recent posts...

Sunday, August 26, 2007

டோண்டு ராகவன் - ஒரு அவசர அலசல் சர்வே!

இணையத்தில் டோண்டு ராகவன் என்ற பதிவருக்கு இருக்கும் எதிர்ப்புகளை இந்த வீக்-எண்டில், படித்துத் தெரிந்து கொண்டேன்.

சென்ற வாரத்தில் ஒரு நாள் அவரின் ஒரு பதிவுக்கு பின்னூட்டமிட்டதால் என் யாஹூ, 'கலீஜ்'
ஃபோல்டரில் 68 ஈ.மெயில்கள் உள்ளன. :) அதைப் பற்றிய என் முந்தைய புலம்பல் இங்கே.

ஃபில்டர் வேலை செய்வதாலும், தமிழில் கெட்ட வார்த்தை குறைவாக உள்ளதாலும், எளிதில், இந்த ஈ.மெயில்களை தனியாக பாத்தி கட்டி ஒதுக்க முடிந்தது.
பின்னூட்டமிடும் எனக்கே 68 'கலீஜ்' வருதுன்னா, பதிவு எழுதரவருக்கு என்னென்ன வரும்.

இவ்வளவையும் கடந்து, இந்த வயதிலும், அவர் தொடர்ந்து பதிவு எழுதி முன்னேறிச் செல்வது absolutely fantastic!! உங்களின் மனோ தைரியம் பாராட்டுக்குரியது.

Mr.டோண்டு ராகவன், நான் உங்களுக்கு ஒரு பதிவில் பின்னூட்டியது போல், ஒரு கேள்வி-பதில் பதிவாக, நடந்தது, நடப்பது, நடக்கப் போவது என்ற ரீதியில், ஒரு self-explanatory பதிவை போடுங்களேன்?

எனிவே, என், இந்தப் பதிவு, டோண்டுவின் பதிவுகளைப் பற்றி ஆராய்ச்சி நடத்த அல்ல.

அவர் என்ன பதிவு எழுதினாலும், அங்கு என்ன பின்னூட்டம் இட்டாலும், தேடித் தேடி இந்த ஈ.மடல்களை அனுப்பும் சில சைக்கோ-அனானீஸ்களைப் பற்றியும், அவரின் பதிவுகளைப் படிக்கும் உங்களைப் பற்றியும் கணக்கெடுக்கவே இந்த சர்வே. :)

கீழே உள்ள பெட்டியில் உள்ள சாய்ஸில், நல்லா யோசித்து வாக்களியுங்கள்.



டோண்டுக்கு உங்கள் சொந்தப் பெயரில் பின்னூட்ட மிடுபவரானால், இங்கயும் பின்னூட்டமிட்டு அதச் சொல்லுங்க. அது மேல பெட்டீல கொடுக்க மறந்துட்டேன் ;)

டோண்டு யாரென்றே தெரியாதவர்களும், இந்த கெட்ட ஈ.மடல்கள் பற்றித் தெரியாதவர்களும், டோண்டுவின் லேட்டஸ்ட் பதிவை கற்றுணர்ந்து, பின்னூட்டவும் (18 வயதுக்கு உட்பட்டவர்கள், இந்த விபரீத பரீட்சைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டாம்). பிறகு உங்களுக்கே தெரிய வரலாம். அப்பாலிக்கா இங்க வந்து இந்த சர்வேக்கு பதில் சொல்லுங்க ;)

டோண்டு யாரென்று தெரிய, அவரின் பயோ-டேட்டா இங்கே, நம் லக்கி-லுக் கைவண்ணத்தில். :)

பி.கு1: என் ஃபஸ்டு கவுஜ படிச்சாச்சா?

பி.கு2: MSVக்காக சில நிமிஷங்கள் ஒதுக்கவும். உங்கள் பதிவுகளில் இதற்கு ஒரு விளம்பரம் தரவும்.

ஹாப்பி ஓணம்!

நன்றி!

46 comments:

SurveySan said...

கிசுகிசு,

கிசுகிசுவெல்லாம் எனக்கு வோணாம். :)

லக்கிலுக் said...

ரொம்ப rare ஆக அவருக்கு பின்னூட்டமிடுவது உண்டு. ஆரம்பத்தில் அவருக்கு நிறைய பின்னூட்டங்கள் இட்டதால் நீங்கள் குறிப்பிட்ட மாதிரியான பின்னூட்டங்கள் நிறைய பெற்றிருக்கிறேன்.

உங்களுடைய தேர்தலில் முதல் Optionக்கு வாக்களித்திருக்கிறேன் :-)

SurveySan said...

சை.அனானி, மன்றத்துலேருந்து ஒரே ஒரு வாக்கு வந்துடுச்சு.

ஒரு பெரிய குழு இருக்கரதா சொன்னாங்க?

SurveySan said...

லக்கி,

//உங்களுடைய தேர்தலில் முதல் Optionக்கு வாக்களித்திருக்கிறேன் :-) //

என்ன கொடுமைங்க இது? எல்லா பதிவும் சொதப்பல் தானா? அந்த பென்ஷன் மேட்டர் கொஞ்சம் பரவால்லாம இருந்ததேங்க?

Anonymous said...

//கொஞ்சம் பரவால்லாம இருந்ததேங்க?//
இந்த ஆப்ஷன் இல்லாததால் புறக்கணிக்கிறேன்...

Anonymous said...

சும்மா வேலில போற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுக்கொண்டு குத்துதே குடையுதே என்று கத்த என்னால் முடியாது. எனவே டோண்டு பதிவை படிக்கவும் வேனாம். என் குடும்பம் ஆபாசமாக திட்டு வாங்கவும் வேண்டாம்.

Anonymous said...

1+2-அருமை'ன்னு ஒரு optionஐயும் வைங்க . 100% கிடைக்கும்

உண்மைத்தமிழன் said...

//இணையத்தில் டோண்டு ராகவன் என்ற பதிவருக்கு//

சர்வேசன் ஸார் சத்தியமா நீங்க வலையுலகத்துலதான் இருக்கீகளா.. ஆச்சரியமா இருக்கு.. அதைவிட ஆச்சரியம்.. போலியின் கமெண்ட்டுக்கு நீங்கள் தெரிவித்த பதில்.. ம்.. உங்க பதிவை மட்டும் திறந்து பார்த்து போஸ்ட் பண்ணிட்டு மூடிட்டு போயிருவீங்க போலிருக்கு.. நல்லாயிருங்க..

SurveySan said...

உண்மைத் தமிழன்,

//போலியின் கமெண்ட்டுக்கு நீங்கள் தெரிவித்த பதில்.. ம்.. உங்க பதிவை மட்டும் திறந்து பார்த்து போஸ்ட் பண்ணிட்டு மூடிட்டு போயிருவீங்க போலிருக்கு.. நல்லாயிருங்க//

பிரீலியே? என்ன சொல்ல வரீங்க? என்ன பதிலு?

SurveySan said...

வடிவேல்,

//சும்மா வேலில போற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுக்கொண்டு குத்துதே குடையுதே என்று கத்த என்னால் முடியாது. எனவே டோண்டு பதிவை படிக்கவும் வேனாம். என் குடும்பம் ஆபாசமாக திட்டு வாங்கவும் வேண்டாம்.//

எவனோ திட்டினா, உங்களுக்கு பிடிச்சதெல்லாம் பண்ணாம விட்டுடுவீங்களா? ஒவ்வொண்ணா விட்டா எங்க போய் முடியும்?

வெல், உங்க சாய்ஸ் உங்களது. ஓணான் தான் :)

SurveySan said...

//1+2-அருமை'ன்னு ஒரு optionஐயும் வைங்க . 100% கிடைக்கும்//

அப்படீன்னா?

Anonymous said...

டோண்டு பதிவுகள் எல்லாமே நன்றாக இருந்தது இல்லை. அவர் பெயர் வாங்க காரணமே போலி என்கிற ஈனப்புத்தி கொண்டவன் தான். அவர் பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டால் வரும்ம் தொல்லைகளுக்கு பயந்துதான் அந்த 1-அருமை!+2=என் வோட்டு. நான் ஒரு முகம் காட்ட மறுக்கும் ஒரு பதிவர்தான்.

SurveySan said...

anony,

//அவர் பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டால் வரும்ம் தொல்லைகளுக்கு பயந்துதான் அந்த 1-அருமை!+2=என் வோட்டு. நான் ஒரு முகம் காட்ட மறுக்கும் ஒரு பதிவர்தான்.//

ஓ.கே. அவருக்காவது தெரியுமா, நீங்கதான் அங்க பின்னூடறீங்கன்னு? ஏதாவது சங்கேத கோட்.வர்டு இருக்கா? :)

இதுவரை, முகம் காட்டியவர்கள் இரண்டு பதிவர்கள் மட்டுமே.

சரி, நான் அப்பீட்டு. தூங்கப் போறேன். மற்ற கமெண்டுகள் நாளை திறந்து விடப்படும். வாக்குகள் தொடரட்டும்.

Anonymous said...

எனக்கு உங்கள் முதல் சாய்ஸ் சரியாகப் படுகிறது.

Anonymous said...

I feel dondu himself has groomed and still grooming this poli. He is responsible for this poli and dondu himself doesn't want to end this problem / nuisance bcos he gets a good amount of exposure in net bcos of this poli.

கார்மேகராஜா said...

லக்கிலுக் சொன்னதை போல உண்மையில் டோண்டு சாரின் பதிவுகளில் ஒரு விசயமும் இருக்காது. இன்னும் சொல்லப்போனால் அவரது சில பதிவுகளை படித்ததில் ஒன்றுமே புரியாமல் வெளியேறியிருக்கிறேன்.

ஆனால் பதிவுலகம் வந்த புதிதில் அவருக்கு ஒரு பின்னூட்டம் இட்டேன். அது இதுதான்,

///ஒவ்வொரு பாராவிலும் ஒவ்வொரு லிங்க் கொடுக்குமளவுக்கு நிறைய எழுதியுள்ளிர்கள் போல.

இப்பொழுதுதான் உங்கள் பதிவுகளை படித்துக்கொண்டு வருகிறேன்.///


இதனால் எனது மெயில் பெட்டி தூய தமிழில் நிரம்பியது. இதனால் வம்புக்கென்றே அவரது பதிவில் பின்னூட்டமிட ஆரம்பித்தேன்.

நானும் ஒன்னுமே இல்லாத பதிவில் எவ்வளவு நாள்தான் உரையாட முடியும்? பின்னாளில் விட்டுவிட்டேன்.

மத்தபடி ' டோண்டு சாரின் பதிவு பெரும்பாலும் சொதப்பல்தான்'

வடுவூர் குமார் said...

என்னவோ போங்க சர்வேசன்..
உங்க பதிவிலே பின்னூட்டம் இட்டா ஒன்றும் ஆகாது என்ற தைரியத்தில் இந்த பின்னூடம் இடுகிறேன்.
:-))

மெலட்டூர். இரா.நடராஜன் said...

நானும் உங்களை மாதிரியே டோண்டுவுக்கு பிண்ணூட்டமிட்டு அசிங்கமான வார்த்தைகளால் அர்சிக்கப்பட்டவன். அப்போது நான் வலைப்பூ பதிவுக்கு புதிது. அந்த மாதிரி கேவலங்களை நான் இது வரை படித்ததில்லை. நான் ஆடிப் போய்விட்டேன். எனவே நானுண்டு எனது சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் உண்டு என்று எந்தவித அபிப்ராய பேதங்களுக்கும் போவதில்லை. தமிழ் வலைப்பூக்களில் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை இப்போதைக்கு வராது என்றே நினைக்கிறேன்.

மெலட்டூர்.இரா.நடராஜன்.

சுகுணாதிவாகர் said...

முதலில் இந்த விளையாட்டே ஆபத்தானதாகவும் அபத்தமாகவுமிருக்கிறது, இப்போது நீங்கள் தொடங்கியிருக்கும் இந்த விளையாட்டையும் சேர்த்துத்தான். இது எல்லோருக்குமே இதமாயிருக்கிறது, புண்ணை மீண்டும் மீண்டும் சொறிவதைப் போல. இதே மனோநிலை தொடர்கிறவரை இந்த விளையாட்டு முடியப்போவதில்லை. மனநோயாளிகள் மீது எனக்கு மரியாதை இருக்கிறது என்றபோதும் பொதுப்புத்தியில் பதிந்துபோன அர்த்தத்திலேயே சொல்கிறேன். இரண்டுதரப்புமே மன்நோயாளிகளின் கூடாரம்தான். எங்கேயாவது தன் பிம்பம் தெரிந்துகொண்டேயிருக்காதா என்று அலைகிற ரகங்கள்தான். சர்வேசன், உங்களையும் சேர்த்துத்தான். சுயமரியாதையெல்லாம் யாருக்கும் இருப்பதைப் போலத் தெரியவில்லை.

SurveySan said...

சுகுணா திவாகர்,

//முதலில் இந்த விளையாட்டே ஆபத்தானதாகவும் அபத்தமாகவுமிருக்கிறது, இப்போது நீங்கள் தொடங்கியிருக்கும் இந்த விளையாட்டையும் சேர்த்துத்தான். இது எல்லோருக்குமே இதமாயிருக்கிறது, புண்ணை மீண்டும் மீண்டும் சொறிவதைப் போல//

புண்ணுக்கு மருந்து போடாம அப்படியே விட்டா எப்படிங்க சரியாகும்?
நான் எங்கே கருத்து சொல்லணும் சொல்லக்கூடாதுன்னு சொல்ற உரிமை யாருக்குமே கிடையாது! அதுவும் இணையத்தில் இந்த அலம்பு செஞ்சா என்ன பண்றது?

//சர்வேசன், உங்களையும் சேர்த்துத்தான். சுயமரியாதையெல்லாம் யாருக்கும் இருப்பதைப் போலத் தெரியவில்லை.
//

எனக்கு சுயமரியாதை இருக்கரதாலதான், இதை எதிர்த்து ஒரு பதிவு போட்டேன். அடங்கி ஒடுங்கி சைலண்டா போயிருந்தாதான், சுய மரியாதை இழந்தவன்னு அர்த்தம் :)

SurveySan said...

//சைகோ அனானி மன்றத்தின் தொண்டன்//

5 பேர் இருக்கோங்கடோய் :)
கள்ள ஓட்டாவும் இருக்கலாம் ;)

Anonymous said...

ஏண்டா நாயே நான் போட்ட பின்னுட்டம் எங்கே? அனானி என்றால் அவ்வளவு மட்டமா?

ஒரு அனானி!

G.Ragavan said...

சர்வேசன்..இப்ப இது என்னத்துக்கு? ஏற்கனவே எரியுதாம் எள்ளு...அதுல ஏன் போடனும் கொள்ளு?

டோண்டுவின் பதிவுகளில் பின்னூட்டமிட்டு ஆபாசப் பின்னூட்டங்கள் வாங்கிய அனுபவம் எனக்கும் உண்டு.

தவறு ரெண்டு பக்கமும் இருக்கு அப்படீங்குறது என்னுடைய கருத்து. இப்ப இதப் பத்திப் பேசி இப்ப ஒன்னும் ஆகப் போறதில்லை. கண்டுக்காம இருக்குறதுதான் நல்லது.

SurveySan said...

anony,

//ஏண்டா நாயே நான் போட்ட பின்னுட்டம் எங்கே? அனானி என்றால் அவ்வளவு மட்டமா?

ஒரு அனானி!///

அனானி என்றால் மட்டும் அல்ல. தராதரம் இல்லாமல் பின்னூட்டும் போடும் அனைவரும் மட்டம் தான'டா' ;)

SurveySan said...

ஜி.ரா,

//தவறு ரெண்டு பக்கமும் இருக்கு அப்படீங்குறது என்னுடைய கருத்து. இப்ப இதப் பத்திப் பேசி இப்ப ஒன்னும் ஆகப் போறதில்லை.//

ஹ்ம். ஒரு ஸைட்ல கருத்துத் தவறு இருக்கு(?). இன்னொரு பக்கத்துல 'நாகரீகத்' தவறு இருக்கு.

பேசாம இருந்து, கண்ட கண்ட ஈ.மெயில்களை சகித்துக் கொள்ளும் சகிப்புத் தன்மை எனக்கு இல்லை :)

பாப்போம். எவ்ளோ தூரம் போவுதுன்னு ;)

Unknown said...

அட ஒரு எளவும் பிரிலப்பா..ஏன் ரெண்டு தரப்புக்கும் இந்த கொலவெறின்னு..

டோண்டுவின் பதிவுகள் ஓரளவுக்கு சுமார் ரகம்தான். பின்னூட்டம் போடனும்னு இதுவரைக்கும் தோணலே.

ஒரு பதிவர் நண்பர் எச்சரிக்கை பண்ணதாலேயே, நான் டோண்டு பதிவு படிக்கறதோட நிறுத்திகிட்டேன்.

ஆனா, தனிப்பட்ட விமர்சனங்கள், சாதி சம்பந்தப்பட்ட/ஆபாசமான பின்னூட்டங்கள் கண்டிப்பா தவிர்க்கப்படவேண்டியவை. இன்னும் நமக்கு மெச்சூரிடி வேணுமோ?

SurveySan said...

---------
தஞ்சாவூரான்,

//ஒரு பதிவர் நண்பர் எச்சரிக்கை பண்ணதாலேயே, நான் டோண்டு பதிவு படிக்கறதோட நிறுத்திகிட்டேன்.//

எனக்கும் அசிங்க பின்னூட்டம் வந்துது. ஆனா, இதுக்கே பயந்து ஒதுங்கிட்டா, அப்பறம் எங்க நாம நாட்ட திருத்தரது?
எவனோ ஒருத்தன் எப்படி நான் எத படிக்கரது, எத படிக்கக் கூடாதுன்னு சொல்ல முடியும்?

//ஆனா, தனிப்பட்ட விமர்சனங்கள், சாதி சம்பந்தப்பட்ட/ஆபாசமான பின்னூட்டங்கள் கண்டிப்பா தவிர்க்கப்படவேண்டியவை//

இதே தான் என் கருத்தும்!

-----------
அமரீக அனானி பெண் பதிவாளரே,
உங்க கருத்துக்கு நன்றி. இழிபிறவி, போன்ற வார்த்தை ப்ரயோகங்களும், ஆதாரம் இல்லாத சில சந்தேகங்களும் கொண்ட உங்க பின்னூட்டம் ப்ரசுரிக்கல.

புரிதலுடன் கூடிய ஒத்துழைப்புக்கு நன்றி ;)
------------

Anonymous said...

சர்வேஷன்,

முதலில் நீங்கள் உங்கள் முகமூடியை கழட்டி விட்டு வந்து பதிவு போடுங்கள். ஏனெனில் உங்கள் பதிவு டோண்டுக்கு ஆதரவு என்று அப்பட்டமாகவே தெரிகிறது. இதில் போலிக்கு ஆதரவாக எழுதப்படும் பின்னூட்டங்களை நீங்கள் பிரசுரிப்பதே இல்லை!

இதான் சத்தியம்.

Anonymous said...

போலிகளுக்கு ஆதரவாக நாங்கள் போடும் வாக்குகள் மட்டும் பொய் வாக்குகள். ஆனால் டோண்டுக்கு ஆதரவாக வரும் வாக்குகள் மட்டும் உண்மை வாக்குகளா? நன்றாக இருக்கிறது உங்கள் பார்ப்பனீய சிந்தனை!

SurveySan said...

//உங்கள் பதிவு டோண்டுக்கு ஆதரவு என்று அப்பட்டமாகவே தெரிகிறது. இதில் போலிக்கு ஆதரவாக எழுதப்படும் பின்னூட்டங்களை நீங்கள் பிரசுரிப்பதே இல்லை//

தற்கொலைப்படையாரே, யாருக்கும் ஆதரவெல்லாம் கொடுக்கலைங்க. வ‌ரும் பின்னூட்ட‌ங்க‌ளில், நாக‌ரீக‌மான‌வையும், parliamentary ‌ வார்த்தைக‌ள் கொண்ட‌வையும் ப்ர‌சுரிக்க‌ப் ப‌டுகிற‌து. இதோ பாருங்க‌, உங்க கருத்தை ப்ர‌சுரிக்க‌ர‌ மாதிரி :)

We should all understand, tamil blogs are read by 8 year old school going children.

We should write responsibly when we write in a 'public' joint :)

hope you agree.

Anonymous said...

//We should all understand, tamil blogs are read by 8 year old school going children.

We should write responsibly when we write in a 'public' joint :)

hope you agree.//

before that you must think about this poli matter carefully. how it born, how it grow... everything. so please go and research how this poli starts.

dondu said, he is a vadakalai iyengar and he was very proud that he was born in this community. So poli born in muslim community then attack mr.dondu.

this is the real story. I am not muslim, but a dalith. I am standing behind of this poli.

now you are writing like a dondu supporter. So dont cheat us.

SurveySan said...

அமரீக 'அனானி' பெண் பதிவரே, புரிந்தது புரிந்தது. எல்லாம் புரிந்தது. ;)

கருத்துக்களுக்கு கருத்துக்களுடன் மோதும், நாகரீகம் வளரணுங்க.
ஒருவரின் கருத்து புடிக்கலன்னா, கருத்தால அடிக்கணும். அநாகரீக பின்னூட்டத்தால் அடித்தால் யாருக்கும் ஒரு லாபமும் இல்லை :)

அதே சமயம், நாம் எதை படிக்கணும் படிக்கக் கூடாதுன்னு சொல்லும் அதிகாரம், நம் சுதந்திர இந்தியாவில் ஒரு பயலுக்கும் இல்லை :)

Anonymous said...

இதுவரை நான் எழுதிய பின்னூட்டங்கள் எல்லாமே நாகரீகத்துடனும் இழிசொற்கள் இன்றியுமே இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

உங்களின் பார்ப்பனீய மனது டோண்டுவிற்கு ஆதரவாக செயல்படச் சொல்லுவதால் அவற்றை புறக்கணித்து உங்கள் ஆதரவை வெளிப்படையாகவே காட்டுகின்றீர்கள்.

டோண்டு இல்லை என்றால் போலி இல்லை. இதுதான் சத்தியம் சத்தியம் சத்தியம்.

டோண்டு வலைப்பதிவை விட்டு விலகினால் போலியும் விலகி விடுவார்!

Anonymous said...

//அதே சமயம், நாம் எதை படிக்கணும் படிக்கக் கூடாதுன்னு சொல்லும் அதிகாரம், நம் சுதந்திர இந்தியாவில் ஒரு பயலுக்கும் இல்லை :)//

அதுக்காக உன் ஜாதி என்பதற்காக டோண்டு தவறாக சொல்லும் ஆலோசனைகளையும் நீ எதிர்க்க மாட்டேங்குறியே முகமூடி சர்வேசா?

SurveySan said...

பாசறையாரே,

//இதுவரை நான் எழுதிய பின்னூட்டங்கள் எல்லாமே நாகரீகத்துடனும் இழிசொற்கள் இன்றியுமே இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.//

நாகரீகமானதை யார் எழுதினாலும் நான் ப்ரசுரிப்பேன் என்பதை நீரும் நம்புவீர் என்று நினைக்கிறேன்.

//உங்களின் பார்ப்பனீய மனது டோண்டுவிற்கு ஆதரவாக செயல்படச் சொல்லுவதால் அவற்றை புறக்கணித்து உங்கள் ஆதரவை வெளிப்படையாகவே காட்டுகின்றீர்கள்.
டோண்டு இல்லை என்றால் போலி இல்லை. இதுதான் சத்தியம் சத்தியம் சத்தியம்.
டோண்டு வலைப்பதிவை விட்டு விலகினால் போலியும் விலகி விடுவார்!//

நான் முன்னமே சொன்ன மாதிரி யாருக்கும் சப்போர்ட் செய்யவில்லை நான். டோண்டு எதை ஆதரிப்பவர் என்பது விவரங்கள் கூட எனக்குத் தெரியாது. பென்ஷன் கிடைக்க் கஷ்டப்படும் ஒரு வயோதிகர் பற்றி எழுதியதர்க்கு என் கருத்தைச் சொல்லப் போய், எனக்கு வந்த இழி மடல்களால் வந்த கோபம் என்னுது.
நாகரீகமாய் எழுதும் எவரும் பதிவெழுதுவதை விட்டுச் செல்ல வேணாம். தமிழ்மண நிர்வாகத்தின் மேல் உள்ள நம்பிக்கையால் சொல்கிறேன். டோண்டு நாகரீகம் கெட்ட வார்த்தைகளில் எதையாவது எழுதி இருந்தால், இந்நேரத்தில் அவரை தூக்கியிருப்பாங்களே?

கருத்தை கருத்தால் எதிற்கணும். கண்டபடி அசிங்கமா எழுதினா என்ன அர்த்தம்? அப்பரம் என்ன மண்ணாங்கட்டிக்கு படிக்கரது?

இணையத்தின் மூலமா, கருத்து சுதந்திரம் இருக்கு. ஊரில் இருக்கும் கெடுதல்களை தட்டிக் கேக்கவும், நம்மவர்களின் கற்பனைத் திறனை வெளியில் கொண்டுவரவும் உதவும் இணையத்தின் வசதிகளுக்கு முடக்க நினைக்கும் மூடர்களை எதிற்கணும் என்பது அடியேனின் கருத்துங்கோ. :)

==-------------

//அதுக்காக உன் ஜாதி என்பதற்காக டோண்டு தவறாக சொல்லும் ஆலோசனைகளையும் நீ எதிர்க்க மாட்டேங்குறியே முகமூடி சர்வேசா? //

என் ஜாதியா?
அடப் போங்கய்யா.
'இருட்டறையில் உள்ளதடா உலகம்
சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே'னு எங்க தமிழ் வாத்தி சின்ன வயசுலயே எங்களுக்குள்ள சாதி ஒரு கேடு கெட்ட சங்கதின்னு அடிச்சு வளத்துட்டாங்க.

ஆலோசனை எல்லாரும் சொல்லலாம். என்னவேணா சொல்லலாம். ஆலோசனை தவறுன்னா, அத அவரு பதிவுல போயி நல்ல வார்த்தைகள்ள வாதம் பண்ணுங்க. அவரு அசிங்கமா 'கலீஜா' எழுதறாரா என்ன? எழுதினா தமிழ்மணத்துக்கு புகார் கொடுங்க. அத வுட்டுட்டு, வரவன் போறவன் ஈ.மெயில் பாக்ஸ ரொப்பினா என்ன அர்த்தம்?
லேசுல விட முடியாத மேட்டர் இது.
பல நாள் திருடன் ஒரு நாள் செமத்தியா அககப்படுவான் பாருங்க. :)

பி.கு: டோண்டு பின்னூட்டி அகப்பட்டதை படித்து சிரித்தேன். யோசிச்சு பாத்தா சைகோவ டீல் பண்ண, நானா இருந்தாலும், இந்த மாதிரி அதி‍புத்திசாலித்தனமா எதயாச்சும் செய்ய வேண்டி வரலாம் :) முள்ள முள்ளால எடுக்கர மாதிரி ;)

=-----------

அமீரக 'அனானி' பெண் பதிவரே,
உரல் அனுப்புங்க :)
நான் ப‌டித்து என் சொந்த‌ க‌ருத்தை பின்னூட்டறேன். ம‌றுப‌டியும் சொல்றேன், 'க‌லீஜு' மேட்ட‌ர‌ 'க‌லீஜா' சொல்லாத‌வ‌ரை குற்ற‌ம் குற்ற‌மில்லை.
சாதார‌ண‌ மேட்ட‌ருக்கு, 'க‌லீஜா' வ‌ர‌ பின்னூட்ட‌ம்தான் ச‌கிக்க‌ முடிய‌ல‌ ;)

=--------

Anonymous said...

டோண்டு முரளிமனோஹர் என்ற போலிப்பெயரில் எழுதி மாட்டியது நோக்கு தெரியுமா அய்யிரே? அதைக்கூட கண்டிக்க தோணலியே உனக்கு? ஏன்னா உனுக்கும் பூனூல் பாசம்!

Anonymous said...

டோண்டு ஆபாசமா எழுதவில்லையா? அப்படி என்றால் டோண்டு சொல்லும் ஆலோசனைகளை உங்கள் வீட்டில் இன்றே செயல்படுத்த நீங்கள் தயாரா? ஆம் என்றால் சொல்லுங்கள். எல்லா ஆலோசனைகளையும் அனுப்பி வைக்கிறேன்.

Anonymous said...

சின்ன குழந்தைகளுக்கும் காம ஆசை வந்ததால்தான் பால்ய விவாகம் தோன்றியதாம்! இது உங்க ஜாதி நோண்டு கண்டுபிடிப்பு.

SurveySan said...

அன்பழகன், முத்து, ரவி என்ற அனானி நண்பரே,

என் பகுத்தறிவுக்கு சரி என்ற சிந்தனைகளை கருத்துக்களை நான் கண்டிப்பா பின்பற்றுவேன் ஐயா.

எனக்கு பூணூல் பாசமா? எதாவது சொன்னா, இப்படி ஒண்ன சொல்லி முத்திரை குத்திருங்க. அப்பறம் எங்கேருந்து கருத்து பரிமாற்றம் எல்லாம் ஒழுங்கா நடக்கும்?
குழந்தைத் திருமணம் ஆதரிப்பது, என்னைப் பொறுத்தவரை மிகத் தவறான செய்கை. அபத்தமும் கூட.

Anonymous said...

//'' பெண்களின் உடல் இச்சையை சமாளிக்கவே பால்ய விவாகங்கள் நடந்தன என்றுதான் எழுதினேன். ''//

என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு....

எத்தனை உயர்வான பார்வை பெண்கள் மீது

பெண்களை பற்றி உங்களுக்கு இவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் இருக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றே.

இன்று பெண்ணியம் பேசும் பலரின் உண்மை முகம் இதுதான்..

Anonymous said...

SurveySan said...
anony,

//ஏண்டா நாயே நான் போட்ட பின்னுட்டம் எங்கே? அனானி என்றால் அவ்வளவு மட்டமா?

ஒரு அனானி!///

அனானி என்றால் மட்டும் அல்ல. தராதரம் இல்லாமல் பின்னூட்டும் போடும் அனைவரும் மட்டம் தான'டா' ;)///

நாயே என்று விழித்து எழுதிய பின்னூட்டத்தை வெளியிட்டு இருக்கும் நீர் எந்த கெட்டவார்த்தையும் எழுதாத பின்னூட்டத்தை வெளியிடாததில் இருந்து தெரிகிறது உமது நேர்மை, உமக்கும் டோண்டுக்கும் ஆதரவானதை மட்டும் வெளியிடுவீர் மற்றது எல்லாம் குப்பையிலா?

ஸ்ரீ சரவணகுமார் said...

ஜாதி வெறிப் பிடித்த டோண்டுவை விளம்பர படுத்த ஏன் இவ்வளவு பிரயத்தனப் படுகிறீர்கள்.
டோண்டுவின் இன்னொரு அவதாரம் சர்வேசனோ??

Hariharan # 03985177737685368452 said...

டோண்டுவின் பதிவுகள் அனைத்துமே மொக்கைன்னு சொல்லமுடியாது 50 :50

டோண்டுவுக்கு பின்னூட்டம் போட்டா போட்டவனுக்கு உடனே அசிங்கமா பின்னூட்டு மடல் அனுப்புவேன் என்பது என்ன லாஜிக்னு புரியல.

இந்த பிளாக்மெயிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டியே டோண்டுக்கு பின்னூட்டியிருக்கேன். சாக்கடை மொழி பின்னூட்டங்களைப் பெற்றும் இருக்கிறேன்.

இந்திய எகனாமிக் பூமில் நாற்பதுகளிலேயே விஆர்.எஸ் பெறுவோர் இருக்கும் சூழ்நிலையில் டோண்டு சாரிடம் எனக்குப் பிடித்தது அறுபது வயதிலும் அயராமல் உழைப்பது. அதிலும் எலக்ட்டிரிகல் எஞ்சினியரிங் படித்துவிட்டு ஜெர்மன் மொழிபெயர்ப்பாளர்ன்னு வேற ரூட்டில் வெற்றியோடு பயணிப்பவர்.

I Approach Dondu for his positivities which obviously out weighs his contras.

வெளி உலகில் எனக்கு தெரிந்திராத ஜாதி வெறி தமிழ் வலையுலகில் தலைவிரிகோலமாய் ஆட்டம் போடுகிறது.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் பக்குவம் தமிழ்நாட்டின் தலைவர்களுக்கே இல்லை...

It still remains a longway to go for tamil blogging to become a decent platform for meaningful discussions and debates!

TBCD said...

நான் படிப்பதுண்டு..ரொம்ப செல்கடீவ் ஆக மட்டுமே..
எனக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்று தோன்றினால் அதையும் என் பெயரிலே பதிந்திருக்கிறேன்..
இதக்கு எந்த அப்ஷனும் இல்லை..அதனால் ஓட்டளிக்கவில்லை..

சீனு said...

கொஞ்சம் லேட்டாக வந்துட்டேன் போல இருக்கு.

//டோண்டுவின் பதிவுகளில் பின்னூட்டமிட்டு ஆபாசப் பின்னூட்டங்கள் வாங்கிய அனுபவம் எனக்கும் உண்டு.//

எனக்கும் கூடத்தான்.

என் அலுவலகத்தில் சிலர் என்னை பார்த்து ப்ளாக்கரில் கணக்கு துவக்க வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு புரிய வைத்து, மறுப்பக்கத்தையும் காட்ட எனக்கு வந்த முத்தமிழ் சொட்டும் மடலையும் அனுப்ப, அவர்கள் தெரித்து ஓடிவிட்டார்கள்.

டோன்டூவின் பதிவுகள்ள் முழுவதையும் படிக்கவில்லை. அனைத்தும் அருமை எல்லாம் இல்லை. 50 - 50. அந்த ஆப்ஷன் இல்லாததால் ஓட்டுப் போடவில்லை.

//டோண்டு இல்லை என்றால் போலி இல்லை. இதுதான் சத்தியம் சத்தியம் சத்தியம்.

டோண்டு வலைப்பதிவை விட்டு விலகினால் போலியும் விலகி விடுவார்!//

நல்லா இருக்கு நீங்க சொல்லுறது. உங்க லாஜிக் பிரியல. எனக்கு பிடிக்காதவர் ஒரு தளத்தில் இருந்து வெளியாற வேண்டும் என்று சொன்னால் அது நியாயமா? உங்களை எனக்கு பிடிக்கலைன்னு சொன்னா நீங்களும் நானும் வெளியே போகனுமா?

//டோண்டுவின் பதிவுகள் அனைத்துமே மொக்கைன்னு சொல்லமுடியாது 50 :50 //

அட! ஹரிஹரனும் அதே தான் சொல்லியிருக்கார்.

//வெளி உலகில் எனக்கு தெரிந்திராத ஜாதி வெறி தமிழ் வலையுலகில் தலைவிரிகோலமாய் ஆட்டம் போடுகிறது.//

ஆமாங்க. தமிழனின் உண்மையான முகம் இது தான். இதுல தமிழன்னு பெருமை வேற கொள்ளனுமாம்.

சரி! நான் போயி போலியிடமிருந்து வரும் முத்தமிழ் சொட்டும் பின்னூட்டத்திற்கு வெயிட் பன்னுறேன்...

SurveySan said...

ஸ்ரீசரன்,

//டோண்டுவின் இன்னொரு அவதாரம் சர்வேசனோ??//

நன்னாருக்கே கேள்வி. யாரையும் தூக்கி நிறுத்த முயற்சி அல்ல. சுயமரியாதையை கேள்விக் குறியாக்கும் ஒரு சைக்கோவை ஒடுக்கவே இந்த ப்ரயத்தனம் :)

-------------

அனானி,
////நாயே என்று விழித்து எழுதிய பின்னூட்டத்தை வெளியிட்டு இருக்கும் நீர் எந்த கெட்டவார்த்தையும் எழுதாத பின்னூட்டத்தை வெளியிடாததில் இருந்து தெரிகிறது உமது நேர்மை, உமக்கும் டோண்டுக்கும் ஆதரவானதை மட்டும் வெளியிடுவீர் மற்றது எல்லாம் குப்பையிலா? ///
ஆதாரம் இல்லாத வாதங்களை ப்ரசுரிக்கவில்லை அம்புடுதேன்.

----------

ஹரிஹரன்,

//It still remains a longway to go for tamil blogging to become a decent platform for meaningful discussions and debates! //

this maturity is missing on both sides. everyone, should think a minute and take a responsible route.

-----------

tbcd, கிட்டத்தட்ட மேச்சாவரது ஒண்ணுல குத்தியிருக்கலாம். வோட்ட வீணடிக்கக் கூடாது ;)
-------------

சீனு,

//சரி! நான் போயி போலியிடமிருந்து வரும் முத்தமிழ் சொட்டும் பின்னூட்டத்திற்கு வெயிட் பன்னுறேன்...//

வந்துதுன்னா சொல்லுங்க. டேட்டா கலெக்ஷன் நடக்குது ;)
surveysan2005 at yahoo.com