recent posts...

Wednesday, October 31, 2007

அந்த 399 பேருக்கு நன்றி! 400ஆவது நீங்களாகவும் இருக்கலாம்!

வலது பக்கம் பாருங்க, 399 க்ளிக்குங்க, படிங்க, கையொப்பம் இடுங்க.



நன்றி!நன்றி!நன்றி!

தொடரட்டும் உங்கள் ஆதரவு!

Monday, October 29, 2007

சூப்பர் கதை வித் ய ட்விஸ்டும், நம் வட்டத்தில் பெருகும் ஆரோக்ய சூழலும்!

ரொம்ப நாளைக்கப்பரம் நம்ம பதிவர் வட்டத்துல ஒரு நல்ல கதை வந்திருக்கு.

Sydney Porterனு ஒரு எழுத்தாளர் இருந்தாரு.
அவர் சிறுகதைகள் ரொம்பப் ப்ரபலம்.
அதுவும் குறிப்பா, இவரின் கதைகள் ஒவ்வொண்ணும், படிக்கவே விறு விறுன்னு இருக்கும். ஆரம்பிச்சதும், டாப் கியர்ல ஓடி, திடீர்னு க்ளைமாக்ஸ் பாத்தா, நம்ம நெனச்சே பாக்க முடியாத மாதிரி முடியும்.
O-Henryன்ற புனைப் பெயர்ல எழுதர Sydney Porterன் இந்த திடீர்-திருப்பம் கொண்ட கதைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
திடீர்-திருப்பம் கொண்ட கதைகளை O-Henry turn கொண்ட கதைன்னு சொல்லும் அளவுக்கும், இவரின் இந்த 'ட்விஸ்ட்' ப்ரபல்யம்.

பள்ளிக்கூடக் காலத்துல இவரின் இரண்டு கதைகள் படித்த ஞாபகம் இருக்கு.

அந்த மாதிரி ஸ்டைலில் நம்ம செல்வன் ஒரு கதை எழுதியிருக்காரு.

தேன்கூடு சிறுகதைப் போட்டி நடத்திய காலத்தில், மாசத்துக்கு மாசம் வித்யாசமா, பத்து பதினைந்து நல்ல கதைகள் தேறிட்டிருந்தது. (எம்மையும் எழுத்தாளனாக்கிய காலமல்லோ ;) )

அழகான, ஆரோக்ய சூழல் இருந்த காலம் எல்லாம் மலையேறிப் போய், கூடைக்குள் நண்டுகள் போல் நம் பதிவுலகில் நிலை மாறிக் கொண்டு வருகிறது. நல்ல பொழுது போக்கு விஷயங்கள் படிக்க, விகடனுக்கும், குமுதத்துக்கும் அல்லாட வேண்டியிருக்கு.

ஆனாலும், அவ்வப்போது தோன்றும் அழகு கவிதைகளும், ஆழ்ந்த சிந்தனைகளும், நையாண்டித் துணுக்குகளும், மொக்கு மொக்கென்று மொக்கும் மொக்கைகளும், மனதுக்கு திருப்தி அளிக்காமல் இல்லை.

இந்த வரிசையில் சமீபத்தில் படித்த செல்வனின் விறு விறு கதையும் ஒன்று. படிச்சுப் பாருங்க.

பி.கு: "சிறுகதை 2007" போட்டி வெச்சு ரூ.4000 (ரூ.1000 கதை எழுதுபவருக்கு, ரூ.3000 உதவும் கரங்களுக்கு) பரிசு கொடுக்கலாம்னு ஐடியா. போட்டி வச்சா கலந்துக்குவீங்களா? ஓட்டுங்க, ஒரு பின்னூட்டமும் போடுங்க. இந்த வருஷத்த ஆரோக்யமா, கலக்கலா முடிப்போம். நன்றி! (ஸ்பான்ஸர்ஸ் வரவேற்க்கப்படுகிறார்கள் - II, III பரிசெல்லாம் கொடுத்து கலக்கலாம் ;) )



பி.கு: பின்னூட்டத்தில், கதைப் போட்டியில் கலந்துக்குவீங்களான்னு மறக்காம சொல்லுங்க. அப்படியே, சமீபத்தில் நீங்கள் படித்ததில் பிடித்தது என்னதுன்னும் சொல்லிட்டுப் போங்க. ;)

Monday, October 22, 2007

இதுவரை எடுத்த சர்வேஸின் தொகுப்பு - II

சர்வே எடுக்கும் தலையாய பணியை ஆரம்பித்து ஒரு வருடம் ஆகப் போகிறது.
அடேங்கப்பா, காலச் சக்கரம்தான் எவ்வளவு ஸ்பீடா சுழலுது.

சர்வேக்கள் மூலம், பல முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காணப்பட்டு, பலரின் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தோம் என்று சொன்னால் மிகையாகாது. ஹி ஹி ஹி ;)

சரி சரி, இதுவரை எடுக்கப்பட்ட சர்வேக்களின் தொகுப்பையும், தீர்ப்புகளையும் பாருங்கள். கலர் கலராய் கீழே...

58. சச்சின் ஒரு நாள் போட்டியிலிருந்து ஓய்வெடுக்கணுமா?


57. பந்த்து செய்யக் கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு


56. கை கட்டும்போது எந்த கை மேல வச்சு கட்டறீங்க?


55. மற்ற பதிவர்களை பற்றி விமர்சனம்/சர்வே செய்வது


54. சுகுணா திவாகர் எஸ்கேப் ஆவரது


53. அரை ப்ளேடு எஸ்கேப் ஆவரது


52. டோண்டு ராகவனின் பதிவுகள்


50. கும்மியர் 007!


48. அடுத்த பட்டறை எங்கே வெக்கலாம்?


47. பட்டறை பத்தி உங்க கருத்து?


46. தமிழ்நாட்டில் பார்க்கவேண்டிய டாப் இடங்கள்


45. ப்ரதீபா பாட்டீல் ~ ரைட்டா ராங்கா?


44. சிவாஜியா பாட்ஷாவா?


43. PSHYCHO Analysis - சர்வேசனின் எட்டு சாதனைகள் படித்ததும்,


42. குட்டீஸ் பாட்டுப் போட்டி 2007 - டக்கர் பாட்டு எது?


41. 'Hindus only' in Guruvayoor, Rameshwaram,.... Is it fair?


40. Sivaji - When will you see it?


39. சர்வேசனின் சர்வே முடிவுகளின் Quality


38. வீட்டில் டென்ஷன் ஏற்படுத்துவது யார்


37. மாறன் - பதவி விலக்கல் சரியா?


1லிருந்து 36வரையிலான சர்வேக்கள் இங்கே

Sunday, October 21, 2007

ஆ அண்டே ஆஹாபுரம், இ அண்டே இச்சாபுரம்...

பொறுமையா பாருங்க. அசத்தல் டான்ஸு! யம்மாடியோவ்! :)

Thursday, October 18, 2007

பாக்கிஸ்தானுக்கு இனி நல்ல காலமா?

முஷாராஃப் வந்த பிறகு காஷ்மீரிலும் ஏனைய இடங்களிலும் வெடிக்கும் தீவிரவாத வெடிகுண்டுகள் கம்மியாவே இருக்குன்னு நெனைக்கறேன்.

முஷாரஃபுக்கு முன் நவாஸ் ஷெரீஃப்பும், பெனாஸிர் புட்டோவும், வழக்கமான அரசியல் வியாதிகளாக இருந்து கொண்டு, லஞ்ச லாவண்யம் செழிக்க வழிவகை செய்து கொண்டிருந்ததாக ஞாபகம்.

முஷாராஃப் ராணுவ துணை கொண்டு ஆட்சியைக் கைப்பற்றி, இத்தனை ஆண்டுகாலம், ஜனநாயகப் படுகொலை செய்து வந்தாலும், அவரின் கீழ் பாக்கிஸ்தான், கொஞ்சம் நார்மலாவே இருக்கர மாதிரி தெரியுது.

இனி என்னாகுமோ?

Wednesday, October 17, 2007

பொஹத் பொஹத் அச்சீ ஸாங் ஹே!

1960ல் வெளி வந்த Mughal-E-Azam படம் பாத்திருக்கீங்களா? சமீபத்தில், அந்த படத்தை black & whiteலிருந்து, கலருக்கு மாற்றி ரீ-ரிலீஸ் செஞ்சாங்க.

கருப்பு வெள்ளையில் இருந்த ஒவ்வொரு ஃபிலிமுக்கும், கலர் கொடுத்து, வண்ணப் படமா மாத்திருக்காங்க. இந்த படத்துக்கு செஞ்ச வேலையைப் பார்க்கும்போது, நம்ம ஷங்கர் ரஜினிய 'வெள்ளைத் தமிழனா' ஆக்கினது பெரிய மேட்டரே இல்லன்னு தெரியுது.

அந்த காலத்துலயே ப்ரமாண்டமான முறையில் எடுக்கப்பட்ட படம் மொகல்-ஈ-ஆசாம்.
அக்பரின் புதல்வன் ஜஹாங்கீருக்கும், நாட்டியத் தாரகை அனார்கலிக்கும் இடையிலான காதலும், அதை அக்பர் எதிர்ப்பதும், காதலர்கள் பிரிவதும் கதைக் களம்.

Naushad தெரியுமில்ல? பின்னோ பின்னுன்னு பின்னியிருப்பாரு பாடல்களை.

ஒன்பது வருஷம் எடுக்கப்பட்ட படமாம். Sholay வரும்வரை, அதிக வசூல் பெற்ற படமாய் இருந்தது. இப்பொழுது, இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

பலரின் Top 10ல், கண்டிப்பாய் இடம் பெற்றிருக்கும் படம் இது.

அனார்கலியாக நடித்த மதுபாலா ரொம்ப அழகா இருப்பாங்க.

லதா மங்கேஷ்கரின் ஒவ்வொரு பாடலும் தெவிட்டாத இன்பம்.

(டைட்டில்ல, நம்ம பி.சுசீலா பேரும் போட்டாங்க. அவங்க இந்த படத்துல என்ன பாட்டு பாடியிருக்காங்கன்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க).

இனி வருவது, லதா மங்கேஷ்கரின் மயங்க வைக்கும் குரலில், Naushadன் இசையில், Pyar Kiya Tho Darna Kya பாடலைப் பாருங்கள். பரவசமடையுங்கள்.



இந்த படத்தை எடுத்த ஆசீஃபுக்கு இது இரண்டாவது படமாம். 47 வயதிலேயே மரணத்தை தழுவிவிட்டாராம் இந்த ஜீனியஸ்.

Monday, October 15, 2007

ராமன் லக்ஷ்மணனைக் கொன்றானா?

ராமன் மானிடன்.
அவன் தம்பி லக்ஷ்மணனும் மானிடன்.

மானிடராய் பிறந்தவர்கள் மானிடனாய் வாழ்ந்து மானிடனாய் மாண்டும் போகவேண்டுமல்லவா?

ராமாயணத்தில் ராமன் இறப்பதையும் சொல்லியிருக்கிறார்களாமே?

லஷ்மணனை ராமனே கொல்வதாகவும் கதை அமைகிறதாமே?

மெய்யாலுமா?

தெரிஞ்சவங்க சொல்லுங்க/எழுதுங்க/லிங்க் கொடுங்க.

நன்றி!!!

அடுத்த பதிவு: என்னை மூன்று பேர் ரௌண்டு கட்டி அடிச்ச கதை! ;)

Sunday, October 14, 2007

டாமில் நாடூ, இம்சை அரசன், On Google Current.

ஒன்னியும் சொல்றதுக்கு இல்ல. பாத்து எஞ்சாய் பண்ணுங்க.
குறிப்பா, இம்சை அரசன் பத்தியும், 'கோத்ரம்' பத்தியும் சொல்வது சிரிப்பை வரவழைத்தது.

Friday, October 12, 2007

75 வருஷத்துல வந்த டாப் 10 தமிழ் படங்கள்

கடந்த 75 வருட தமிழ் சினிமாவின், சிறந்த பத்து படங்கள் இவைன்னு, குமுதத்தில் வரும் அரசு பதில்களில் சொல்லியிருக்காங்க.

1. சந்திரலேகா
2. நெஞ்சில் ஓர் ஆலையம்
3. அவள் அப்படித்தான்
4. தண்ணீர், தண்ணீர்
5. உதிரிப் பூக்கள்
6. பதினாறு வயதினிலே
7. மூன்றாம் பிறை
8. முதல் மரியாதை
9. நாயகன்
10. காதல்

எல்லாம் முத்தான படங்கள் தான். ஓவர் சினிமாத் தனம் இல்லாத, ஓரளவுக்கு, யதார்த்த படங்கள்.

எல்லா படமும் பாத்துட்டீங்களா? உங்களுக்குத் தெரிஞ்ச டாப் 10 எது?

சொல்லிட்டுப் போங்க.

நல்ல படங்கள் தந்த எல்லா படைப்பாளிகளுக்கும் சல்யூட்ஸ்!

Thursday, October 11, 2007

பதிவுன்னா இப்படித்தான்யா இருக்கணும்

அழகழகான படங்கள்.
புதிய புதிய விஷயங்கள்.
நல்ல விளக்கங்கள்.
மேலும் விஷயங்கள் தரும் பின்னூட்டங்கள்.

இதெல்லாம் கூட்டிச் சேத்து, சூப்பர் கலவையா, இப்படித் தான் நிறைய பதிவுகள் வரணும்.

படிங்க, படிச்சு அறிவ வளத்துக்கோங்க. வீக்-எண்ட ஜமாய்ங்க!

இங்கே க்ளிக்குங்க!

Tuesday, October 09, 2007

SECRET BALLOT, எலிபத்தாயம் & my favourite MOVIE moments

திரைப்படம் பார்ப்பதுதான் என் முக்கிய பொழுது போக்கு அம்சம்.
அதுவும், நல்ல திரைப்படம் என்றால் பல முறை அந்த படத்தை சலிக்காமல் பார்ப்பேன்.

Saving Private Ryan எந்த சேனல்ல எப்ப வந்தாலும் ஒக்காந்து பாப்பேன். வீட்ல டி.வி.டியும் இருக்கு. தரமான அக்மார்க் படம் என்றால், என்னைப் பொறுத்தவரை SPR தான். அதில் வரும் Tom Hanks போன்ற ஆட்கள், நிஜ வாழ்க்கையில் இருந்து, நமக்கு பரிச்சியமானவர்களாக இருந்தால் நல்லா இருக்குமேன்னு அதப் பாக்கும்போதெல்லாம் தோணும்.
Tom Hanks இறக்கும் கணங்களும், அதைத் தொடர்ந்த 10 நிமிடங்களும், சிம்ப்ளி சூப்பர்ப்!

படத்தில் உள்ள சின்ன சின்ன விஷயத்தை ரசிப்பதும் உண்டு, அதை நினைத்து நினைத்து பின்நாட்களில் புளகாங்கிதம் அடைவதும் உண்டு.
தளபதியில், சின்னத் தாய் பாட்டில் வரும் அந்த க்ளோஸ்-அப் மல்லியும், இரயில் போகும்போது, ரஜினியும் ஸ்ரீவித்யாவும் சேர்ந்து திரும்பிப் பார்க்கும் காட்சிகளும் மனதில் பதிந்தவை.

மூன்றாம் பிறையில், உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே என்ற வரிகளுக்கு கமலின் முகபாவம், அடேங்கப்பா.

Ransom படம் பாத்தீங்களா? Mel Gibson தன் மகன் இறந்து விட்டான் என்று நினைத்து, பால்கனியில் அமர்ந்து அழும் காட்சி. சுச்சுச்சுச். சூப்பர்.

தேவர் மகன் சிவாஜி கமல் சம்பாஷனைகள். சிவாஜி என்ன கம்பீரமா இருந்தாரு அந்த படத்துல இல்ல? வீரபாண்டிய கட்ட பொம்மனை விட எனக்குப் பிடிச்சவர் தேவர் தான். அந்த மிடுக்கு அந்த பார்வை. சிவாஜியைத் தவிர வேற யார் பண்ணிருந்தாலும், எடுபட்டிருக்காது.

சின்ன வயசுல பாத்த ,'ராஜா சின்ன ராஜா பூந்தளிரே இன்ப கனியே'ன்ற பாட்டு. (பூந்தளிர் படம்னு நெனைக்கறேன்). சுஜாதா ஆவியா வெள்ளைப் பொடவைல மெதந்து வருவாங்க, குட்டிப் பயல அழுது கிட்டே தெருத் தெருவா அலைவான். எவ்வளவோ வருஷத்துக்கப்பரமும் நினைவில் அப்படியே மங்கலா இருக்கு அந்த காட்சிகள்.

பெருமழைக்காலம் என்ற மலையாளப் படம். கணவனின் உயிர் காக்கவேண்டி மீரா ஜாஸ்மின், காவ்யா மாதவனின் காலைத் தொடும்போது பெய்யும் மழையும், மற்ற காட்சிகளில் வரும் backwatersன் அழகும், ப்ரமாண்டம். வெரி வெரி டச்சிங்.

அழகியில் வரும் உன் குத்தமா என்ற ராஜ வரிகளும் மனதை என்னென்னமோ செய்தது.

பழைய படங்கள் எதுவும் நினைவில் பெரிதாக பதியவில்லை. யோசித்துப் பார்க்கும்போது சட்டுனு வருவது, நம்ம என்.டி.ஆர் காருவின் கண்ணனும், எஸ்.வி.ரங்காராவின் மாயா பஜார் 'கல்யாண சமயல் சாதமும்' தான். காய்கறிகளெல்லாம் தானா போய் நறுக்கிக்குமே, கலக்கல்.

அடுக்கிக்கிட்டே போலாம் போலருக்கே. சரி, இனி தலைப்புக்கு வரேன்.

Children of Heaven என்ற இரானியப் படம் பாத்ததுக்கப்பரம், எங்க இரானியப் படம் பாத்தாலும், எடுத்துட்டு வந்து பார்த்துவிடுவது பழக்கமாயிடுச்சு.
இங்க இருக்கும் லைப்ரரில, நல்ல படங்களா தேர்ந்தெடுத்து வச்சிருக்கான்.
Baran, Laila, White Balloon, Colors of Paradise எல்லாம் வரிசையா பாத்தாச்சு. எல்லாம் பார்கப் படவேண்டியவை.

சமீபத்தில் பார்த்தது SECRET BALLOT என்ற இரானியப் படம்.
இரானின் முதல் தேர்தலை நடத்த ரொம்ப சிரமப்பட்டு வேலைகள் எல்லாம் செய்வாங்க.
தேர்தல் பூத் எல்லாம் வச்சா, ஓட்டு போட மாட்டாங்கன்னு, ஒவ்வொருத்தர் வீட்டுக்கே நேரா போய் வாக்கு சேகரிக்க முடிவு செய்வாங்க.

ஏதோ ஒரு மூலையில் கடற்கரை ஓரத்தில் இருக்கும் ஊருக்கு, ஒரு பெண்ணை 'பூத்' ஏஜண்டா அனுப்புவாங்க. அங்கு இருக்கும் ஒரு இராணுவ வீரனை, ஏஜண்டுக்கு பாடிகாடா கூட இருந்து உதவும் வேலை.
ஒரு பெண் ஏஜண்டாக வந்ததை முழுவதும் ஏற்க முடியாத மனநிலையில் இருக்கும் அந்த இராணுவ ஆளுக்கும் இந்தப் பெண்ணுக்கும் இடையில் நடக்கும் விவாதங்கள் சிரிப்பை வரவழைக்கும்.

தேர்தல் அமைப்பில் நம்பிக்கை இல்லாமல் இவனும், சட்ட திட்டங்களின் தேவையைப் பற்றி விலாவரிக்கும் ஏஜண்ட்டும் நல்ல காம்பினேஷன்.

சட்ட திட்டங்கள் எல்லாம் ரொம்ப அவசியம் என்று படம் முழுக்க லெக்சர் அடிக்கும் அந்த பெண் ஏஜெண்ட்.
வந்த வேலை முடிந்ததும், ஐந்து மணிக்குள் திரும்ப வேண்டிய அவசரம்.
இராணுவ வீரன், ஜீப் ஓட்டும்போது, நடுக்காட்டில் யாரும் வராத சாலையில் சிக்னலில் 'ரெட் லைட்' விழும். பச்சைக்காக வெயிட் பண்ணுவான்.
அவசரத்தில் இருக்கும் ஏஜண்ட் "அதான் யாரும் வரலியே, வண்டிய எடேன்" என்பாள். தனக்கு தேவை என்பதும், சட்டமாவது திட்டமாவது என்று காட்டும் யதார்த்தம் அருமை.

படம் கொஞ்சம் இழுவை ரகம் தான். மெதுவா, கவித்துவமா நகர்ந்தது.

ஜீப் ஸ்டார்ட் பண்ணி மூணு நிமிஷம் ஓட்டி தெருக்கோடிக்கு போற வரைக்கும் காமிச்சு பொறுமைய சோதிச்சாங்க சில நேரங்களில்.

நம்ம ஊர் தூர்தர்ஷனில், மதியானம் 1:30 மணிக்கு அவார்ட் படமா போட்டு தாக்குவாங்க ஒரு காலத்துல.

உங்களுக்கு நினைவிருக்கான்னு தெரியல, மலையாளப் படம் ஒண்ணு 'எலிபத்தாயம்'(??)னு பேரு. ஒரு நாயரு வீட்டுக்குள்ள போய், ஒரு எலிப்பொறிய எடுப்பாரு. உள்ள ஒரு எலி மாட்டிக்கிட்டிரூக்கும். அது இவர பாக்க இவரு அத பாப்பாரு. பொடி நடையா நடந்து வீட்டுக்கு பக்கத்துல இருக்கர கொளத்துக்கு போவாரு. அவரு நடந்து கொளத்துக்குப் போக ஒரு அஞ்சு நிமிஷம் ஆகும். அஞ்சு நிமிஷம் நாமளும் கேமரா பின்னாலயே அவரு கூட போகணும்.
கொளத்துல போய் எலிப்பொறிய தண்ணீல முக்கி எலிய கொல்லுவாரு.

இந்த மாதிரி ஒரு அஞ்சு நாள் நடக்கும், கடைசில அவரும் கொளத்துல செத்து போயிடுவாரு.
அவரு எலியப் பாக்கரதும், எலி அவரப் பாக்கரதும் இன்னும் மனசுல இருக்கு.

அந்த படத்துல ஃபோட்டோகிராபி நல்லா இருந்த மாதிரி, இப்ப நெனச்சா தோணுது. திரும்ப ஒரு தரம் பாக்கணும். ஏதாவது விஷயம் இல்லாம அவார்டு கொடுத்திருக்க மாட்டாங்கன்னு தோணுது. நீங்க பாத்திருக்கீங்களா?

பி.கு1: என்ன அழவச்ச படம் பாருங்க

பி.கு2: I like movies, so add to the list.

நன்றி!

Monday, October 08, 2007

சச்சின் ஓய்வெடுக்கணுமா?

சச்சின் யாரு என்ன ஏதுன்னெல்லாம் விலாவாரியா நான் சொல்லித் தான் தெரியணும்னு இல்ல.
பலப் பல வருஷங்களா, கன்னா பின்னான்னு வெளாசி, நமக்கெல்லாம் பெருமை சேர்த்த சுப்பீரியர் ஆட்டக்காரர் அவர்.

சமீக காலமாய் அவரின் தொடர் சறுக்கல்களால், அவரை போட்டு பிச்சு பிடுங்கராங்க்ய எல்லாரும்.

எல்லாரும் ரிட்டையர் ஆகவேண்டியதுதான்.
நம்ம சச்சினுக்கு டைம் ஆயிடுச்சா? இன்னும் ஜூஸ் இருக்கா அவருக்குள்ள?

இத படிச்சுக்கோங்க,

இப்ப வாக்குங்க

நம்ம சச்சின் ஒரு நாள் பந்தையங்களில் இருந்து ஓய்வெடுக்கணுமா?


நன்றி...

Saturday, October 06, 2007

எதிர் கவிதை - திருந்தாத ஜென்மமடா நீ!

ஒருத்தர் சூப்பரா ஒரு கவிதை எழுதினா, அதே ஸ்டைலில் நமக்கு தெரிஞ்சத கிறுக்கி எழுதர இன்னோரு கவிதை தான் "எதிர் கவிதை" - (definition உதவி காயத்ரி). ஒரிஜினலில் இருக்கும் சுவை இருக்கக் கூடாது (well, முயற்சி பண்ணாலும் சுவையா எழுத நமக்கு வராதுங்கரது வேற விஷயம்), ஒரு நையாண்டி கலந்த நடை அவசியம்.

சுயமா கவிதை எழுதரது பயங்கர கஷ்டம். ஆனா, இந்த எதிர் கவிதை எழுதரது ரொம்ப ஈஸி.

காயத்ரி எழுதிய முதன் முதலாக என்ற கவிதைக்கான எனது எதிர் கவிதை "திருந்தாத ஜென்மம் நீ!", கீழே.
படிச்சுட்டு கருத்ஸ் சொல்லுங்க.

---------- ---------- ---------- ----------
சுள்ளென்ற கத்திரி வெயில் போலவும்,
வெந்த புண்ணில் மிளகாய் பொடி போலவும்,
நறுக்கென்ற கிள்ளு போலவும்,
சூப்பர் இருட்டடி போலவும்,

உன்னை நையப் புடைக்க வேண்டி
நான் தீட்டிய திட்டங்களெல்லாம் வீணாய்ப் போயின

மழையில் நனையும் எருமை நீ,
கத்திரியில் சன் பாத் எடுக்கும் காக்கை நீ,

சரி தான்,

திருந்தாத ஜென்மம் நீயெனத்தெரிந்த பின்
வேறென்ன செய்ய,

சீ என்று விட்டுத்தள்ளுவதைத் தவிர.
---------- ---------- ---------- ----------

உங்கள் கனத்த கரவொலிக்கு நன்றி நன்றி.
ஹி ஹி, அடிக்க வராதீங்க, அப்படியே, எனது முந்தைய படைப்புகளையும் படிக்க தவறாதீர்கள்

1) காயத்ரியின் இழந்த மழைக்கான எதிர் கவிதை, இழந்த கண்ணு, இழந்த மதிப்பெண்ணு

2) நிலவு நண்பனின் நீ எனக்கு வேண்டாமடிக்கான எதிர் கவிதை, சீ... நீ எனக்கு வேண்டாமடா.

படித்து பரவசமடையுங்கள். அப்படியே, நீங்களும், உங்களுத்துத் தெரிஞ்சத எதிர்-கவிதையாக்கி, கவிஞராயிடுங்க.

புதுசா கவிதை எழுதரவங்க, என் கிட்ட சொன்னீங்கன்னா, அதுக்கு எதிர் கவிதை எழுதி மேலும் புகழ் சேர்க்க முயல்வேன் ;)


மீ த எஸ்கேப்! ;)

Friday, October 05, 2007

24 MP3 க்கு சுளையாய் 1 கோடி ரூபாய்!!!

மகா ஜனங்களே,

இதனால் அறிவிக்கப்படுவது என்னவென்றால்,

USA மினஸோட்டாவைச் சேர்ந்த ஜேமி தாமஸ் என்ற முப்பது வயதுப் பெண்,

24 MP3 பாடல்களை ஓசியில் download செய்ய வழங்கியதால்,

ஒரு பாடலுக்கு $9950 என்ற வீதத்தில், 24 பாடலுக்கு $220,000 fine கட்டச் சொல்லி உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

காப்பிரைட், இந்த ரைட், அந்த ரைட் என்று பல ரைட்டுகளை மீறியதால், அவரை லெஃப்ட் ரைட் என்று அங்கலாய்த்து, ஒரு பெரிய ஃபைனும் போட்டுள்ளனர்.

இதிலென்ன தப்புன்னு ரொம்ப அலட்டலா, இந்த MP3 களவாணித்தனம் பண்ற பலருக்கு இது உள்ளூர ஒரு திகில ஏற்படுத்தவே இப்படி திடீர் நடவடிக்கையாம்.

இன்னும் 26,000 பேர வரிசையா விசாரிச்சு, எல்லாருக்கும் ஃபைனுடன் கூடிய ஜெயில் தண்டனை கொடுக்கப் போறாங்களாம்.

மக்கா, உஷாரா இருங்க. downloadக்கு கொடுத்தாலும், download செய்தாலும், குற்றம் குற்றமே.

பல நாள் திருடன் ஒரு நாள் அம்புட்டுக்குவான்னு நாம இணையத்துல பல வாட்டி பாத்திருக்கோம்.

உஷாரா இருந்துக்கோங்க, இருந்துக்கறேன். அம்புடுதேன்

;)


மேல் விவரங்கள் இங்கே

btw, அருமையான பாடல்கள் நமக்கெல்லாம் தந்த MSVக்கு ஒரு பெரிய அங்கீகாரம் தரக்கோரி போடப் பட்டுள்ள ஆன்லைன் பெட்டிஷனின் கையொப்பம் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உங்களுக்கு பிடிச்ச MSV பாட்ட பின்னூட்டுங்க. கானா பிரபா கிட்ட நேயர் விருப்பமா கேட்டு போடச் சொல்றேன் ;)

(தமிழ்மணத்துல பெட்டிஷன அறிவிப்பா போட என்னா பண்ணனும்? உங்க பதிவுலயும் வெளம்பரம் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்).

300 கையொப்பங்கள் கிட்ட வந்திருக்கு. 1000ம் ஆக்குவோம்!

நன்றி!!!!


:)

Wednesday, October 03, 2007

ஹனிமூனுக்கு எங்க போலாம்?

சென்னைவாசி ஒருத்தரு கலியாணம் பண்ணிக்கப் போறாரு.

ஹனிமூனுக்கு எங்க போலாம்னு ஐடியா கேட்டாரு.

சுத்துவட்டாரத்துல ஒரு மூணு நாள்ள பாக்கர மாதிரி என்னென்ன எடங்கள் இருக்கு?
அந்த எடங்களுக்குப் போய் வர, புக்கிங் எங்கண செய்யரது?

டோட்டல் பேக்கேஜா இருந்தா பெட்டரு (ரயில்-ஃப்ளைட்டு-ஹோட்டல்-சுத்திப் பார்த்தல்-etc...)

கோடை? மொரிஷீயஸ்? சிம்லா? கண்டி? கேரளா? வேற எங்க?

ஐடியாக்கள அள்ளி வீசுங்க, ப்ளீஸ்.



நன்னி!


பி.கு: MSVக்கு போட்ட பெட்டிஷன்ல 280+ கையெழுட்த்துக்கள் விழுந்திருக்கு. தயவு செய்து, இந்த மேட்டருக்கு, ஈ.மெயில் மூலமாகவும், பதிவுகள் மூலமாவும் வெளம்பரம் கொடுங்க. இதுவரை வெளிச்சம் கொடுத்த கானா பிரபா, நெல்லை சிவா, MSVTimes.com ஆகியோருக்கு நன்னி! விவரங்கள் இங்கே.

Monday, October 01, 2007

உச்சநீதி மன்றத்த மிதிக்கலாமா, அமெரிக்காவுக்கு வழி பண்ணலாமா?

ஒருபக்கம், ஆட்சிப் பொறுப்புல இருக்கரவங்க என்னாத்துக்காக பந்த்து பண்ணனும்னே புரியல.

இன்னொரு பக்கம் 'ராமர் (கட்டாத) பாலம்' உடைக்கப்பட்டு கப்பலு போக வழி பண்ணனுமா வேணுமான்னு புரியல.

என்னதான் தெய்வ நம்பிக்கை இருந்தாலும், ராமர கொத்தனார் ஆக்கர கதையெல்லாம், பீலா மட்டுமேங்கரது நல்லாவே புரியுது.

கடலுக்குள்ள இருக்கர பாரைய இடிச்சா, தெய்வ குத்தமெல்லாம் ஆகாதுன்னும் நல்லாவே புரியுது.

பாரைய ஒடச்சு ஆழம் பண்ணி கப்பலு போக வழி விட்டா, அந்த ஆழம் அப்படியே எவ்வளவு நாளுக்கு இருக்கும்னு புரிய மாட்டேங்குது.

துபாய்ல கடலுக்குள்ள ஒரு ஏழு-ஸ்டார் ஹோட்டலு கட்டினாங்க. டிஸ்கவரில காமிச்சான். சும்மா ஒரு கட்டடம் கடலுக்குள்ள கட்டவே, எம்மாம் செலவு. அவனுங்க தோண்டல, கடல்ல மண்ணு போட்டு மேடு பண்ணி, கட்டடம் கட்டுனாங்க. மணல் அரிக்க அரிக்க, அது மேல போட்டுக்கினே இருக்கணுமாம், ஆயுள் முழுக்க.

நம்மளால அந்தளவுக்கு, மெயிண்டெயின் பண்ண முடியுமா? செலவு பிடிக்காது? லாபகரமா இருக்குமா? ஒன்னியும் புரியல.

ஒரு ஹார்பர் உருவாக்கி, நெறைய கப்பலு வந்து நிக்கர மாதிரி அமஞ்சா, அதனால ஊருக்கு பயங்கரமான லாபம் இருக்கும்னு நல்லாவே புரியுது.

துபாய் ஷேக்கு பணம் போட்டு கட்டரது, கடலுக்குள்ள போச்சுன்னா, மேஸ்த்ரி, கொத்தனாரு எல்லாரோட கையையும் எடுத்துடுவான். அந்த பயத்துலயாவது, ஷ்ரத்தையா, மூழ்காத ஹோட்டல கட்டுவான் அங்க.

இங்க அப்படி முடியுமா? நோண்டர பாரைய, ஸைட்ல விக்கரது முதல் கொண்டு, இவ்ளோ ஆழத்துக்கு இம்புட்டு கமிஷன்னு, பிரிச்சு மேயர கூட்டமில்ல இருக்கு (அடிக்க வராதீங்கப்பா, அம்மா சொன்னதத்தான் சொல்றேன் ;) ). ஒவ்வொரு இன்ச் ஆழத்துக்கு ஒரு கமிஷன்னு போட்டா, தோண்டி தோண்டி, அமெரிக்காவுக்குப் போகவே வழி வந்துடுமே :)

டைட்டிலுக்கே திரும்ப வாரேன்.

பந்த் எதுக்காகங்க பண்றாங்க? ஆட்சீல இருக்கரவங்க, திட்டத்த கரீட்டா போட்டு, "டேய் இதப் பண்ணா நல்லதுடா"ன்னு திட்ட வட்டமா சொல்லிட்டா, நோண்டிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதானே. அத்வானி என்ன சொன்னா என்னா? ராமர் பேர சொல்லி ஓட்டுப் பிச்சை வாங்கரவருதான் அந்தாள்னு நல்லாவே தெரியுமே. அப்பரம் எதுக்கு மேட்டர இன்னும் ஊதிப் பெருசாக்கி, அத்வானிக்கு இத்த ஆதாயமா மாத்தோணும்?
எவ்வளவோ விஷயம் தெரிஞ்ச மொதலமைச்சுருக்கு இந்த சூட்சமம் கூடவா தெரியாது?

அது சரி, பந்த் பண்ணி பொதுமக்களுக்கு எந்த இடைஞ்சலும் செய்யக் கூடாதுன்னு ஆணித்தரமா ஒரு தீர்ப்பு சொல்லியிருக்காங்க உச்சநீதி மன்ற நாட்டாமைகள்.

லேட்டா சொன்னாலும், நச்சுனு ஒரு தீர்ப்பு இல்லியா இது? கொண்டாட வேண்டிய விஷயமில்லயா அது?

ஆனா வூனான்னா பஸ்ஸ நிறுத்தி, சாதாரண முனுசாமி,குப்புசாமி, கந்தசாமிக்கு டார்ச்சர் கொடுக்கர இந்த பந்த்து இனி எந்தப் பயலும் பண்ண முடியாதுங்கரது சூப்பர் மேட்டராச்சே கண்ணுகளா.

அத்த ஏன் நம்ம ஆளுங்க சில பேர் எதிர்க்கறீங்க? ஒன்னியும் பிரிய மாட்டரதே.

கட்சி ஆளா பாக்காம, சாதாரண ப்ரஜையா யோசிச்சு சொல்லுங்களேன்.

நானு எஸ்கேப்! நீங்க யோசிச்சு வாக்குங்க! :)



நல்லாருங்க!

பி.கு: ராமாயணம் நடந்துருக்குமோன்னு ஒரு டவுட்டு தருமியின் இந்த பதிவப் பாத்தப்பரம் வருது. அதப் பத்தி அப்பாலிக்கா ஒரு பதிவு போடறேன் ;)