recent posts...

Tuesday, February 06, 2007

சர்வேக்களும், மக்கள் தீர்ப்பும், ஒரு சின்ன உள் குத்தும்...

என்னடா எழுதலாம்னு மண்டய கொடஞ்சு யோசிச்சு பாத்தேன். ஒண்ணும் தோணல.

திடீர்னு ஒரு ஐடியா வந்துச்சு.

டகால்னு லாகின் பண்ணி மேட்டர டைப் அடிக்க ஆரம்பிச்சுட்டேன்.

சமீப காலத்துல போட்ட சில சர்வேஸோட தற்போதைய நிலவரத்தை சொல்லி, சின்னதா ஒரு வரி தீர்ப்பு சொல்லிடலாம்னு முடிவு பண்ணேன். அதான் இது :)

1) பல புனைப்பெயர்களில் எழுதுவது பற்றி உங்கள் நிலை
தீர்ப்பு: எத்தன பேரு வேணா வச்சுக்கோ. ஆனா GAலீஜா* எழுதாத.
பி.கு1: 2% ஆளுங்க இந்த ரகமாம். "ஹி ஹி. நான் பல புனைப்பேர்ல GAலீஜா* எழுதரவன் தான். சும்மா இதெல்லாம் ஒரு டமாசுக்காக மக்கள்ஸ்.". கொடுமதான்.
பி.கு2: நான் புனைப்பெயரில் எழுதுவதால், லக்கிலுக் என்னை 'ஜோக்கர்' லிஸ்ட்ல சேத்துருக்கரத பாத்தேன். ஆனா பரவால்ல கொஞ்சம் நல்லவங்க பேரும் லிஸ்ட்ல இருக்கு. அவருக்கு ஒரு ஸ்பெஷல் thangees :) இது நாள் வரைக்கும் லக்கிலுக் அவர் சொந்தப் பெயர் இல்லன்னு நெனச்சேன். வித்யாசமான பேரா இருக்கு. நல்லது.

2) சாதீயம் ஒழிஞ்சு நல்லிணக்கம் வரவேண்டுமென்றால்
தீர்ப்பு: பெயருக்கு பின்னால் சாதி பெயர் போடக்கூடாது, மற்ற கலாச்சார பழக்கம்ஸ் ஒ.கே!
பி.கு: பேர் போடலன்னாலும் போடலன்னாலும் தொடர்ந்து அடிப்போம்னு 10% சொல்லிருக்காங்க :)

3) சாய்பாபா கருணாநிதி சந்திப்புக்கு பிறகு உங்களின் மனநிலை?
தீர்ப்பு: ரெண்டு பேரையும் ஏற்கனவே பிடிக்காது. சந்திப்பு சூப்பர் காமெடி
பி.கு: வேலயப்பாருய்யா, இதெல்லாம் கண்டுக்கக் கூடாது. இதுதான் டாப் சாய்ஸ். மேல இருக்கரது ரெண்டாவது டாப்பு :)

4) கடவுள் இருக்காருன்னு நம்பறீங்ளா?
தீர்ப்பு: கடவுள் கண்டிப்பா இருக்காருங்க. நான் தீவிரம் கிடையாது. ஆனால், மனதளவில் நம்பிக்கை உண்டு
பி.கு: சாமியே சரணம்!


:)

பி.கு: சிறந்த புகைப்பட வித்தகர் போட்டி - புகைப்படம் அனுப்ப கடைசி நாள் நெருங்குது. மறவாதீர். விவரங்கள் இங்கே

.

16 comments:

SurveySan said...

சும்மா..

குழலி / Kuzhali said...

//நான் புனைப்பெயரில் எழுதுவதால், லக்கிலுக் என்னை 'ஜோக்கர்' லிஸ்ட்ல சேத்துருக்கரத பாத்தேன்.
//
//இது நாள் வரைக்கும் லக்கிலுக் அவர் சொந்தப் பெயர் இல்லன்னு நெனச்சேன். வித்யாசமான பேரா இருக்கு. நல்லது.
//
அனாமதேய பதிவருக்கும் புனைப்பெயருக்கும் வித்தியாசம் தெரியாதுங்களா சர்வேசா? சர்வேசன் அனாமதேய பதிவர், லக்கிலுக் புனைப்பெயரில் எழுதும் பதிவர் என்பதாவது புரிகின்றதா? இல்லைங்களா? ம்... தூங்கறவங்களை எழுப்பலாம், தூங்கறமாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியுமா?

SurveySan said...

//சர்வேசன் அனாமதேய பதிவர், லக்கிலுக் புனைப்பெயரில் எழுதும் பதிவர் என்பதாவது புரிகின்றதா? இல்லைங்களா? //

இந்த சர்டிபிகேஷன் எங்க/எப்படி கிடைக்கும்?

நீங்க அனாமதேயரா, இல்ல புனைப்பெயர் பதிவரா?
out-of-focus photo போட்டா போதுமா? நானும் ரெடி பண்ணிடறேன் :)

லக்கிலுக் said...

நான் அனாமதேயம் இல்லை. பல வலைப்பதிவர் சந்திப்புகளில் நான் யார் என்று வெளிப்படுத்தியிருக்கிறேன். நீங்களோ அல்லது இட்லிவடை மாதிரி அனாமதேயங்களோ வரும் ஞாயிறன்று உட்லண்ட்ஸ் ஹோட்டலில் போண்டா சாப்பிட நேரில் வரமுடியுமா? அதுமாதிரி வெளிவரும் அளவுக்கு தில் இருக்கிறதா?

Anonymous said...

//சர்வேசன் அனாமதேய பதிவர், லக்கிலுக் புனைப்பெயரில் எழுதும் பதிவர் என்பதாவது புரிகின்றதா? இல்லைங்களா?

புருஷோத்தமன் அண்ணை
எப்படிங்கண்ணா இந்த மாதிரி பதிலளிக்கமுடிகிறது உங்களால். இந்த லாஜிக் அப்ப முகமூடிக்கும் பொருந்துமா ? இல்லை அவரும் உங்க கிட்ட சர்டிபிக்கேட் வாங்கின பொறவு புனைப்பெயரில் எழுதும் பதிவராயிடுவாரா ?

பூனைப் பெயரில் எழுதும் அனானி.

Anonymous said...

லூசுப் பசங்கப்பா, அதுங்க சொல்லுறத எல்லாம் நீ ஏன் காதுல போட்டுக்கினு..உம் பாட்டுக்கு நீ சர்வே போடு ராசா..அதுங்க வெட்டியா சண்டை போட்டுக்கிறதவிட உன்னோட சர்வே பெட்டரப்பு.

- அ.மு.ச அறிவாளி

SurveySan said...

லக்கிலுக்,

//வரும் ஞாயிறன்று உட்லண்ட்ஸ் ஹோட்டலில் போண்டா சாப்பிட நேரில் வரமுடியுமா? அதுமாதிரி வெளிவரும் அளவுக்கு தில் இருக்கிறதா? //

போண்டா சாப்பிடரதுக்கு தில்லு வேணாங்க. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ல சொல்லி ஒரு டிக்கெட் போட்டு கொடுங்க. ஸ்வயிங்க்னு வந்து ஆஜராயிடறேன் :)

//நான் அனாமதேயம் இல்லை. பல வலைப்பதிவர் சந்திப்புகளில் நான் யார் என்று வெளிப்படுத்தியிருக்கிறேன்.//

அடடா அப்படியா? எனக்கும் ரெண்டு கை, ரெண்டு கால், கண், மூக்கு எல்லாம் இருக்குங்க. மெய்யாலுமே நான் மனுஷன் தாங்க. நானும் பல சந்திப்புகளுக்கெல்லாம் போய் சமோசா சாப்பிட்டிருக்கேன் எங்க ஊர்ல. நம்புங்க :)

குழலி, என் டிஜிடல் கேமரால எப்படி எடுத்தாலும், நல்ல focusலயே வருதுங்க. அந்த out-of-focus technique என்னங்க? :)

குழலி / Kuzhali said...

//புருஷோத்தமன் அண்ணை
எப்படிங்கண்ணா இந்த மாதிரி பதிலளிக்கமுடிகிறது உங்களால்//

சர்வேசா இங்கே பாருங்க அனானிக்கு கூட என் பெயர் தெரிந்திருக்கின்றது. :-))

அனாமதேய பதிவர்கள் எல்லோரிடமுமா கேட்கிறோம், இல்லையே, யார் போட்டி நடத்துகிறார்களோ யார் இவர் சிறந்த பதிவர், அவர் சிறந்த பதிவர் என அத்தாரிட்டி கொடுக்கின்றார்களோ அவர்களிடம் தானே எதிர்ப்பு தெரிவிக்கொன்றோம், மற்ற பதிவர்களின் சிறப்பை அலசும் முன் அதை செய்பவர்கள் முன்னின்று நடத்துபவர்கள் யாரென்று தெரிவது அவசியம் என நான் நினைக்கிறேன்.

SurveySan said...

//சர்வேசா இங்கே பாருங்க அனானிக்கு கூட என் பெயர் தெரிந்திருக்கின்றது. :-))//

:) புருஷோதமன் உங்க பேர் தானா. நல்ல பெயர்.

// யார் போட்டி நடத்துகிறார்களோ யார் இவர் சிறந்த பதிவர், அவர் சிறந்த பதிவர் என அத்தாரிட்டி கொடுக்கின்றார்களோ அவர்களிடம் தானே எதிர்ப்பு தெரிவிக்கொன்றோம்,//

இதெல்லாம் சும்மா பேச்சு சார்.

தேன்கூடு போட்டி, தமிழ்மண ஸ்டார் பதிவர், அங்கயெல்லாம் கலந்துக்கும்போதும், செலக்ட் ஆகும்போதும், அந்த குழுவில் யார் இருந்தாங்கன்னு கேட்டா சேருவீங்க/சேந்தீங்க? (லக்கிக்கும் பொருந்தும் இந்த கேள்வி)

உங்க கருத்துக்கு எதிர் 'கருத்து' சொல்ற அணியைச் சார்ந்தவன் நான் என்னும் நெனைப்புல நீங்க இப்படியெல்லாம் சொல்றீங்கன்னு நெனைக்கறேன்.

நான்தான் சொந்தக் கருத்து வேணாம், மக்கள் கருத்து கணிப்பதே பணின்னு இருக்கேனே. என்கிட்ட ஏன் இந்த சால்ஜாப்பு?

டேக் இட் ஈஸி. இட்ஸ் ஆல் பார்ட் ஆப் த கேம்! :)

குழலி / Kuzhali said...

//தேன்கூடு போட்டி, தமிழ்மண ஸ்டார் பதிவர், அங்கயெல்லாம் கலந்துக்கும்போதும், செலக்ட் ஆகும்போதும், அந்த குழுவில் யார் இருந்தாங்கன்னு கேட்டா சேருவீங்க/சேந்தீங்க? //
தேன்கூடு போட்டியில் கலந்து கொண்டதே அல்ல, தமிழ்மணத்தில் நான் ஸ்டார் வலைப்பதிவராக இருந்த போது அதை நடத்தியவர் காசி, அதற்காக என்னை தொடர்பு கொண்டவர் மதி... இவையெல்லாம் தமிழ்மணத்திலேயே அறிவிக்கப்பட்டிருந்தது.

//உங்க கருத்துக்கு எதிர் 'கருத்து' சொல்ற அணியைச் சார்ந்தவன் நான் என்னும் நெனைப்புல நீங்க இப்படியெல்லாம் சொல்றீங்கன்னு நெனைக்கறேன்.
//
நான் நினைப்பது உங்களுக்கு எப்படிங்க தெரியும்? இது வரை நீங்கள் யாரென்று தெரியாது, அப்படியிருக்க நீங்கள் என் கருத்துக்கு எதிர் கருத்து சொல்லும் அணி(?!)யை சேர்ந்தவன் என்று எப்படி சொல்வது? எது எப்படியாகினும் அந்த விருது, அவார்டு, சிறந்த பதிவர் இதற்கு போட்டி என சொல்பவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம்.

SurveySan said...

//எது எப்படியாகினும் அந்த விருது, அவார்டு, சிறந்த பதிவர் இதற்கு போட்டி என சொல்பவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம்.
//

இந்த argument அப்படியே இஸ்துகினே போலாம்.. (தமிழ்மணம் காசி, மதின்னு டொக்கு வச்சுட்டீங்க, அடிச்சு ஆடாம.. பள்ளிக்கூட எக்ஸாம், கரெக்ஷன், 'முகமூடி' வாத்தியார்னு உங்க பதிவுல சொல்லிருக்கேன்.. அந்த மாதிரி இன்னும் பல இடத்துல முகம் தெரியாத பலர் உங்கள ஆராஞ்சு மார்க் போடுவாங்க.)

அத்த வுடுங்க,
உங்கள் எண்ணம் உங்களுக்கு, என் எண்ணம் எனக்கு.

அடுத்த முறை போட்டியில் உங்கள் பெயர் 'நடுவர் குழுவால்' பரிந்துரைக்கப்பட்டால் consider பண்ணாம வுட்டுடரேன் :)

ஆனா, ஓட்டு போட மறந்துடாதீங்க. ஓட்டு ஜனநாயக முறைப்படி நடக்கர விஷயம்.


//நான் நினைப்பது உங்களுக்கு எப்படிங்க தெரியும்? இது வரை நீங்கள் யாரென்று தெரியாது, அப்படியிருக்க நீங்கள் என் கருத்துக்கு எதிர் கருத்து சொல்லும் அணி(?!)யை சேர்ந்தவன் என்று எப்படி சொல்வது//

நீங்கள் உங்கள் பதிவில் சொன்னது போல்,உங்கள் எழுத்தில் தெரியும் 'காழ்ப்புணர்ச்சி'/நையாண்டியை வைத்து நீங்கள் நினைப்பது நன்னாவே புரீது போங்கோ!

Anonymous said...

Nalla surveys, nalla theerppu.
nadakkattum

(en previous comment podaliye?)

சிறில் அலெக்ஸ் said...

சர்வேசன்,
அருமையான தொகுப்பு. உங்கதலைப்புக்களும் சர்வேக்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். உங்க catch phrase இன்னும் பிடிக்கும்.

அருமையா வச்சிருக்கீங்க.

புனைபெயர்ல, அதுவும் பதிவுகளில் எழுதுவது தப்பில்ல. அநியாயமா எழுதக்கூடாது, அவ்வளவுதான்.

இப்ப நான் சிறில் அலெக்ஸ்னு தெரிஞ்சதும் என்ன ஆகிடப் போகுது. என் பெயரத்தவிற என்னப் பத்தி என்ன தெரியும் மத்தவங்களுக்கு.

அப்படி முழுசா தெரிஞ்சாதான் தொடர்பு வச்சுக்குவேன் என்பதி இண்டர்நெட்டுக்கு உதவாத தத்துவம்னு நினைக்கிறேன்.

ஆனா இது அவரவர் தனிப்பட்ட தெரிவுகள் இதில் பொதுவா ஒரு கருத்து சொல்லமுடியுமே தவிற வேறில்லை.

SurveySan said...

நன்றி சிறில்.

//உங்கதலைப்புக்களும் சர்வேக்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். உங்க catch phrase இன்னும் பிடிக்கும்.//

மிகவும் சந்தோஷம் தரும் வார்த்தைகள். வெளையாட்டா ஆரம்பிச்சது பிக்-அப் ஆயிடுச்சு :)

//புனைபெயர்ல, அதுவும் பதிவுகளில் எழுதுவது தப்பில்ல. அநியாயமா எழுதக்கூடாது, அவ்வளவுதான்.//

absolutely! என் நிலையும் அதே அதே!

//இப்ப நான் சிறில் அலெக்ஸ்னு தெரிஞ்சதும் என்ன ஆகிடப் போகுது. என் பெயரத்தவிற என்னப் பத்தி என்ன தெரியும் மத்தவங்களுக்கு.//

பெயர் தெரிவதால் ஒரு பிரச்சனையும் வரப் போவதில்லை. நான் எடுத்துக் கொண்ட களம், தொடப்போகும் டாபிக் இதெல்லாம் கருதித்தான் சொந்தப் பெயரில் வரவில்லை. இது என்னோடதுன்னு தெரிஞ்சா, ஆபீஸ்ல சக தொழிலாளிகள், அட இந்த ஆளு வேலயப் பாக்காம இதத்தான் செய்யறானான்னு நெனச்சுடக் கூடாது பாருங்க :)
நான் ரொம்ப பிஸி ஆளுன்ற இமேஜ் ஸ்பாயில் ஆயிடக்கூடாது :)

அடப்போங்கடா "ஜாட்டான்னு", பேர சொல்லி களத்துல குதிச்சிடலாம். எதுக்கு தேவையில்லாம 'கருத்து' சுதந்திரத்த இழக்கணும்னு விட்டுட்டேன் :)

Anonymous said...

புனைப்பெயர் --> wrong
புனை பேயர் -> correct

Anonymous said...

புனைப்பெயர் --> wrong
புனை பெயர் -> correct