recent posts...

Saturday, December 29, 2007

மிருகம் - திரைப்படம் பற்றிய கருத்துக்கள்

வித்யாசமான படம் வித்யாசமான படம்னு எல்லாரும் தம்பட்டம் அடிச்சதால இந்தப் படத்த பாக்கணும்னு ஒரு ஆசை இருந்தது.
அதுவும் இல்லாம, ஷூட்டிங் ஸ்பாட்ல பத்மப்ரியாவ படத்தின் டைரக்டர் சாமி கன்னத்துல அறஞ்சுட்டாராம் (அதப் பத்தி கடைசில பாக்கலாம்).

படத்தோட கதை?
முரட்டுப் பயலா இருக்கரவனின் திமிரான வாழ்க்கை. கெட்ட வழக்கங்களினால் அவன் எப்படி சீரழிஞ்சு, தன்ன சுத்தி இருக்கரவங்களுக்கும் தொல்லையா இருக்கான்னு, ஒரு நல்ல மெஸேஜ் சொல்ற மாதிரியான கதை.

படம் எதிர்பார்த்த அளவுக்கு நல்லா இருந்ததா?
இல்ல.

சரி, படம் நல்லா இருந்ததா?
இல்ல.

சரி, படம் பயங்கர மோசமா?
இல்ல. ஆனா, படம் பாருங்கன்னும் சொல்ல முடியாத அளவுக்கு இருக்கு.

சரி, படத்தோட ஹீரோ எப்படி?
நல்ல கண்டுபிடிப்பு. தலைப்புக்கேத்த தெரிவு.

குடும்பத்தோட பாக்கலாமா?
மூச்!

யதார்த்தமான படமா?
அப்படி எடுக்கணும்னு நெனச்சு, ரொம்ப டார்ச்சர் பல எடங்கள்ள.

பாட்டெல்லாம் எப்படி?
ஒண்ணும் நெனவுல இல்ல.

மத்த விஷயங்கள்?
படம் முழுக்க Sepia effectல் வரட்சி. ஆனா, கேமரா கோணங்கள் நல்லாவே இருந்துது. ஸெட் போட்டவர் நல்லா போட்டிருந்தாரு. காமெடி சரியில்லை. முகம் சுளிக்க வைக்கும் பல காட்சிகள்.
படத்தில் சொல்லப்படும் மெஸேஜ் ஓ.கே. ஆனா, ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி வந்து சொல்லியிருக்கலாம்.

பத்மப்பிரியா?
நல்ல யதார்த்த நடிப்பு. ஆனா, கிராமீய சூழல்ல எடுத்த படத்துக்கு, புருவத்த ட்ரிம் பண்ணிக்கிட்டு, அழகா தலை சீவிக்கிட்டு பொட்டு வச்சுக்கிட்டா நடிப்பாங்க? கொஞ்சம் கூட ஒட்டல அந்த கதாபாத்திரத்துக்கு. (பருத்தி வீரன்,ப்ரியாமணிய நெனச்சேன். பெருமூச் வருது).

பத்மப்பிரியாவ அறஞ்சது?
எதுக்காக அறஞ்சாருன்னு தெரியல. பப்ளிஸிட்டி ஸ்டண்ட்?
மேக்கப் போடாதீங்கன்னு சொல்லியும் மேக்கப் போட்டுட்டு வந்ததாலன்னா, ஞாயமான அறைதான் (ஆ'ணீயம்' எல்லாம் இல்லீங்க, ஒரு படைப்பாளியின் கோணத்தில் நின்னு பாத்து, மனசுல பட்டத சொன்னேன் :) )

கூட்டிக் கழிச்சு பாத்தா?
யதார்த்தமா எடுக்கறேன்னு, ப.வீரன பாத்து சூடு போட்டுக்கிட்ட மாதிரி தெரியுது.
முகம் சுளிய வைக்கும் பல 'யதார்த்த' காட்சிகளை விலக்கிவிட்டும், பத்மப்பிரியா முகத்தில் கொஞ்சம் அழுக்கு பூசியும், இசைக்கு ராஜாவ கொண்டாந்தும் இருந்திருந்தா, ஓரளவுக்கு நல்ல படமா வந்திருக்கலாம்.

நீங்க பாத்தாச்சா?

பி.கு: கடவுள் இருக்கான்டா கடவுள் இருக்கான்டான்னு ஒரு சாமி (பிராமண்?) அங்கங்க வந்து சொல்லிட்டே போவாரு. எதுக்கு அப்படி சொல்றாரு, அவரு ஏன், ஒரு பிராமணா இருக்காருன்னு எனக்கு புரியல்ல. அதிலுள்ள நுண்ணரசியல விளக்க நம்ம ஜமாலன்,TBCDய கேட்டுக்கறேன். ;)

17 comments:

SurveySan said...

இன்னும் 20 மணி நேரங்களில் வாக்குச் சாவடிகள் மூடப்படும்.

TBCD said...

இது என்ன வகைக் குத்து..?

இது குத்து வகையா, இல்லை, நுண்ணரசியல் கேட்டகரியா..சிறில் அலெக்ஸ்க்கிட்டே வேணா கேட்காலாம்.

படம் பார்த்துட்டேன். பதிவு எழுதுறேன்..உங்க கேள்விக்கு விடை கிடைச்சதான்னு படிச்சிட்டு சொல்லுங்க..

//*கடவுள் இருக்கான்டா கடவுள் இருக்கான்டான்னு ஒரு சாமி (பிராமண்?) அங்கங்க வந்து சொல்லிட்டே போவாரு. எதுக்கு அப்படி சொல்றாரு, அவரு ஏன், ஒரு பிராமணா இருக்காருன்னு எனக்கு புரியல்ல. அதிலுள்ள நுண்ணரசியல விளக்க நம்ம ஜமாலன்,TBCDய கேட்டுக்கறேன். ;)*//

TBCD said...

உங்களைப் பற்றி அமுகவில ஒரு பதிவு ஓடுதே அதுப் பற்றி கருத்து ஏதாச்சும்...

(ஏதோ என்னால ஆன அரசியல்.. ;) )

கப்பி | Kappi said...

நேத்து தான் பார்த்தேன்..உங்க விமர்சனத்துக்கு வரிக்கு வரி ரிப்பீட்டு :))

டரிக்டரு என்னவோ நெறய ட்ரை பண்ணியிருக்காரு..எனக்குத்தான் ஏன் டா இத உக்காந்து இவ்ளோ நேரம் பார்த்தோம்னு ஆயிடுச்சு... :))

SurveySan said...

tbcd,

குத்தெல்லாம் இல்ல சார் :)
என் கண்ணுக்குத் தெரியாத ஏதாவது மேட்டர் உங்க கண்ணுக்குத் தெரியாதுன்னு கேட்டேன்.

கல்லூரில உங்களுக்கு extraவா நெறைய தெரிஞ்சது.

இதுல எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்னு :)

SurveySan said...

tbcd,
அமுக? இன்னும் பாக்கலியே, தேடிப்பாத்து படிச்சு, அங்கயே கருத்த சொல்றேன்.

வில்லங்கமா இருக்கே கேள்வியின் தொனீயே :)

SurveySan said...

கப்பி,

//டரிக்டரு என்னவோ நெறய ட்ரை பண்ணியிருக்காரு..எனக்குத்தான் ஏன் டா இத உக்காந்து இவ்ளோ நேரம் பார்த்தோம்னு ஆயிடுச்சு... :))//

:) எனக்கும் அப்படியேதான் இருந்துச்சு.
அவரு வேற ஏதோ படத்த பாத்து inspireஆகி, சூடு போட்டுக்கிட்ட மாதிரி தெரியுது.

TBCD said...

கண்ணுக்கு அதிகப்படியா தெரியவில்லை சர்வேசரே...கருத்துக்குத் தான் தெரிந்தது. உங்களூக்கும் அது தெரியுனுமின்னா...சொல்லுங்க...அதுக்கு வழி , வகையிருக்கு ;)

//*SurveySan said...
tbcd,

என் கண்ணுக்குத் தெரியாத ஏதாவது மேட்டர் உங்க கண்ணுக்குத் தெரியாதுன்னு கேட்டேன்.

கல்லூரில உங்களுக்கு extraவா நெறைய தெரிஞ்சது.*//

TBCD said...

ரொம்ப தேட வேண்டாமின்னு நானே உங்களுக்காக தேடிப் பிடித்து கொண்டு வந்துட்டேன்..

http://amkworld.blogspot.com/2007/12/son.html

SurveySan said...

tbcd,

//கண்ணுக்கு அதிகப்படியா தெரியவில்லை சர்வேசரே...கருத்துக்குத் தான் தெரிந்தது. உங்களூக்கும் அது தெரியுனுமின்னா...சொல்லுங்க...அதுக்கு வழி , வகையிருக்கு ;)//

:) I am happy with the way my brain works and interprets currently. so, no for now :)

SurveySan said...

tbcd,
//ரொம்ப தேட வேண்டாமின்னு நானே உங்களுக்காக தேடிப் பிடித்து கொண்டு வந்துட்டேன்..//

romba nanri. naan erkanave paathu commentum pottutten ;)

ஜமாலன் said...

படம் பார்க்கவில்லை. அது முன்பே வைரவன் என்ற ஒரு படத்தை நினைவூட்டவதாக உள்ளன முன்னோட்டங்களில் பார்த்த காட்சிகள்.

பிரமாணர்களை காட்டுவதே பிராமண படமாக ஆகிவிடாது. பிராமணர்களை மையமாக மட்டுமே வைத்து எடுக்கப்பட்ட பல படங்கள் உள்ளன. அவை பிராமண கருத்தியலை முன்வைப்பதில்லை. கல்லூரி பிராமண கருத்தியலை முன்வைப்பதாக எங்களது ஊனக் கண்னுகே தெரிந்தது. சர்வேசனின் ஞானக்கண்ணுக்கு தெரியவில்லை என்பது அலகிலா மாயையின் விளையாட்டோ? :-))))))

கல்லூரி படம் நுண்அரசியல் சர்ந்தது அல்ல என்று எனது பதிவின் பின்னோட்டத்தில் விளக்கியுள்ளேன். நுண்ணரசியல் என்பது கொஞ்சம் ஆழுமான விஷயம். வேண்டாம் விட்டுடங்க.:-))))

SurveySan said...

//கல்லூரி பிராமண கருத்தியலை முன்வைப்பதாக எங்களது ஊனக் கண்னுகே தெரிந்தது. சர்வேசனின் ஞானக்கண்ணுக்கு தெரியவில்லை என்பது அலகிலா மாயையின் விளையாட்டோ? :-))))))
//

என்னோடதுதான் ஊனக்கண்ணு. உங்களது ஞானக் கண்ணு.
அந்த ஞான நிலையை அடைய TBCD கிட்ட கிளாஸ் போலாம்னு இருக்கேன் ;)


இந்த நுண்ணரசியல் மேட்டரெல்லாம் எனக்கு புரிய மாட்டேங்குது.
படத்த பாத்தோமா அனுபவிச்சோமான்னு வந்துடுவேன். ஸ்கீரன தாண்டி ஆராய மாட்டேன் ;)

SurveySan said...

//கல்லூரி பிராமண கருத்தியலை முன்வைப்பதாக எங்களது ஊனக் கண்னுகே தெரிந்தது. சர்வேசனின் ஞானக்கண்ணுக்கு தெரியவில்லை என்பது அலகிலா மாயையின் விளையாட்டோ? :-))))))
//

என்னோடதுதான் ஊனக்கண்ணு. உங்களது ஞானக் கண்ணு.
அந்த ஞான நிலையை அடைய TBCD கிட்ட கிளாஸ் போலாம்னு இருக்கேன் ;)


இந்த நுண்ணரசியல் மேட்டரெல்லாம் எனக்கு புரிய மாட்டேங்குது.
படத்த பாத்தோமா அனுபவிச்சோமான்னு வந்துடுவேன். ஸ்கீரன தாண்டி ஆராய மாட்டேன் ;)

TBCD said...

அந்தர் பல்டி என்பார்களே..அதைப் பற்றி கொஞ்சம் விளக்குங்களேன் சர்வேசன். ;)

பாடம் படிப்பதென்றால், நல்ல வாத்தியார் தாடி வச்ச ஒருத்தர் இருந்தார். அவரைப் படியுங்கள். போதும்.

என்னை விட்டுவிடுங்கள்..மீ த எஸ்கேப் ;)

//*SurveySan said...
tbcd,

:) I am happy with the way my brain works and interprets currently. so, no for now :)*//


//*SurveySan said...
என்னோடதுதான் ஊனக்கண்ணு. உங்களது ஞானக் கண்ணு.
அந்த ஞான நிலையை அடைய TBCD கிட்ட கிளாஸ் போலாம்னு இருக்கேன் ;)*//

SurveySan said...

tbcd,

//என்னை விட்டுவிடுங்கள்..மீ த எஸ்கேப் ;)//

;)
உங்க மிருக வெமர்சனத்துக்கு வெயிட்டிங்.
அங்கயே, பாடம் கெடைக்குமே எனக்கு - எப்படி வித்யாசமா பாக்கரதுன்னு ;)

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西.......................................................................................................................................................................................................................................................................................................