recent posts...

Tuesday, December 25, 2007

சிறந்த 'நச்' கதை - வாக்கெடுப்பு ஆரம்பம் - Group A

57 'நச்'கதைகளை மூன்று கூராக பிரித்து, கூருக்கு 19 கதைகள் வீதமாக, முதல் கட்ட வாக்கெடுப்பு, இனிதே ஆரம்பம்.

மூன்று கூருகளிலிருந்து, அதிக வாக்குகள் பெறும் இரண்டு கதைகளை எடுத்து, Finals வாக்கெடுப்பு, 6 கதைகளுடன் நடத்தப்படும்.

Finalsல் வெற்றி பெறும் கதைக்கு, $25 பரிசு வழங்கப்படும்.

அதல்லாமல், $75, வெற்றி பெறும் பதிவர் பெயரில், உதவும் கரங்களுக்கு அனுப்பப்படும். உதவும் கரங்களிடமிருந்து, பதிவருக்கு, ஒரு 'வாழ்த்துக்கள் + நன்றி' மடலும் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும்.

முதல் 19 கதைகள் இவைதாம்:
1) வினையூக்கி - கதை இங்கே
2) இராம்/Raam - கதை இங்கே
3) வாக்காளன் - கதை இங்கே
4) TBCD - கதை இங்கே
5) நிலா ரசிகன் - கதை இங்கே
6) மோகந்தாஸ் - கதை இங்கே
7) கார்த்திக் பிரபு - கதை இங்கே
8) கோவி கண்ணன் - கதை இங்கே
9) வீ.எம் - கதை இங்கே
10) பாசமலர் - கதை இங்கே
11) செல்வன் - கதை இங்கே
12) ஜெகதீசன் - கதை இங்கே
13) ramachandranusha(உஷா) - கதை இங்கே
14) இ.கா.வள்ளி - கதை இங்கே
15) கிருஷ்ணா - கதை இங்கே
16) பிரதாப் குமார் சி - கதை இங்கே
17) பெனாத்தல் சுரேஷ் - கதை இங்கே
18) நக்கீரன் - கதை இங்கே
19) ஹரன்பிரசன்னா - கதை இங்கே

தயவு செய்து, முதல் கூரில் உள்ள, அனைத்து கதைகளையும் படித்துவிட்டு, எந்த கதை உங்கள் கருத்தில், சிறந்த 'நச்' கதை என்று ஆராய்ந்து வாக்களிக்கவும்.

இம்முறை, வாக்கெடுப்பில் ஒரு புதிய யுக்தி சேர்க்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கும்போது, உங்கள் ஈமெயில் முகவரியை வாக்குப் பெட்டியில் கொடுக்கவேண்டும்.

வாக்களித்ததும், உங்கள் ஈ.மெயில் பொட்டியில், survey@newsndeals.com என்ற முகவரியிலிருந்து ஒரு ஈமெயில் வரும். (junk/spam foldersல் மறவாமல் பார்க்கவும். 1 நிமிடத்திலிருந்து, 1 மணி நேரம்வரை ஈ.மெயில் வர நேரம் எடுக்கலாம்).
அந்த மடலை வாசித்து, அதில் உள்ள, 'APPROVE' லிங்க்கை நீங்கள் குத்த வேண்டும். குத்தினால்தான், உங்கள் வாக்கு கணக்கில் சேர்க்கப்படும்.

APPROVE செய்து முடிக்கும் வரை, உங்கள் வாக்கு "Total unapproved votes:" என்று தனியே காட்டப்படுகிறது.
ஈ.மெயில் படித்து APPROVE செய்ய மறக்காதீர்கள்.


உங்கள் ஈ.மெயில் முகவரி, உங்கள் வாக்கை ஊர்ஜீதம் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படும்.
எந்த ஈ.மெயிலில் இருந்து எந்த வாக்கு வந்தது என்பதெல்லாம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

****வாக்கெடுப்பு முடிவடைந்தது! ****

தவறுகளிருந்தால் சுட்டிக்காட்டவும்.
கேள்விகள் இருந்தால் கேட்க்கவும்.
கதைகள் பிடித்திருந்தால், அந்தந்த பதிவருக்கு பின்னூட்டமிட்டு ஊக்கப் படுத்தவும்.

கதை எழுதியவர்கள், தங்கள் கதைக்கு வாக்களிக்குமாறு விளம்பரம் செய்வதை, இன்று முதல் தவிர்க்கவும். இது ரூல் இல்லை. என் அபிப்ராயம் மட்டுமே. எல்லாரும் எல்லா கதையும் படித்து வாக்களிக்க வேண்டி, இந்த வேண்டுகோள். வாக்கெடுப்புக்கு 'பொதுவான' விளம்பரம் தரலாம். ;)

அடுத்த 'கூரி'ன் வாக்கெடுப்பு கூடிய விரைவில்.

அனைவருக்கும் நன்றி!

0-------0 0---------0 0----------0
கேள்வி1: எனக்கு பிடித்த நான்கு கதைகளுக்கு வாக்களிக்க நான்கு ஈமெயில் ஐடி(யா?:)) வேண்டுமா ? ஒரே ஈமெயில் ஐடி பயன்படுத்தி வாக்களிக்க முடியுமா ?
பதில்1: :) ஒருவருக்கு ஒரு வாக்குதான்.
'சிறந்த' ஒரு கதை கண்டுபிடிக்கத்தான் போட்டி. 2,3, 4 பரிசெல்லாம் கிடையாதே ;)

கேள்வி2: வாக்களிப்பதற்கு ஏதெனும் காலக் கெடு உண்டா ?
பதில்2: டிசம்பர் 31 finals வாக்கெடுப்பு நடத்த முடிவு. அதற்குள் மூன்று கூரின் வாக்கெடுப்புகளும் முடிக்கப்படும்.

கேள்வி3: சாதாரண வாக்கெடுப்புன்னா செய்யத் தோன்றும்...நீங்க 2-3 டாஸ்க் எல்லாம் அதுவும் 3 + 1 நாலு முறை செய்யச் சொல்லுறீங்க...வேலை களுதயில்லெ... இப்படியெல்லாம் பண்ண வேண்டுமென்ற அவசியம் என்ன?
பதில்3: யோசிக்க வச்சுட்டீங்க. 57 கதைகள் இருக்கரதால, ஒரே கட்டம் கட்டினா எல்லாரும் எல்லாக் கதையும் படிச்சுட்டு போட மாட்டாங்கன்னு ஒரு தோணல். அதனால, இந்த கூரு போடல். கொஞ்சம் சிரமம்தான், ஆனாலும், கொஞ்சம் முயற்சி பண்ணி வாக்களியுங்கள். சிறந்த 'நச்' வெல்லட்டும். புரிந்துணர்வுடன் கூடிய உங்கள் பேராதரவுக்கு நன்றி! :)

கேள்வி4: Group Aல் வாக்களித்த ஈ.மெயில் முகவரி கொண்டு, Group B, Group Cல் வாக்களிக்க முடியுமா?
பதில்4: முடியும். கூர் கூராக பிரித்ததே அதுக்குத்தானே :)

கேள்வி5: என் ஈ.மெயில் ஐடி.யை உபயோகித்து வேற யாராவது ஓட்டு போட்டா என்ன பண்றது?
பதில்5: ஆஹா. அற்புதமான கேள்வி. உங்களுக்கு எப்படியும் ஈ.மெயில் வரும். ஈ.மெயில் படிச்சு, உங்களுக்கு பிடிக்காத வாக்கு போட்டிருந்தா, REJECT செய்யலாம். Reject செய்தபின், உங்கள் ஐடி உபயோகித்து, உங்களுக்கு பிடிச்ச மாதிரி வாக்கு போட்டுக்கலாம்.

பி.கு. வலது பக்க 'Quick Survey'ல் ஒரு வாக்கப் போட்டுடுங்க. உங்க கருத்ஸ் ரொம்ப முக்கியம் ;)
0-------0 0---------0 0----------0

பி.கு: வலது மூலையில் இருக்கும் MSV படத்தை க்ளிக்கி, பெட்டிஷனில் கையெழுத்து போடவும். நன்றி!

45 comments:

Anonymous said...

*இம்முறை, வாக்கெடுப்பில் ஒரு புதிய யுக்தி சேர்க்கப்பட்டுள்ளது*

nice try. so, one vote per email address? :D

கோவி.கண்ணன் said...

ஹலோ சர்வேசன்,

எனக்கு பிடித்த நான்கு கதைகளுக்கு வாக்களிக்க நான்கு ஈமெயில் ஐடி(யா?:)) வேண்டுமா ? ஒரே ஈமெயில் ஐடி பயன்படுத்தி வாக்களிக்க முடியுமா ?

SurveySan said...

கோவி,

//எனக்கு பிடித்த நான்கு கதைகளுக்கு வாக்களிக்க நான்கு ஈமெயில் ஐடி(யா?:)) வேண்டுமா ? ஒரே ஈமெயில் ஐடி பயன்படுத்தி வாக்களிக்க முடியுமா //

:) ஒருவருக்கு ஒரு வாக்குதான்.
'சிறந்த' ஒரு கதை கண்டுபிடிக்கத்தான் போட்டி. 2,3,4 பரிசெல்லாம் கெடையாதே ;)

இந்த கூரில், சிறந்த கதைய குத்துங்க. :)

SurveySan said...

//nice try. so, one vote per email address? :D//

ரூம் போட்டு யோசிப்பீங்களோ?

:) ஒரு 'மனுஷனுக்கு' ஒரு வாக்குதான் வோய் ;)

cheena (சீனா) said...

வாக்களிப்பதற்கு ஏதெனும் காலக் கெடு உண்டா ?

SurveySan said...

சீனா,

//வாக்களிப்பதற்கு ஏதெனும் காலக் கெடு உண்டா ?//

டிசம்பர் 31 finals வாக்க்கெடுப்பு நடத்த முடிவு. அதுக்குள்ல மூன்று கூருகளின் வாக்கெடுப்பும் முடிக்கப்படும்.

SurveySan said...

இவ்வகை ஈ.மெயில் வாக்கெடுப்பு நல்லா இருக்கா இல்ல நம்ம 'சாதா' கும்மாங்குத்து வாக்கு சிறந்ததா?

என்னோட தனிப்பட்ட கருத்து - போட்டி, பரிசுன்னு வர சர்வேக்களுக்கு ஈ.மெயில் உதவியுடன் கூடிய வாக்கெடுப்பும்; 'சாதா' கருத்துக் கணிப்புகளுக்கு 'சாதா' வாக்கெடுப்பும் சிறந்தது :)

உங்க கருத்த சொல்லுங்கோ ;)

கோவி.கண்ணன் said...

//:) ஒருவருக்கு ஒரு வாக்குதான்.
'சிறந்த' ஒரு கதை கண்டுபிடிக்கத்தான் போட்டி. 2,3,4 பரிசெல்லாம் கெடையாதே //

சர்வேசன்,

அப்போ என் கதைக்கு நானே வாக்களிக்க முடியாது.
:(

SurveySan said...

கோவி,

//அப்போ என் கதைக்கு நானே வாக்களிக்க முடியாது.//

why not? இந்த கூருல, உங்க கதைதான் சிறந்ததுன்னு, உங்களுக்கு தோணினா, குத்த வேண்டியதுதானே?

தமக்கு-தாமே நெஜ தேர்தல்லயே உண்டே :). அப்பரம் என்ன?

SurveySan said...

anony, use this to send your findings.

http://newsndeals.com/contactus.html

SurveySan said...

Group B நாளை.

Anonymous said...

இப்படி மெயில் அட்ரெஸ் எல்லாம் வச்சு நீங்க ஏதும் பிராடு பண்ண மாட்டீங்களே? :)

Anonymous said...

ரொம்ப வேலை குடுக்கறீங்க சர்வேசன். இப்படியெல்லாம் பண்ண வேண்டுமென்ற அவசியம் என்ன?, சாதாரண வாக்கெடுப்புன்னா செய்யத் தோன்றும்...நீங்க 2-3 டாஸ்க் எல்லாம் அதுவும் 3 + 1 நாலு முறை செய்யச் சொல்லுறீங்க...வேலை களுதயில்லெ...

SurveySan said...

//ஏதும் பிராடு பண்ண மாட்டீங்களே? :)//

:) நம்பிக்கைதான் வாழ்க்கை. உங்களுக்காகத்தான் இதப் பதிவுல சொல்லியிருக்கேன்.

இதப் படிங்க
---உங்கள் ஈ.மெயில் முகவரி, உங்கள் வாக்கை ஊர்ஜீதம் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படும்.
எந்த ஈ.மெயிலில் இருந்து எந்த வாக்கு வந்தது என்பதெல்லாம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.---

SurveySan said...

அனானி,

//அதுவும் 3 + 1 நாலு முறை செய்யச் சொல்லுறீங்க...வேலை களுதயில்லெ...//

உங்க கஷ்டம் புரியுது.
57 கதைகள் இருக்கரதால, ஒரே கட்டம் கட்டினா எல்லாரும் எல்லாக் கதையும் படிச்சுட்டு போட மாட்டாங்கன்னு ஒரு தோணல்ல, இந்த '3 கூரு' முடிவு :)

நாலு தடவ வாக்கு போடரது கஷ்டம்தான். நீங்க வேணா, மூணு கூரிலும் வாக்கு போட்டு, கடைசியா ஈமெயிலுக்கு போய், ஒரேடியா அப்ரூவ் பண்ணலாம்.

'சாதா' வாக்கெடுப்பு நடத்திருக்கலாம் - பரிசெல்லாம் இருக்கரதால, கொஞ்சம் sophisticatedஆ வாக்கெடுப்பு நடத்தலாம்னு இப்படி ;)

புரிந்துணர்வுடன் கூடிய உங்கள் ஆதரவுக்கு நன்னி! :)

Anonymous said...

சூப்பர் ஐடியாதானுங்கோ! பரிசுமுறைக்கு உட்படக்கூடிய போட்டிகளுக்கு, இது மாதிரியான முறை, தேவையான ஒன்றுதான். கள்ள ஓட்டுக்களைத் தவிர்க்க முடியாவிட்டாலும், குறைந்த பட்ச கள்ள ஓட்டுக்களாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இலவசக்கொத்தனார் said...

எனக்கு இந்த மெயிலே இன்னும் வரலையே!! :(

SurveySan said...

கொத்ஸ்,

//எனக்கு இந்த மெயிலே இன்னும் வரலையே!! :( //

அப்படியா? இன்னொருமுறை போட்டு பாருங்க, முதல் முறை சரியா க்ளிக்கலியோ என்னமோ?
டூப்ளிகேட் விடாது. முதல் முறை சரியா போட்டிருந்தா, திட்டும். திட்டிச்சின்னா, மீண்டும் ஒருமுறை ஈ.மெயில் பார்க்கவும் :)

hotmail ஐடி.யா இருந்தா, JUnkல் பார்க்கவும்.
அதைத் தவிர, ஈ.மெயில் திறந்தவுடன், ShoW Content/Open Message க்ளிக்கணும். html ஈ.மெயில் ஆதலால், இந்த எக்ஸ்ட்ரா க்ளிக்ஸ் :)

SurveySan said...

அனானி,

//சூப்பர் ஐடியாதானுங்கோ! பரிசுமுறைக்கு உட்படக்கூடிய போட்டிகளுக்கு, இது மாதிரியான முறை, தேவையான ஒன்றுதான். கள்ள ஓட்டுக்களைத் தவிர்க்க முடியாவிட்டாலும், குறைந்த பட்ச கள்ள ஓட்டுக்களாக்கும் என்பதில் சந்தேகமில்லை//

நன்றி. அப்படியே நான் நெனச்சத சொல்லிட்டீங்க. எங்கேயோ கேட்ட குரலா இருக்கே :)

SurveySan said...

மீ, த எஸ்கேப். தூக்கம் வருது.

படித்து, வாக்களியுங்கள்.

கொத்ஸ், வேல செஞ்சுதா? Junk/Spam பாத்தீயளா?

tommoy said...

will this work out?
if someone wanted to get thier story selected, they can simply have 10 of their friends to logon and put one vote each, without reading the stories. i feel, this selection process will go by popularity and not by the actual story based results

Unknown said...

வாக்களித்து விட்டேன்!!!

வீ. எம் said...

2/19 அடுத்த சுற்றுக்கு போகுமா?? ரொம்ப கம்மியா இருக்கே..
3/19 இருந்த நல்லா இருக்கும் :)
பைனல்ஸ் ல 9 கதைகள் இருக்கலாமே... வழி வகை செய்வீர்களா சர்வேசன் சார்.. ? :)

பினாத்தல் சுரேஷ் said...

அய்யா சாமி! என் ஓட்டே எனக்கு விழ மாட்டேங்குதே..என்ன கொடுமை சர்வேசன் இது?

ரசிகன் said...

//கள்ள ஓட்டுக்களைத் தவிர்க்க முடியாவிட்டாலும், குறைந்த பட்ச கள்ள ஓட்டுக்களாக்கும் என்பதில் சந்தேகமில்லை.//

ஒங்களுக்கெல்லாம் அந்நியன் மாதிரி தப்புல என்ன சின்ன தப்பு ,பெரிய தப்புன்னு கேள்வி கேட்டாத்தேன் சரிப்படும்..

ரசிகன் said...

புதுமையாத்தான் இருக்கு..சர்வேஸன் புண்ணியத்துல நெறய பேறோட திறமை/ஆர்வம் தூண்டப்பட்டிருக்கு.. ஆனா ஒரு சந்தேகம்..ஏனுங்க சர்வேசன்.. அப்போ ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஜடி வைச்சிருக்கறவிங்க..அவிங்களுக்கு சாதகமான கதைக்கு ஒன்றுக்கு மேற்ப்பட்ட வாக்கு அளிக்க முடியுமா?..ஜடி கிரியேட் பண்ணறது அம்புட்டு கஷ்டமில்லையே..

ஆனா இது பிளாக் ஜடி வைச்சு வாக்கு அளிச்சா.. பிளாகர் மட்டும் தான் வாக்களிக்க முடியும்..ஆனா அடையாளம் தெரியும்.அனானி வராதில்ல...

எனக்கென்னவோ.. எல்லா பதிவுகளையும் ரசிச்சு வெளிப்படையா கருத்து சொல்லற சீனா சார் போன்றவர்களின்
மதிப்பீடுகளையும் மார்க்குக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதமா சேத்துக்கிட்டா பொருத்தமாயிருக்குமின்னு தோனுது.. இந்த கதைகளுல பெரும்பாலும் எல்லா கதைகளையும் ஆர்வமா படிச்சு பின்னூட்டம் போட்டிருக்காரே...

என்னோட கருத்து மட்டும் தான் .. ஆனா நீங்க நடத்துற ஆரோக்கியமான இந்த மாதிரியான போட்டிகளுக்காக உங்களுக்கு என்னோட ஓட்டு உண்டுங்க்கோ... வாழ்த்துக்கள். சர்வேஸன்..

SurveySan said...

murali,

//will this work out?
If someone wanted to get thier story selected, they can simply have 10 of their friends to logon and put one vote each, without reading the stories. i feel, this selection process will go by popularity and not by the actual story based results
//

:) I can only ask folks not to advertise. I can't stop them :)

I am sure there will be some 'popularity' influence, but I am hoping for a healthy contest.

SurveySan said...

அருட்பெருங்கோ, நன்றி! :)

வீ.எம், 6 நம்ம ராசி நெம்பருங்க. டாப்-6னு சொல்ன்னாத்தான் நல்லா இருக்கும். :)

பெனாத்ஸ்,
//அய்யா சாமி! என் ஓட்டே எனக்கு விழ மாட்டேங்குதே..என்ன கொடுமை சர்வேசன் இது?//

என்ன கொடுமைங்க இது? ஈ.மெயில் வரலியா? Junk/Spam எல்லாம் பாத்தீங்களா?

SurveySan said...

ரசிகன், கருத்துக்கு மிக்க நன்றி.

//எனக்கென்னவோ.. எல்லா பதிவுகளையும் ரசிச்சு வெளிப்படையா கருத்து சொல்லற சீனா சார் போன்றவர்களின்
மதிப்பீடுகளையும் மார்க்குக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதமா சேத்துக்கிட்டா பொருத்தமாயிருக்குமின்னு தோனுது.. //

நல்லாத்தான் இருக்கு ஐடியா. ஆனா, நடுவர் வச்சு போட்டி நடத்தினாலும், அது வேற மாதிரி ப்ரச்சனைய கெளப்பும்.
வாக்காளர்களை நம்புவோமாக. மிஸ்-யூஸ் பண்ணாம, healthyயான competitionஆ மாறும் என்று நம்புவோமாக ;)

SurveySan said...

கொத்ஸ், பெனாத்ஸ்,

வாக்கு போட முடிஞ்சுதா? வெவரத்த சொல்லுங்க.
ஈ.மடலே வரலன்னா, என்னால ஒண்ணும் பண்ண முடியாது. மறு வாக்கு போட்டா என்ன சொல்லுதுன்னு சொல்லுங்க :)

இராம்/Raam said...

//வாக்கு போட முடிஞ்சுதா? வெவரத்த சொல்லுங்க.
ஈ.மடலே வரலன்னா, என்னால ஒண்ணும் பண்ண முடியாது. மறு வாக்கு போட்டா என்ன சொல்லுதுன்னு சொல்லுங்க :)//

என்னம்மோ இங்கிலிபிசு'லே திட்டுது.... நம்ம கதைக்கு நாமே ஓட்டு போடாமே வேற யாரு ஓட்டு போடுவா???? :(

ஏதாவது பண்ணுங்க சர்வேசா....

SurveySan said...

இராம்,

என்ன சொல்லி திட்டுது?

SurveySan said...

40 votes so far.

10 unapproved.

Ram, please check your email to make sure you approve it :)

Guys, make sure you use your yahoo or hotmail or gmail only.
If you use your corporate email id, i am sure, it will be blocked by your spam filter.

இலவசக்கொத்தனார் said...

சர்வே, நான் ஓட்டு போட்டாச்சு. இப்போ முணு கதைகள் ஆறு வாக்குகள் வாங்கி இருக்கு. டைபிரேக்கர் ரூல்ஸ் என்னான்னு சொல்லவே இல்லையே....

SurveySan said...

Tie breaker rules finalsக்குதான்.

மூன்று கூரில், அதிகப்படியான வாக்குகள் பெறும் முதல் இரண்டு கதைகள் finalsக்கு கொண்டு போகப்படும்.
ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் ஒரே வாக்குகள் பெற்றிருந்தால், அந்த கதைகள் எல்லாமே finalsக்கு கொண்டு போகப் படும்.

finalsக்கு tie-breaker ரூல் என்னா வைக்கலாம்னு, ரூம் போட்டு யோசிச்சு சொல்றேன் ;)

பினாத்தல் சுரேஷ் said...

I cant cast the vote still Surveysan..

I could not try again also, It says already submitted.. maybe in the waiting for approval case.

No spams / Junks :-(

forget it.. I may not make top 2, so what?

SurveySan said...

பினாத்தல் சுரேஷ்,

////I cant cast the vote still Surveysan..
I could not try again also, It says already submitted.. maybe in the waiting for approval case.

No spams / Junks :-(

forget it.. I may not make top 2, so what?
////

அவ்வ். ஏழு ஓட்டு விழுந்திருக்கே இதுவரை?
"already submitted"னு வந்தா, கண்டிப்பா ஏற்கனவே வாக்களிச்சாச்சுன்னுதானுங்க அர்த்தம்.

"Total unapproved votes: 16" இருக்கு. spam/junkல இல்லன்னா கஷ்டம்தேன்.

என்ன ஐ.டி உபயோகிச்சீங்க? ஆபீஸ் ஐ.டின்னா, அவங்க Spam filterல மாட்டியிருக்கும். spam messages படிக்கும் வழிமுறை ஒவ்வொரு ஆபீஸ்ல ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
hotmail, yahoo, gmail ன்னா எந்த ஐ.டி.ன்னு அனுப்புங்க. தேர்தல் அதிகாரிகிட்ட ஏதாவது ப்ரச்சனையான்னு கேட்டுப் பாக்கறேன். :(

புரிந்துணர்வுடன் கூடிய உங்க பேராதரவுக்கு நன்னி :(

Anandha Loganathan said...

சர்வேசரே,

எனக்கு ஒரு சந்தேகம். இந்த கூரு பிரிப்பதில் மற்றும் வோட்டு போடுவதில்
1) How 'நச்'stores are grouped ? Is it randomly selected and grouped?
2) In that scenario there may be possibility of good 'நச்' stories may not get selected.

Say for an example in cricket Group 'A' contains India, Pakistan,Australia and Group 'B' contains Kenya, Bangaladesh and Ireland. So one team from each team get selected to another round but It doesnt mean that teams in B are superior than team 'A'.

அதே போல ஒரு கூரில் பல சிறந்த கதைகளும் மற்ற கூரில் சுமாரான கதைகளும் இருந்தால் ?? !!

3)இதுவரை போட்டிகளில் பங்கேற்றவர்களின் பங்களிப்பை விட முடிவுகளில் உங்கள் பங்களிப்பு தான் மிக அதிகமாக இருக்க வேண்டும். என்னினில் இந்த மாதிரி வாக்களிப்பில் சிலருக்கு ஒரு வோட்டும் விழ வில்லையெனில் மறுமுறை எதாவது போட்டி வைத்தால் போட்டியாளர்கள் ஆர்வமாக பங்கேற்பாளர்களா என்று ஒரு சந்தேகம். என்க்கென்னவோ கதை ஆசிரியர்களை (போட்டியாளர்கள்) பார்க்கும்போது
விளையாட்டுக்கு (just for fun) பங்கேற்ற மாதிரி இல்லை. மிக தீவிர ஆர்வத்தோடு பங்கேற்ற மாதிரி தான் தெரியுது.

அதனால் அல்லது ஆகையால் , உங்களின் போட்டி முடிவுகள் மற்றவர்களை ஊக்குவிக்குமாறியும் தொடர்ந்து போட்டிகளில் ஆர்வத்தோடு பங்கேற்ககும்படியும் இருக்க வேண்டும்.

SurveySan said...

ananda,

Groups are split based on first-come-first basis. no special logic used :)

//2) In that scenario there may be possibility of good 'நச்' stories may not get selected.//

I get your point. but i believe, each group has some good stories in it :)

that being said, with this approach, people get to vote for 1 of their favourites in each group, rather than just 1 story in the finale.


//இதுவரை போட்டிகளில் பங்கேற்றவர்களின் பங்களிப்பை விட முடிவுகளில் உங்கள் பங்களிப்பு தான் மிக அதிகமாக இருக்க வேண்டும்//

நிச்சயமா. என்னால் முடிந்த வரை, சொதப்பல் இல்லாமல் கொண்டுசெல்ல முயல்கிறேன்.
எல்லா கதைகளையும் ஒரே கட்டத்துல போட்டு, ஈ.மெயில் செக் இல்லாம வாக்களிக்க விட்டிருந்தா, வேறு ப்ரச்சனைகள் வந்திருக்கலாம்.

பொதுத் தேர்தலில் சின்ன சின்னதா ப்ரச்ச்சனை இருக்கத் தான் செய்யுது.

யாரும் கதைகளை விளம்பரப் படுத்தக் கூடாதுன்னு சொன்னதால கூட, வாக்குகள் குவியாம இருக்கலாம்.

//அதனால் அல்லது ஆகையால் , உங்களின் போட்டி முடிவுகள் மற்றவர்களை ஊக்குவிக்குமாறியும் தொடர்ந்து போட்டிகளில் ஆர்வத்தோடு பங்கேற்ககும்படியும் இருக்க வேண்டும்.//

போட்டி வைத்ததன் நோக்கமும், பரிசு அறிவித்ததன் நோக்கமும், ஒரு ஆரோக்ய சூழலை உருவாக்கத்தான்.

வாக்களிக்காமல், ஜகா வாங்கும், நண்பர்களை எந்த 'ஈ.பி.கோ'வில் தண்டிக்க முடியும்? :)

SurveySan said...

பினாத்தல் சுரேஷ்,

//forget it.. I may not make top 2, so what?//

அவ்வ்வ். நீங்களே இப்படி சொல்லிட்டா அப்பரம் நான் என்னங்க பண்றது?

ஆன் லைனில் பெரிய பெரிய தேர்தெலெல்லாம் இப்படிதாங்க நடக்குது.

நம்ம ஆட்கள் மத்தியில்தான் எதுவும் எடுபடமாட்டேங்குது :)

வாக்குகள் வந்து குவியாததர்க்கு நம் மக்களின் சோம்பலும் ஒரு காரணமா இருக்கலாம்?

Boston Bala said...

அய்யா, என்னோட ரெண்டனா:

E - T a m i l : ஈ - தமிழ்: "Group A :: சர்வேசன் 'நச்சுனு ஒரு கதை' - போட்டி: வாசக விமர்சனங்கள்"

SurveySan said...

பா.பாலா,

நன்றீஸ் பலப் பல!

தன்யனானேன் :)

'நச்' விமர்சனங்கள் அனைத்தும். (எல்லாத்தையும் படிக்கல இன்னும் :) ).

Anonymous said...

surveyshan, thevayanavangalukku thevayana nerathula thevaikku etha alavukku vaakku pottaachu

SurveySan said...

//surveyshan, thevayanavangalukku thevayana nerathula thevaikku etha alavukku vaakku pottaachu//

Engeyo ketta kural?
தேவையானவங்க யாரு?

:)

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西.......................................................................................................................................................................................................................................................................................................