புகைப்படப் போட்டியில் கலந்து கொள்ளும் நண்பர்களுக்கான ரிமைண்டர்.
போட்டிக்கான புகைப்படத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் Feb 11 11:59 pm IST.
விதிமுறைகளை படிச்சுட்டு படம் புடிங்க. மேலே உள்ள படத்தை போல், படம் இருக்கக் கூடாது. தக்காளி பாத்தா தக்காளி மாதிரி தெரியணும். Photo Editing tool ரொம்ப ஓவரா உபயோகித்து படத்தின் ஒரிஜினாலிட்டியை மாற்றி விடக் கூடாது. விதிமுறைகள் இங்கே.
பி.கு: படத்தை ரெண்டு மூன்று நாள் advanceஆ அனுப்பினீங்கன்னா, சர்வே கமிட்டியின் (நானே தான்) feedback கேட்டு, ஏதாவது திருத்தம் (தேவைப்பட்டா) பண்ணி, திரும்ப எடுக்க டைம் இருக்கும்.
கேள்விகள் இருந்தால் கேளுங்கள். டிப்ஸ் ஏதாவது வேணும்னாலும் கேளுங்க. கூகிள் சாமிகிட்ட கேட்டு பதில் சொல்லுவேன் :)
(என்னது? காய்கறி வாங்கர காச திருப்பித் தர்வேனாவா? அது சரி, போடோ எடுத்தப்பரம் மசாலா பண்ணி சாப்டுங்க. முடிஞ்சா பக்கத்துல இருக்கர மற்ற பதிவர்களுக்கும் ஸப்ளை பண்ணுங்க :) )
10 comments:
சர்வே சார், கீழே "ஜீவன் சாதி" விளம்பரத்துல சாதி பேரு போட்டு பொருத்தம் தேடிட்டு இருக்காங்க:-)
photo resolution என்ன?
udhayakumar, விளம்பரத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை :)
k4karthik,
any resolution is fine. just make sure when someone opens the file, they can see it fully in a browser on a 1024/768 monitor.
scroll bar வராம இருந்தா better.
again it depends on every-ones monitor resolution...
anyway.. 1024*768 is gud....
k4karthi,
//again it depends on every-ones monitor resolution...
anyway.. 1024*768 is gud....//
Yep. It depends, but most would have 1024/768 these days.
சர்வேசா, லேட்டா வந்துட்டேன். படம் புடிச்சி அனுப்புறேன். பரிசு, போட்டின்னு இல்லட்டியும் சும்மா கலந்துக்கிறேனே. ப்ளீஸ்!
ramachandranusha,
சர்வே கமிட்டிக்கு இப்பதான் உங்க விண்ணப்பம் fax பண்ணேன்.
அப்ரூவ் பண்ணிட்டாங்க.
ஆனா, ஒரு கண்டிஷன் - இந்த தக்காளி,வெங்காயம்,உருளை வாங்கினதுலேர்ந்து, அதை கழுவி தொடச்சு, லைட்டிங்க் செட் பண்ணி, உங்க குடும்பத்தார் அனைவரும் எப்படி உதவினாங்க என்ற விஷயத்தையும் சேர்த்து ஒரு பதிவா போடணும். சொல்லிபுட்டேன் :)
ஜமாய்ங்க!
சர்வேசா! படம் பிடிச்சி உங்களுக்கு அனுப்பிட்டேன் ஒழுங்கா வந்து சேர்ந்ததா என்றுப் பார்த்துச்சொல்லவும்.
உஷா, படம் ஓப்பன் பண்ண முடியல.
.zip or .jpg formatல அனுப்பறீங்களா?
நன்றி!
Post a Comment