recent posts...

Tuesday, August 05, 2008

ஞாநியை நம்புவதா பதிவர்களை நம்புவதா?

ஒரே கொழப்பமா இருக்கு.

நம்ம ஆளுங்க என்னன்னா, டப்பா, குப்பை, படமா இது?, மொக்கை, திராபை அது இதுன்னு குசேலன போட்டு வாட்டி வதக்கிட்டாங்க.

நானும், அப்பாடா, என் $40 தப்பிச்சுதுன்னு சந்தோஷமா ஒக்காந்துட்டேன்.

இப்ப என்னடான்னா, விமர்சனப் "பெருந்தகைகள்" சிலர், குசேலனுக்கு 51 மார்க் தரேன், 60 மார்க் தரேன்னு களத்துல குதிச்சிருக்காங்க.

அவங்க சொல்றது என்னான்னா, "கதை அம்சம்" கொண்ட ஒரு கதையை ரஜினி ஏற்று நடித்தாரே, அதுக்கே மார்க் போடலாமாம்.

அடாடா, அவரும் இவ்ளோ வருஷம் ஆடி ஓடி நடிச்சுட்டாரு, ஆனா, அவருக்கு இப்படி ஒரு "ஷொட்டா?". அப்ப, இது வரைக்கும், அவர் நடிச்ச படத்துல எல்லாம் கதையே இல்லங்கராங்களா?

ஏதோ, இந்த அண்ணாமலை மாதிரி படங்கள், கையை விசுக் விசுக்னு அசச்சதால ஹிட் ஆச்சுன்னு ஒரு மாயை உருவானதால,அவரும் மாஞ்சு மாஞ்சு, துண்ட சுத்தி, வெரல வெட்டி, தலைய சிலுப்பி ஒரு தினுசான படங்களா குடுக்க ஆரம்பிச்சிட்டாரு.

அதுக்குன்னு ஒரே அடியா, "கதை அம்சம்" கொண்ட படத்தில் நடிக்க ஒத்துக்கிட்டதுக்காக அவருக்கு அதிக மார்க் போடறேன்னு நெக்குல் பண்றதெல்லாம் நல்லால்ல.

ஆனா, இந்தப் பெருந்தகைகள், படம் டோட்டலா திராபைன்னு ஒதிக்கிட முடியாது, ஓரளவுக்கு நல்லாவே வந்திருக்கும்னும் வேர சொல்றாங்க.

நம்ம பதிவர் வட்டத்தில், ரஜினியின் 'மன்னிப்பால்' வந்த எரிச்சலால், இப்படி படத்தை கொத்து பரோட்டா போட்டுட்டாங்களோ?

திறந்த மனத்தோடு படத்தை பார்த்து, உண்மையை மட்டுமே சொல்லுங்க ராசாக்களா.

ஒரு சிறந்த கதை அம்சம் பொறுந்திய நல்ல படத்தை ஓடவிடாமல் கெடுத்த பாவம் நமக்கெதுக்கு?

படத்தை பாத்தவங்க, வாக்க மறந்துடாதீங்க - நேர்மை முக்கியம்!

ஒரு தடவ இழுத்து மூச்சு விட்டுட்டு, ஒரு சார்பும் இன்றி, வலப் பக்கம் உள்ள பொட்டியில் வாக்குங்கள்!

பி.கு: இன்று பசுபதியை இருட்டடிப்பு செய்தார்கள். அன்று எம்மை! அன்புள்ள ரஜினிகாந்த்ல 'நடிச்சோம்ல' ;)

இதுவரை வந்த வாக்குகள்:

8 comments:

யாத்ரீகன் said...

cant watch the whoke movie for last 15 mis rajini performance... movie sucks

SurveySan said...

saw the 15 mins in u-tube. if that is the best part then i can figure out how the rest of the movie will be :)

தருமி said...

அன்புள்ள ரஜினிகாந்த்ல 'நடிச்சோம்ல' ;)

?????????

SurveySan said...

///?????????///

:)
சும்மா, பத்தோட ஒண்ணு பதினொண்ணா ஓடி வந்தத சொன்னேன். மை பூசின கண்ணாடியெல்லாம் கூடக் கொடுத்தாங்க. நாங்க பண்ணாத ஸ்டைலா :)

Tech Shankar said...



Meenaavai OOram kattitaanga.

Including Pasupadhi.

Eppo avarai?


கா.கி said...
This comment has been removed by the author.
கா.கி said...

படம் குப்பை இல்ல, ரொம்ப சுமார். ரொம்ப hype குடுத்ததால தான் இவ்ளோ ஏமாற்றம். படம் பூஜை அப்பவே ரஜினி, "இந்த படத்துல பசுபதி தான் ஹீரோ" அப்படின்னு சொன்னாரு. தேவையே இல்லாம படத்துல நெறைய காட்சிகள். ரொம்பவே simpleஆன படத்த, ரொம்ப சூப்பரா ரீமேக் பண்றேன்னு கெடுத்துட்டாங்க. விருப்பமும் நேரமும் இருந்த, என் blogla இருக்குற விமர்சனத்த படிங்க...

SurveySan said...

thanks Krishna.

based on all feedback, the verdict is

'Wait for DVD' ;)