வலைப்பதிவு எழுதுபவர்கள், அதுவும் பிரமலமா இருப்பவர்கள் (என்ன மாதிரி :)), சிறு முயற்சி செய்தால், உங்கள் வலைப்பதிவில் விளம்பரங்கள் ஏற்றுவதன் மூலம் ஓரளவுக்கு பணம் சம்பாதிக்க வழி வகையுண்டு.
ரொம்ப ஆசையெல்லாம் படக்கூடாது.
மாதத்திர்க்கு இதன் மூலம் பலருக்கு சில நயா பைசாக்கள் மட்டுமே கிட்டும்.
பிரபலங்களுக்கு சில ஆயிரம் வரை கிட்டும் வாய்ப்பு உண்டு. (லட்சங்கள் சம்பாதிப்பவரும் நம் கூட்டத்தில் உண்டு).
உங்கள் பதிவை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் என்பதை பொறுத்து கிடைக்கும் $$$ மாறும்.
பைசா மட்டுமே குறிக்கோளாக வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தால், கொஞ்ச நாளில், உங்கள் ரசிகர் கூட்டம் குறைந்து விடும். அப்பறம் இருக்கரதும் போச்சுன்னு ஒக்கார வேண்டியதுதான்.
குறிப்பா, வாசகர் கூட்டம் அதிகரிக்க வேண்டி, controversial topics வேண்டுமென்றோ எழுதுவதோ, ஆபாசம் புகுத்துவதோ செய்யாதிருத்தல் நலம்.
நீங்க செய்யும் வேலையை (பதிவு எழுதுவதை) இன்று போல் என்றுமே, நல்ல தரத்துடன் தர வேண்டும்.
கண்ணுக்கு உருத்தாத சின்ன 'உபயோகமான விளம்பரங்கள்' பதிவின் ஓரத்தில் இருந்தால், அதன் மூலம் ஈர்க்கப்பட்டு அதை உங்கள் வாசகர்கள் க்ளிக்கும் போது, உங்கள் கணக்கில் சில சில்லரைகள் சேரும்.
என்னைக் கேட்டா எல்லாரும் இத பண்ணலாம். பண ஆசை இல்லாதவர்களும் இதை செய்து, கிட்டும் பணத்தை நன்கொடை வழங்கலாம்.
இப்படி விளம்பரம் உங்கள் பதிவில் ஏற்ற வகை செய்யும் பல நிறுவனங்கள் உண்டு (google, yahoo, clickads, etc..).
இவற்றுள், உபயோகிக்க மிக எளிதும், வேலை செய்வதில் கில்லாடியுமானது google மட்டுமே.
STEP1: கீழே உள்ள google படத்தை க்ளிக் செய்தால் வரும் பக்கத்தில், 'Click here to apply' க்ளிக்கி, முதலில் ஒரு கணக்கு தொடங்க வேணும். (பெயர், முகவரி எல்லாம் கேக்கும். சரியான முகவரி எல்லாம் கொடுத்தாதான் துட்டு கரீட்டா வூட்டுக்கு வரும்)
STEP2: கணக்கு பதிவு செய்தவுடன், login செய்து, 'Adsense for Content' பக்கத்துக்கு போனால், மற்றதை Google சாமி சொல்லும்.
STEP3: Google சாமி தரும் script ஐ உங்கள் பதிவிலோ, template லோ சேர்த்து விட்டால், விளம்பரம் அழகாய் வரத்தொடங்கி வ்டும்.
STEP4: தடங்கினால், தயங்காமல் surveysan2005 at yahoo.com, முகவரிக்கு ஈமெயில் அனுப்புங்கோ. சட்டுனு உதவி, பட்டுனு கிடைக்கும்.
இந்த மாதிரிதான் விளம்பரம் இருக்கும்:
வாழ்த்துக்கள்!
சர்வே-சன் (Survey - san)
11 comments:
ஈ மெயில் அனுப்புபவர்களுக்கு நாளை பதில் அனுப்புகிறேன்.
இன்று வேறு வேலை வந்து விட்டது.
புரிதலுக்கு நன்றி.
நான்கூட இப்படித் தரும காரியங்களுக்குக் குடுக்கலாமுன்னு சில
விளம்பரங்கள் போட்டுருக்கேன். ரெண்டு மாசத்துலே
ஒன்னேமுக்கால் டாலர்(தான்) வந்துருக்கு(-:
Google Adsnesil
தமிழ் மொழிக்கு இன்னும் அங்கீகாரம் இல்லையே!
அப்புறம் எப்படி தமிழ் பதிவிற்கு ஒப்புதல் கிடைக்கும் ?
விளக்கமாகச் சொல்லுங்கள் நண்பரே!
இதுல தமிழ் அப்ரூவ் கிடையாது
அப்துல்லா,
வாழ்த்துக்கு நன்றி.
பெரிய சம்பாத்யம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. but, கொஞ்சமாவது கிட்டும் :)
துளசி கோபால்,
ஒன்னே முக்கால் டாலர் தானா? இருந்தா என்ன? சிறு துளி பெரு வெள்ளம் இல்லியா? :)
ஒன்னே முக்கால் டாலர், ரெண்டு நாளைக்கு சோறு போடும் நம்ப ஊர்ல :)
சுப்பய்யா ஐயா,
தமிழ் மொழியில் பதிவு உள்ளது என்று சொல்லி கணக்கு தொடங்க முடியாதுதான்.
சாரி, இதை பற்றி சொல்ல மறந்துட்டேன்.
உங்கள் பதிவில் துளி கூட ஆங்கில வார்த்தைகள் இல்லை என்றால், கூகிள் சாமி, முதலில் கணக்கு துடங்க அனுமதிக்க மாட்டார். ( எனக்கு அந்த பிரச்சனை வரவில்லை. நான் ஒரு ஆங்கிலப் பதிப்பும் வைத்திருக்கிறேன். justsurveys.blogspot.com ).
என் நண்பர்கள் பலருக்கு, தமிழில் உள்ள பதிவுக்கும் adsense அனுமதி கிட்டி இருக்கிறது.
சுலப வழி ஒன்றும் இருக்கிறது. ஒரு சின்ன ஆங்கில ப்ளாக் தொடங்கி, கணக்கை அதன் பெயரில் தொடங்கலாம். கணக்கு தொடங்கி விட்டால், பின் எங்கு வேண்டுமானாலும் adsense script ஐ சேர்த்துக் கொள்ளலாம்.
உ.ம் justsurveys.blogspot.com வைத்து கணக்கு தொடங்கி, surveysan.blogspot.com ல் script ஐ உபயோகித்தல். ஒரு கணக்கு இருந்தால் போதும், எத்தனை பதிவினில் வேண்டுமானாலும் அந்த ஒரு கணக்கை உபயோகித்துக் கொள்ள google அனுமதிக்கிறது.
மேலும் கேள்விகள் இருந்தால், தயங்காமல் கேளுங்கள். நன்றி!
good idea. thanks mr.surveyman.
anony,
You are very welcome.
btw, its SurveySan not SurveyMan :)
இது வேலை செய்கிறது.
I just made 14 cents in one month - thanks to you - and i spent 100 hours for 14 cents. not a good ratio. :o)
Post a Comment