எங்க ஊர்ல, $20க்கு கரிகாய் வாங்கினா, ஒரு டி.வி.டி இனாம். ஒவ்வொரு தடவையும் எந்த டிவிடி எடுப்பதுன்னு மண்ட காயும். தமிழ்ல வந்த எல்லா படமும் பாத்தாச்சு, சுப்ரமணியபுரம் வரை. புதிதாய் வந்துள்ள Mission 90 days என்ற மலையாளப் படம் கண்ணில் பட்டது. மம்முட்டி இந்த வயதிலும் ஜம்முன்னு ஒரு கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு அட்டையில் இருந்தாரு.
டிவிடி பின்னாடி திருப்பிப் பாத்தா, ராஜீவ் கொலை வழக்கை துப்பறிவது பற்றிய கதைன்னு போட்டிருந்தது.
ஏற்கனவே, தமிழ்ல குப்பின்னு ஒரு படம் பாத்திருக்கேன். நல்லா எடுத்திருந்தாங்க.
ஆனா, ஒரு மெஸேஜும் தெளிவா சொல்லாம, கொலையாளிகளைப் பிடிப்பது மட்டுமே மையக் கருத்தா இருந்தது அந்த படத்துல. எதுக்காக சாகடிச்சாங்க, தப்பா ரைட்டா என்ற அலசல் எல்ல்லாம் இல்லை (இருந்ததா? நான் மறந்துட்டேனா?) அந்த படத்தில்.
சரி, பக்கத்து ஊரு காரனுங்க எப்படி எடுத்திருந்தாங்கன்னு பாக்கலாமேன்னு முடிவு பண்ணி படத்தை வாங்கிப் பாத்தேன்.
படம், ஓஹோன்னு ஒண்ணும் இல்லை. ஒரு தடவை பாக்கலாம், அம்புடுதேன். மேஜர் ரவின்னு ஒருத்தர் தான் இயக்குனர், அதனால, அமெச்சூரா நெறைய விஷயம் கண்ணில் பட்டது.
ஆனா, படத்தில் பெரிய மெஸேஜ் இருந்தது. அதுதான் இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.
ராஜீவைக் கொல்ல LTTEக்கு என்ன காரணம் இருந்தது?
எனக்குத் தெரிந்து, ராஜீவ் அனுப்பிய IPKF அங்கு சென்று பல mis-adventures செய்ததாலும், அதற்கு பழி தீர்க்கும் படலமாக, ராஜீவைக் கொன்றதாகவும் ஊடகங்களில் பார்த்ததாக ஞாபகம்.
ஆனால் இந்த படத்தில் சொல்லப்படும் மெஸேஜ்:
1) ராஜீவ் இந்தியாவின் ஒரு உன்னதத் தலைவராக வர இருந்தவர். அவர் இழப்பு, நமது நாட்டின் எதிர்காலத்திற்கு மிகக் பெரிய இழப்பு.
2) ராஜீவ் IPKFஐ அனுப்பியது, இலங்கைத் தமிழர்களின் நலனை மனதில் கொண்டு மட்டுமே.
3) IPKFஐ அங்கு அனுப்பாதிருந்திருந்தால், பாக்கிஸ்தான் தனது ராணுவத்தை அனுப்பி, அமெரிக்காவும் அங்கு ஒரு தளத்தை உருவாக்கி இருக்கும். இது இந்தியாவுக்கு நல்லதல்ல.
4) IPKF சில mis-adventures செய்தது உண்மையாக இருந்தாலும், சிங்கள ராணுவமும் அரசியல்வியாதிகளும் அதை ஊதிப் பெரிதாக்கி, LTTEக்கும், IPKFக்கும் இடையே மோதல் ஏற்பட வழி செய்தார்கள்.
5) சிவராசன் + கூட்டாளிள் வசித்திருந்த இடத்தை நமது ராணுவ கமேண்டோக்கள், ராவோடு ராவாக சுற்றி வளைத்ததாகவும், ஏதோ ஒரு உயர் அதிகாரி, தனது தனிப்பட்ட (புகழ்) லாபத்துக்காக, தான் நேரில் வரும் வரை யாரும் ஒன்றும் செய்யக் கூடாது என்று கூறி, கமேண்டோக்களை 12 மணி நேரம் தேவுடு காக்க வைத்தாராம். அந்த இடைப்பட்ட நேரத்தில் தான் சிவராசன் + கூட்டாளிகள் தற்கொலை செய்து கொண்டனராம். அந்த அதிகாரி, உரிய நேரத்தில், 'கோ' சொல்லியிருந்தால், சிவராசனை உயிருடன் பிடித்திருக்க முடியுமாம்.
படத்துல மம்மூட்டி வேகமா ஒரு டயலாக் நல்லா பேசுவாரு.
ஆனா, ராஜீவ் கொலை செய்யப்படும் முன், ஸ்ரீபெரும்புதூரில், ஒரு சிறுமி அவரைப் புகழ்ந்து பாடுவது போன்ற படக் காட்சி கொஞ்சம் ஓவர். கீழே வீடியோல அந்த பாட்டுத்தான்.
கருத்ஸ்?