recent posts...

Sunday, December 09, 2007

'நச்'னு பல கதைகளும், என் 'நச்'னு ஒரு கதையும்.

'நச்'னு ஒரு கதை போட்டி அறிவித்ததில் இருந்து, இதுவரை 20 பேர், நச்சு நச்சுன்னு கதைய பின்னியிருக்காங்க.
ஆட்டையில் பெயர் கொடுக்காமலும், சில பேர் பின்னிட்டு இருக்காங்க. போட்டி முடிவு தேதிக்குள் எந்த கதை, 'நச்சோ நச்'னு கண்டுபிடிச்சு, அந்த கதைய போட்டிக்கு அனுப்புவாங்களாம்.

நீங்க முயற்சி பண்ணலியா?

பரிசு பணம், எவ்ளோ பேர் பங்கு பெறுகிறார்களோ, அந்த அளவு உயரும்னு சொல்லியிருந்தேன் (இப்போதைக்கு, $20ல நிக்குது. $25 வரை போக வாய்ப்பு உள்ளது. $100 பட்ஜெட். மீதமுள்ள $75, உதவும் கரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்).

போட்டிக்கு பெயர் கொடுத்து, கதையை அனுப்ப வேண்டிய கடைசி தேதி - டிசம்பர் 23 2007 11:59 pm.
மற்ற விவரங்கள் இங்கே. இதுவரை வந்துள்ள கதைகளை படித்து விட்டு, கருத்த அள்ளி வீசுங்க. கதாசிரியர்களை உற்சாகப் படுத்துங்கோ.
நன்றி!

சரி, இப்ப, என் 'நச்' கதைக்கு வருவோம். இதுக்கு முன்னாடியே கேட்ட கதைன்னா, அடிக்க வராதீங்க. (இது போட்டிக்கல்ல ;) ).

சென்னைல பைலட் தியேட்டர் ஒரு காலத்துல ரொம்ப ப்ரபலம்.
அட்டகாசமான ஆங்கிலப் படங்கள் எல்லாம் வரிசையா போடுவாங்க.
Sound-effectsக்காகவே அங்க போய் எல்லாரும் படம் பாப்பாங்க.

Exorcistனு ஒரு பேய் படம் வந்தப்போ, தியேட்டர் நிர்வாகம் ஒரு போட்டி வச்சாங்களாம்.
யார் வந்து, தனியா தியேட்டருக்குள்ள ஒக்காந்து, இந்த படத்தை முழுசா பாத்துட்டு வெளீல வராங்களோ, அவங்களுக்கு 10,000 பரிசுன்னாங்களாம்.

விஷயத்த கேள்விப்பட்ட பலரும், தியேட்டருக்கு வந்து, படம் பாக்க முயற்சி பண்ணாங்களாம்.
பாதி படம் தாண்டரதுக்கு முன்னாலேயே, பயத்துல அலரி அடிச்சுக்கிட்டு ஓடி வந்துட்டாங்களாம்.

படம் பயங்கரமான திகில் படம். கும்பலா பாக்கவே வயத்தக் கலக்கும். தனியா பாக்க யாரால முடியும்?

பத்து நாள் இப்படியே போச்சாம்.
பதினோராவது நாள் பாஸ்கர்னு ஒருத்தர் வந்தாராம்.
'ஐயா நான் தனியா பாக்கறேங்க'ன்னு உள்ள போனாராம்.

அட, இவரு எங்க முழுசா பாக்கப் போறாரு, மத்தவங்க மாதிரியே ஓடி வரப் போறாருன்னு எல்லாரும் நெனச்சாங்களாம்.

ஆனா, 10 நிமிஷம் ஆச்சு, அரை மணி நேரமாச்சு, ஒரு மணி நேரமாச்சு, பாஸ்கர் மத்தவங்க மாதிரி அலரி அடிச்சுட்டு ஓடி வரல.

படம் முடிஞ்சாச்சு.
வெற்றிகரமா பாஸ்கர் பாத்த விஷயம் கேள்விப்பட்டு ஏகப்பட்ட கூட்டம்.
எல்லாரும் கைதட்டி விசிலடிக்க, பாஸ்கர் தியேட்டருக்கு வெளீல வரார்.

முகம், வெளுத்துப் போய், ப்ரமை பிடிச்ச மாதிரி இருக்காரு.
நெத்தியில் வியர்வை கொட்டுது.
மூச்சு இழுத்து இழுத்து விடறாரு.
வெறிச்சு பாத்த மாதிரி தியேட்டர விட்டு வெளீல வராரு.

தியேட்டர் முதலாளியும், பாஸ்கர் "நீ ஜெயிச்சிட்டப்பா"ன்னு அவர் கையில 10,000 ரூபாயை திணிக்கறாரு.

பாஸ்கர் இவங்க பேசிக்கரது எதையும் காதுல போட்டுக்காம நடந்து போயிக்கிட்டே இருக்காரு.

படத்தின் பாதிப்பு இன்னும் அவரை விட்டுப் போகல. ஒரு வித பயமும் கலக்கமும் அவர் கண்ணுல தெரியுது.

நடந்து பஸ்-ஸ்டேண்டுக்கு போயிட்டாரு. யாருகிட்டையும் பேசல.

அந்த நேரம் பாத்து கரெண்ட்டு கட்டாயிடுச்சு.

கும்மிருட்டு.

பஸ்ஸும் வரல.

கொஞ்சம் தூரத்துல பாத்தா ஒரு பஸ்ஸு நிக்கரது தெரியுது.

ஆள் நடமாட்டம் இல்ல, கரெண்ட்டு இல்லாம, இருட்டு சூழ்ந்து இடமே பயங்கரமா இருந்தது.
பாஸ்கருக்கு பயம் ஜாஸ்தியாயிடுச்சு.

பஸ்ஸை நோக்கி ஓடறாரு. பஸ்ஸுக்குள்ள ஏறி ஒக்காந்துட்டாரு.

பஸ்ல, ட்ரைவரையும், கண்டெக்டரையும் காணும்.
வேற ஆளுங்களையும் காணும். காலியா இருந்தது.

சரி, இன்னும் நேரம் ஆகல போலயிருக்கு, வந்துடுவாங்கன்னு, பாஸ்கர் பயத்தோடயே ஒக்காந்துட்டு இருந்தாரு.

பயத்தில், கை கால் உதரல் மட்டும் நிக்கல.

சில்லுனு வெளியில் காத்து.

திடீர்னு பஸ், தானா நகர ஆரம்பித்தது.

பாஸ்கர் பயத்தில் உரைந்தே போனாரு. என்னடா நடக்குது, ட்ரைவரே இல்ல பஸ்ஸு வேர தானா நகருதேன்னு பயத்தின் உச்சத்துல, கை உதற ஆரம்பிச்சது. வேர்த்து கொட்டி, சட்டையெல்லாம் நனஞ்சுடுச்சு.

எழுந்து ஓடிடலாம்னு எழுந்துக்கப் பாத்தாரு.

சில்னு ஒரு கை, தோள் மேல விழுந்தது.

திடுக்கிட்டுப் போய் திரும்பிப் பார்த்தார்.

வெள்ளை சட்டையும், அடர்த்தியா மீசையும், குங்குமப் பொட்டும், தோளில் ஜோல்னா பையும் வச்சுக்கிட்டு ஒருத்தர் பயங்கரமா நின்னுக்கிட்டு இருந்தார்.

"யோவ் சோமாரி. பஸ்ஸு ப்ரேக்டௌன் ஆயிடுச்சுன்னு, நானும் ட்ரைவரும் சேந்துகிட்டு கஷ்டப்பட்டு தள்ளிக்கினு இருக்கோம். நீ சொகுசா வந்து குந்திக்கின. எழுந்து கீழ வந்து தள்ளுய்யா. வந்துட்டானுங்க. சாவு கிராக்கிங்க" என்று மட மட என்று திட்டினார் கண்டெக்டர்!

---- ----- ---- ----

ஹி ஹி!

'நச்'-னு ஒரு கதை எப்படி?
:)

பி.கு1: 'என்' 'நச்'னு ஒரு கதைன்னு போட்டிருக்கக் கூடாது. ஏன்னா இது, 'சபைல' கேட்ட கதை/ஜோக்கு ;)

பி.கு2: அட, நான் 'எழுத்துப்பணி' தொடங்கி ஒரு வருஷம் ஓடிப் போயிடுச்சு. அடேங்கப்பா. வயசாவுது! :)

27 comments:

கோவி.கண்ணன் said...

//"யோவ் சோமாரி. பஸ்ஸு ப்ரேக்டௌன் ஆயிடுச்சுன்னு, நானும் ட்ரைவரும் சேந்துகிட்டு கஷ்டப்பட்டு தள்ளிக்கினு இருக்கோம். நீ சொகுசா வந்து குந்திக்கின. எழுந்து கீழ வந்து தள்ளுய்யா. வந்துட்டானுங்க. சாவு கிராக்கிங்க" என்று மட மட என்று திட்டினார் கண்டெக்டர்!//

சூப்பர் நச் திருப்பம் தான், படம் பார்த்தவர் கருப்புக் கண்ணாடியும், காதுல பஞ்சும் வச்சிருந்தார் என்று சொல்லி இருந்தால் அவர் பயப்படாமல் படம் பார்த்தற்கு காரணம் தெரிஞ்சிருக்கும்.
:)

SurveySan said...

கோவி,

//படம் பார்த்தவர் கருப்புக் கண்ணாடியும், காதுல பஞ்சும் வச்சிருந்தார் என்று சொல்லி இருந்தால் அவர் பயப்படாமல் படம் பார்த்தற்கு காரணம் தெரிஞ்சிருக்கும்//

லாஜிக் இடிக்குமே. அதெல்லாம் இல்லாம பாத்ததனாலதான் பயத்தோட ப்ரமை பிடிச்ச மாதிரி வராரு, கதப்படி :)

ஒரிஜினல்ல, பசங்க சொல்லும்போது, "படம் பாத்துட்டு வெளீல வந்து, கதை சொல்லணும்னு" ரூல் எல்லாம் சேத்து சொல்லுவாங்க ;)

இலவசக்கொத்தனார் said...

ஒரு வருஷம் ஆயிடுச்சா? வாழ்த்துக்கள்.

இராம்/Raam said...

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்ததுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

SurveySan said...

Thanks Raam! :)

Divya said...

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உங்கள் வலைத்தளத்திற்க்கு என் வாழ்த்துக்கள்!

திகில் கதை நச்சுன்னு இருக்குது !

SurveySan said...

Thanks Divya.

neenga try pannaliyaa?

துளசி கோபால் said...

ஒரு வருசம் ஆயிருச்சா?

நிலைச்சு நின்னுட்டீங்க:-))))
வாழ்த்து(க்)கள்.

விஜயன் said...

அருமையான கதை.

RATHNESH said...

அருமையான ட்விஸ்ட். இப்படி முன்மாதிரி கதைகள் எப்படி யோசிக்க வேண்டும் என்பதற்கு வழி காட்டும்.

நிறையப் பேரை யோசிக்க வைத்து எழுதப் பயிற்சி தந்திருக்கிறீர்கள். அதற்காக சிறப்புப் பாராட்டுக்கள்.

கோவி.கண்ணன், கே.பாக்யராஜின் கதை இலாகாவில் பணியாற்றி இருக்கிறீர்களா? லாஜிக் லாஜிக் என்கிறீர்களே! நச் கதையில் இருக்க வேண்டிய ஒரே லாஜிக் வாசித்துக் கொண்டே வருபவர் எதிர்பார்க்காத ஒரு முடிவு தருவது மட்டும் தான் என்று நினைக்கிறேன்.

SurveySan said...

துளசி மேடம், நன்றி! இன்னும் ஒரு வருஷம் ஓட்ட முடியுமான்னு பாக்கறேன் ;)

சரவணா, நன்றி!

ரத்னேஷ், நான் சொன்ன கதையின் கரு நல்ல strong. கரு யாருதுன்னு தெரியல :)
இந்த மாதிரி நிறைய ஐட்டம் இருக்கு ;)

SurveySan said...

கொத்ஸ், உங்களுக்கும் ஒரு நன்னிய சொல்லிக்கறேன். கும்புடுங்கோ!

SurveySan said...

25 பேர் ஆட்டையில் இதுவரை.

சேராதவங்க சேருங்க.
எழுதாதவங்க எழுதுங்க.

சேந்து ஜமாய்ப்போம்.

SurveySan said...

கொத்ஸ், உங்க கதையும் சேத்தாச்சு.
கிருத்திகா, உங்க கதையும் சேத்தாச்சு.

SurveySan said...

32 in ஆட்டை.

SurveySan said...

33ங்கோ. கடைசியா யாரெல்லாம் சேந்திருக்காங்கன்னு பாருங்கோ.

SurveySan said...

34 பேர் வந்திருக்காக...

அப்ப நீங்க?

G.Ragavan said...

:) உங்க கதையையும் படிச்சிட்டேன். :)

இம்சை அரசி said...

வாழ்த்துக்கள் சர்வேசன் :)))

இம்சை அரசி said...

நானும் ஒரு கதை முயற்சி பண்ணியிருக்கேங்க சர்வேசன் :)))
உங்க கருத்த சொல்லுங்க...

http://imsaiarasi.blogspot.com/2007/12/blog-post_15.html

Boston Bala said...

கதை அருமை :)

வாழ்த்துகள்

SurveySan said...

ஜி.ரா, நன்றி! படிச்சீங்க சரி, ஆனா, விமர்ஜனம் என்ன?

இம்சை அரசி, உங்க கதையும் சேத்துடறேன். நன்றி.

பா.பாலா, நன்றி! நீங்க எழுதலியா?

Boston Bala said...

---நீங்க எழுதலியா?---

நான் எழுதினால் "சர்வேசன் வந்து 'நச்' என்று இருக்கிறது என்றார்" என்று கதையை முடித்தால்தான் நஒக ஆவும் ;) சரிப்படாது :)

SurveySan said...

பா.பாலா,

//சரிப்படாது :)//

அப்படி லேசுல விட்டா எப்படி?

சிங்கப்பூர்ல, கோவி.கண்ணன், 'நச்' கதை எழுதுவது எப்படின்னு, க்ளாஸ் எடுக்கறாராம்.
ஆன்-லைன் ஆப்ஷன் இரூக்கான்னு கேட்டுப் பாருங்க :)

SurveySan said...

44 so far ;)

Anonymous said...

This is really 'Nachu'

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西.......................................................................................................................................................................................................................................................................................................