57 'நச்' கதைகளை, மூன்று கூராக பிரித்து, முதல் கட்ட வாக்கெடுப்பு நடந்து வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
முதல் 19 கதைகளில் இடம் பெறும் கதைகளில், உங்களுக்குப் பிடித்த கதையை தெரிவு செய்ய இங்கே செல்லுங்கள்.
20 முதல் 38 வரையிலான, இரண்டாம் கூரில் இடம்பெறும் 19 கதைகள் கீழே உள்ளன.
தயவு செய்து, எல்லா கதைகளையும் படித்துவிட்டு, உங்களுக்குப் பிடித்த கதைக்கு வாக்களியுங்கள்.
யார் எழுதியது என்பதை விட, கதையில் 'நச்' எப்படி இருக்குன்னு பாத்துட்டு வாக்களியுங்கள்.
ஏற்கனவே சொன்னது போல், இந்தக் கூரில், அதிக அளவில் வாக்கு பெறும் இரண்டு கதைகள் இறுதிச் சுற்றில் இடம்பெறும்.
20) VSK - கதை இங்கே
21) Rathnesh - கதை இங்கே
22) குட்டீஸ் கார்னர் - கதை இங்கே
23) நாடோடி இலக்கியன் - கதை இங்கே
24) Rama - கதை இங்கே
25) மங்களூர் சிவா - கதை இங்கே
26) கிருத்திகா - கதை இங்கே
27) இலவசக்கொத்தனார் - கதை இங்கே
28) குசும்பன் - கதை இங்கே
29) அரை பிளேடு - கதை இங்கே
30) Divya - கதை இங்கே
31) gils - கதை இங்கே
32) Srikanth - கதை இங்கே
33) சிறில் அலெக்ஸ் - கதை இங்கே
34) Vicky - கதை இங்கே
35) இம்சை அரசி - கதை இங்கே
36) ப்ரசன்னா (குறைகுடம்) - கதை இங்கே
37) கண்மணி - கதை இங்கே
38) வேதா - கதை இங்கே
வாக்களிக்கும்போது, உங்கள் ஈமெயில் முகவரியை வாக்குப் பெட்டியில் கொடுக்கவேண்டும்.
வாக்களித்ததும், உங்கள் ஈ.மெயில் பொட்டியில், survey@newsndeals.com என்ற முகவரியிலிருந்து ஒரு ஈமெயில் வரும். (junk/spam foldersல் மறவாமல் பார்க்கவும். 1 நிமிடத்திலிருந்து, 1 மணி நேரம்வரை ஈ.மெயில் வர நேரம் எடுக்கலாம்).
அந்த மடலை வாசித்து, அதில் உள்ள, 'APPROVE' லிங்க்கை நீங்கள் குத்த வேண்டும். குத்தினால்தான், உங்கள் வாக்கு கணக்கில் சேர்க்கப்படும்.
APPROVE செய்து முடிக்கும் வரை, உங்கள் வாக்கு "Total unapproved votes:" என்று தனியே காட்டப்படுகிறது.
ஈ.மெயில் படித்து APPROVE செய்ய மறக்காதீர்கள்.
உங்கள் ஈ.மெயில் முகவரி, உங்கள் வாக்கை ஊர்ஜீதம் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படும்.
எந்த ஈ.மெயிலில் இருந்து எந்த வாக்கு வந்தது என்பதெல்லாம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
****வாக்கெடுப்பு முடிவடைந்தது! ****
தவறுகளிருந்தால் சுட்டிக்காட்டவும்.
கேள்விகள் இருந்தால் கேட்க்கவும்.
கதைகள் பிடித்திருந்தால், அந்தந்த பதிவருக்கு பின்னூட்டமிட்டு ஊக்கப் படுத்தவும்.
இந்தக் கூரில் உங்களுக்குப் பிடித்த கதையை தேர்வு செய்ய மறவாதீர்.
கதை எழுதியவர்கள், தங்கள் கதைக்கு வாக்களிக்குமாறு விளம்பரம் செய்வதை, இன்று முதல் தவிர்க்கவும். இது ரூல் இல்லை. என் அபிப்ராயம் மட்டுமே. எல்லாரும் எல்லா கதையும் படித்து வாக்களிக்க வேண்டி, இந்த வேண்டுகோள். வாக்கெடுப்புக்கு 'பொதுவான' விளம்பரம் தரலாம். ;)
அடுத்த 'கூரி'ன் வாக்கெடுப்பு கூடிய விரைவில்.
அனைவருக்கும் நன்றி!
Group C நாளை வெளிவரும்.
Group A, B, C க்கான வாக்கெடுப்பு டிசம்பர் 30, ஞாயிறு 6.00 PM PST வரை நடைபெறும்.
அதற்கு பின், முடிவுகள் அலசி ஆராய்ந்து, இறுதிக் கட்ட வாக்கெடுப்பு ஆரம்பமாகும்.
0-------0 0---------0 0----------0
கேள்வி1: எனக்கு பிடித்த நான்கு கதைகளுக்கு வாக்களிக்க நான்கு ஈமெயில் ஐடி(யா?:)) வேண்டுமா ? ஒரே ஈமெயில் ஐடி பயன்படுத்தி வாக்களிக்க முடியுமா ?
பதில்1: :) ஒருவருக்கு ஒரு வாக்குதான்.
'சிறந்த' ஒரு கதை கண்டுபிடிக்கத்தான் போட்டி. 2,3, 4 பரிசெல்லாம் கிடையாதே ;)
கேள்வி2: வாக்களிப்பதற்கு ஏதெனும் காலக் கெடு உண்டா ?
பதில்2: டிசம்பர் 31 finals வாக்கெடுப்பு நடத்த முடிவு. அதற்குள் மூன்று கூரின் வாக்கெடுப்புகளும் முடிக்கப்படும்.
கேள்வி3: சாதாரண வாக்கெடுப்புன்னா செய்யத் தோன்றும்...நீங்க 2-3 டாஸ்க் எல்லாம் அதுவும் 3 + 1 நாலு முறை செய்யச் சொல்லுறீங்க...வேலை களுதயில்லெ... இப்படியெல்லாம் பண்ண வேண்டுமென்ற அவசியம் என்ன?
பதில்3: யோசிக்க வச்சுட்டீங்க. 57 கதைகள் இருக்கரதால, ஒரே கட்டம் கட்டினா எல்லாரும் எல்லாக் கதையும் படிச்சுட்டு போட மாட்டாங்கன்னு ஒரு தோணல். அதனால, இந்த கூரு போடல். கொஞ்சம் சிரமம்தான், ஆனாலும், கொஞ்சம் முயற்சி பண்ணி வாக்களியுங்கள். சிறந்த 'நச்' வெல்லட்டும். புரிந்துணர்வுடன் கூடிய உங்கள் பேராதரவுக்கு நன்றி! :)
கேள்வி4: Group Aல் வாக்களித்த ஈ.மெயில் முகவரி கொண்டு, Group B, Group Cல் வாக்களிக்க முடியுமா?
பதில்4: முடியும். கூர் கூராக பிரித்ததே அதுக்குத்தானே :)
கேள்வி5: என் ஈ.மெயில் ஐடி.யை உபயோகித்து வேற யாராவது ஓட்டு போட்டா என்ன பண்றது?
பதில்5: ஆஹா. அற்புதமான கேள்வி. உங்களுக்கு எப்படியும் ஈ.மெயில் வரும். ஈ.மெயில் படிச்சு, உங்களுக்கு பிடிக்காத வாக்கு போட்டிருந்தா, REJECT செய்யலாம். Reject செய்தபின், உங்கள் ஐடி உபயோகித்து, உங்களுக்கு பிடிச்ச மாதிரி வாக்கு போட்டுக்கலாம்
பி.கு. வலது பக்க 'Quick Survey'ல் ஒரு வாக்கப் போட்டுடுங்க. உங்க கருத்ஸ் ரொம்ப முக்கியம் ;)
0-------0 0---------0 0----------0
பி.கு: வலது மூலையில் இருக்கும் MSV படத்தை க்ளிக்கி, பெட்டிஷனில் கையெழுத்து போடவும். நன்றி!
31 comments:
Group Aல் 45 வாக்குகள் தான் இதுவரை பதிவாகியுள்ளன.
இவற்றுள், 11 வாக்குகள் இன்னும் approve செய்யப்ப்டாமலும் இருக்குது.
ஐயாஸ், வாக்கு போடாதவங்க போடுங்க.
வாக்கு போட்டவங்க, மறக்காம அப்ரூவ் பண்ணுங்க.
ஒருவரே, மூன்று கூரிலும் தனித்தனியாக வாக்கமுடியும் என்பதை மறவாதீர்.
400த்தி சொச்சம் பேர் புழங்கும், இடத்தில், 45 வாக்குகள் தான் வந்திருக்குன்னா, சில பேர், சோம்பலில் வாக்கு போடாமல் எஸ்கேப் ஆகராங்கன்னு அர்த்தமா? :)
அப்படின்னா, பின்னூட்டத்துல சொல்லிட்டுப் போங்க.
இறுதி கட்ட வாக்கெடுப்பை, இதன் அடிப்படையில், மாற்றி அமைக்க யோசிக்கறேன் ;)
Group A வில் போட்ட ஓட்டுக்கு இன்னும் மெயில் வரவில்லை. Group B யில் போட்ட ஓட்டும் அப்படியே. நம்ம கணக்கில் குரூப்புக்கு ஒரு அன் அப்ரூவ்டு ஓட்டு.
சாரி. spam folder இல் இருக்கிறது மெயில்கள். :))
//சாரி. spam folder இல் இருக்கிறது மெயில்கள். :))//
நோ.வொரீஸ் :)
ஆனாலும், இந்த உலகப் பிரசித்த பெற்ற சர்வேயை இப்படி SPAMஆக மாற்றும் மெயில் சர்வர்களை வன்மையாக கண்டிப்போம் ;)
ஐயா எல்லோரும் ஓட்டு போடுவதே கஷ்டம் இதில் ஓட்டு போட்டபின் அவுங்களுக்கு அப்ரூவ் செய்ய சொல்லி மெயில் எல்லாம் வருது அதுவும் அது spam folder க்கு தான் போகுது இது ரொம்ப கஷ்டம். டக் அவுட் ஆகாமல் இருக்க ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க:))))
குசும்பன்,
டக்-அவுட் ஆகாம இருக்கே ஒரே வழி, "த.தா" :)
அதாவது, தமக்கு-தாமே என்ற உயர்வான முயற்சியை நாடுதலே ;)
//எல்லோரும் ஓட்டு போடுவதே கஷ்டம் இதில் ஓட்டு போட்டபின் அவுங்களுக்கு அப்ரூவ் செய்ய சொல்லி மெயில் எல்லாம் வருது அதுவும் அது spam folder க்கு தான் போகுது இது ரொம்ப கஷ்டம்//
வருஷக் கடைசியில், என்ன மாதிரி, எல்லாரும் வேல இல்லாம இருப்பாங்கன்னு நெனச்சு, ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு, இந்த் ஈ.மெயில் அப்ரூவல உபயோகிச்சட்டனோ? :)
'நச்' பிடிச்சிருந்தா, கண்டிப்பா வாக்குகள் நச் நச்னு வரும்னு நம்புவோம் ;)
'நச்'னு ஒரு திடீர் திருப்பமா, வாக்குகள் கடைசி நாள்ள வந்து குவியோ குவின்னு குவியப் போகுது பாருங்க :)
TamilNenjam, மிக்க நன்றி சாரே!
நீங்க ஒரு ஆர்வத்துல தெரியாம பண்ணிருப்பீங்களோன்னு நெனச்சுதான் கேட்டேன் :)
நன்றி!
en email id use seidhu vera yaravadhu vaakku pottuttaa enna panradhu?
//Anonymous said...
en email id use seidhu vera yaravadhu vaakku pottuttaa enna panradhu?//
Surveysan will treat this as 'SELLADHA VOTE' . I think.
எனக்கு Group B'ல் இரண்டு கதை பிடித்திருகு.Group A'ல் எதுவும் பிடிக்கவில்லை.என்ன செய்வது?.
tamilnenjam,
//Surveysan will treat this as 'SELLADHA VOTE' . I think.//
இல்லீங்கோ. எனக்கு அந்த மேட்டர் எல்லாம் தெரியாது. செல்லாத வோட்டாக, அந்த ஈ.மெயிலின் சொந்தக்காரர் ஆக்கினால்தான் உண்டு.
அனானி,
//எனக்கு Group B'ல் இரண்டு கதை பிடித்திருகு.Group A'ல் எதுவும் பிடிக்கவில்லை.என்ன செய்வது?.//
ஐயா, உன் காலக் காட்டு :)
GroupAல எதுவும் புடிக்கலன்னா, லூஸ்ல விடுங்க. (நல்ல கதைகள் இருக்குங்க, படிச்சுப் பாருங்க)
GroupBல ரெண்டு பிடிச்சிருக்கா? ஹ்ம். ஒரு கதைக்குத்தான் வாக்களிக்க முடியும். ;)
18 votes so far
3 unapproved
ப்ளீஸ், வாக்களிக்காதவங்க வாக்குங்க.
நான் தூங்கப்போறேன். :)
SurveySan said...
///அதாவது, தமக்கு-தாமே என்ற உயர்வான முயற்சியை நாடுதலே ;)///
என்னது இங்கேயுமா? அவ்வ்வ்வ்வ்:((((
ஐயா சர்வேசன் எல்லோரும் மிகுந்த ஆர்வத்தோடு கலந்துக்கிட்டாங்க பலரும் ஓட்டெடுப்பில் 1 ஓட்டும் விழாமல் இருப்பது நல்லது அல்ல, சில குப்பை கதைகளுக்கு நண்பர்கள் மூலமாக ஓட்டு அதிகம் விழவும், நல்ல கதைகள் வெளியே போகவும் வாய்ப்பு இருக்கு. PIT மாதிரி நல்ல நடவரா இரண்டு பேரை புடிச்சு போட்டு நல்ல கதையை தேர்ந்து எடுக்க வையுங்க.
இதுபோல் ஓட்டெடுப்பு என்றால் நான் கதையையே அனுப்பி இருக்கமாட்டேன், இதில் விரும்பம் இல்லை என்று இரண்டு மூன்று நண்பர்கள் சொன்னாங்க, டைம் எடுத்து நல்ல முடிவா சொல்லுங்க!!!
இந்த முறையில் எனக்கும் இஷ்டம் இல்லை:((
தவறாக ஏதும் சொல்லி இருந்தான் மன்னிக்கவும்!
வாக்களிச்சுட்டேன்…வாக்களிச்சுட்டேன்
அனானி, க்ரூப் ஏ - வில் எந்தக் கதையும் பிடிக்கவில்லையா? சும்மா வேஸ்ட் பண்ணாம பினாத்தலாருக்கு ஒட்டு போடுங்க. (பெனாத்தல், வழக்கம் போல போஸ்டர் ஒட்டியாச்சு, பார்த்து போடுமய்யா!!)
இந்த க்ரூபில் நமக்குத்தானே குத்தி இருக்கீங்க? ஹிஹி...
குசும்பன்,
//இதுபோல் ஓட்டெடுப்பு என்றால் நான் கதையையே அனுப்பி இருக்கமாட்டேன், இதில் விரும்பம் இல்லை என்று இரண்டு மூன்று நண்பர்கள் சொன்னாங்க, டைம் எடுத்து நல்ல முடிவா சொல்லுங்க!!!
இந்த முறையில் எனக்கும் இஷ்டம் இல்லை:((
தவறாக ஏதும் சொல்லி இருந்தான் மன்னிக்கவும்!//
தவறா ஒன்னும் சொல்லல நீங்க. நோ வொரீஸ் :)
ஜனநாயக முறையில் தேர்வு செய்வது நல்லதுதானேங்க?
Sportiveஆ எடுத்துக்கிட்டு, ஜாலியா கவனிக்கலாம் முடிவு எப்படி போவுதுன்னு :)
நடுவர்கள புடிச்சு போட்டு பண்ணியிருக்கலாம். அதன் மூலமா வேற பல ப்ரச்சனையெல்லாம் வரும்.
புரிந்துணர்வுடன் கூடிய உங்க ஆதரவுக்கு நன்னி!:)
அருட்பெருங்கோ நன்றி!
கொத்ஸ், போஸ்டர் ஒட்டக் கூடாதுன்னு ரூல் இருக்கு. ஆனா,நீங்க எதிர் கட்சிக்கு ஒட்டினதால தப்பிச்சீங்க ;)
நாங்களும் போட்டாச்சு :-)
குசும்பன்,
நடுவர்கள் போட்டா அவுங்களுக்கு என்ன தகுதினு நம்ம ஆளுங்க கேட்பாங்க :-) போட்டில பங்கெடுத்துக்கற தகுதி நம்ம கதைக்கு இருக்குனு நம்ம நம்பினாலே போதும். ஜெயிக்கறதை பத்தி கவலைப்படாதீங்க :-) அடிச்சி ஆடுங்க :-)
இந்த தேர்ந்தெடுக்கற முறைக்கு தேன்கூடு ஒவ்வொரு முறையும் ரொம்ப கஷ்டப்பட்டாங்க.
வெட்டி, நன்றி :)
//இந்த தேர்ந்தெடுக்கற முறைக்கு தேன்கூடு ஒவ்வொரு முறையும் ரொம்ப கஷ்டப்பட்டாங்க.//
வெரி ட்ரூ!
மக்களே,
இந்த 'ஓட்டு'ப் ப்ரச்சனையைப் பற்றி தேன்கூடு adminக்கு நான் 2006ல் அனுப்பிய பின்னூட்டமும், பதில்களும் கீழே.
நம்மூர்ல மட்டுமில்ல, தேர்தல்னாலே எல்லா எடத்திலயும் ப்ரச்சனை தான்.
ஒரே தீர்வு, கை-ரேகை பதித்து வாக்கு வாங்குவதுதான் ;)
ஓட்டுப் ப்ரச்சனையால், அவர்கள் நடத்தி வந்த போட்டியே நிறுத்தப் பட்டு விட்டது என்று நினைக்கிறேன்.
முழு விவரங்கள் இங்க படிங்க
click here
------- ---------
SurveySan said,
November 30, 2006 at 12:25 pm
thenkoodu support,
I dont think its a good idea to leave off regular readers from voting.
why not get a email ID from the ‘readers’ while voting, and send a ‘click here to activate your vote’ email to the readers inbox.
this way, you can be sure you wont get any duplicate emails.
I dont think anyone will goto the extent of creating multiple emails for just voting in thenkoodu.
thanks,
SurveySan
------- ---------
------- ---------
Thenkoodu Support said,
November 30, 2006 at 1:52 pm
Dear SurveySan,
Already we have the mechanism of verifying email addresses for voting for the contests. We have IP filtering also in place. Thenkoodu voting is one of a techinically reasonable voting mechanism for public. Thats why we still give 20% value for those votes.
For your info:
On september we have got atleast more than 10 ids registered with email addresses as “kallavoteX@gmail.com” etc etc.(replace X with 1 to 10)
Thanks,
------- ---------
------- ---------
SurveySan said,
December 1, 2006 at 9:45 am
thanks for the info.
since you are stopping the contest going forward, I dont have anything else to say.
for December, you could get 6 moderates and have them read 10 random stories each and pick 2 from them, and then have the judges read the selected ones to decide a winner.
You can have a ‘peoples vote’ without any prize attached to it, and open that up for all voters.
just a thought - I think you should continue hosting this contest going forward using the above formula. In the midst of all the ugly posts on caste and creed, the story writing is the only fun part in our tamil blogs today.
If you are giving it up, I will probably try to organize the contest going forward. (you don’t want that do you? :) )
------- ---------
------- ---------
J Chandrasekaran said,
December 2, 2006 at 1:28 am
I have started thinking if only few names get repeatedly ’spotlighted’. the selection mechanismis confusing and a deterrent to contestants :(
------- ---------
------- ---------
Thenkoodu Support said,
December 3, 2006 at 12:16 am
Dear Survey Sen,
Thanks for the ideas.. will explore the possibilities in future. We are going to have the readers voting also in place like november month. More changes will not be there since the contest is going to end here.
Thenkoodu Team is made up of friends like you only! we always welcome our ideas being carry forward :-)
Dear J chandran,
Appreciate your views
------- ---------
------- ---------
//For your info:
On september we have got atleast more than 10 ids registered with email addresses as “kallavoteX@gmail.com” etc etc.(replace X with 1 to 10)
//
=)
சர்வே,
உங்க ஓட்டு எடுப்புக்கும் எனக்கு காத தூரம்,இது பத்திலாம் கவலைப்பட
நேரம் இல்லை. ஒரே ஒரு சந்தேகம்,
தேன்கூட எல்லாம் எப்படியா இப்படி ஓட்டு எடுப்பு நடத்தின என்று கேள்விக்கேட்ட மகானுபவன் அதனால் இந்த கேள்வி,
இப்போ க்ருப்- A பத்தி ஏற்கனவே சொல்லி ஓட்டு போட சொல்லியாச்சு, ஆனால் குருப் -C க்கு நாளைக்கு தான் பட்டியல் சொல்லி ஓட்டுக்கு விடப்போறிங்க, அவங்களும் 31க்குள்ள ஓட்டப்போடனும், A குருப்புக்கும் 31 வரைக்கும் யோசித்து ஆற அமர ஓட்டுப்போடுவாங்க, அப்போ இந்த குருப்புகளில் எந்த குருப்புக்கு அதிக அவகாசம் கிடைக்குதாம்?
(குருப் -c ல இருக்கவங்களாம் உங்களுக்கு வேண்டாதவங்களா?)
வவ்வால்,
//(குருப் -c ல இருக்கவங்களாம் உங்களுக்கு வேண்டாதவங்களா?)//
:) நல்ல கேள்வி. 57 கதையும் கட்டம் கட்டி எல்லாரையும் படிக்க சொன்னது ஒரே நாள்ள தான்.
முதல் கட்ட வாக்கெடுப்பு, இரண்டாம் கட்ட வாக்கெடுப்புன்னு தொகுதி தொகுதியா வாக்கெடுப்பு நடத்துவாங்களே, தெரியாதா உங்களுக்கு?
அத, செக்யூரிட்டிக்காக பண்ணுவாங்க,
இங்க 19 கதையை பாத்து, படிச்சு, நெதானமா வாக்களிக்க, இந்த கூரு போடல் நடந்திருக்கு ;)
ஒரு கூரில், வாக்களிக்க, குறைந்த பட்சம் 19*5=95 நிமிடங்கள், கதை படிக்க, வாக்கு குத்த 1 நிமிடம், வாக்கை அப்ரூவ் செய்ய 1 நிமிடம் தேவைப் படுகிறது.
ஸோ, கிட்டத்தட்ட, 1 1/2 மணி நேரங்கள் எல்லா கதையும் படிச்சு வாக்கணும்னா.
ஒரு வாரம் கொடுத்திருக்கேனே, படிச்சு ஒரு முடிவுக்கு வர.
எப்படி பண்ணாலும், ஏதாவது, சின்ன சின்ன ஓட்ட இருக்க்கத்தான் செய்யும்.
பல கோடி கொட்டி, வாக்கெடுப்பு நடத்தரதையே, வூட்ல ஒக்காந்து, டி.வி பாத்து, வாக்கும் போடாம, கிண்டல் பண்றவங்க ஜாஸ்தி நம்ம ஊர்ல.
Sportiveஆ, ஜாலியா நடத்திப் பாப்பமேன்னு நடத்தரது இது.
பங்களிப்பு அற்புதமா இருந்தது.
வாக்களிப்பும், மோசமில்லாம நடக்குது. 40+ வாக்குகள் ஒரு நாள்ள வரது சகஜமே!
கருத்துக்கு நன்னி!
அடுத்த கட்டம் எப்படி நடத்த்லாம்னு ஐடியா சொல்லிட்டுப் போங்க.
:)
//முதல் கட்ட வாக்கெடுப்பு, இரண்டாம் கட்ட வாக்கெடுப்புன்னு தொகுதி தொகுதியா வாக்கெடுப்பு நடத்துவாங்களே, தெரியாதா உங்களுக்கு?
அத, செக்யூரிட்டிக்காக பண்ணுவாங்க,//
சர்வே,
ஆனால் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடக்கும் போது முதல் கட்ட வாக்கெடுப்பை முடிச்சுடுவாங்க, அவங்களுக்குனு ஒரு "dead line fix" பண்ணிடுவாங்கனும் தெரியாதா உங்களுக்கு!
நானும் சும்மா தமாசுக்கு தான் இதெல்லாம் கேட்டேன். நீங்க ஜாலிய போட்டி நடத்துறாப்போல!
வவ்வால்,
//ஆனால் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடக்கும் போது முதல் கட்ட வாக்கெடுப்பை முடிச்சுடுவாங்க, அவங்களுக்குனு ஒரு "dead line fix" பண்ணிடுவாங்கனும் தெரியாதா உங்களுக்கு!//
அவங்க 'deadline' fix பண்றது, தொடர்ந்து ஆளுங்க வாக்காளிக்காம தடுக்க இல்ல. security, admin ஆட்களின் பற்றாக் குறையால் தான்னுல்ல நேனச்சேன்.
இங்க அந்த கவலையெல்லாம் நமக்கில்லையே, வாக்குச் சாவடி முடிந்த்த வரை நீண்ட நாட்களுக்கு திறந்தே இருக்கும்.
அங்க வாக்களிக்க லீவ் எல்லாம் விடுவாங்க. நம்மால அதெல்லாம் பண்ண முடியுமா?
:)
Arun, thanks a lot for the info.
I care less for such things :)
ரத்னேஷ் விடுப்பில் இருக்கிறார்,
பொங்கலுக்கு பிறகே வலையை எட்டிப்பார்ப்பார், அவருடைய கதைக்கு அவர் சார்பில் ஒரு வாக்கை நீங்களே சேர்த்துவிட முடியுமா ?
அவருக்கு மட்டுமல்ல, வாக்களிக்க முடியாமல் சூழ்நிலை இருப்பவர்களுக்கு ஒரு வாக்கு கொடுக்கலாமே, யார் யார் அவர்களுக்கே வாக்களித்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு வாக்கெடுப்பின் மூலம் தெரியவரும் என்பதால் சொல்கிறேன்.
கோவி,
ரத்னேஷுக்கு 3 வோட்டு விழுந்திருக்கே ஏற்கனவே.
//அவருக்கு மட்டுமல்ல, வாக்களிக்க முடியாமல் சூழ்நிலை இருப்பவர்களுக்கு ஒரு வாக்கு கொடுக்கலாமே, யார் யார் அவர்களுக்கே வாக்களித்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு வாக்கெடுப்பின் மூலம் தெரியவரும் என்பதால் சொல்கிறேன்.
//
யார் தமக்கு-தாமே போட்டாங்க போடலன்னல்லாம் எனக்குத் தெரியவராது.
என் வாக்கு ஏற்கனவே போட்டுட்டேன். (யாருக்கு போட்டென்னு சொல்ல மாட்டேன்? :) )
நாளை முதல், மக்களுக்கு reminder பண்றேன். வாக்கு போடாதவங்கள் போட சொல்லி.
நீங்களும் சொன்னீங்கன்னா நன்னா இருக்கும்.
surveyshan, thevayanavangalukku thevayana nerathula thevaikku etha alavukku vaakku pottaachu
希望大家都會非常非常幸福~
「朵朵小語‧優美的眷戀在這個世界上,最重要的一件事,就是好好愛自己。好好愛自己,你的眼睛才能看見天空的美麗,耳朵才能聽見山水的清音。好好愛自己,你才能體會所有美好的東西,所有的文字與音符才能像清泉一樣注入你的心靈。好好愛自己,你才有愛人的能力,也才有讓別人愛上你的魅力。而愛自己的第一步,就是切斷讓自己覺得黏膩的過去,以無沾無滯的輕快心情,大步走向前去。愛自己的第二步,則是隨時保持孩子般的好奇,願意接受未知的指引;也隨時可以拋卻不再需要的行囊,一路雲淡風輕。親愛的,你是天地之間獨一無二的旅人,在陽光與月光的交替之中瀟灑獨行.......................................................................................................................................................................................................................................................................................................
Post a Comment