மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இதுவரை பெரிய அங்கீகாரங்கள் எதுவும் வழங்கப்பட்டதில்லை என்று வவ்வால் இங்கு பதிந்ததைக் கண்டேன்.
உண்மையிலேயே இது பெரிய ஆச்சரியத்தைத் தந்தது.
இப்படி கூட விட்டுருவாங்களா என்ன?
சாதாரண ஆளா அவரு? என்னென்ன பாட்டெல்லாம் போட்டிருக்காரு? எவ்வளவு விதமான ராகங்கள்? அடேங்கப்பா!
கொஞ்ச நஞ்ச சுகத்தையா தந்திருக்கு அவரின் பாடல்கள்? சொக்க வைக்கும் ரகமாச்சே ஒவ்வொண்ணும்.
கண்ணதாசனுடன் சேர்ந்து இசைத்த பாடல் ஒவ்வொண்ணும், ம்யூஸியத்துல வச்சு பாதுகாக்க வேண்டியதாச்சே.
யோவ் விருது கொடுக்கரவங்களே, என்னய்யா இப்படி சொதப்பிட்டீங்க?
பீம்சென் ஜோஷியெல்லாம் 80கள்ளயே வாங்கிட்டாரேய்யா!
லதாஜி கூட, பாரத் ரத்னா எல்லாம் வாங்கிட்டாங்க.
ஏ.ஆர்.ரஹ்மான 2000த்தலயே பத்மஸ்ரீ வாங்கிட்டாரேய்யா!
எம்.எஸ்.விக்கு கொடுக்கப் படவேண்டிய விருதெல்லாம், நேரத்தோட கொடுங்கய்யா.
கொடுக்கலன்னா, அந்த விருதுக்கே அவமானம்.
இதுவரை அந்த விருதை வாங்கினவங்கள்ளாம், ஈயம், பித்தளைக்கு வித்து, பேரீச்சம் பழம் தான் வாங்கித் துண்ணோணும்.
சீக்கிரம், ஏதாச்சும் செய்யுங்க!
முதல்வருக்கு வேண்டியவங்க யாராச்சும் எடுத்து சொல்லுங்கய்யா.
வெட்க்கக்கேடு! அவரு பாட்ட இனி காது கொடுத்த கேக்கவே லாயக்கில்லாம போயிடப் போறோம்.
----- ----- ----- ----- ----- -----
லேட்டஸ்ட் அடிஷன்!
நம்மால முடிஞ்சது.
MSVக்காக ஒரு பெட்டிஷன்.
படிச்சுட்டு sign பண்ணுங்க! உடனே!
தகவலை பரப்பவும்!
http://www.petitiononline.com/msv2008/petition.html
----- ----- ----- ----- ----- -----
பி.கு: விக்கீபீடியால அவர பத்தி ரொம்ப சிருசாதான் இருக்கு. தெரிஞ்சவங்க, அதுல கொஞ்சம் மேட்டரப் போடுங்க சாரே. :(
44 comments:
இப்படி ஒரு பெட்டிஷன் ரெடி பண்ண்ணவா?
M.S.Viswanathan, popularly known as "Mellisai Mannar" meaning "King of Light Music", is the person who ruled the South Indian Film Industry through his Music for decades together.
His achievements range from bringing out new trends in melodies, tunes and orchestration to introducing various genres of World Music to Indian Cinema. He is rightly called by the people as the "University of Music".
The man of such caliber has not been conferred any of the top civilian honors awarded by governments of Tamil Nadu and India.
This petition is to request the government of Tamil Nadu and India to consider this matter and do the needful to respect MSVs talents without further delay.
He is the most deserving civilian in India, and all the undersigned, request a speedy review of the situation and honor MSV.
PETITION போட்டாச்சு.
இங்க போய் கையெழுத்து போடுங்க!
அப்பாடி, இனி நிம்மதியா தூங்கலாம். :)
http://www.petitiononline.com/msv2008/petition.html
சர்வேசன்,
நன்றி , கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தமைக்கு!
நீங்க உங்க பாணில கலக்கி இருக்கிங்கனே நான் நினைக்கிறேன்!, அந்த பதிவு கொஞ்சம் பழைய பதிவு...இத்தனை நாளாக அப்பதிவு கேட்பார் அற்று கிடந்தது நான் தற்போது தான் பின்னூட்ட பொறுக்கியாக மாறியதால், மஹா ஜனங்களின் கவனத்தில் பதிகிறது( கிட்ட தட்ட எம்.எஸ்.வி போலவே), அப்பதிவு கூட ஏதோ நானே சுயமாக சிந்தித்து எழுதியதாக மக்கள்ஸ் நினைக்கப்படாது , விக்டனில் எஸ்.ராமகிருஷ்ணன் கொட்டிய உணர்ச்சிகளில் கொஞ்சமே கொஞ்சம் நானும் என் பங்குக்கு பிறாய்ந்து வந்து போட்டேன்!
மக்களை ஆள்பவர் மகேசன் பார்க்கலைனாலும் , நீங்க சர்வேசன் உங்க கண்ணிலே பட்டதே பாதி கிணறு தாண்டினாப்போல தானே!
வவ்வால்,
வாங்க வாங்க.
லேசுல விடக் கூடாதுங்க இந்த மேட்டர.
நம்ம அரசாங்கம் பண்றது, சின்னபுள்ளத்தனமா இருக்கு.
பெட்டிஷன் போட்டுட்டேன், எவ்ளோ தூரம் போகுதுன்னு பாப்போம்.
பெட்டிஷன பரப்போணும்.
just 4 signatures so far.. :(
பாப்பன் ஜிங்சா அடித்தால் கூட பத்மஸ்ரீ விருது வீடு தேடி வரும். விஸ்வநாதன் பார்பனர் இல்லையே.
விருதா ? வெங்காயமா ?
இதெல்லாம் 'அவனுங்களுக்கு' ஒரு பொழப்பா ?
அப்துல் கலாமும் பார்ப்பனர் இல்லை அவருக்கு. பாரத ரத்னா எப்பயோ குடுத்துட்டாங்களே.
லிஸ்ட் பாருங்க, பலருக்கும் கிடைத்திருக்கு.
இவருக்கு கிடைக்காததர்கு காரணம் என்னன்னு தெரியல.
யாரும் வழிமொழியாமல் போயிருக்கலாம்?
இல்லன்னா, பதவியில் இருப்போர் யாரேனும் வேண்டாதவர்களாய் இருக்கலாம்?
கைஎழுத்து போட்டாச்சு....
நன்றி, TBCD.
அந்த velaiilley, நீங்க இல்லியே? :)
indha muyarchikku vazthukkal.
ஹூம்! விட்டுத்தள்ளுங்க. இதெல்லாம் சும்மா உடான்ஸு பூஷணுங்க ஐயா.
ஐயா எம்.எஸ்.வி.க்கு பதிவர் உலகு சார்பாக நாம் கொடுக்கும் குரலே ஒரு பெரிய விருதுதானங்க!
எம்.எஸ்.வி. ஐயா > எங்கிருந்தாலும் வாழ்க! காலத்தால் அழிக்க முடியாத பல பாடல்கள் படைத்த உங்களுக்கு என் வணக்கம்.
கையெழுத்து போட்டாச்சு.
மாசிலா, விடக்கூடிய மேட்டரில்லைங்க இது.
லதா மங்கேஷ்கருக்கு (I love Lataji, but still), பாரத ரத்னா கொடுத்திருக்கும்போது, இவருக்கு ஒன்றைக் கேட்பதில் இம்மியளவும் தவறில்லை.
// விஸ்வநாதன் பார்பனர் இல்லையே.
//
இதான் சம்பந்தமில்லாமல் உளர்றது என்பதோ? அவர் அக்மார்க் 'பாலக்காடு ஐயர்'.
Brahminical Negligance :-((
//Brahminical Negligance :-(( //
:)
நாங்க ஒரு பெட்டிஷன் எழுதி முதல்வரின் செயலாளர்கிட்டே குடுக்க முயற்சி பண்ணிட்டு இருக்கோங்க. உங்க Online பெட்டிஷனையும் நாங்க முன் வைக்கிறோம்.
Ila,
Great news. thanks for doing that.
let me know when you plan on doing that. We can try to expedite the 'online petition' signature hunt.
:)
best of luck.
சும்மா....
43 வந்திருக்கு... மேலும் வரட்டும்.
நானே தான் அந்த வேலையில்லை...இரண்டு தடவ போட்டுட்டேன்...ஹி ஹி
//* SurveySan said...
நன்றி, TBCD.
அந்த velaiilley, நீங்க இல்லியே? :) *//
//ILA(a)இளா said...
நாங்க ஒரு பெட்டிஷன் எழுதி முதல்வரின் செயலாளர்கிட்டே குடுக்க முயற்சி பண்ணிட்டு இருக்கோங்க. உங்க Online பெட்டிஷனையும் நாங்க முன் வைக்கிறோம்.//
இளா
நாம் விண்ணப்பம் செய்வது ஒரு பக்கம். (Petition)
முதல்வர் செயலாளர் மூலமாக முயற்சிகள் ஒரு பக்கம்.
MSV ஐயா இசையில் பாடிய பாடகர் பாடகிகள், எல்லாரும் சேர்ந்து விண்ணப்பத்தில் கையெழுத்து இட்டா இன்னும் நல்லா இருக்கும். அதில் பல பாடகர்கள் ஏற்கனவே விருது பெற்றவர்கள் தான்!
விருது பெற்றவரே, இவரை விட்டுவிட்டீர்களே என்று சொல்லும் போது அதன் மதிப்பு தனி அல்லவா?
இணையத்தில் அவர்கள் தளங்கள், மின்னஞ்சல் இருந்தால் அவர்களையும் தொடர்பு கொள்ளலாமே!
சர்வேஸ்
கையெழுத்து போட்டாச்சுங்க!
பத்மமும் பூஷணம் தாரார் - எம்.எஸ்.வி
தேனிசை கேளா தவர்!
TBCD, nenachen :)
KRS, நல்ல ஐடியா. விருது பெற்றவர்கள் எல்லாம் பிஸியா இருக்காங்க போல.
இனிஷியேட்டிவ் எடுக்கணும்னு யாருக்கும் தோணல.
எல்லாரும் பத்திரிகைகளுக்கு எழுதிப் போடலாம்.
they better act fast.
நெல்லை சிவாவின் இந்தப் பதிவை பாருங்கள்.
http://vinmathi.blogspot.com/2007/09/blog-post.html
சர்வேசன்,
நானும் கையொப்பம் இட்டுவிட்டேன். நல்ல முயற்சி. முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அற்புதமான கலைஞர் மெல்லிசை மன்னர் அவர்கள். அவர் உயிருடன் இருக்கும் போதே அவர் கெளரவிக்கப்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பமும்.
நன்றி வெற்றி!
தொடர் ஆதரவுக்கு நன்றி!
Dear Mr.Survey,
Great to see this initiative for an award for Mellisai Mannar MSViswanathan. This petition information has posted in the official website of MSV - MSVTimes.com and people have started signing in there. Hope this brings some attention.
The core crew of MSVTimes.com has already sent a personal letter to our President A.P.J Abdul Kalam and many Tamil Nadu leaders individually. Till now no reponse for them. Hope this brings some results.
I request you and all other people here to join the forum of MSVTimes.com and start interacting with MSV fans accross the globe!
Warm Regards
Ram
Hartford USA
Moderator
MSVTimes.com & MSVClub
MSVTimes,
Thanks for creating the awareness.
Lets hope it gets some visibility and someone who can take real action sees this.
good luck to us!
Dear Mr.Surveysan,
An announcement has been given in the Official Website of MSV - MSVTimes.com - on this online petition. And an email blast has been circulated to all the MSV Fans across the globe reg this Movement. We are hopeful that this will yield a positive result!
And your article and Mr.Nellai Siva's articles are also posted in the website's forum.
It is really heartening to see the petition signature count is increasing. Currently the count is: 222
We welcome your inputs and your writings in the Forum of MSVTimes. This invitation is also for everyone who is reading this message. (I've given a similar reply to Nellai Siva's blog as well)
This is on behalf of every member of MSV Club.
Regards,
Ram
Moderator
MSVTimes.com & MSVClub.
Thanks Ram!
vow, 222 is good. lets bring in more.
I will inform you when I add more posts on this topic. I have also requested other bloggers to write relevant posts to this topic.
I am glad this is taking some traction.
btw, 'Sundar Raman' is my nick name ;)
284. good going guys!
Keep it coming!
நன்றி!
284. good going guys!
Keep it coming!
நன்றி!
284 NOT OUT ;)) GREAT NEWS
மெல்லிசை மன்னருக்கும் இசைஞானிக்கும் இதுவரை மத்திய அரசு விருதுகள் கிடைக்காதற்க்குக் காரணம் வைரமுத்து. இவரின் சிபாரிசினால் தான் ரகுமானுக்கு விருது கிடைத்தது. கலைஞருக்கும் நிஜமான கலைஞன் யார் போலியான கலைஞன் யார் என்று தெரியவில்லை. எம் எஸ் வியும் ராஜாவும் ஜிங் சக் அடிக்கத் தெரியவில்லை
//மெல்லிசை மன்னருக்கும் இசைஞானிக்கும் இதுவரை மத்திய அரசு விருதுகள் கிடைக்காதற்க்குக் காரணம் வைரமுத்து. இவரின் சிபாரிசினால் தான் ரகுமானுக்கு விருது கிடைத்தது. கலைஞருக்கும் நிஜமான கலைஞன் யார் போலியான கலைஞன் யார் என்று தெரியவில்லை. எம் எஸ் வியும் ராஜாவும் ஜிங் சக் அடிக்கத் தெரியவில்லை
///
Interesting observation ;)
307 and counting....
சர்வேசன் - சுட்டிக் காட்டினதுக்கு நன்றி! கையெழுத்து போட்டாச்சு.
இத்தனை வருடங்கள் கழித்து இப்ப கொடுத்தா விருதுக்குத்தான் அவமானம். விஸ்வநாதன் எப்பொழுதுமே உயர்ந்துதான் நிற்கிறார்.
போட்டாச்சு....
I am 402!
(nall avaellai, 420ya irunthaa sollikka mudiyumaa?)
Prince, Thanks.
420 kalaikkap paduvaar ;)
Came to know today only. Signed.
-Arasu
சர்வேசன், இந்த பதிவுக்கு மிக மிக நன்றி.
சும்மா..
486 ஆயிருக்கு.
1000 ஆக்கணும்.
பீம்சேன் ஜோஷிக்கு பாரத ரத்னா விருது கொடுத்திருக்காங்களாம்.
ரொம்ப சந்தோஷம்!
அவரு ரத்னத்துக்கு தகுதியானவருங்கரதுல, எனக்கு இம்மியளவு கூட சந்தேகம் இல்லை.
ஆனா, இங்கே சில பேரு கவனிக்கப்படாம இருக்கரது, ஏதோ அரசியல் ச்தி மாதிரி தெரியுது.
;(((((
//முதல்வருக்கு வேண்டியவங்க யாராச்சும் எடுத்து சொல்லுங்கய்யா//
என்ன ஸ்ர்வேசன் நக்கலா!!?
எம்.எஸ்.விக்கு விருது கொடுக்கிறதால தனக்கு ஏதும் லாபமோ அல்லது பெயரோ கிடைக்கிறதா இருந்தால் மட்டும்தான் கலைஞர் அதைப்பத்தியே யோசிப்பாரு!!
இது வரைக்கும் செய்யல அப்படிங்கிறத வச்சு பார்க்கும்போது கலைஞருக்கு ஏதும் ஆதாயமில்லை அப்படீன்னு தெரியுது.
எதுக்கும் கலைஞர் ஸ்டைல்லியே அவருக்கு ஒரு தந்தி அனுப்பி பாருங்களேன்!!
குட் லக்!!!!!!
Post a Comment