recent posts...

Thursday, July 12, 2007

ஜன கன மன அர்த்தமும், வடிவேலுவின் ஸேம் bloodம்!

60ஆம் சுதந்திர தினத்தை ஒட்டி, அனைவரையும் ஜன கன மன பாட வெச்சு கலக்கலாம்னு ஒரு பதிவப் போட்டேன் (பதிவுல ஒரு குட்டீஸோட கலக்கல் ஜன கன மன கேட்டுடுங்க :) ).

தாகூரின் "ஜன கன மன" பத்தி ஒரு conspiracy theory (or history?) இருக்கு.

அதாகப் பட்டது, ஜார்ஜ் அரசனை வரவேற்ப்பதர்க்காக தாகூரிடம் ஒரு கவிதையை எழுதச் சொல்லிக் கேட்டாராம் நேரு.
தாகூரும், 'ஜனோ கனோ மனோ அதி நாயக..." என்ற நமது தேசிய கீதத்தை எழுதிக் கொடுத்தாராம்.

பாடலின் பொருள், ஏறத்தாழ இதுதான் - "மக்களின் மனதில் குடி கொண்டிருக்கும் நாயகனே, நீ தான் எம் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தலைவர், etc... etc..."

தாகூருக்கு, இப்படி கி.ஜார்ஜை பாராட்டி எழுதச் சொன்னது பிடிக்கவில்லையாம். அதனால், பாடலில், 'நாயகனே' என்று இறைவனைக் குறிப்பிட்டுத் தான் எழுதிக் கொடுத்தாராம்.

ஜார்ஜை பாராட்ட வேண்டும் என்று எழுதி வாங்கிய பாடலை, தேசிய கீதமாக மாற்றியது அன்றைய காங்கிரஸ் செய்த தவறோ?

தாகூரை பழிப்பது சரியா? என்ன இருந்தாலும், ஜாலியன் வாலாபாக் கொடுமையின் போது, அவருக்கு கொடுத்த 'சர்' பட்டத்தை தூக்கி எறிந்தவராச்சே, அவரின் தேசப் பற்றின் மேல் தேவையில்லாமல் சந்தேகப் படுதல் சரியா?

இவ்ளோ நாள் கி.ஜார்ஜ பாராட்டியா வாய் கிழிய மெய் சிலிர்க்க பாடிட்டு இருக்கோம்னு நெனச்சா கொஞ்சம் கசப்பாதான் இருக்கு.

"ஜன கன மன"வின் முழு அர்த்தம் தெரிஞ்சுக்கிட்டது என்னமோ, போன வாரம், இந்த நேயர்விருப்பப் பதிவ எழுதும் போதுதான். (ஐயய்ய, shame shame on me! :) ).
நண்பர்கள் சிலர தொலைபேசி கேட்டப்போ, அவங்களுக்கும் அர்த்தம் தெரியலன்னு சொன்னாங்க.
அப்பாடா, ஸேம் ப்ளட்!!! :) ( ஸேம் ப்ளட்னா தெரியாதவங்க, மனதை திருடி விட்டாய் படத்தில் வடிவேலுவின் காமெடி பாருங்கள். பெஸ்ட் காமெடி எவர்! :) )

என்னமோ போங்க, இந்த குழப்பத்தால், நேயர் விருப்பத்தில் சிறு மாற்றம்.
60ஆம் சுதந்திர தினத்தை ஒட்டி, ஜன கன மன பாடி அனுப்பணும்.
இதைத் தவிர, மற்ற தேச பக்தி பாடல்கள் எதை வேணும்னாலும் பாடி அனுப்பலாம்,
நான் 'வந்தே மாதரம்' ட்ரை பண்ணப் போறேன்.
நீராரும் கடலடுத்த;
தாயின் மணிக்கொடி பாரீர்;
இந்த மாதிரி எத வேணும்னா பாடி அனுப்புங்க.

சிறந்த தேச பக்தி பாடலுக்கு ரூ.1000 பரிசு கொடுக்கப் போறோம் (ஸ்பான்ஸர்ஸ் வெல்கம்).
ஒரே நிபந்தனை, 60 பாடல்கள் கோதாவில் இருக்கணும். :)

இன்றைய மிகப் பெரிய இரண்டு கேள்விகள் கீழ கொடுத்திருக்கேன்.
ரெண்டு பெட்டில தனித் தனியா வாக்குங்க.
வாக்கிட்டு கீழ வீடியோ இருக்கு பாருங்க.
புல்லரிக்குது, உண்மையிலேயே! :)







ஜெய் ஹிந்த்!

:)

7 comments:

குமரன் (Kumaran) said...

இந்தப் பதிவினைப் படித்துப் பாருங்கள் சர்வே சன். அப்படியே உங்கள் நண்பர்களுக்கும் கொடுங்கள்.

http://koodal1.blogspot.com/2006/01/130.html

SurveySan said...

Thanks for the link Kumaran. I read it and enjoyed reading it:)

SurveySan said...

kayams

Anonymous said...

Anthem is anthem is anthem

தென்றல் said...
This comment has been removed by the author.
SurveySan said...

Thendral,

Nanri! Nanri! Nanri!

SurveySan said...

Thendral, my email id is surveysan2005 at yahoo.com.

I got the link. thanks so much.

I am deleting the comment, because the URL may be violating copyright laws :)
but, I will watch the movie this weekend :)