recent posts...

Sunday, August 17, 2008

Phelps - ஒரு புகைப்படக்காரரின் புலம்பல்

Michael Phelps (aka பறக்கும் மீன்) யாருன்னு இந்நேரத்துக்கு பட்டி தொட்டியெல்லாம் தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்க, இங்க சொடுக்கி தெரிஞ்சுக்கங்க.

சுருக்கமா சொல்லணும்னா,
2008 பீஜிங் ஒலிம்ப்பிக்ஸில், 8 தங்கம் வென்றவர்;
7 உலகச் சாதனைக்குச் சொந்தக்காரர்;
16 ஒலிம்ப்பிக் பதக்கங்கள் வென்றவர்;
இப்படி அடுக்கிக்கிட்டே போலாம்.

குறிப்பா, பீஜிங்க் ஒலிம்ப்பிக்கில் இவர் காட்டிய அசாத்திய திறமை அபாரம். ஒரு போட்டிய முடிக்கறாரு, தங்கம் வாங்கராரு, அடுத்த கணத்தில் அடுத்த போட்டிக்கு தயாராகறாரு, அங்கயும் தங்கம் வாங்கறாரு.
(மீனாப் பொறக்கவேண்டியவன், மனுஷனா பொறந்துட்டான் :) )

இதுவரை 7 தங்கம் வென்ற Mark Spitzன் சாதனையை முறியடித்த போது, Michael Phelpsன் சந்தோஷத்தை புகைப்படமெடுத்த புகைப்படக்காரர், அதே Phelps 8ஆவது தங்கம் வாங்கியவுடன் தனது கேமராவுக்கு நிறைய தீனி கிடைக்கும் என்று காத்திருந்தாராம்.

ஆனா, 4X100 ரிலே நீச்சலில் 8ஆவது தங்கம் வாங்கியதும், Phelpsம், அவரது கூட்டாளிகளும், எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் செய்யாமல், புஸ்ஸ்ஸ்ஸ் என்று ஆக்கிவிட்டார்களாம்.

பாவம் கேமராக்காரரு, நிகழ்ச்சி தொடங்கரதுக்கு பல மணிநேரம் முன்னமே சென்று, இடம் புடிச்சு, ஆங்கிள் எல்லாம் யோசிச்சு, ரெடியா இருந்தா, இந்த Phelps இப்படி ஏமாத்திட்டாரே?

சாதாரண சாதனையா இது? சைலண்டா போவதர்க்கு? Phelpsன் கூட்டணியில் இருந்த மற்ற மூவர் மேல் குற்றம் உள்ளது. Phelps ஆர்ப்பாட்டம் பண்ணலன்னாலும், மத்த மூணு பேரு எதையாச்சும் பண்ணி ஒரு டிராமா உருவாக்கியிருக்கணும்.

வரலாற்று நிகழ்வு, புஸ்ஸென்று போகவிட்ட அந்த மூவருக்கு என் கண்டனங்கள்! (தமிழ் கத்துக்கிட்டு இந்தப் பதிவ படிச்சு, என் கண்டனத்தை தெரிஞ்சுக்கிட்டு, வருத்தப்படுங்க, மூவர்ஸ்!)

7ஆவது தங்கம் வென்றதும் எடுத்த படம். படத்தை கிளிக்கினால், அந்தப் புகைப்படக்காரரின் பக்கத்தில் முழுக் கதையைப் படிக்கலாம்.


8ஆவது தங்கம் வென்றதும் எடுத்த படம். ( புஸ்ஸ்ஸ்ஸ் )


Michael Phelps, you rock!
But, your team mates failed to jubiliently project the historical achievement in front of the world! Shame on them!

பி.கு: என் முந்தைய Mixture பதிவில் பரிசல்காரனின் பின்னூட்டம் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. ;) ( இது என்னன்னு புரியாதவங்க Mixture பதிவை படிங்க :) )

35 comments:

கோவி.கண்ணன் said...

இதுல மிகவும் போற்றத்தக்கது, ஒலிம்பிக் விளையாட்டு தொடங்கும் முன்பே அவர் 8 தங்கங்களை வெல்லப் போவதாகச் சொல்லி வென்று காட்டினார். மிகவும் அசாத்திய திறமைதான் !

SurveySan said...

கோவி,
phelpsன் நம்பிக்கை ஒருபக்கம்.

இங்கே, அமெரிக்கால VISA credit card நிறுவனம், இவரு 8 கண்டிப்பா வாங்கிடுவாருன்னு 100% நம்பிக்கையில், ஏற்கனவே அதுக்கான advertisement எல்லாம் எடுத்து வச்சிட்டாங்க. ஒவ்வொரு மெடலுக்கும் புது புதுசா விளம்பரம் வருது.

குறிப்பா, Morgan Freeman accidentல ஆஸ்பத்திரீல கெடக்கராரூ, அவர் voiceல் வரும் எல்லா VISA விளம்பரமும் அருமை.

கிரி said...

சொல்லி அடிக்குற கில்லின்னு சொல்லுவாங்க..இவரு நிஜமாவே கில்லி தான் போங்க..

பட்டய கிளப்பிட்டாரு....

இவரு 4 வது அல்லது 5 வது தங்கம் வாங்கும் போது இவரு பாட்டுக்கும் தனியா போயிட்டு இருக்காரு ஒரு 6 அடி வித்யாசமாவது இருக்கும்.

போட்டோ காரர் டென்ஷன் ஆகிட்டாருன்னு சொன்னீங்க ..நம்ம அபினவ் செய்ததை பார்த்து பலருக்கு சந்தேகமே வந்து இருக்கும்..இவரு தங்கம் வாங்குனாரா இல்ல வாங்கவே இல்லையான்னு ..அந்த அளவுக்கு எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாம அமைதியா இருந்தாரு.. அபினவ் க்கும் என் பாராட்டுக்கள்.

SurveySan said...

கிரி, அபினவ் பத்தி கரெக்டா சொன்னீங்க. ரொம்ப humbleஆ இருந்தது, அவர் பேட்டியும், ரியாக்ஷனும்.

நிறை குடம் தளும்பாது :)

ஆனா, phelps விஷயத்துல, கூட இருந்தவங்க, பெருசா ஆர்ப்பாட்டம் பண்ணாதது எனக்கு சப்புன்னு இருந்தது.
சாதாரண சாதனை இல்லையே இது. இன்னும் ஒரு 50 வருஷத்துக்கு நின்னாலும் ஆச்சரியப்படரதுக்கில்லை :)

Namma Illam said...

phelps ன் சாதனையை முறியடிக்க முடியுமா என்று தெரியவில்லை. நானும் காலை 5:30 முதல் தொலைகாட்சி பெட்டி முன் அமர்ந்து இருந்து பார்த்தேன்.... அவர்களின் உணர்வில் விசேடமாக எதுவும் தெரியவில்லை. (கமெண்ட்ரி அரபியில் வேறு இருந்ததால் விளங்கவில்லை) பின்னர் இணையத்தில் பார்த்த போது சாதனை தான் என்று விளங்கியது.

கிரி said...

//ஆனா, phelps விஷயத்துல, கூட இருந்தவங்க, பெருசா ஆர்ப்பாட்டம் பண்ணாதது எனக்கு சப்புன்னு இருந்தது.//

உண்மை தான்.

வெற்றி பெறவேண்டும், இன்னும் கடும் சவால் இருக்கிறது என்கிற போது நம்முடைய ஆர்பாட்டம் அதிகம் இருக்கிறது. அதுவே அதை அடைந்த பிறகு அதன் தாக்கம் குறைந்து விடுகிறது. அந்த நிலையே இவர்களுக்கு என்று நினைக்கிறேன்.

இருந்தாலும் ஆராவாரம் ரொம்ப குறைவு தான். அதுவும் இவரை போன்ற புகைப்படகாரர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான்.

SurveySan said...

கிரி,

Usain Boltன் 100m race பாத்தீங்களா? அவரு கொஞ்சம் ஓவரா கொண்டாடிட்டாரு.
அதுவும், 80m ஓடி முடிச்சதுமே கொண்டாட ஆரம்பிச்சிட்டாரு.

முழுசும் ஓடி முடிச்சு கொண்டாடியிருந்தா, அவரின் உலக சாதனையில் இன்னும் சில நொடிகள் குறைந்திருக்கும் :)

சில பேரு இப்படி, சில பேரு அப்படி.

மனிதர்கள் பலவிதம் :)

கிரி said...

//SurveySan said...
கிரி,
Usain Boltன் 100m race பாத்தீங்களா? அவரு கொஞ்சம் ஓவரா கொண்டாடிட்டாரு.
அதுவும், 80m ஓடி முடிச்சதுமே கொண்டாட ஆரம்பிச்சிட்டாரு.
முழுசும் ஓடி முடிச்சு கொண்டாடியிருந்தா, அவரின் உலக சாதனையில் இன்னும் சில நொடிகள் குறைந்திருக்கும் :)//

சர்வேசன் நீங்க நம்பறீங்களோ இல்லையோ சத்யமா இதை நான் நினைத்தேன், இவருக்கு மட்டுமல்ல பலருக்கும்.

நீங்க கவனித்து பார்த்தீர்கள் என்றால் வெற்றி கோட்டுக்கு பக்கம் வருகிற போது பலரின் (ஆண்களும் சரி பெண்களும் சரி) வேகம் குறைந்து விடுகிறது. அதே வேகத்தில் வந்து வெற்றி கோட்டை தொட்டால் அவர்கள் சாதனையில் இன்னும் பல நொடிகள் குறைந்து இருக்கும். எனக்கு இவற்றை பார்க்கும் போது ரொம்ப வருத்தமாக இருந்தது.

உலகின் தலை சிறந்த்த பயிற்சியாளர்கள் இவர்களுக்கு சொல்லி தருகிறார்கள். அவர்கள் இவற்றை பற்றி எல்லாம் தங்கள் வீரர்களுக்கு கூறமாட்டார்களா! என்று எனக்கு கோபம் வந்தது.

அதுவம் உசைன் ரொம்ப கொடுமை.. இது எவ்வளோ பெரிய உலக சாதனை அதை இன்னும் ஒழுங்கான முறையில் பயன்படுத்தி இருந்தால் கண்டிப்பாக இவர் சாதனையை முறியடிக்க நினைப்பவர்களுக்கு கடும் சவாலாக இருந்து இருக்கும்.

Sathiya said...

அடக்கம் அமரருள் உய்க்கும்;)

Unknown said...

பழகப்பழக எல்லாம் சகஜமாகிவிடும். அவருக்கு வெற்றி பழகிடுச்சு அம்புடுதேன்.

அதுவுமில்லாம் அவருடைய எட்டாவது தங்கம் ஒரு Team event. அதனால் குழுவினரின் கவனம் Phelpsன் மேல் இல்லாமல் போய்விட்டது.

SurveySan said...

கிரி,

//உலகின் தலை சிறந்த்த பயிற்சியாளர்கள் இவர்களுக்கு சொல்லி தருகிறார்கள். அவர்கள் இவற்றை பற்றி எல்லாம் தங்கள் வீரர்களுக்கு கூறமாட்டார்களா! என்று எனக்கு கோபம் வந்தது.
////

அட ஆமாங்க. எனக்கும் எரிச்சல் வந்தது.
ஆனா, பயிற்சியாளர்கள் சொல்லித்தான் இந்த ஆளுகளூகு இது தெரியணுமா என்ன?
போல்ட்டு மெதுவானதும், இன்னொருத்தர் இவர முந்தியிருந்தா கத கந்தலாயிருக்கும்.

ஆனா, சும்மா சொல்லக்கூடாது, மனுஷன் பறக்கறான்.

SurveySan said...

sathiya,

//அடக்கம் அமரருள் உய்க்கும்;)//

அடக்கம் வேர, கொண்டாடுதல் வேர ;)

SurveySan said...

r.selvakumar,

///அதுவுமில்லாம் அவருடைய எட்டாவது தங்கம் ஒரு Team event. அதனால் குழுவினரின் கவனம் Phelpsன் மேல் இல்லாமல் போய்விட்டது.
////

அதைத் தான் தப்புங்கரேன்.
சாதாரணத் தங்கம்னா, நீங்க சொல்றது சரியாயிருக்கலாம்.

ஆனா, இது, historical gold. இன்னும் 30, 50 வருஷம் ஆகலாம் இதே தினம் அரங்கேர. :(

ராமலக்ஷ்மி said...

//வரலாற்று நிகழ்வு, புஸ்ஸென்று போகவிட்ட அந்த மூவருக்கு என் கண்டனங்கள்!//

நல்லா சொன்னீங்க. சரி..

(தமிழ் கத்துக்கிட்டு இந்தப் பதிவ படிச்சு, என் கண்டனத்தை தெரிஞ்சுக்கிட்டு, வருத்தப்படுங்க, மூவர்ஸ்!)//

நடக்கக் கூடிய காரியம்தானா இது:)))?

SurveySan said...

ராமலஷ்மி,

///நடக்கக் கூடிய காரியம்தானா இது:)))?//


:) அவங்களுக்கு புரியட்டுமேன்னுதான் ஆங்கிலத்திலயும் போட்டுட்டேன்.

ராமலக்ஷ்மி said...

//பதிவுகள் எழுதறோம் சரி. அந்தப் பதிவை படிச்சு பின்னூட்டம் இடுபவர்களைப் பலர் கண்டுக்கரதில்லை. பின்னூட்டங்களைக் கவனிக்கணும். ப்ளாகுகளின் பெரிய சக்தியே அதுதானே? அடுத்தவரின் கருத்தை அறிதலும், அவர்களோடு கருத்து மோதல்களில் ஈடுபடவும் ப்ளாகரின் அழகான வசதியை சில பேர் நல்லாவே பயன்படுத்தராங்க. ஆனா, எல்லாரும் அப்படிச் செய்வதில்லை.
ரூம் போட்டு யோசிச்சு, இதுக்கு ஒரு தீர்வு காண என்னா பண்ணனும்னு ஆஃபீஸ் நேரத்துல யோசிச்சேன்.
என்ன பண்ணலாம்னா, ஒரு பதிவு எழுதி அடுத்த பதிவு எழுதப் போகும் முன், முந்தைய பதிவில் உள்ள 'சிறந்த பின்னூட்டத்தை' மக்களுக்கு தெரியப்படுத்தி உங்கள் முந்தைய பதிவை நிறைவு செய்யவேண்டும்.
படிக்கரவங்களுக்கும் யோசிச்சு பின்னூட்டம் போட இது ஒரு முன்னோடியா இருக்கும்.
தொடர்ந்து சிறந்த பின்னூட்டக்காரரா வரும் அன்பருக்கு, வருஷக் கடைசியில் பரிசு தருவதெல்லாம் உங்க விருப்பம். மட்டமான பின்னூட்டத்தை எடுத்துச் சொல்றதும் உங்க விருப்பம் ;)//

இது நீங்கள் போன பதிவில் எல்லோருக்கும் அளித்த mixture-ல் கண்டெடுக்கப் பட்ட முந்திரிபருப்புகள்(கருத்துகள்). இதைப் பற்றி ஏன் இந்தப் பதிவில் பின்னூட்டமிடணும் என்று கேட்டால் முதல் காரணம் நீங்களே லிங்க் கொடுத்திருக்கிறீர்கள். சரி, அடுத்த காரணம்...வரேன் வரேன், அது கடைசியில்.

என்னைப் பொறுத்தவரையில் யாருக்குப் பின்னூட்டம் இட்டாலும் படித்து யோசித்து இடுவதான் வழக்கம்.
நேரமின்மையால் இது பலருக்கும் முடிவதில்லை. அப்படிப் பட்டவர்கள் அந்த வழக்கத்தை உங்கள் முந்திரிப் பருப்பைக் கொறிக்கையில் இனி மாற்றிக் கொள்ளத் தோன்றுமேயேனால் அதுவே உங்கள் காரசார மிக்ஸருக்கு வெற்றி. பரிசல்காரர் சொன்னது போல நானும் எனக்கு பின்னூட்டமிடுபவர் அனைவருக்கும் தனித்தனியாகவே பதில் தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.

பின்னூட்டங்களின் தரத்தை உயர்த்த தாங்கள் ரூம் போட்டு யோசித்துக் கண்டு பிடித்த ஐடியாவும் கூட "ஜூப்பர்"தான். ஆனால் அதிலும் ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம் இருக்கலாமில்லையா சர்வேசன்? என் பதிவுகளைப் படித்துப் பின் பிடித்துப் போய் பின்னூட்டமிடுபவர்களில் இவர்தான் சிறந்தவர் என ஒருவரை மட்டும் குறிப்பிடுவதில் ஒரு தர்ம சங்கடம் இருப்பதாகவே உணர்கிறேன். இது என் தனிப்பட்ட கருத்து. ஆனால் மற்றவர் இதை பின் பற்றுவதிலோ, ஏன் என்னையே சிறந்த பின்னூட்டக்காரர் என அறிவிப்பதிலோ எனக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் கிடையாது:))))! இங்கே பின்னூட்டமிட்டதற்கான இரண்டாவது காரணம் கூட இப்போ சொல்லாமலே புரிந்திருக்குமே:))))!

ராமலக்ஷ்மி said...

பதிவிலே நல்ல உறைக்கும் படி சொன்ன விஷயங்களுக்கு அந்த மூன்று வரி போதும்தானா?

SurveySan said...

ராமலக்ஷ்மி,

பதிவுக்கு சம்பந்தமில்லாம பின்னூட்டரவங்களுக்கு, கண்டிப்பா அவார்ட்டு தரமாட்டேன் ;)

////என் பதிவுகளைப் படித்துப் பின் பிடித்துப் போய் பின்னூட்டமிடுபவர்களில் இவர்தான் சிறந்தவர் என ஒருவரை மட்டும் குறிப்பிடுவதில் ஒரு தர்ம சங்கடம் இருப்பதாகவே உணர்கிறேன்////


இதிலே தர்மசங்கடம் இருக்கவேண்டிய அவசியமே லேது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள், 'சிறந்த' கருத்துப் பகிர்வை பின்னூட்டத்துல சொல்லியிருந்தாங்கன்னா, எல்லாருக்கும் அவார்டு கொடுங்க, காசா பணமா :)

SurveySan said...

ராமக்ஷ்மி,

//Shame on them//

இது புரிய வைக்கும்னு நெனச்சேன்.

ராமலக்ஷ்மி said...

//Shame on them//

இது புரிய வைக்கும்னு நெனச்சேன்.

ஓகேதான். மூணு வரி வேண்டாம் இந்த மூணு வார்த்தை போதும்தான்.

ராமலக்ஷ்மி said...
This comment has been removed by the author.
ராமலக்ஷ்மி said...

//'சிறந்த' கருத்துப் பகிர்வை பின்னூட்டத்துல சொல்லியிருந்தாங்கன்னா, எல்லாருக்கும் அவார்டு கொடுங்க, காசா பணமா :)//

இது கூட நல்லாத்தான் இருக்கு:)!

//பதிவுக்கு சம்பந்தமில்லாம பின்னூட்டரவங்களுக்கு, கண்டிப்பா அவார்ட்டு தரமாட்டேன் ;)//

அட அதான் முதல் காரணம் சொல்லிட்டேனே நீங்களே லிங்க் கொடுத்திருக்கீங்கன்னு:))!

அவார்டு கிடையாதா:(, சரி போகட்டும் காசா பணமா மிஸ் பண்ணிட்டமேன்னு வருத்தப் படறதுக்கு:))!

SurveySan said...

ராமலக்ஷ்மி,

////அவார்டு கிடையாதா:(, சரி போகட்டும் காசா பணமா மிஸ் பண்ணிட்டமேன்னு வருத்தப் படறதுக்கு:))!/////

6 பின்னூட்டம் போட்டிருக்கீங்க, உங்களுக்கு அவார்டு தரலன்னா, பி.மு.க (பின்னூட்டுபவர்கள் முன்னேற்றக் கழகம்) ஸ்ட்ரைக் பண்ணுவாங்க.

பாப்போம், உங்கள வேர யாராவது மிஞ்சராங்களான்னு ;)

பரிசல்காரன் said...

பலவகையான காரணங்களுக்காக
ராமலட்சுமியின் பின்னூட்டம் இந்தப் பதிவின் சிறந்த பின்னூட்டமாக தேர்வு செய்வதற்காகப் பரிந்துரைக்கப்படுகிறது!

ராமலக்ஷ்மி said...

பாருங்க சர்வேசன், போனமுறை பரிசு பெற்றவர் எனக்காக வழிவிட்டு பெருந்தன்மையுடன் ஒதுங்கிக் கொண்டதை:))!

நன்றி பரிசல் காரரே:))!

SurveySan said...

பரிசல்காரன், ராமலக்ஷ்மியை பரிந்துரைத்த உங்க நல்ல உள்ளத்துக்காகவே உங்களுக்கு ஒரு அவார்டு தரலாம் போலருக்கே ;)

மதுவர்மன் said...

surveysan,

தமிழ் பூங்காவிலுள்ள இந்த http://tamilgarden.blogspot.com/2008/08/blog-post_17.html பதிவிற்கு நீங்கள் இட்ட பின்னூட்டத்துக்கு, பதில் பின்னூட்டங்கள் இடப்பட்டுள்ளன.

முடிந்தால், அவற்றுக்கு பதிலாக உங்களது பின்னூட்டங்களையும் இடுங்கள். தொடர்புகொள்ள வேறு வழியில்லாததால் உங்களுடைய இந்த பதிவுக்கு பின்னூட்டமாக் இடுகின்றேன்.

வாசிந்து விட்டு இந்த என்னுடைய பின்னூட்டத்தை நீக்கிவிட்டாலும் நல்லது.

உங்கள் வலைப்பதிவின் பதிவுகளை வாசிக்கவிருக்கின்றேன்.

manikandan said...

surveysan/Giri,

Usain Bolt - அவருக்கு ரேஸ் ஜெயிக்கனும். அது தான் அவரோட குறிக்கோள்.

அத விட்டுட்டு அவர குறை சொல்றீங்களே. அவரோட பயிற்சியாளரையும் விட்டு வைக்கல. complete different style of racing.....அதுக்கு அவரோட கோச் ஒரு காரணம்.

Thamira said...

ஆமாங்க நீங்க சொல்றது சரிதான்.! (இந்த முறை சிறந்த பின்னூட்டம் என்னுடையதுதானே..)

ராமலக்ஷ்மி said...

SurveySan said...
//பரிசல்காரன், ராமலக்ஷ்மியை பரிந்துரைத்த உங்க நல்ல உள்ளத்துக்காகவே உங்களுக்கு ஒரு அவார்டு தரலாம் போலருக்கே ;)//

முற்றிலும் சரி. என்னைப் பரிந்துரைத்த பரிசல்காரருக்கு நன்றியைக் கூறிக் கொண்டு அவரது பெருந்தன்மைக்காகவும் நல்ல உள்ளத்துக்காகவும் அவருக்கே அவார்ட் வழங்குமாறு "முழு மனதோடு பரிந்துரை" செய்கிறேன்.

"இப்ப என்ன செய்வீங்க?
இப்ப என்ன செய்வீங்க:)?"

ராமலக்ஷ்மி said...

தாமிரா said...
//ஆமாங்க நீங்க சொல்றது சரிதான்.! (இந்த முறை சிறந்த பின்னூட்டம் என்னுடையதுதானே..)//

ஆகா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க

SurveySan said...

மதுவர்மன்,

thanks for the info. i will check later tonight and respond.

SurveySan said...

interesting article about Bolt.

http://www.hindu.com/2008/08/20/stories/2008082053562100.htm

திவாண்ணா said...

//(தமிழ் கத்துக்கிட்டு இந்தப் பதிவ படிச்சு, என் கண்டனத்தை தெரிஞ்சுக்கிட்டு, வருத்தப்படுங்க, மூவர்ஸ்!)//

அட ரொம்ப மூவிங்கா இருக்கே!
ஆமாம், இவங்க எதை மூவ் செய்யறாங்க? :-))

SurveySan said...

மதுவர்மன் சார், என் மூளைக்கெட்டிய பதிலை சொல்லிருக்கேன் :)