recent posts...

Thursday, July 19, 2007

தமிழனின் தேசத் துரோகமும், 1,00,000 நயாப் பைசாக்களும்!

என்னங்க இது 1,00,000 நயா பைசா பரிசா தரேன்னு சொல்லிருக்கேன். அப்படியும், யாரையும் காணோமே!

60 வருஷமாச்சு சொதந்திரம் கெடச்சு.
நம்ம தேசிய கீதத்தை படிச்சுக் கத்துக்கிட்டு பாடி அனுப்பங்கன்னு சொன்னா யாரும் வர மாட்றீங்களே?

60 பேர் வேணும். 7 பேர்தான் சேந்துருக்காங்க கோதால.
கீழே, 'Appavi family kid' பாடரத கேளுங்க, தானா மூட் வந்துடும் உங்களுக்கும்.

உடனே பெயரைப் பதியுங்கள்.உங்கள் நண்பர்களுக்கும் தெரியப் படுத்துங்கள்!
குரலை மெருகேற்றுங்கள்!
ஜன கன மன பாடி அனுப்புங்கள்!

தேச பக்தியைக் காட்டுங்கள் (in other words, தேசத் துரோகியா இருக்காதீங்க, :) )

1) 'Appavi' family Kid
2) Surveysan
3) Sumangal, Singapore
4) அமுதசுரபி
5) செந்தழல் ரவி
6) சேதுக்கரசி
7) மோகன்தாஸ்
..
60) ????

பி.கு: Photography-in-tamil நடத்தும் ஜூலை மாதப் புகைப்படப் போட்டிக்கு வந்துள்ள படங்களின் அணிவகுப்பைப் பாருங்கள்!

நம்ம இயற்கை படங்கள் (போட்டீல கலந்துக்க முடியாமப் பண்ணிட்டாங்க்ய...), அதனால இங்கயே நம்ம படம் காட்டரேன்.:)




6 comments:

Anonymous said...

SENTHAZAL RAVI ANDHA KORIYA KUTTIYA JANA GANA MANA PADA VACHU ANUPPINAA SUPERAA IRUKKUM

SurveySan said...

அனானி,

ஐடியா ப்ரமாதம்.

ரவி கவனிப்பாரா?

பூனைக்குட்டி said...

இரண்டு விஷயம். ஒன்னு நான் என்னோட தேச பக்திய காசே கொடுத்தாலும் விக்கிறதா இல்லை, அப்படியேயிருந்தாலும் 1000 ரூபாய்களுக்காக இல்லை.(டாலர்களில் இருந்தால் டிரை பண்ணலாம்...)

அதுவும் இல்லாமல் தேசியம் என்பதே கட்டமைக்கப்பட்டது அதை கட்டுடைக்காமல் போகமாட்டேன்னு பாயைப் பிறண்டுறவங்க கிட்ட தேசிய கீதம் பாடுன்னு சொன்னா எப்படி.

வேணும்னா தமிழ்வாழ்த்து பாடுன்னு சொல்லலாம் ஒரு மாதிரி நல்லாயிருக்கும் வேண்டுமானால் எடுபடும்.

அதுவுமில்லாமல் உக்காந்துக்கிட்டெல்லாம் தேசியகீதம் பாடக்கூடாது. நின்னிக்கிட்டு கீழே லாப்டாப்பை வைச்சிக்கிட்டும் பாடமுடியாது சரி மைக் வயர் வரமாட்டேங்குது :(, கையில் எடுத்துக்கிட்டு பாடலாம்னா அதுவும் தப்பு தேசிய கீதம் பாடுறப்ப.

இருந்தாலும் டிரைப் பண்ணி அனுப்புறேன். வர்ட்டா

SurveySan said...

Mohandas,

நீங்க நின்னு கிட்டு பாடுவீங்களோ, ஒக்காந்துகிட்டு பாடுவீங்களோ, எனக்கு பாட்டு வேணும் :)

வந்தே மாதரம், சாரே ஜஹான்ஸே அச்சா, தமிழ் வாழ்த்து, தாயின் மணிக்கொடி பாரீர், நீராரும் கடலுடுத்த இதெல்லாம் கூட பாடி அனுப்பலாம், ஆனா அதுக்கு தனி சர்வே :)

Anonymous said...

Geetha, Malaysia.

Unknown said...

தேசிய கீதத்த தமிழ்ல எழுதச்சொல்லு.. அப்போ தான் பாடுவோம். ரொம்ப படுத்துனா மஞ்சகொடி அய்யாகிட்ட சொல்லி சர்வேசன் ஏரியா மரத்தையெல்லாம் வெட்ட சொல்லுவோம், ஓக்கே வா??