recent posts...

Wednesday, October 15, 2008

அனானிகளும் முகமூடிகளும் ஜாக்கிரதை!

கொஞ்ச நாளா ஆர்க்குட்டில் தீவிரமாக இயங்கி வருகிறேன். அங்கு சந்தித்த பள்ளி கால நண்பர்களைப் பத்தி ஏற்கனவே சொல்லியிருக்கேன்.
ரொம்ப ஜாலியா போயிக்கிட்டு இருக்கு, ஆர்குட் வாழ்க்கை.
இங்க செலவு செய்ர நேரத்தை அங்க செலவு செஞ்சா, மனசு லேசாகுது.

ஆனா, இங்க அறிவு வளருது, வரலாறு புரியுது, அரசியல் வெளங்குது (அது சரி:) )

ஆர்குட்ல சொந்தப் பேர்ல கணக்கு வச்சு கும்மியடிப்பதால், அப்பப்ப, ப்ரவுஸர்ல, அந்த கூகிள் கணக்கே, லாகின் ஆகியிருக்கும். தமிழ் பதிவுகள்ள, பின்னூட்டம் போடும் போது, இத கவனிக்க சில சமயம் மறந்து, சொந்தப் பேர்லயே பின்னூட்டும் அபாயம் இருக்கு. ( சில முறை பின்னூட்டவும் ஊட்டியாச்சு ).

இந்த, விபத்தை தவிர்த்து, தமிழில் அனானி/முகமூடியாகவும், ஆர்குட் மாதிரி தளங்களில், சொந்தப் பெயரிலும் இயங்கணும்னா, 'submit' அடிக்கரதுக்கு முன்னாடி, கண்ணுல வெளக்கெண்ண விட்டு, எந்தப் பேர்ல போடரோம்னு நிதானிச்சு கவனிக்கணும்.

ஆனா, ஐஸாக் நியூட்டனை, விஞ்சும், கருத்தெல்லாம், பின்னூட்டத்தில் தட்டச்சிவிட்டு, அதை உலக மக்களுக்கு ஒரு நற்செய்தியா சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, இந்த நிதானம் எல்லாம் இருக்காது.

ஸோ, முகமூடி கிழிய, 80% சான்ஸ் இருக்கு.

இதிலிருந்து, முழுசா தப்பிக்கணும்னா, சிம்பிளான ஒரே வழி, ஒவ்வொரு விஷயத்துக்கும், ஒவ்வொரு ப்ரவுஸரை உபயோகிப்பதுதான்.

ஆர்குட்டுக்கு, நெருப்பு நரியும்,
தமிழ்மணத்துக்கு, I.Eயும் வெச்சுக்கிட்டா, இந்த ப்ராப்ளம் வராமல் தப்பிக்கலாம்.

இன்னும் ஒரே ஒரு வழி, பின்னூட்டத்தில், உங்க பெயரை தட்டச்சாமல், பொத்தாம் பொதுவா அடிக்கும் முறை. ஆனா, நம்ம அடிக்கர பாஷைலயே, மோப்பம் புடிச்சுடுவாங்க, கெரகம் புடிச்சவங்க ;)

சாக்கிரதையா இருங்க, ஃபெலோ அனானீஸ் & முகமூடீஸ் & மை டியர் ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ், என்ற அறிவுரையுடன், உங்களிடமிருந்து, விடை பெறுவது,

உங்கள் நண்பன்,

சர்வேசன்!

பி.கு: சென்னை மாநகராட்சி, ஆன்லைன்ல, பிறப்பு இறப்பு சர்டிபிகேட் தராங்களாம். ஆனா, யார் வேணா, யார் பிறப்பு/இறப்பு சர்ட்டிபிகேட்ட வேணா, ஈசியா வாங்கிடலாம் போலருக்கு.
Ganesanனு அடிச்சு, searchனா, ஊர்ல இருக்கர மொத்த கணேசனும் வராங்க்ய. இது நல்லதா கெட்டதா? பிறப்பு தேதி, இறப்பு தேதிய, கட்டாயமா வாங்கணும், அந்த பக்கத்துல, இல்லன்னா, கண்ட கண்ட ப்ரச்சனையெல்லாம் வரும் வாய்ப்பிருக்கு. உஷாரு! மாநகராட்சியில் ஆணி பிடிங்கும் யாராவது இதை கவனிப்பார்களா?

12 comments:

உண்மைத்தமிழன் said...

இது எதுக்கு, 'முன் ஜாக்கிரதை முத்தண்ணா'ன்னு பேர் வாங்கவா..?

இந்த சர்வேசன் யாருன்னு கண்டுபிடிச்சுக் கொடுத்தா, உங்களோட அடுத்த 50 பதிவுலேயும் 50 கமெண்ட்டுகளை நான் ப்ரீயா போடுறேன்..

சொல்லுவீங்களா சாமி..?

SurveySan said...

உண்மைத் தமிழன்,

வாங்க வாங்க..


////இந்த சர்வேசன் யாருன்னு கண்டுபிடிச்சுக் கொடுத்தா, உங்களோட அடுத்த 50 பதிவுலேயும் 50 கமெண்ட்டுகளை நான் ப்ரீயா போடுறேன்..
///

50 பதிவுக்கு, 50 கமெண்ட்டா? நல்லாருக்கே டீலு.
நானே யாருன்னு சொல்லீட்டா, எனக்கும் அந்த டீலு உண்டா? ;)

SurveySan said...

உ.த?

Sridhar V said...

//உங்கள் நண்பன்,

சர்வேசன்!
//

ஓ! நீங்கதான் 'உங்கள் நண்பனா'... ஆஹா! இப்பதானே தெரியுது. :-)

SurveySan said...

Sridhar Narayanan,

முழுப்பேர்ல தெகிரியமா ( விட்டா, SSN, DOB எல்லாம் பதிவுல போட்டுடுவீங்க போலருக்கு?) எழுதர உங்களுக்கெல்லாம் முகமூடிகளின் புழுக்கம் புரியாது.

'உங்கள் நண்பன்' (யாரது?)

சர்வேசன்
;)

வெட்டிப்பயல் said...

//உங்கள் நண்பன்' (யாரது?)

சர்வேசன்
;)

//

???

SurveySan said...

வெட்டி,

//???///

?????


Sridhar Narayanan said...
//உங்கள் நண்பன்,

சர்வேசன்!
//

ஓ! நீங்கதான் 'உங்கள் நண்பனா'... ஆஹா! இப்பதானே தெரியுது. :-)

SurveySan said...

எல்லோரும் இன்னொருதரம் படிச்சு பயன் பெறுமாறு கேட்டுக்கறேன் ;)

Sanjai Gandhi said...

//ஆர்குட்டுக்கு, நெருப்பு நரியும்,
தமிழ்மணத்துக்கு, I.Eயும் வெச்சுக்கிட்டா, இந்த ப்ராப்ளம் வராமல் தப்பிக்கலாம்.
//
ஹய்யோ.. ஹய்யோ.. சர்வ்ஸ்.. அப்டியே உல்டா பண்ணிக்கோங்க.. நான் பர்சனல் மெயில் & ஆட்குட் & பேங்க் அக்கவுண்டுக்கு மொதல்ல IE இப்போ க்ரோம்( IE மூட்டை கட்டியாச்சி) ப்ளாக் படிக்க நெருப்புநரி.. தமிழுக்கு அது தான் ரொம்ப வசதியா இருக்கு... :)

SurveySan said...

பொடியன்,

///ப்ளாக் படிக்க நெருப்புநரி.. தமிழுக்கு அது தான் ரொம்ப வசதியா இருக்கு... :)//

ப்ளாக் படிக்க நரியா? நல்லாவே இல்லியேங்க. IEலதான் தமிழ் அழகா தெரியுது. நரில மங்கலா இருக்கு.

கா.கி said...

//ப்ளாக் படிக்க நரியா? நல்லாவே இல்லியேங்க. IEலதான் தமிழ் அழகா தெரியுது. நரில மங்கலா இருக்கு.//

நீங்க நரியோட மூணாவது version download பண்ணலியா ??

http://www.mozilla.com/products/download.html?product=firefox-3.0.3&os=win&lang=en-US

Indian said...

//உங்கள் நண்பன்' (யாரது?)//

முகமூடி?