் உண்மை.
//

காதல் திருமணம் is the solution என்பது சரிதான்.
ஆனால், எல்லாருக்கும் காதல் செய்ய தைரியம்/வாய்ப்பு வருவதில்லை;

ஆனா மதம்/ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய கொள்கைவாதிகளும் நிறைய தேவை.

PRINCENRSAMA said...

கலப்புத்திருமணம் என்பதை ஜாதி, மத மறுப்புத் திருமணம் என்ற பொருளில் கொண்டு, முதலாம் வாய்ப்பைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.


//பிடிச்ச பொண்ணு/பையன் யாராயிருந்தாலும் கல்யாணம் பண்ணிக்குவேன், இல்ல என் ஜாதியாப் பாத்துத்தான் பண்ணிக்குவேன்.//
எனக்கு எந்த சிக்கல் எப்படியும் இல்லை. ஏனெனில், நானே ஜாதி மறுப்புத் தம்பதியர்க்கு பிறந்தவன்தான்.
இப்போது நானுமே சமூகத் தளத்தில் ஜாதியற்றவன்.
இயல்பாய் எனக்கு மத நம்பிக்கையும் இல்லையாதலால், யாரை நான் காதலித்து வாழ்விணையராக ஏற்றாலும் அது நீங்கள் சொன்ன பொருளில் கலப்புத் திருமணமாகத் தான் இருக்கும்.

(பெரியார் சொன்ன படி "கலப்புத்திருமணம் என்றால் நான் என்ன மனுசனுக்கும் மாட்டுக்குமா கலியாணம் பண்ணிவைக்குறேன். மனிசனுக்கும் மனுசிக்கும் தானே பண்ணிவைக்குறேன். இதெப்படி கலப்புத் திருமணம?")

அப்புறம்.. என்னுடைய வருத்தத்தை, மன்னிப்பைக்கோருகிறேன். முதல் 25 நபருக்குள்பெயரைக் கொடுத்துவிட்டாலும், புகைப்படப் போட்டிக்கு படம் அனுப்பாமைக்குத் தான். நான் எடுத்த புகைப்படத்தை உரிய நேரத்தில் தர முடியாவிட்டாலும் போட்டிப் பதிவின் பின்னூட்டத்தில் அதன் சுட்டியை நிச்சயம் இணைத்து அனுப்புகிறேன்.

SurveySan said...

இம்சை அரசி,

//எதுவா இருந்தாலும் நம்ம parents மனசு கஷ்டப்படாம சந்தோஷமா இருந்தா சரி :) //

மொத்தத்துல யாரையும் இம்சை பண்ணாம இருக்கணுங்கறீங்க. சரிதேன் :)

SurveySan said...

Prince,

கலப்புத் திருமணம் என்பது ஒரு 'பெரிய' விஷயமே இல்லன்னு நீங்க பேசர மாதிரி எல்லாரும் பேசும் காலம் கூடிய சீக்கிரம் வரணும். அப்பதான் இங்கு இருக்கர பல பிரச்சன முடிவாகும்.

//முதல் 25 நபருக்குள்பெயரைக் கொடுத்துவிட்டாலும், புகைப்படப் போட்டிக்கு படம் அனுப்பாமைக்குத் தான். //

தல, கவுத்துட்டீங்களே. பரவால்ல வுடுங்க. உங்கள மாதிரியே இன்னும் கொஞ்சம் பேர் அனுப்பல, 2nd round போட்டி தான் வைக்கணும் :)

வெட்டிப்பயல் said...

சர்வேசன்,
வேற கேஸ்ட் பொண்ணுங்களை எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்கனு காதலிக்க சான்சே இல்லைனு சொல்ற நண்பர்களை எனக்கு தெரியும். அதனால பிடிச்சிருந்தா சாதி பார்க்க மாட்டேனு ஒரு ஆப்ஷன் வைக்கனும்...

எல்லாரும் அதைதான் சொல்லுவாங்கனு நீங்க எப்படி முடிவு பண்ணலாம்... நீங்க உங்க கருத்தை சொல்ல எதுக்கு சர்வே!!!

சர்வேல எது எல்லாரும் சொல்லுவாங்கனு நீங்க முடிவு பண்ணா அது நியாயமில்லை...
அது சர்வேயுமில்லை...

இதுக்கு மேல எதுவும் மாத்த முடியாது. இனிமே நீங்களா முடிவு பண்ற மாதிரி இருந்தா அதுக்கு சர்வே வேண்டாம்...

வெட்டிப்பயல் said...

எத்தனை பேர் அப்பா, அம்மாகிட்ட நான் கலப்பு திருமணம் தான் பண்ணுவேன் அதனால வேற சாதில பொண்ண பாருங்கனு சொல்லுவாங்க???

பெரியாரே சின்ன வயசுல சொல்லியிருக்க மாட்டாரு...

அதனால முதல் ஆப்ஷன் அவுட்....

கல்யாணம் ஆனவங்க கமெண்டை கேட்டிருக்க 2, 3 அவுட் :-)

அப்ப எதுல ஓட்டு போடறது???

நான் உங்களை கஷ்டப்படூத்த சொல்லல...

SurveySan said...

வெட்டிப்பயல் சார்,

//அதனால பிடிச்சிருந்தா சாதி பார்க்க மாட்டேனு ஒரு ஆப்ஷன் வைக்கனும்...
//

பிச்சிருந்தா சாதி பாக்க மாட்டாங்கன்றது obvious ங்க அதனால தான் அத ஆப்ஷனா போடல.

இந்த சர்வே போட்டது, நம்ம கூட்டத்தில் உள்ள கொள்கைவாதிகளை கண்டுபிடிக்க.

மன்சுக்கு பிடிச்சிருந்தா, போராடி கல்யாணம் பண்ணிப்பீங்கன்னா (எந்த ஜாதியானாலும்) ஆப்ஷன் 1 க்ளிக்கலாமே?

எம்மதமும் சம்மதம் என்று நினைப்பவர்கள் #1 க்ளிக்குங்க ப்ளீஸ் :)

SurveySan said...

//இதுக்கு மேல எதுவும் மாத்த முடியாது. இனிமே நீங்களா முடிவு பண்ற மாதிரி இருந்தா அதுக்கு சர்வே வேண்டாம்...
//

:) அப்படி இப்படின்னு டிஸ்கி போட்டு அட்ஜஸ்ட் பண்ணிருக்கேனே. பாத்துட்டு சொல்லுங்க.

இனிமே, கண்டிப்பா 'none of the above' போடணும் என்று தெளிவு படுத்தியமைக்கு நன்றி! :)

வெட்டிப்பயல் said...

//எம்மதமும் சம்மதம் என்று நினைப்பவர்கள் #1 க்ளிக்குங்க ப்ளீஸ் :)///

இப்ப போட்டாச்சு :-)))

CVR said...

Marriage should be based on love!!!
Marrying for principles is as stupid as arranged marriages fixed solely based on caste and dowry,if not more.

கண்டிப்பா என் ஜாதியை சேர்ந்தவங்களதான் கல்யாணம் பண்ணிப்பேன்ன்னு சொல்றது எவ்ளோ பைத்தியக்காரத்தனமோ,அதே மாதிரி தான் வேற்று ஜாதியை சேர்ந்தவங்களதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்றது.

Either way you are marrying for caste,which is a disgrace to love!!
thats my humble opinion!! :-)

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

//Either way you are marrying for caste,which is a disgrace to love!!

adhu!

சேதுக்கரசி said...

CVR & வெட்டிப்பயல்,

நான் சொல்ல எவ்வளவோ முயற்சி பண்ணிப் பாடுபட்டுட்டு இருந்ததையே நீங்க 2 பேரும் சொல்லிட்டீங்க! (என் முந்தைய பின்னூட்டங்களையும் சர்வேசனின் மறுமொழிகளையும் பார்க்கலாம்)

//பிடிச்சிருந்தா சாதி பார்க்க மாட்டேனு ஒரு ஆப்ஷன் வைக்கனும்//

இதைத் தான் நானும் சொன்னேன், ஆனா எல்லாரும் அதையே குத்திட்டுப் போயிடுவாங்கன்னு அதை வைக்கலியாம்.

//எல்லாரும் அதைதான் சொல்லுவாங்கனு நீங்க எப்படி முடிவு பண்ணலாம்... நீங்க உங்க கருத்தை சொல்ல எதுக்கு சர்வே!!!

சர்வேல எது எல்லாரும் சொல்லுவாங்கனு நீங்க முடிவு பண்ணா அது நியாயமில்லை...
அது சர்வேயுமில்லை...//

அதானே.

சேதுக்கரசி said...

//பிடிச்சிருந்தா சாதி பாக்க மாட்டாங்கன்றது obvious ங்க அதனால தான் அத ஆப்ஷனா போடல//

ஓ.. obvious-ஆ எதுனாச்சும் இருந்தா அந்த ஆப்ஷன் உங்க சர்வேயில் இருக்காதா???

//மன்சுக்கு பிடிச்சிருந்தா, போராடி கல்யாணம் பண்ணிப்பீங்கன்னா (எந்த ஜாதியானாலும்) ஆப்ஷன் 1 க்ளிக்கலாமே?//

உங்க ஆப்ஷன் 1-உடைய wordings நீங்க இப்ப சொல்ற மாதிரி இல்லியே??? There is a technical difference. அதைத் தான் அன்னிக்கு இருந்து சொல்ல முயற்சி பண்ணி விட்டுட்டேன்.

இப்ப வெட்டிப்பயலும் CVR-உம் வந்ததும் புத்துணர்ச்சி வந்துடுச்சு!!

//எம்மதமும் சம்மதம் என்று நினைப்பவர்கள் #1 க்ளிக்குங்க ப்ளீஸ் :)//

இது என் வாதத்தைத் திரிக்கிறது எனவே க்ளிக்கமுடியாது. அப்படியும் வெட்டிப்பயல் க்ளிக்கினது ஆச்சரியத்தைத் தருது!

சேதுக்கரசி said...

CVR,

//Marrying for principles is as stupid//

ரைட்டே. என் முந்தைய பின்னூட்டங்களைப் பாருங்க.

SurveySan said...

சேதுக்கரசி,

உங்களுக்கு என் வாக்குச்சாவடியில் நுழைய ஒரு தடா போடணும் போல இருக்கே. :))))

ஓவரா கேள்வி கேக்கறீங்க :)

நீங்க இவ்ளோ கேள்வி கேக்கரத பாத்தா, உங்களுக்கு கலப்புத் திருமணம் நடக்கும் சாத்யக்கூறுகள் கம்மி மாதிரி தெரியுது. அது சரிகட்ட இந்த டபாய்த்தலா?

:)

சேதுக்கரசி said...

//உங்களுக்கு கலப்புத் திருமணம் நடக்கும் சாத்யக்கூறுகள் கம்மி மாதிரி தெரியுது//

ஆமா நிச்சயம் கம்மி தான். (ஏன்னா ஏற்கனவே திருமணமாயிடுச்சில்ல!)

//அது சரிகட்ட இந்த டபாய்த்தலா?//

யாரு டபாய்க்கிறது? நீங்களா நானா???????

SurveySan said...

சேடுக்கரசி,

//
ஆமா நிச்சயம் கம்மி தான். (ஏன்னா ஏற்கனவே திருமணமாயிடுச்சில்ல!)

//அது சரிகட்ட இந்த டபாய்த்தலா?//

யாரு டபாய்க்கிறது? நீங்களா நானா???????
//

டபாய்க்கறது நானா? அதான் க்ளியரா ஒரு வெளக்கம் குடுத்து வெட்டியும் ஓட்டு போட்டாரே சொன்னத புரிஞ்சுகிட்டு.

உங்களுக்கு ஏற்கனவே திருமணமாயிடுச்சுன்னா, உங்கள் பிள்ளிகளுக்கு 'கலப்புத் திருமணம்' செய்துவைக்க முயற்சிப்பீங்கன்னா #1 போடலாமெ..

அவர்கள் மனம்போல் செய்யவிடுவேன்னு நெனச்சீங்கன்னா, அவர்கள் மனம்போல் சூஸ் செய்வது , கலப்பு திருமணமா இருக்கும் பட்சத்தில், உங்க ஆதரவு எப்படி? #1 or #2 ?

:)

SurveySan said...

சேதுக்கரசி, என்னங்க சத்தத்தையே காணும்?

வெட்டிப்பயல் said...

சேதுக்கரசி,
அவரும் நம்மல மாதிரி தவறு செய்பவர்தானே... நம்ம புரியற மாதிரி சொன்னவுடனே சரினு ஃபீல் பண்ணி ஒரு ஆப்ஷனை கொடுத்துட்டாரு...
அவ்வளவுதான்...

பின்னாடி ரிசல்ட் சொல்லும்போது தெளிவா சொல்லுவாருனு நம்பறேன்... இல்லைனா அதுக்கு ஒரு சண்டை போடுவேனு சர்வேசனுக்கு தெரியும் ;)

சேதுக்கரசி said...

//உங்களுக்கு ஏற்கனவே திருமணமாயிடுச்சுன்னா, உங்கள் பிள்ளிகளுக்கு 'கலப்புத் திருமணம்' செய்துவைக்க முயற்சிப்பீங்கன்னா #1 போடலாமெ//

கலப்புத் திருமணத்துக்கு ஒத்துக்கிறது வேற, கலப்புத் திருமணம் தான் செய்வேன்னு ஒத்தக்கால்ல நிக்கிறது வேற. உங்க ஆப்ஷன் 1 சொல்றது முதல் தகவலை அல்ல, ரெண்டாவது தகவலைத் தான். இதையே தானுங்களே அன்னிக்கி புடிச்சி சொல்லிட்டிருக்கேன்?

சேதுக்கரசி said...

வெட்டிப்பயல்,

//நம்ம புரியற மாதிரி சொன்னவுடனே சரினு ஃபீல் பண்ணி ஒரு ஆப்ஷனை கொடுத்துட்டாரு//

எங்கேங்க ஒரு ஆப்ஷனைக் கொடுத்தாரு? புதுசா எதுனா ஆப்ஷன் கொடுத்தாரா? எனக்கு அப்படித் தெரியலியே? பிரச்சினை இன்னும் இருக்குதுங்க.. தீர்த்துவைக்கப்படலை.

//பின்னாடி ரிசல்ட் சொல்லும்போது தெளிவா சொல்லுவாருனு நம்பறேன்... இல்லைனா அதுக்கு ஒரு சண்டை போடுவேனு சர்வேசனுக்கு தெரியும் ;)//

ஆமா.. இப்பவே ரொம்ப சண்டை போட்டுட்டோம்ல :-)

சேதுக்கரசி said...

//சேதுக்கரசி, என்னங்க சத்தத்தையே காணும்?//

கணினியே கதின்னு கெடக்கமுடியாதுல்ல.. வேற வேலை இருந்தது, இப்ப திரும்பினேன். 24 மணிநேரத்துக்குள்ள திரும்பலைன்னா தான் I've given up-னு அர்த்தம்!

வெட்டிப்பயல் said...

சர்வேசன்,
முதல் ஆப்ஷனுக்கு அர்த்தம் திருமணத்திற்கு சாதி பார்க்க மாட்டோம்னு தானே???

இல்லை சாதி பார்த்து எங்க சாதியா இருந்தா பண்ணிக்க மாட்டோம்னு அர்த்தமா??? (இதைவிட லூசுத்தனம் வேற இருக்கற மாதிரி எனக்கு தெரியல)

SurveySan said...

சேதுக்கரசி, உங்களுக்காக ஒரு அட்ஜஸ்ட்மெண்ட்.

முதல் ஆப்ஷன்ல இருக்கர 'தான்' எடுத்துட்டேன்.
now, it chimes better.

அதாவது, கலப்புத் திருமணம் பண்ணிப்பேன். தலையே போனாலும்.

இது, கொள்கை ரீதியாக உள்ளவங்களுக்கும் பொருந்தும்.
காதலினால் மனம் ஒத்து வற்றவங்களுக்கும் பொருந்தும்.

பி.கு: ரிஸல்ட்ஸ் பேஜ்ல கை வைக்க முடியாது. அது தேர்தல் அதிகார் கண்ட்ரோல்ல இருக்கு.
:)

இப்ப என்ன சொல்றீங்க?

SurveySan said...

வெட்டிப்பயல் சார்,

//இல்லை சாதி பார்த்து எங்க சாதியா இருந்தா பண்ணிக்க மாட்டோம்னு அர்த்தமா??? (இதைவிட லூசுத்தனம் வேற இருக்கற மாதிரி எனக்கு தெரியல)
//

த.வெ.உ election டைம்ல, கூட்டத்த கட்டுப்படுத்த போவேனா, இல்ல உங்களுக்கு இங்க பதில் சொல்வேனா :) ?
முதல் ஆப்ஷன், கொள்கை ரீதியா, எந்த பிரச்சனை வந்தாலும், கலப்பு மணம் செய்வேன்னு சொல்றவங்களுக்குத்தாங்க.

'ஜாதியே' பாக்காம பண்றவங்களுக்கு.

வெட்டிப்பயல் said...

ஆஹா நான் இதை பார்க்கவே இல்லையே!!! சேதுக்கரசி நீங்க சரியாத்தான் சண்டை போட்டிருக்கீங்க. நான் தான் அதை படிக்க நேரமில்லாம அண்ணாத்த சொன்னதை கேட்டு குத்திட்டேன்!!!

//அப்படியெல்லாம் ஜகா வாங்க முடியாதுங்க. நீங்க சொன்ன மாதிரி ஒரு ஆப்ஷன் கொடுத்திருந்தா, எல்லாரும் சக்கு சக்குனு அதுக்குத்தான் குத்துவாங்க.
உங்களுக்கு அந்த மனநிலை இருந்தா, இந்த பதிவ பொருத்தவரைக்கும் ஆப்ஷன் 1 சூஸ் பண்ணலாமே?//

எல்லாரும் அந்த ஆப்ஷனை சொல்லுவாங்கனு சொல்றதுக்கு நீங்க ஆளும் சர்வேசன் இல்லை.. அளக்கும் சர்வேசன்...

வேற கேஸ்ட் பொண்ண பிடிச்சிருந்தாலும் வீட்ல ஒத்துக்க மாட்டாங்கனு பயந்து காதலிக்காம விட்டவங்க நிறைய பேரை நான் பார்த்திருக்கேன்!!!

முதல் ஆப்ஷன்ல இருந்து தலையே போனாலுமை எடுத்தா சரியா இருக்கும்னு நினைக்கிறேன்...

SurveySan said...

//முதல் ஆப்ஷன்ல இருந்து தலையே போனாலுமை எடுத்தா சரியா இருக்கும்னு நினைக்கிறேன்... //

என் தலையே போனாலும் அத எடுக்க மாட்டேன் :)

உங்க விடாமுயற்சி, கொள்கை பிடிப்ப காட்டுதுங்க 'தலையேப் போனாலும்' :)



//வேற கேஸ்ட் பொண்ண பிடிச்சிருந்தாலும் வீட்ல ஒத்துக்க மாட்டாங்கனு பயந்து காதலிக்காம விட்டவங்க நிறைய பேரை நான் பார்த்திருக்கேன்!!!//

அவங்களுக்கு ஆப்ஷன் 2 தான் பொருந்தும் :)

வெட்டிப்பயல் said...

np dude...
By mistake I have cast my vote...

I didnt read this before

//
தலையே போனாலும் ஒரே ஜாதீல கல்யாணம் பண்ணுவேன்னு நிறைய பேர் இருக்கோமே. அதே போலதானே இதுவும்? விகிதாசாரம் குறைவா இருக்கும். ஆனா, கண்டிப்பா இருப்பாங்க.

புரட்சிகரமா பேசரவங்கள்ள சிலர் திடமான மனதோடு இருப்பாங்க. கொள்கை முக்கியம்னு வாழரவங்க எவ்வளவோ பேரு இருக்கோமே.

பாப்போம் எவ்ளோ பேர் அதில நம்ம கூட்ட்த்துல இருக்காங்கன்னு.//

I am not in any of your category...

சேதுக்கரசி said...

//உங்களுக்காக ஒரு அட்ஜஸ்ட்மெண்ட்.

முதல் ஆப்ஷன்ல இருக்கர 'தான்' எடுத்துட்டேன்.
now, it chimes better.//

அப்பாடா... ஒரு வழியா கொஞ்சமாவது வழிக்கு வந்திருக்கீங்க.. அதுக்கு நன்றி!!

சேதுக்கரசி said...

சரியா தான் சண்டை போட்டிருக்கேன்னு உணர்ந்து சொன்னதுக்கு நன்றி வெட்டிப்பயல் :-)

//முதல் ஆப்ஷன்ல இருந்து தலையே போனாலுமை எடுத்தா சரியா இருக்கும்னு நினைக்கிறேன்...//

அப்படிப் போடுங்க :-D ஹாஹா.. இதை செஞ்சா தாம்ப்பா நான் வோட்டுப் போடுவேன்!! :-)))