Monday, August 11, 2008

IPKF, LTTE, சிங்களர்கள், ராஜீவ் - எது உண்மை?

எங்க ஊர்ல, $20க்கு கரிகாய் வாங்கினா, ஒரு டி.வி.டி இனாம். ஒவ்வொரு தடவையும் எந்த டிவிடி எடுப்பதுன்னு மண்ட காயும். தமிழ்ல வந்த எல்லா படமும் பாத்தாச்சு, சுப்ரமணியபுரம் வரை. புதிதாய் வந்துள்ள Mission 90 days என்ற மலையாளப் படம் கண்ணில் பட்டது. மம்முட்டி இந்த வயதிலும் ஜம்முன்னு ஒரு கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு அட்டையில் இருந்தாரு.

டிவிடி பின்னாடி திருப்பிப் பாத்தா, ராஜீவ் கொலை வழக்கை துப்பறிவது பற்றிய கதைன்னு போட்டிருந்தது.

ஏற்கனவே, தமிழ்ல குப்பின்னு ஒரு படம் பாத்திருக்கேன். நல்லா எடுத்திருந்தாங்க.

ஆனா, ஒரு மெஸேஜும் தெளிவா சொல்லாம, கொலையாளிகளைப் பிடிப்பது மட்டுமே மையக் கருத்தா இருந்தது அந்த படத்துல. எதுக்காக சாகடிச்சாங்க, தப்பா ரைட்டா என்ற அலசல் எல்ல்லாம் இல்லை (இருந்ததா? நான் மறந்துட்டேனா?) அந்த படத்தில்.

சரி, பக்கத்து ஊரு காரனுங்க எப்படி எடுத்திருந்தாங்கன்னு பாக்கலாமேன்னு முடிவு பண்ணி படத்தை வாங்கிப் பாத்தேன்.

படம், ஓஹோன்னு ஒண்ணும் இல்லை. ஒரு தடவை பாக்கலாம், அம்புடுதேன். மேஜர் ரவின்னு ஒருத்தர் தான் இயக்குனர், அதனால, அமெச்சூரா நெறைய விஷயம் கண்ணில் பட்டது.

ஆனா, படத்தில் பெரிய மெஸேஜ் இருந்தது. அதுதான் இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.

ராஜீவைக் கொல்ல LTTEக்கு என்ன காரணம் இருந்தது?

எனக்குத் தெரிந்து, ராஜீவ் அனுப்பிய IPKF அங்கு சென்று பல mis-adventures செய்ததாலும், அதற்கு பழி தீர்க்கும் படலமாக, ராஜீவைக் கொன்றதாகவும் ஊடகங்களில் பார்த்ததாக ஞாபகம்.

ஆனால் இந்த படத்தில் சொல்லப்படும் மெஸேஜ்:

1) ராஜீவ் இந்தியாவின் ஒரு உன்னதத் தலைவராக வர இருந்தவர். அவர் இழப்பு, நமது நாட்டின் எதிர்காலத்திற்கு மிகக் பெரிய இழப்பு.

2) ராஜீவ் IPKFஐ அனுப்பியது, இலங்கைத் தமிழர்களின் நலனை மனதில் கொண்டு மட்டுமே.

3) IPKFஐ அங்கு அனுப்பாதிருந்திருந்தால், பாக்கிஸ்தான் தனது ராணுவத்தை அனுப்பி, அமெரிக்காவும் அங்கு ஒரு தளத்தை உருவாக்கி இருக்கும். இது இந்தியாவுக்கு நல்லதல்ல.

4) IPKF சில mis-adventures செய்தது உண்மையாக இருந்தாலும், சிங்கள ராணுவமும் அரசியல்வியாதிகளும் அதை ஊதிப் பெரிதாக்கி, LTTEக்கும், IPKFக்கும் இடையே மோதல் ஏற்பட வழி செய்தார்கள்.

5) சிவராசன் + கூட்டாளிள் வசித்திருந்த இடத்தை நமது ராணுவ கமேண்டோக்கள், ராவோடு ராவாக சுற்றி வளைத்ததாகவும், ஏதோ ஒரு உயர் அதிகாரி, தனது தனிப்பட்ட (புகழ்) லாபத்துக்காக, தான் நேரில் வரும் வரை யாரும் ஒன்றும் செய்யக் கூடாது என்று கூறி, கமேண்டோக்களை 12 மணி நேரம் தேவுடு காக்க வைத்தாராம். அந்த இடைப்பட்ட நேரத்தில் தான் சிவராசன் + கூட்டாளிகள் தற்கொலை செய்து கொண்டனராம். அந்த அதிகாரி, உரிய நேரத்தில், 'கோ' சொல்லியிருந்தால், சிவராசனை உயிருடன் பிடித்திருக்க முடியுமாம்.

படத்துல மம்மூட்டி வேகமா ஒரு டயலாக் நல்லா பேசுவாரு.
ஆனா, ராஜீவ் கொலை செய்யப்படும் முன், ஸ்ரீபெரும்புதூரில், ஒரு சிறுமி அவரைப் புகழ்ந்து பாடுவது போன்ற படக் காட்சி கொஞ்சம் ஓவர். கீழே வீடியோல அந்த பாட்டுத்தான்.


கருத்ஸ்?

33 comments:

Bleachingpowder said...

இலங்கையில் ஒரு புறம் சிங்கிள ராணுவம் தமிழர்கள் வாழும் பகுதியில் குண்டு வீசி அப்பாவி பொது மக்களை கொல்வதாக விடுதலை புலிகளும், அவர்கள் ஆதரவு அரசியல்வாதிகளும் கூறி வருகின்றனர்.

அதே சமயம் இவர்கள் யாரும் கொழும்பு நகரில் பஸ்,ரயில் நிலையம் போன்ற இடங்களில் நிகழும் குண்டு வெடிப்பை யாரும் கண்டு கொள்வதில்லை, கண்டிப்பதும் இல்லை. அதில் பலியாகிறவர்களும் அப்பாவி பொது மக்கள் தானே. இது மட்டும் நியாமா?

சிங்கள ராணுவத்தை எதிர்ப்பது வேறு சிங்கள பொதுமக்களை கொல்வது வேறு.

முதலில் இலங்கை ராணுவமும், புலிகளும் அப்பாவி பொது மக்களை கொல்வதை நிறுத்த வேண்டும். இது நடந்தாலொழிய இந்தியா இவர்கள் பிரச்சனையில் தலையிட கூடாது என்பதுதான் என் கருத்து.

இன்னும் சுருங்கச் சொன்னால் இது அவர்கள உள்நாட்டுப் பிரச்சனை. அங்கே பாதிக்க படுவது தமிழ் பேசும் ஈழ மக்கள் எனபதால் தமிழ்நாட்டில் மட்டும் புலிகளுக்கு ஆதரவாக சில அரசியல் கட்சிகள் இருக்கிறது. மற்ற மாநிலங்களை பொறுத்த வரை, அவர்களுக்கு இலங்கையில் என்ன நடந்தாலும் நமெக்கென்ன என்கிற மனோபாவம் தான்.

உண்மைத்தமிழன் said...

//ஆனா, ஒரு மெஸேஜும் தெளிவா சொல்லாம, கொலையாளிகளைப் பிடிப்பது மட்டுமே மையக் கருத்தா இருந்தது அந்த படத்துல. எதுக்காக சாகடிச்சாங்க, தப்பா ரைட்டா என்ற அலசல் எல்லாம் இல்லை (இருந்ததா? நான் மறந்துட்டேனா?) அந்த படத்தில்.//

ஹலோ சர்வேஸ்.. உங்களுக்கே இது நல்லாயிருக்கா..? என்ன மெஸேஜ் சொல்றாங்கன்னு கேக்குறதுக்குத்தான் நீங்க சினிமாவுக்குப் போறீங்களா? இல்ல.. எல்லா சினிமாலேயும்தான் மெஸேஜை அள்ளி வீசுறாங்களா.. ))))))))))

குப்பி படத்தில் சிவராசன்-தனு எப்படி பிடிபட்டார்கள் என்பதைத்தான் சொல்கிறார்கள். ஒரு சம்பவம் எப்படி நடந்தது என்பதைக் காட்டுவதுதான் நோக்கமே தவிர, அது சரியா? தவறா என்ற சிந்தனைக்குள் நுழையவில்லை. நுழைந்தால் அதற்கு இன்னும் 3 படம் பண்ணணுமாக்கும்..

இந்தப் படத்தை இயக்கிய மேஜர் ரவிதான் அன்றைக்கு சிவராசன்-தனுவை சுற்றி வளைத்த கர்நாடக சிறப்பு அதிரடிப் படையின் தலைமை அதிகாரியாம். இரவோடு இரவாக உள்ளே புகுந்துவிடலாம் என்று இவரும், மற்ற உயர் அதிகாரிகளும் எவ்வளவோ சொல்லியும் விசாரணைக் குழுவின் தலைமை அதிகாரி கார்த்திகேயன் தான் வந்த பின்புதான் எதையும் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுவிட்டு காலையில்தான் பெங்களூர் வந்து சேர்ந்தாராம். அதன் பின்புதான் அதிரடித் தாக்குதல், சிவராசன்-தனு தற்கொலை சென்று முடிந்ததாம்..

இஅதுதான் மேஜர் ரவிக்கு கார்த்திகேயன் மீது கோபமோ கோபம்..

Anandha Loganathan said...

//5) சிவராசன் + கூட்டாளிள் வசித்திருந்த இடத்தை நமது ராணுவ கமேண்டோக்கள், ராவோடு ராவாக சுற்றி வளைத்ததாகவும், ஏதோ ஒரு உயர் அதிகாரி, தனது தனிப்பட்ட (புகழ்) லாபத்துக்காக, தான் நேரில் வரும் வரை யாரும் ஒன்றும் செய்யக் கூடாது என்று கூறி, கமேண்டோக்களை 12 மணி நேரம் தேவுடு காக்க வைத்தாராம். அந்த இடைப்பட்ட நேரத்தில் தான் சிவராசன் + கூட்டாளிகள் தற்கொலை செய்து கொண்டனராம். அந்த அதிகாரி, உரிய நேரத்தில், 'கோ' சொல்லியிருந்தால், சிவராசனை உயிருடன் பிடித்திருக்க முடியுமாம்.//

நான் எங்கயோ படித்தது. கமாண்டோ படைகள் சிவராசனை சுத்தி வளைத்தபோது கார்த்திகேயன் அப்போது ஹைதேரபாடில் இருந்ததாக கீல்விபட்டேன். அங்கிருந்து இங்கு வர அவர் 12 மணி நேரத்துக்கும் அதிகமாக எடுத்து கொண்டதாகவும் , அப்பூது கார்த்திகேயன் ஒரு முக்கியமான விலையில் இருந்ததாகவும் ,இவர்களை பிடிப்பதைவிட அவருக்கு வேறு என்ன முக்கியமான வேலை இருக்க முடியும் இன்றும் இதில் ஒரு அவிழ்க்கப்படாத முடிச்சு இருப்பதாகவும் ஒரு வதந்தி நிலவியது.

SurveySan said...

interesting......

here is an interview by major ravi.

http://www.monstersandcritics.com/movies/indiancinema/news/article_1330049.php/Filmmaker_Ravi_regrets_not_catching_Rajiv_Gandhi_murder_mastermind

Indian said...

//2) ராஜீவ் IPKFஐ அனுப்பியது, இலங்கைத் தமிழர்களின் நலனை மனதில் கொண்டு மட்டுமே. //

அப்படியா? இல்ல, ஜே.என்.திக்ஸித் என்ற வெளியுறவுத் துறை அதிகாரி ( தன் தனிப்பட்ட பெருமைக்காக ) ராஜீவை தவறாக வழிநடத்தி அவரின் மரணத்துக்கு அடி கோலினாரா?

சர்வேசன், இப்படி பதிவு போட்டமைக்கு நன்றி.
நல்ல விவாதத்துக்கு வழி வகுக்கும் என நம்புகிறேன்.

இதுவரை தமிழர்கள் ராஜீவின் கொலை தமிழகத்தில் நடந்து விட்டதே, பழி விழுந்து விட்டதே என் ஒரு குற்ற உணர்ச்சியினூடே இந்தப் பிரச்சினையை அணுகுகிறார்கள்.

அமெரிக்காவுக்கு வியட்நாம் போல இந்தியாவுக்கு ஈழம் அமையக் காரணம் என்ன?
குள்ள நரி ஜெயவர்த்தனா அழைத்ததால், அதன் சாதக பாதகங்களை ஆராயாமல் ஒத்துக் கொண்ட வெளியுறவுத் துறை அதிகாரி ராஜதந்திரிகளா இல்லை அறிவிலிகளா?

Indian said...

இந்தியாவின் வியட்நாம்; ரீடிஃப்பில் வெளிவந்த கட்டுரைத் தொடரையும் பாருங்கள்.

http://www.rediff.com/news/2000/mar/23lank.htm

Anonymous said...

நம்ம நாடு இந்தியா, இலங்கையில் சிங்கள அரசின் நலனுக்காகவும் நம்ம நாட்டு நலனுக்காகவும் தானே இராணுவத்தை அங்கே அனுப்பப்பியது.

ஈழத் தமிழர்கலளின் நலனுக்காக அனுப்பப்படவில்லை.

தமிழன் என்றால் மத்திய அரசுக்கு(காங்கிரசுக்கு) கவலையில்லை.

தற்பொழுது நம்முடைய மீனவர்கள் கொலை செய்யும் போது கண்டுக்காமல் இருக்கும் மத்திய அரசு, சிங்கள அரசுக்கு ஆயதங்களை அள்ளி வழங்குவது எதைக்காட்டுது.

அங்கே சென்ற இந்திய இராணுவம், புலிகளை வேட்டையாடுவதற்கு பதிலாக அங்குள்ள அப்பாவிப் பொதுமக்களைக் கொலை செய்தது. இளம்பெண்களைக் கற்பழிப்பு செய்தது. வீடுகளில் கொல்லை அடித்தது.

உருப்படியான உள்ளடக்கம் இல்லாத இலங்கை,இந்திய ஒப்பந்தத்தை திணித்தது. சென்றவருடம் சிறிலங்கா அரசு, அந்த ஒப்பந்தத்தைக் கிழிக்கும் போது ஏன் என்று கேட்காமல் இருந்ததும் நம்முடைய பாரதம் தானே.

ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பையே ரத்துச் செய்து விட்டது இலங்கை அரசு.அப்படியான ஒரு போலித் தீர்வைத்தான ஈழத்தமிழர்கள் தலையில் ராஜீவ் அரசு கட்ட யுத்தம் செய்திருக்கிறது.

இறுதியில் இந்தியப்படைகளால் ஈழத்தமிழர் கண்டது என்ன. பேரழிவு மட்டுமே.

நாங்க அதையெல்லாம் யோசிக்காம, அங்க நடந்த உண்மையை சரிவர அறிஞ்சுக்காம இன்னும் காலம் கடந்திறதும் கருத்துச் சொல்லுறதும் சரியானதா எனக்குப்படல்ல.

Indian said...

//4) IPKF சில mis-adventures செய்தது உண்மையாக இருந்தாலும், சிங்கள ராணுவமும் அரசியல்வியாதிகளும் அதை ஊதிப் பெரிதாக்கி, LTTEக்கும், IPKFக்கும் இடையே மோதல் ஏற்பட வழி செய்தார்கள்.//

அது அவ்வளவு சின்ன விசயமா?

Indian said...

1991 பொதுத்தேர்தலில் இந்திரா காங்கிரஸ் வெல்லும் நிலை இருந்தது.
ராஜிவ் ஆட்சிக்கு வந்தால் இன்னொருமுறை ஈழத்துக்கு இந்தியப் படையை அனுப்பலாம் என்ற அச்சமே அவர்களின் செயலுக்குக் காரணம் என பரவலாக அறியப்படுகிறது.

சுந்தரவடிவேல் said...

ராஜீவ் கொலையில் சுப்ரமணியம் சுவாமிக்குப் பங்கு இருப்பதாக அவரது உதவியாளர் அளித்த நேர்காணலின் முதலாவது பகுதி இது. இதன் ஏழு பகுதிகளையும் யூட்யூபில் பார்க்கலாம். http://www.youtube.com/watch?v=1PY-yKwbH0c&feature=related

விகடனில் வந்த கருத்துக் கணிப்பு என்ன நிகழ்ந்தபோதும் ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் இடையே இருக்கும் பிணைப்பினைக் காட்டுகிறது. இந்த நேரத்தில் இந்திய ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட கருத்துக்களைத் தாங்கி வந்திருக்கும் ஒரு திரைப்படத்தினைப் போட்டுக் காட்டுவது (உண்மை என்னவென்று இதுவரை யாராலும் சொல்லப்படாத நிலையில்), ஈழத்தவர்களை IPKF செய்தது என்ன என்று பேச வைக்கும். பிறகு இருவரும் முறுக்கிக் கொண்டு நிற்கும் நிலை வரும் (என் வலைப்பதிவு அனுபவம்:)).
இந்த முறுகல் வரும் என்று தெரிந்துதான் இதை எழுதினீர்களா, தெரியாமல் எழுதினீர்களா என்பதே எனது கேள்வி!

அதுக்காக, நீங்க பாத்த படத்தைப் பத்திப் பேசாதீங்கன்னு சொல்ல நான் ஆளில்லை. அதே நேரத்தில் ஒரு பக்கச் சார்புடைய கருத்துக்களைத் தொனியாகக் கொண்டு ஒரு பதிவை எழுதியதே என்னை எதிர்வினை புரியத் தூண்டின. (உம்: //தமிழ்ல குப்பின்னு ஒரு படம் பாத்திருக்கேன். நல்லா எடுத்திருந்தாங்க.// இந்த "நல்லா எடுக்கப்பட்ட படத்தின் மீதான சொந்த அனுபவமுள்ள ஈழத்தமிழர்களின் விமர்சனங்கள் என்ன? //IPKF சில mis-adventures செய்தது உண்மையாக இருந்தாலும்,// misadventureக்கும் war crimesக்கும் இருக்கும் வேறுபாட்டினை உணர்ந்தீர்களா?).
அரசியல் சிக்கல் கேள்விகளுக்கு, நமது இந்தியத் திரைப்படங்களுக்குள் விடை தேடும் நமது பரிதாப நிலைக்காக, அந்த அரசியல் போர்களினால் கொலையுண்டுபோன ஆத்மாக்கள் நம்மீது இரக்கப்படட்டும்! இனி சாகப் போகிறவர்களே, உங்களது நாட்கள் எங்களது திரைப்படங்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன என்றும் நாம் சொல்லிக் கொள்ளலாமா?!

? said...

//தமிழன் என்றால் மத்திய அரசுக்கு(காங்கிரசுக்கு) கவலையில்லை. //

இந்திரா காந்தி தலைமையிலான அரசுதான் LTTE உட்பட பல அமைப்புகளுக்கு பயிற்சியும் ஆயுதமும் அளித்தது,RAW முலம்.

அமெரிக்கா எப்படி அல்கொய்தாவிற்கு பயிற்சி அளித்து பின் அதன் கையாலேயே ஆப்பு வாங்கிக் கொண்டதோ அது போலத்தான் இந்தியாவும்.

1987-ல் LTTE தோல்வியின் விளிம்பில் இருந்த போது ராஜிவ் 25 டன் மருந்து உணவு பொட்டலங்களை LTTE பகுதிகளில் இந்திய ராணுவம் மூலம் வீசச் செய்தார்.இதனால் தான் இலங்கை அரசு பயந்து போய் இந்தியாவுடன் ஒப்பந்தம் போட ஓடி வந்தது (விக்கிபீடியா).

//1991 பொதுத்தேர்தலில் இந்திரா காங்கிரஸ் வெல்லும் நிலை இருந்தது.
ராஜிவ் ஆட்சிக்கு வந்தால் இன்னொருமுறை ஈழத்துக்கு இந்தியப் படையை அனுப்பலாம் என்ற அச்சமே அவர்களின் செயலுக்குக் காரணம் என பரவலாக அறியப்படுகிறது.//

1991 தேர்தல் பல கட்டங்களில் நடைபெற்றது. ராஜிவ் கொலைக்கு முன்பு தேர்தல் நடைபெற்ற பல தொகுதிகளில் காங்கிரஸ் தோற்றதாக நியாபகம்.

? said...
This comment has been removed by the author.
Indian said...

1989ல் தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. பாஜக-வும் கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து ஜனதா தள அரசை வெளியிலிருந்து ஆதரித்தார்கள். வி.பி சிங் ஆட்சிக்கு வந்தார். மண்டல் கமிஷன் அறிக்கையை அமுல்படுத்தினார். அத்வானி ரத யாத்திரையை நடத்தினார். பின்பு லாலுவால் பீகாரில் கைது செய்யப்பட்டார். தேசிய முன்னணி அரசு கவிழ்ந்தது. இந்திய அமைதிப் படை இலங்கையிலிருந்து முழுமையாக திரும்பப் பெறப்பட்டது. இந்திய அரசால் ஆதரிக்கப்பட்ட EPRLF, EPDP போன்ற அமைப்பின் (வடகிழக்கு மாகாண தலைவர்களுக்கு) இந்தியாவில் தஞ்சம் அளிக்கப்பட்டது.

சந்திரசேகர் காங்கிரஸ் துணையுடன் ஆட்சி அமைத்தார். நான்கு மாதங்களில் காங்கிரஸ் ஆதரவை விலக்கிக் கொண்டது.
இந்தியாவின் அந்நிய செலாவனி ஒரு மாதத்துக்கே வரும் என்ற நிலையில் இந்தியாவின் தங்கம் இங்கிலாந்தில் அடகு வைக்கப்பட்டது. இச் சூழ்நிலையில் தான் 91 ஏப்ரல்/மேயில் பொதுத் தேர்தல் நடந்தது. அப்போது காங்கிரஸ் தேர்தலில் வெல்லும் என்ற சூழல் இருந்தது என்றேன்.

Indian said...

புலிகள் ஒரு நோக்கத்துக்காக ( தங்களின் போராட்டத்துக்கு தடையாக இருப்பார் என்பதற்காக ) அல்லது கூலிப்படையாக செயல்பட்டார்களா என்பது விடை தெரியாத கேள்வி.

Unknown said...

பிளிச்சிங் பவுடருக்கு தென்னிலங்கையில் பொதுமக்களை கொல்வது கொன்றது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் துணைக்குழுக்கள் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை. ஜெயா செய்திகளையும் தினமலரையும் மட்டும் பார்த்தால் இந்த உண்மைகள் தங்களுக்கு தெரியவர சான்ஸ் இல்லை. சும்மா புலிகள் கொல்கிறார்கள் என கத்தாதீர்கள். இதுவரை லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் ஆனால் யுத்தத்தில் கொல்லப்பட்ட சிங்கள பொதுமக்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாகும். இன்னொரு உண்மையையும் நீங்கள் உணரவேண்டும் புலிகளீடம் பீரங்கி இருக்கிறது அருகில் இருக்கும் சிங்கள கிராமங்களை இவர்கள் நினைத்தால் தாக்கமுடியும் ஆனால் இதுவரை அவர்கள் இப்படியான தாக்குதல்களைச் செய்யவில்லை. ஸ்ரீ லங்கா அரசுமட்டும் தமிழர்கள் குடியிருப்புகள் மீது தாக்குதல் செய்கிறது.

SurveySan said...

indian,

///Indian said...
//4) IPKF சில mis-adventures செய்தது உண்மையாக இருந்தாலும், சிங்கள ராணுவமும் அரசியல்வியாதிகளும் அதை ஊதிப் பெரிதாக்கி, LTTEக்கும், IPKFக்கும் இடையே மோதல் ஏற்பட வழி செய்தார்கள்.//

அது அவ்வளவு சின்ன விசயமா?
/////

கண்டிப்பா சின்ன விஷயம் கிடையாது. அவன் அவனுக்கு வந்தாதான் இந்தக் கொடுமையின் வலிகள் புரியும்.

ஆனால், சில இடங்களில் நடந்த விஷயங்களால், தவறான புரிதல்கள் பரப்பப்பட்டு, அதன் விளைவுகள் பெரிதானால் என்ன செய்வது என்பதே என் கேள்வி.

ஒரு ஊரில் ஒருவன் செய்த தவறுக்கு, எப்படி ஊரையே பலி கொடுக்க முடியும்? பல ஆயிரம் பேர் கொண்ட குழுவில், சில கறுப்பு ஆடுகள் செய்த தவறுக்கு தலைவனை பலியிடுவது முறையா?

ராஜ நடராஜன் said...

இந்தப் பதிவின் வினாவுக்கு விடை தெரிந்தவர்கள் இந்தப் பதிவை பார்த்தோ பார்க்காமலும் கூட மூலை மூலைக்கு ஒளிந்து கொண்டுள்ளார்கள்.நாம்தான் சினிமா மூலமாவது விடை தெரியுமான்னு முடியைப் பிய்த்துக்கொண்டுள்ளோம்.இந்திய திரைப்படங்களின் மேல் அவ்வளவு நம்பிக்கையா உங்களுக்கு?

SurveySan said...

indian,

////1991 பொதுத்தேர்தலில் இந்திரா காங்கிரஸ் வெல்லும் நிலை இருந்தது.
ராஜிவ் ஆட்சிக்கு வந்தால் இன்னொருமுறை ஈழத்துக்கு இந்தியப் படையை அனுப்பலாம் என்ற அச்சமே அவர்களின் செயலுக்குக் காரணம் என பரவலாக அறியப்படுகிறது./////

ஹ்ம். அவர்கள் நிலையில் இருந்து பார்த்தால், இது ஒரு 'ஞாயமான' காரணமாக இருக்கக் கூடும்.
ஆனா, இது ஞாயமா?

SurveySan said...

marthu,

////தற்பொழுது நம்முடைய மீனவர்கள் கொலை செய்யும் போது கண்டுக்காமல் இருக்கும் மத்திய அரசு, சிங்கள அரசுக்கு ஆயதங்களை அள்ளி வழங்குவது எதைக்காட்டுது.///

:( மீனவர்கள் கொலை செய்யப் படுவதை கண்டிக்காத மத்திய அரசின் நிலை கேவலம்.

////அங்கே சென்ற இந்திய இராணுவம், புலிகளை வேட்டையாடுவதற்கு பதிலாக அங்குள்ள அப்பாவிப் பொதுமக்களைக் கொலை செய்தது. இளம்பெண்களைக் கற்பழிப்பு செய்தது. வீடுகளில் கொல்லை அடித்தது. ////

மொத்த ராணுவமும் தவறு செய்தது என்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயமாக இருக்கிறது. எனது சொந்தத்தில் பல பேர் ராணுவத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் தேசப் பற்றும் கடமை உணர்சிகளும், சொல்லிப் புரிய வைக்க முடியாது.

ஒரு சில, சைகோக்கள் எல்லா குழுவிலும் இருப்பது, தவிர்க்கமுடியாத ஒன்று, அந்த ஓநாய்கள் செய்யும் செயலுக்கு, மொத்த கூட்டத்தை பழிப்பது தவறு.

SurveySan said...

சுந்தரவடிவேல்,

நாக்கப் புடிங்கக்கரமாதிரி கேட்டுட்டீங்க. யோசிச்சுதான் பதில் சொல்லணும்.
சொல்கிறேன்.

SurveySan said...

btw, பதிவின் கடைசியில்

"பி.கு: யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டதில்லை"

என்று போட யோசிச்ச போது, இதெல்லாம் சொல்லித்தான் தெரியணுமா என்ற எண்ணம் எழுந்தது.

:)

SurveySan said...

சுந்தரவடிவேல், பிட்டு பிட்டா பதில் தரேன்.

///இந்த முறுகல் வரும் என்று தெரிந்துதான் இதை எழுதினீர்களா, தெரியாமல் எழுதினீர்களா என்பதே எனது கேள்வி!
//

கண்டிப்பா எந்த முறுகலும் வரவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதியது இல்லை இது.

ஞாய அநியாயங்களை அலசவும், அறியாததை அறிந்து கொள்ளவுமே இது.

SurveySan said...

ராஜ நடராஜன்,

///நாம்தான் சினிமா மூலமாவது விடை தெரியுமான்னு முடியைப் பிய்த்துக்கொண்டுள்ளோம்///

சாதாரணமா இந்தப் படம் எடுத்திருந்தா எனக்கும் ஒரு கேள்வி கேட்கும் எண்ணம் எழுந்திருக்காது.

'மேஜர் ரவி' எடுத்திருக்காரே, சங்கதி தெரியாம ஊதியிருக்கமாட்டாரு என்ற நம்பிக்கையில்தான் கேள்விகள் எழுப்பினேன்.

ranger said...

//ராஜீவ் இந்தியாவின் ஒரு உன்னதத் தலைவராக வர இருந்தவர்.//
போஃபோர்ஸ் (Bofors) ஊழல் ஞாபகத்திற்கு வருகிறது :) :)


//IPKF சில mis-adventures செய்தது// - இந்த சில வார்த்தைகளில் அடக்கமுடியாத கொடுமைகள் பல நடந்தது. உதாரணம், ஒரு மருத்துவமனையில் 40 மேலான மருத்துவர்களையும், நர்ஸ்களையும் இந்திய ராணுவத்தினர் கொன்றனர்

//ஒரு ஊரில் ஒருவன் செய்த தவறுக்கு, எப்படி ஊரையே பலி கொடுக்க முடியும்? பல ஆயிரம் பேர் கொண்ட குழுவில், சில கறுப்பு ஆடுகள் செய்த தவறுக்கு தலைவனை பலியிடுவது
முறையா?//

தலைவன் இந்த mis-adventures ஐ தடுத்திருக்கலாம்.
பல mis-adventures செய்த ராணுவத்தை பல ஆண்டுகளாக திரும்பிப்போக ஈழ மக்கள் வற்புறுத்தியும், திரும்ப அழைக்காதது தலைவன் செய்த தவறு.

//சிவராசன் + கூட்டாளிள் வசித்திருந்த இடத்தை நமது ராணுவ கமேண்டோக்கள், ராவோடு ராவாக சுற்றி வளைத்ததாகவும், ஏதோ ஒரு உயர் அதிகாரி, தனது தனிப்பட்ட (புகழ்) லாபத்துக்காக, தான் நேரில் வரும் வரை யாரும் ஒன்றும் செய்யக் கூடாது என்று கூறி, கமேண்டோக்களை 12 மணி நேரம் தேவுடு காக்க வைத்தாராம்.//

சயனைட் சாப்பிட்டு மரணிக்க சில நொடிகள் போதும். 12 மணி நேரம் காத்திருக்காமல் உடனடியாக தாக்க ஆரம்பித்திருந்தாலும் அவர்கள் சயனைட் சாப்பிட்டு இறந்திருப்பார்கள் இல்லை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சில நொடிகளில் இறந்திருப்பார்கள் (சிவராசன் அப்படித்தான் இறந்ததாக ஞாபகம்).
அதனால், 12 மணி நேரமா, இல்லை 12 நிமிடமா என்பது immaterial.
மேஜர் ரவிக்கும் உயர் அதிகாரிக்கும் உட்பூசல் இருந்திருக்கலாம், அதனால் மேஜர் ரவி படத்தில் அவ்வாறு குற்றம் சாட்டியிருக்கலாம் (இது மேஜர் ரவியி எடுத்த படம்தானே)

SurveySan said...

சுந்தரவடிவேல்,

///ராஜீவ் கொலையில் சுப்ரமணியம் சுவாமிக்குப் பங்கு இருப்பதாக அவரது உதவியாளர் அளித்த நேர்காணலின் முதலாவது பகுதி இது///

ஹ்ம். எந்த புத்துல எந்த பாம்போ. CIA ஏஜெண்ட்டாமே சுவாமி?
ஆனா, அந்த பேட்டி அளிப்பவரைப் பாத்தால் நம்பும்படியாக இல்லை.

/////விகடனில் வந்த கருத்துக் கணிப்பு என்ன நிகழ்ந்தபோதும் ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் இடையே இருக்கும் பிணைப்பினைக் காட்டுகிறது./////

கண்டிப்பா, இதில் மாற்றுக் கருத்தில்லை. தமிழர்கள் என்று மட்டுமில்லை, எந்த நாட்டவராயினும், இன்னல் படுவோரைக் கண்டால் மனமிளகத்தான் செய்யும்.

////இந்த நேரத்தில் இந்திய ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட கருத்துக்களைத் தாங்கி வந்திருக்கும் ஒரு திரைப்படத்தினைப் போட்டுக் காட்டுவது /////

இது யாரோ எடுத்த படம்னா, நானும் பாத்துட்டு உச்சுக் கொட்டிட்டு போயிருப்ப்பேன். 'மேஜர் ரவி'ன்னு டைரக்டர் பேர் பாத்ததும், சரி ஏதோ 'நடந்தது என்ன?' பாணியில் இருக்கும் என்ற எண்ணம் எழுந்தது.

அதுக்கேத்த மாதிரி, படத்திலும், 'நம்பும்படியாக', சில விஷயங்கள் எடுத்துக் கூறப்பட்டன.

உதாரணத்துக்கு, ஒரு இலங்கைத் தமிழர். சிங்களர்களால், தன் குடும்பத்தை இழந்தவர். மேஜர் ரவி கேரக்டர், அவருக்கு சில அட்வைஸ் சொல்லும் காட்சிகள். ஒரு சில IPKF செய்த காரியத்தால், ஒட்டூ மொத்த ராணுவத்தையும், நாட்டின் தலைவனையும் பழி வாங்கல் என்பது முறையாகுமா என்ற ரீதியில் வரும்.

///misadventureக்கும் war crimesக்கும் இருக்கும் வேறுபாட்டினை உணர்ந்தீர்களா?). ////

IPKFல் ஒரு சில அயோக்கியர்கள் செய்தது செயல் crimeதான். சந்தேகமேயில்லை.
its a eye-of-the-beholder thing. பாதிக்கப்பட்டவர்களுக்கு அது இமாலயக் குற்றம். தூரத்தில் இருப்பவர்களுக்கு, mis-adventure. :(

////அரசியல் சிக்கல் கேள்விகளுக்கு, நமது இந்தியத் திரைப்படங்களுக்குள் விடை தேடும் நமது பரிதாப நிலைக்காக////

வெட்கப்பட வேண்டிய நிலை தான் இது. விடையை வேறு எங்கு போய் தேடுவது? சுப்ரமணிய சுவாமி எழுதிய புத்தகத்திலா? இல்லை, குமுதம்.காமிலா?

நாட்டில், Tehelka மாதிரி யாராவது இந்த விஷயத்தை அலசி ஆராய்ந்து, உண்மையை கண்டு விளக்கினால் நன்றாயிருக்கும்.

ஆனால், யாரென்ன சொன்னாலும், சாமான்யனுக்கு, எது conspiracy theory எது உண்மை என்பது கடைசி வரை விளங்கப் போவதில்லை.

SurveySan said...

bleachingpowder,

////அதே சமயம் இவர்கள் யாரும் கொழும்பு நகரில் பஸ்,ரயில் நிலையம் போன்ற இடங்களில் நிகழும் குண்டு வெடிப்பை யாரும் கண்டு கொள்வதில்லை, கண்டிப்பதும் இல்லை. அதில் பலியாகிறவர்களும் அப்பாவி பொது மக்கள் தானே. இது மட்டும் நியாமா?
///

கண்டிப்பாக நியாயம் கிடையாது. ஆனால், கீழே suganthi சொன்னது போல், ratio கம்மிபோலத் தெரிகிறது.

ஒரு உயிர் போனாலும், பல உயிர் போனாலும், யார் இதைச் செய்தாலும், இது ஒரு மூர்கமான செயல் என்பதில் வேறு கருத்தில்லை.

SurveySan said...

suganthi,

////ஆனால் யுத்தத்தில் கொல்லப்பட்ட சிங்கள பொதுமக்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாகும்///

மேலே உள்ள பின்னூட்டம் தான் இதுக்கும்.

Unknown said...

எனக்கு தெரிந்த வரையில் ராஜிவ் இங்கு பலிகடா. LTTE மற்றும் பிரேமதாசா விரித்த வலையில் அவர் விழுந்தார்.சமாதானம் செய்ய சென்ற அவரை முதலில் இரு தரப்பினரும் தம் சார்பாக இருப்பார் என நினைத்து பின்னர் அவ்வாறாக அவர் இல்லாததால் அவரை விலக்க நினைத்தார்கள். ஆனால் புலிகள் ஒருபடி மேலே சென்று கொலையே செய்தனர். அதன் பலனைத்தான் இன்றும் 17 வருடங்களாய் அறுவடை செய்கிறார்கள்.

SurveySan said...

ranger,

////சயனைட் சாப்பிட்டு மரணிக்க சில நொடிகள் போதும். 12 மணி நேரம் காத்திருக்காமல் உடனடியாக தாக்க ஆரம்பித்திருந்தாலும் அவர்கள் சயனைட் சாப்பிட்டு இறந்திருப்பார்கள் இல்லை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சில நொடிகளில் இறந்திருப்பார்கள் ///

இருக்கலாம். ஆனால், surprise ஆக உள்ளே திடுமென எல்லோரும் தூங்கும்போது சென்றிருந்தால், ஒரு வேளை பிடித்திருக்கமுடியுமோ என்னமோ?

படத்தில், மேஜர் ரவி சொல்வது, வெடிகுண்டு வைத்து கதவை முதலில் தகர்க்க வேண்டும். அப்படிச் செய்தால், அந்த சப்தத்திலிருந்து விடுபட்டு, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புலப்படவே ஒரு மூன்று நொடிகள் தேவைப்படுமாம்ம், அந்த மூன்று நொடிக்குள், முக்கியமான ஆட்களை பிடித்திருக்க முடியுமாம்.

இன்னொரு விஷயம், படத்தில் வருவது, சயனைட் சாப்பிட்ட 45 நொடிகளுள், அவர்களுக்கு ஒரு ஊசிமருந்து போட்டால்,அவர்களை சாவிலிருந்து காக்க முடியுமாம்.

கூடவே ஒரு டாக்டர் இவர்கள் செல்லும் இடத்துக்கெல்லாம் செல்வது போல் காட்டுவார்கள்.

SurveySan said...

stanjoe,

//எனக்கு தெரிந்த வரையில் ராஜிவ் இங்கு பலிகடா//

எனக்கும் அப்படி ஒரு வாய்ப்பு இருப்பதாக தோன்றுகிறது.

SurveySan said...

உண்மைத் தமிழன் சார்,

////ஹலோ சர்வேஸ்.. உங்களுக்கே இது நல்லாயிருக்கா..? என்ன மெஸேஜ் சொல்றாங்கன்னு கேக்குறதுக்குத்தான் நீங்க சினிமாவுக்குப் போறீங்களா?/////

லெஸ் டென்ஷன். நான் அவங்க தப்பா படம் பண்ணினாங்கன்னு சொல்லலையே எங்கயும் :)
கருத்து ஒண்ணுமே இல்ல அந்த படத்துல, ஆனா, இந்த மலையாளப் படத்துல, வேர மாதிரி அலசல் இருந்ததுன்னுதான சொன்னேன்.

திரைப்படங்கள் யோசிக்க வைக்கணும். அட்லீஸ்ட் ஏதாவது ஒரு உணர்ச்சியையாவது கிளரி விடணும், தூக்கம், வெறுப்பைத் தவிர :)

ranger said...

//படத்தில், மேஜர் ரவி சொல்வது, வெடிகுண்டு வைத்து கதவை முதலில் தகர்க்க வேண்டும். அப்படிச் செய்தால், அந்த சப்தத்திலிருந்து விடுபட்டு, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புலப்படவே ஒரு மூன்று நொடிகள் தேவைப்படுமாம்ம், அந்த மூன்று நொடிக்குள், முக்கியமான ஆட்களை பிடித்திருக்க முடியுமாம்.
//

சிவராசன் மற்றும் கூட்டாளிகளை முதலில் போலீஸ்தான் சுற்றி வளைத்தது. அப்பொழுதே அவர்கள் உஷாராகிவிட்டனர். சிறிது நேரம் (atleast 2 hours?) துப்பாக்கி சண்டை நடந்த பிறகுதான் ராணுவம் அழைக்கப்பட்டு அதிரடி கமெண்டோக்கள் உள்நுழைந்தனர். கடைசியில் சிவராசன் துப்பாக்கியால் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டு இறந்தான். இவ்வளவு நடந்திருக்கையில் 45 நொடி, 3 நொடி என்பது சிரிப்பைத்தருகிறது.

டாக்டர்களும், சயனைடுக்கு எதிர் மருந்துகளும் இருந்தாலும், துப்பாக்கியால் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டு கணத்தில் இறந்தவர்களை எப்படி காப்பாற்றுவது?
ராஜீவ் கொலை தொடர்பான செய்திகளை உன்னிப்பாக படித்தவன் என்கிற முறையில் நீங்கள் சொல்லும் ரவியின் படக்காட்சிகள் சிரிக்கத்தான் வைக்கிறது.

Probably I will see the movie and let you know the disparity between the facts and the movie. (From the scenes that u describe, I dont find much validity in Major.Ravi's "Story". It might be yet another "holier-than-thou" attitude film which advises others :P ). Dont form politcal opinions based on films and take the film with a bag of salt :)

SurveySan said...

ranger,
///Dont form politcal opinions based on films and take the film with a bag of salt :)
////

I agree :)
also, film doesnt claim its a 'true story'.
but major Ravi's interviews and such portrays that he tried to provide the facts in the movie.

He claims he missed to accomplish a 'surprise move' on sivarasan, because of the police intrusion and the delay in getting orders from high command.

fact is, noone will know the truth, why its hard to catch people live. I am sure there are some one in the high chair, interested to make it end this way :)

(veerappan, sivarasan, the list is big :) )