recent posts...

Tuesday, August 14, 2007

அதி புத்திசாலித்தனமான ஒரு கேள்வி...

ரொம்ப நாளா ஒரு கேள்வி மனச அரிச்சுக்கிட்டே இருக்கு.
இணையத்தில் விடை தேடினபோதும் திருப்தியான விடை ஒண்ணும் கெடைக்கல.

இயற்கை வலியதுன்னு எல்லாருக்கும் தெரியும்.
இயற்கையின் design அபாரமானது, ஆச்சரியமளிப்பது.

மனுஷன் பொறந்து வருஷக் கணக்கானா தான் நடக்க முடியும். ஆனா, ஆடு, மாடு, மானெல்லாம் பாத்தீங்கன்னா பொறந்த அடுத்த நொடியில எழுந்து நடக்க ரெடியாயிடும்.
அவற்றின் வாழும் சூழலுக்கேற்ப இந்த design.
ஆடு, மாடு, மானெல்லாம் எழுந்த நடக்க ஒரு வருஷம் எடுத்திக்கிட்டா, சுத்தி நிக்கர சிங்கம் புலியெல்லாம் உடனே அதை அப்பீட் செஞ்சுடுமாம், அதனாலதான் இயற்கையின் design ஆடு, மாட்டை உடனே நடக்கச் செய்கிறது.

உச்சு கொட்டாதீங்க, என்றோ பார்த்த நேஷனல் ஜியாக்ரபில சொன்ன மேட்டர் தான் இது. என் அறிவு ஜீவிக் கேள்வி மேட்டர் இதல்ல.

இப்படிப் பட்ட 'பக்கா' design கொண்ட இயற்கை ஆண்டவனால் வடிவமைக்கப் பட்டது என்பதுதான் என் நம்பிக்கை. (இயற்கை தான் ஆண்டவன் என்றும் வைத்துக் கொள்ளலாம்).

Prey, Predator, survival of the fittest இதெல்லாம் இயற்கையின் நியதிகள் என்பதும் புத்திக்குப் புரிகிறது.
ஒரு குழந்தை உருவாகி, உருப்பெற்று, வடிவாகி, பிறக்கும் வரை இதே நேஷனல் ஜியோவில் காண்பித்தார்கள். அப்பப்பா, எப்படிப்பா இப்படியெல்லாம் design பண்ண என்று கடவுளைப் பார்த்தால் கேட்க வேண்டிய கேள்விகள் பல உள்ளன.

இன்னிக்கு உங்க கிட்ட கேக்கர கேள்வி இதுதான்.
என்னென்னமோ இயற்கைல தில்லாலங்கடி மேட்டரெல்லாம் இருக்கு. ஆனா, இந்த கடல் தண்ணி மட்டும் ஏன் இப்படி உப்பா இருக்கு?
அறிவியல் காரணங்கள் கேக்கல -- ஆண்டவன் இப்படி ஏன் படச்சான்?

மெலிந்த கொடியில் பெரிய பூசனிக்காயையும், பெரிய மரத்தில் குட்டி புளியங்காயையும் வைத்த இறைவனின் படைப்பின் புத்திசாலித்தனம், சிறு வயதில் படித்த நியாபகம் உண்டு.

ஆனா, இந்த கடல் தண்ணி உப்பாக்கினது எந்த வகையில நியாயம்/புத்திசாலித்தனம்?

இதன் அவசியம் என்னவா இருந்திருக்கும்?

இவ்ளோ அழகா பல விஷயங்கள் செஞ்சவருக்கு, இந்த உப்பு மிக்ஸிங்குக்கு ஏதாவது ஒரு காரணம் இருந்திருக்கும். அது என்னங்க?

ஆத்தீகர்களும், நாத்தீகர்களும், காரணங்களை யோசித்து பதிவாகவோ பின்னூட்டமாகவோ இடுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். :)

பி.கு1: ஜன கன மன 15 பேர் தேறியாச்சு, இன்னும் 45 வேணும். அடுத்த வருஷத்துக்குள்ளவாவது வந்துருவீங்களா? பாடத் தெரியாதவங்க இங்க கேட்டு கத்துக்கலாம். சூப்பர் லெஸன்.

பி.கு2: MSVயை மறக்காதீங்க. 20 கையெழுத்துக்கள் கெடச்சிருக்கு இதுவரை. இளா, முதல்வர் கிட்ட மேட்டர் கொண்டு போரேன்னு சொல்லியிருக்காரு. உடனே பெயர் பதியுங்கள்.

24 comments:

Anonymous said...

Saline water = Less infection.
What happens when it rains heavily and there is not enough drainage? Diseases (Bacteria,Virus etc) Why? It is not salt water. Thats not the case with sea water right? Because it is saline.

SurveySan said...

anony, interesting thought.

I understand, stagnant filthy water can be infectious.
but, there are great lakes which has good drinking water and at the same time not infected.
why not the same can be expected from the sea?

thanks,

கோவி.கண்ணன் said...

//ஆனா, இந்த கடல் தண்ணி உப்பாக்கினது எந்த வகையில நியாயம்/புத்திசாலித்தனம்?
//

பெட்ரோலாக இருந்தால் எப்படி இருக்கும் ?

:)))

ஆற்றுநீர் அடித்துச் செல்லும் சோடிய படிமங்களால் உப்பு சேர்ந்ததாகத்தான் ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். உப்பு நீரிலும் உயிரினங்கள் வாழ்வதுதான் பரிணாமவளர்ச்சியின் ( அதாவது சூழ்நிலைக்கேற்றவாறு வாழும் படி தன்மையை மாற்றிக் கொள்ளுதல்) எடுத்துக்காட்டாக இருக்கிறது

SurveySan said...

கோவி,

பெட்ரோலா இருந்திருந்தா, பரிணாம வளர்ச்சி படி, எல்லாரும் அத குடிச்சுட்டு, டுர்ர்ர்ர்ர்ருனு ஆபிஸுக்கு, பொக விட்டுக்கிட்டே ஓடிப் போயிருந்திருப்போம் .

:)

வெற்றி said...

/* இவ்ளோ அழகா பல விஷயங்கள் செஞ்சவருக்கு, இந்த உப்பு மிக்ஸிங்குக்கு ஏதாவது ஒரு காரணம் இருந்திருக்கும். அது என்னங்க?

ஆத்தீகர்களும், நாத்தீகர்களும், காரணங்களை யோசித்து பதிவாகவோ பின்னூட்டமாகவோ இடுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். :) */

நீங்கள் கடல் உப்பு நீராக இருப்பதற்கு ஆன்மீகக் காரணம் தேடினால், கவியரசர் கண்ணதாசன் தனது அர்த்தமுள்ள இந்துமத உரையில் இதற்கான தத்துவ விளக்கம் ஒன்றைச் சொல்கிறார்.

கவியரசரின் அந்த உரை musicindiaonline.com ல் இருக்கிறது. கேட்டுப் பாருங்கள்.
அந்த உரையில் நமது வீட்டு விசேடங்களின் போது செய்யும் சடங்குகளுக்குமான விளக்கங்களும் சொல்கிறார் கவியரசர்.

வவ்வால் said...

சர்வே .
அப்போ அறிவியல் காரணம் உங்களுக்கு தெரிஞ்சு இருக்கு. அப்புறம் என்னத்துக்கு ஆண்டவன் ஏன் இப்படி பன்னினான் என்று கேள்வி , பதில் சொல்ரவங்க எல்லாம் ஆண்டவன் கூட எஸ்.டீ.டி அல்லது .ஐ.எஸ்.டி போட்டு ஆண்டவன் கூட பேசி பதில சொல்லப்போறங்களா? ஆண்டவன் இருக்கானா? நாட்டை ஆண்டவங்க தான் இருக்காங்க!

ஆண்டவன் தான் எல்லாத்துக்கும் காரணம் என்று நீக்கள் நம்பினால் நம்பி விட்டு போங்கள். ஏன் இப்படி புத்திசாலித்தனமா கேள்வி கேட்கிறேன் பேர்வழினு மொக்கை போடுறிங்க!

//அறிவியல் காரணங்கள் கேக்கல -- ஆண்டவன் இப்படி ஏன் படச்சான்?//

இதிலும் நாத்திகர்களும் பதில் சொல்லுங்கள் என்று வேறு கேட்கிறீர்கள் அதற்கு முன்னர் அறிவியல் விளக்கம் வேண்டாம் இறைவன் ஏன் இப்படி படைத்தான் சொல்லுங்கள் என்று வேறு கேட்கிறீர்கள் , என்ன ஒரு முரன்பாடு?

Anandha Loganathan said...

கடல் தண்ணீர் உப்பாக இல்லேன்னா எப்படி உப்பு எடுக்கிறது. உப்பு இல்லேன்னா எப்படி சமைக்கிறது.
சாப்பட்டுக்காக தான் கடல் தண்ணி உப்பாக இருக்கு. :)

இந்த பதில் அறிவியல் பூர்வமாகவும் கிடையாது. ஆன்மீகமும் இல்லை.

//அதி புத்திசாலித்தனமான ஒரு கேள்வி... //
இது அதையும் தாண்டி புத்திசாலிதன்மான பதில். :)

SurveySan said...

வெற்றி, கண்ணதாசன் என்ன சொன்னாருன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் :)
நானும் கேட்டு பாக்கறேன்.

SurveySan said...

வவ்வால், அறிவியலுக்கு அப்பாற்பட்ட மேட்டர் நெறைய இருக்குங்க.

அத தெரிஞ்சக்கத் தான் இந்த பதிவு.

ஆத்திக்கன், ஆண்டவன் ஏன் செஞ்சாருன்னு சொல்லட்டும்.
நாத்திகன், இயற்கைல ஏன் இப்படின்னு, சொல்லட்டும்.

SurveySan said...

ஆனந்த லோகநாதன்,

//கடல் தண்ணீர் உப்பாக இல்லேன்னா எப்படி உப்பு எடுக்கிறது. உப்பு இல்லேன்னா எப்படி சமைக்கிறது.
சாப்பட்டுக்காக தான் கடல் தண்ணி உப்பாக இருக்கு. :)

இந்த பதில் அறிவியல் பூர்வமாகவும் கிடையாது. ஆன்மீகமும் இல்லை. //

:)

SurveySan said...

இன்னும் சரியான பதிலு வரலயே?

ILA (a) இளா said...

சின்ன கவுண்டர்ல செந்தில் கவுண்டமணிய பார்த்து கேட்ட மாதிரி கேட்டா சொல்ல முடியாது

//அறிவியல் காரணங்கள் கேக்கல -- ஆண்டவன் இப்படி ஏன் படச்சான்?//
இதுக்கு எல்லாம் ஆண்டவனை இழுக்க முடியுமா?

Anonymous said...

raising questions is easy. answering is very difficult.

1. Why is earth a sphere? How can the enormous heat is dissipeted to our sufface?

2. How can air be colorless? So does water?

3. How can light alone can travel in such a speed?

4. where is line that seperates the rainwater falling from clouds to reach the ocean but the ocean huge water body is able to be stable by gravity?

SurveySan said...

இளா, செந்திலோ கவுண்டமணியோ,
திருப்தி படர மாதிரி ஒரு பதில் சொல்லுங்க சாரே :)

SurveySan said...

anony,

ofcourse raising question is easy.

so, what say you?

why do you think God made Sea water salty?

வவ்வால் said...

சர்வே ,
//ofcourse raising question is easy.//

சொன்னது ... நீர் தானா ....
:-))

கடவுள் இருக்காரா, இருந்தா காட்டுங்கள் , அப்புறம் இந்த கேள்விக்கெல்லாம் பதில் தானா வரும்!

வவ்வால் said...

மாடரேசன் வைத்துள்ள சர்வேசன் , அப்புறம் என்னத்துக்கு கமெண்ட் மாடரேசன் இல்லைனு ஒரு விளம்பரம் வைத்துள்ளீர் அதையும் தூக்கி கடாசலாமே!(பிரச்சினகளை தவிர்க்க மாடரேசன் இருப்பது தவறில்லை but..)

SurveySan said...

Vavvaal,,
//மாடரேசன் வைத்துள்ள சர்வேசன் , அப்புறம் என்னத்துக்கு கமெண்ட் மாடரேசன் இல்லைனு ஒரு விளம்பரம் வைத்துள்ளீர் அதையும் தூக்கி கடாசலாமே!(பிரச்சினகளை தவிர்க்க மாடரேசன் இருப்பது தவறில்லை but..)//

just to remember the good old days! :)

அரை பிளேடு said...

கடவுள் மனிதனை படைத்து முடித்துவிட்டார்.

பிறகு ஏண்டா போயும் போயும் இந்த மனிதப்பயலை படைத்தோம் என்று அவர் அழ..

அவர் அழுத கண்ணீர்தான் கடலாய் பூமியில் தேங்கியது. :)

Anonymous said...

பதில் இருக்கு ஆனா நீங்களே படிச்சு கண்டுப்பிடிச்சிக்கோங்க.இப்படி எல்லாம் கேள்வி கேட்டு மனுசனை tension படுத்தியதற்கு ஒரு சின்ன பரிசு.இதுவும் ஒரு காரணமாக இருக்கலமே
http://oceancolor.gsfc.nasa.gov/SeaWiFS/TEACHERS/CHEMISTRY/
புரியாட்டி வந்து என்கிட்ட கேளுங்க.எனக்கும் லேசாதான் புரியுது.ஹிஹி

Anonymous said...

http://oceancolor.gsfc.nasa.gov/SeaWiFS/TEACHERS/CHEMISTRY/

link broken :P

sorry

வெட்டிப்பயல் said...

//அரை பிளேடு said...

கடவுள் மனிதனை படைத்து முடித்துவிட்டார்.

பிறகு ஏண்டா போயும் போயும் இந்த மனிதப்பயலை படைத்தோம் என்று அவர் அழ..

அவர் அழுத கண்ணீர்தான் கடலாய் பூமியில் தேங்கியது. :)

ithu thaan sari :-)

Anonymous said...

சாமி! கடல் தண்ணி உப்பா? நம்ம சிறுனீர் கூட உப்புத்தானாம். எப்படி ?

SurveySan said...

vanakkam vetti! nalla badhil dhaan.

anony,
//சாமி! கடல் தண்ணி உப்பா? நம்ம சிறுனீர் கூட உப்புத்தானாம். எப்படி ?//

ayyo samy, eppadippaa ippadi kalakkareenga.