recent posts...

Monday, August 20, 2007

ஜி.ரா'ஸ் இறால் குடைமிளகாயும் எங்க வீட்டு மீன் குழம்பும்

ஜி.ராகவனின் அடுப்படியில் இறால், குடைமிளகாய் வறுவல் செய்முறை கொடுத்திருந்தார்.

அந்த ஃபோடோ பாத்தவுடன் அத அப்படியே குத்தி குத்தி திண்ணனும்னு பேரவா எழுந்தது.

அவரும் கணக்கா வீக்-எண்ட்ல பதிவப் போட்டு ஜூடான இடுகைகள்ல இடம்புடிச்சு, எப்பவும் கண்ணுல பட்டுக்கிட்டே இருந்தாரு.

ரொம்ப நேரம் தாக்குப் பிடிக்க முடியாம, உடனே போய், இறாலும் (shrimp), குடைமிளகாயும் தேடிப் புடிச்சு வாங்கி வந்தாச்சு. சிவப்பு குடைமிளகாய் அவசரத்துக்கு கெடைக்கல, பச்சைதான் கிட்டியது.

அவரு சொன்ன மாதிரியே, ரொம்ப ஸ்ரத்தையா ஸ்டெப்-பை-ஸ்டெப் ஃபாலோ பண்ணி, இறால் ரெடி பண்ணியாச்சு.
மற்ற மசாலாக்கள் சேர்க்காத வறுவல் என்பதால், இறாலின் சுவை கூடியிருப்பதாகவே தோன்றுகிறது. இல்லன்னா, ஜி.ராவின் எழுத்துத் திறமையால் எனக்கு அப்படி தோணுதான்னு தெரியல.
குத்தித் குத்தித் திண்ண தெவிட்டாத இன்பம்.
இதோ, எங்க வீட்டு இறால் ஃப்ரை!



நீங்களும் ஃப்ரை பண்ணுங்க!

இறால் வாங்கப் போன எடத்துல ஃப்ரெஷ்ஷான அமெரிக்கன் மேக்கரல் (நம்மூரு அயிலை மீன்) கிடைத்தது.
விடுவோமா, அதயும் கொண்டாந்து, ஒரு சூப்பர் மீன் குழம்பு செஞ்சாச்சு.
மீன் குழம்பும், இறால் வறுவலும், ரொம்ப நல்ல காம்பினேஷன். அமோகமா இருந்ததுங்கோ!

மீன் குழம்பின் படங்கள் கீழே :)
(செய்முறை வேணுமா?)



பி.கு1: யாராவது மட்டைன் லிவர் ஃப்ரைக்கு நல்ல ரெஸிபே சொல்லுங்களேன்.

பி.கு2: டோண்டு ராகவனும், பட்டறையும், சைக்கோவும், என் சுதந்திரம் பறிபோன கதையும்

பி.கு3: கும்மியர் 007 வாக்கியாச்சா?

10 comments:

✪சிந்தாநதி said...

இந்தாங்க லிவர் ப்ரை :)

http://tamilmeal.blogspot.com/2007/08/blog-post.html

Anonymous said...

:)
எப்படி நீங்களும் ஜீரா அண்ணாவும் எனக்கு பசிக்கும் சமயத்தில் இப்படி எல்லாம் போஸ்ட் போட்டு வாயில் எச்சில் ஊற வைக்கின்றீர்கள்.இந்த பாவம் உங்க ரெண்டு பேரையும் சும்மா விடாது,
மீன் குழம்பை சாப்பிட்டவங்க யாரச்சும் certificate கொடுக்க சொல்லுங்க.அப்புறம் தைரியமாக சமையல் குறிப்பை தரவும் :D


//பி.கு1: யாராவது மட்டைன் லிவர் ஃப்ரைக்கு நல்ல ரெஸிபே சொல்லுங்களேன்.//
u mean mutton liver fry?

SurveySan said...

நன்றி சிந்தாநிதி, இந்த வீக்.எண்ட் உங்க பேர சொல்லி, ஒரு ஃப்ரை முயற்சி பண்ணிப் பாத்துடறேன் :)

வாங்க துர்கா, மீன் குழம்பு சாப்ட மயக்கத்துல இருந்து இன்னும் மீளல :)

Anonymous said...

//வாங்க துர்கா, மீன் குழம்பு சாப்ட மயக்கத்துல இருந்து இன்னும் மீளல :)//

கண்டிப்பாக உங்க வயிறு வலிக்கும்.இது எனது சாபம் :))

SurveySan said...

//கண்டிப்பாக உங்க வயிறு வலிக்கும்.இது எனது சாபம் :)) //

அடக் கொடுமையே.மன்னிச்சு வுட்ருங்க. வேணா ஒரு பார்சல் அனுப்பறேன் :)

G.Ragavan said...

சூப்பர் சர்வேசன். இறாலே ஒரு விருந்து. கூட மீன் கொழம்புமா! கலக்கல்.

// அவரு சொன்ன மாதிரியே, ரொம்ப ஸ்ரத்தையா ஸ்டெப்-பை-ஸ்டெப் ஃபாலோ பண்ணி, இறால் ரெடி பண்ணியாச்சு.
மற்ற மசாலாக்கள் சேர்க்காத வறுவல் என்பதால், இறாலின் சுவை கூடியிருப்பதாகவே தோன்றுகிறது. இல்லன்னா, ஜி.ராவின் எழுத்துத் திறமையால் எனக்கு அப்படி தோணுதான்னு தெரியல. //

சர்வேசன், சமையல்ல ஆரம்பப்பாடமே, நாம பயன்படுத்துற பொருட்களோட சுவையை அப்படியே காட்டுறதுதான். மசாலா நெறையப் போட்டுட்டா மசலா சுவைதான் தெரியும். அதுனாலதான் மசாலா எண்ணெய் ஆகியவைகளை முடிஞ்ச வரைக்கும் குறைக்கனும். அதத்தான் அந்தச் சமையல் குறிப்புல நான் செஞ்சிருந்தேன். மத்தபடி சுவையெல்லாம் எழுத்துத் திறமைல இருந்து வரலை. இறால்ல இருந்துதான் வந்துச்சு. :))))))))))

மேக்கரல் இங்கயும் கெடைக்குது. ஆனா வாங்குறதில்லை. இங்க வந்தப்புறம் சால்மன் தான் வாங்குறது. ஹி ஹி. அந்த மீன் கொழம்ப எப்படிச் செஞ்சீங்கன்னு சொல்லுங்களேன்.

Anonymous said...

//
அடக் கொடுமையே.மன்னிச்சு வுட்ருங்க. வேணா ஒரு பார்சல் அனுப்பறேன் //

சாப்பிட முடியுமா?இல்லை ரிஸ்க் எடுத்து சாப்பிடனுமா?என்ன இங்கே comment moderation எல்லாம் இருக்கு.புதுசா இருக்கே.என்ன பிரச்சனையா?

Anonymous said...

ஹிஹி.இப்போ புரியுது.என்ன இவ்வளவு லேட்டா ஆப்பு வாங்கி இருக்கீங்க.அடுத்தது போலி சர்வேசன் வந்தால் என்ன பண்ண போறீங்க :P

SurveySan said...

ஜி.ரா, மீன்குழம்பு ரெசிப்பீ போட்டுடறேன் உடனே.

//இங்க வந்தப்புறம் சால்மன் தான் வாங்குறது. ஹி ஹி. அந்த மீன் கொழம்ப எப்படிச் செஞ்சீங்கன்னு சொல்லுங்களேன்.
//

சால்மன் இல்ல, ஸேமன் (ல் சைலண்ட்) :)

சால்மன அப்படியே பச்சையா திங்கறாங்க இங்க.சுஷியாம்.

SurveySan said...

துர்கா,

//ஹிஹி.இப்போ புரியுது.என்ன இவ்வளவு லேட்டா ஆப்பு வாங்கி இருக்கீங்க.அடுத்தது போலி சர்வேசன் வந்தால் என்ன பண்ண போறீங்க ://

லேட்டா வாங்குனாலும் லேட்டஸ்டு நம்மளதுதானோ.
போலி வந்தா, உருட்டி வாய்ல போட்டு சாப்டுவேன் :)