recent posts...

Monday, July 02, 2007

குட்டீஸ் போட்டி முடிவுகளும் பரிசுகளும்

குட்டீஸுக்கான பாட்டுப் போட்டி நல்ல வழியா நடந்து முடிந்தது.

as of now, 88 வாக்குகள் வந்துள்ளது. இதில்,
46% வாக்குகளைப் பெற்ற மாதினி முதலாம் பரிசு பெறுகிறார்.
27% வாக்குகள் பெற்று மணிமலர் இரண்டாம் பரிசு பெறுகிறார்.
26% வாக்குகள் பெற்று அமுதசுரபி மூன்றாம் பரிசு பெறுகிறார்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

முதல் பரிசாக $25 மாதினிக்கும்;

இரண்டாம் பரிசாக $15 மணிமலருக்கும்;

மூன்றாம் பரிசாக $10 அமுதச்சுரபிக்கும்

சர்வே கமிட்டி (ஹி ஹி நான்தான்) மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
(ஊரிலிருக்கும் கருப்புப் பணத்தை டாலராக்க விருப்பப் படுபவர்கள் தெரிவிக்கவும். இங்கே என்னிடம் டாலர் வாங்கி, ஊரில் இருக்கும் குட்டீஸுக்கு, ரூபாயை பரிசாகக் கொடுக்கலாம். சிவாஜி பாத்த எபெக்டு :) )
well, jokes aside, winners, if you have preferences on how you want to receive the prize money, let me know. cheque, online gift certificate, etc... :) )

வெற்றி பெற்றவர்கள், தங்கள் முகவரியை surveysan2005 at yahoo.com என்ற மின்னஞ்சலுக்கு உடனே அனுப்பி வைக்கவும். நன்றி.

குட்டீஸை ஊக்கப்படுத்தி பாடலை பதிவு செய்த விதத்தை தனிப் பதிவா போடுங்க. படிக்க நல்லா இருக்கும் :)



கூடிய விரைவில் இன்னும் ஒருமுறை கலக்கலாம்.

கலந்து கொண்டவர்களுக்கும், கடைசி நிமிட பிரச்சனைகளால் கலந்து கொள்ளாமல் போனவர்களுக்கும், கலந்து கொள்ளாவதர்களுக்கும், பாட்டைக் கேட்டு வாக்கியவர்களுக்கும், கேட்காமலே வாக்கியவர்களுக்கும், கோடானு கோடி நன்றிகள்.

:)

24 comments:

அபி அப்பா said...

மாதினிகுட்டிக்கு வாழ்த்துக்கள்! மற்ற குட்டீஸ்களுக்கும் வாழ்த்துக்கள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி..சர்வேசன்...எப்படி பரிசை வாங்கிக்கொள்வது என்பது இன்னும் தெரியவில்லை...முடிவானவுடன் மெயில் செய்கிறேன்.

ஜி said...

வெற்றிப் பெற்ற எல்லா குட்டீஸுக்கும் வாழ்த்துக்கள்.. :))

சிநேகிதன்.. said...

குட்டீஸ்களுக்கு வாழ்த்துக்கள்!!
குழந்தைங்க என்னமா பாடுறங்க..
"குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
மழலை சொல் கேளாதவர்"(குறள் ரைட்டா?)நிஜம்!! கேட்க கேட்க மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. குறிப்பா மணிமலரின் "லூசுப்பெண்ணே சூப்பரோ சூப்பர்"...

சர்வேஸ் அண்ணா ரொம்ப நன்றி.. இதுபோல குட்டீஸ் போட்டி அடிக்கடி நடத்துங்க..

Anonymous said...

கலக்கீட்டீங்க சர்வேசன்
குட்டீஸ்க்கு வாழ்த்துக்கள்
//சர்வேஸ் அண்ணா ரொம்ப நன்றி.. இதுபோல குட்டீஸ் போட்டி அடிக்கடி நடத்துங்க..//
ஆம் சர்வேசன் இதேபோல் இன்னும் பல போட்டிகள் நடக்கட்டும்.... இனி உங்கள் சார்பில் சினேகிதன் பரிசில் வழங்குவார்.... :))
நல்ல முயற்சி சர்வேஸ் keep on going....:))

SurveySan said...

அனைவருக்கும் நன்றீஸ்!

:)

முத்துலெட்சுமி, நிதானமா யோசிச்சு சொல்லுங்க.

offer expires on 7/3.





(just kidding, take your time :) )

ப்ரசன்னா said...

வெற்றி பெற்ற குட்டீஸ்களுக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

அபி அப்பா said...
மாதினிகுட்டிக்கு வாழ்த்துக்கள்! மற்ற குட்டீஸ்களுக்கும் வாழ்த்துக்கள்!

ரிப்பீட்டே :))

SENSHE

அரவிந்தன் said...

என் மகள் அமுதசுரபிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி!!!

குட்டீஸ் சார்பாக சர்வேசன் அவர்களுக்கு மிக்க நன்றி..

அன்புடன்
அரவிந்தன்

மங்கை said...

பரிசு பெற்ற, மாதினிக்கும் மற்ற குழந்தைகளுக்கும் பாராட்டுக்கள்

SurveySan said...

அரவிந்தன், முத்தெலெட்சுமி, மைஃப்ரெண்ட்,

பரிசு எப்படி அனுப்பணும்னு யோசிச்சு சொல்லுங்க.

SurveySan said...

யாருக்கும் பரிசு வேணாமா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

mail pannitene varalaya

அரவிந்தன் said...

சர்வேசா!!!

மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்...

கிடைத்ததா..?

அன்புடன்
அரவிந்தன்

SurveySan said...

முத்துலெட்சுமி, அரவிந்தன்,

விவரங்கள் கிட்டியது. நன்றி.

செக் அனுப்பரதுக்கு முன்னாடி, நீங்க ரெண்டு பேரும் ஒரு பதிவப் போட்டு, பாடலை ரெக்கார்ட் பண்ண கூத்த சொல்லியாகணுமே :)

SurveySan said...

My Friend, ஆளையே காணோமே?

Santhosh said...

வாழ்த்துக்கள் குட்டீஸ்...

Anonymous said...

/* அபி அப்பா said...
மாதினிகுட்டிக்கு வாழ்த்துக்கள்! மற்ற குட்டீஸ்களுக்கும் வாழ்த்துக்கள்!

ரிப்பீட்டே :))

SENSHE */

இதுல கூடவா ரிப்பீட்டு வாழ்த்தையாவது சொந்தமா சொல்லுங்க :((

அரவிந்தன் said...

நன்றி சர்வேசன்,,,

பரிசு பணம் இன்று கிடைக்கப்பெற்றேன்...


மிக்க நன்றி.
அன்புடன்
அரவிந்தன்

அரவிந்தன் said...

நன்றி சர்வேசன்,,,

பரிசு பணம் இன்று கிடைக்கப்பெற்றேன்...


மிக்க நன்றி.
அன்புடன்
அரவிந்தன்

SurveySan said...

அரவிந்தன், பரிசுப் பணம் கிடைத்ததைத் தெரியப் படுத்தியமைக்கு நன்றி :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

டிடி வந்து சேர்ந்தது சர்வேசன் நன்றி.

Anonymous said...

For all kids, my best wishes.

SurveySan said...

Thanks for letting me know.

MyFriend - too late for claiming the prize money. sorry :)
just kidding... send me the details and i will have the DD dispatched. thanks :)