recent posts...

Wednesday, October 28, 2009

ஆளப் பாத்து முடிவு பண்ணாதே... ஆழமா பாரு!

Looks can be deceivingன்னு சொல்லுவாங்க.
சூப்பர் ஸ்மார்ட்டா இருக்கர ஆளு, சூப்பர் ஹீரோவா இருக்கணும்னு அவசியம் இல்லை.
அதேப் போல, டொக்கா இருக்கர ஆளு, மொக்கையாதான் இருக்கணும்னும் அவசியம் இல்லை.

இந்த தத்துவம் எல்லாம் நமக்கு தெரிஞ்சாலும், புரிஞ்சாலும், நாமளும் கூட இந்த வெளித் தோற்றத்தை கண்டுதான் ஒரு மனிதரை கணக்கிடுகிறோம்.

ஆ, இவன் இப்படி இருக்கானே,இவன் கண்டிப்பா அப்படிதான்.
ஆஹா, இவன் அப்படி இருக்கானே, இவன் கண்டிப்பா இப்படிதான், இருப்பான்னு நாம ஒரு முன் முடிவு செஞ்சுட்டுத்தான் ஒரு ஆளை அணுகுவோம்.

அவன் உண்மையான குணாதிசியம் என்ன, அவன் திறமை என்ன, அவனால் முடிவது என்னன்னெல்லாம் பின்னாலதான் ஆராய்வோம்.

ஆனா, இப்படி இருக்கரதுக்கு,அந்த் ஆளும் ஒரு காரணமா இருக்கான். ஆள் பாதி ஆடை பாதிங்கர கணக்கின் படி, யாரு, தங்கள் வசீகரத்தை ஏத்தி காட்டறாங்களோ, அவங்களுக்கு எப்பவுமே தனிக் கவனம் கிட்டுவது உண்டு.

ஆனா, என்ன வசீகரிச்சாலும், 'டொக்கா'தான் இருப்போங்கர ஆளுங்க என்னதான் பண்ணுவாங்க?
ஸோ, அவங்க வசீகரச்சாதான் நான் கவனிப்பேன், நல்ல விதமா நடத்துவேன் என்ற அளவுகோலிலிருந்து வெளிய வரப் பாருங்க.

'அன்பே சிவ'த்துல, கோட்டு டை போட்டுக்கிட்டு வர உத்தமன் மாதிரி ஆளுங்களும் இருப்பாங்க, அதே சமயம், நல்லது மட்டுமே செய்யத் தெரிஞ்ச, 'அன்பே சிவம்' சொறி நாய் மாதிரியும் ஆளுங்க இருப்பாங்க.

ஆழமா பாத்து, ஒரு ஆளை மதிக்கப் பழகுங்க.

மேலோட்ட தோற்றத்தைப் பார்த்தல்ல.

"அடங்கு! இன்னாத்துக்கு இப்ப இவ்ளோ பில்டப்பு?"ன்னு மனசுக்குள்ள நெனைக்கும் வாசகரே, "சர்வேசன்னாலே மொக்கை" என்ற முன் முடிவை மாத்துங்க, கொஞ்சம் ஆழமா படிங்க ;)

யூ-ட்யூபில் வழக்கம் போல் எத்தையோ பாக்கப் போய், எத்தை எத்தையோ பார்த்து, கடைசியில் இத்தைப் பார்த்தேன்.
ப்ரிட்டானிய பாடல் போட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெற்று பாடிய Paul Pottsன் வீடியோ கண்ணில் பட்டது.

அவர் முகம் பார்த்ததும், "ஹையா, ஏதோ அபச்வரமா பாடி, காமெடியா இருக்கப் போவுது ஜாலி"ன்னு முன் முடிவு பண்ணி வீடியோவ பார்க்க ஆரம்பிச்சேன்.

மனுஷன் பாடினது ஓப்ரா.

நீங்களும் மொதல்ல வீடியோ பாருங்க, அப்பரம் மேலப் படிக்கலாம்.




பாத்தாச்சா? மனசுக்குள்ள ஒரு கனமான பீலிங் வரல?

எனக்கு இந்த ஓப்ரா வகை பாடல்கள் மேல் பெரிய ஈடுபாடில்லை, ஆனாலும், முன்னொரு பதிவில் சொல்லியிருந்த படி, சில பாடல்கள் ரொம்பவே வசீகரிக்கும் டைப்பு, இந்த ஓப்ராவில்.

இந்த Paul Potts பாடினத கேட்டுட்டு, மூச்சு பேச்சு வரல எனக்கு. கண்ணுல கண்ட மேனிக்கு தண்ணி வரும் அபாயமே வந்துடுச்சுன்னா பாருங்க.

மொபைல் சேல்ஸ்மேனுக்கு உள்ள என்னா தெறமைய்யா?

காலக் காட்டு பாலு! அசத்திட்டீங்க சாரே!

மக்கள்ஸே, தோற்றத்தை பார்த்து ஏமாறாதீர்.

தீர ஆராய்ந்த பின்னேரே ஒருவரைப் பற்றி எந்த முடிவுக்கும் வரவும்.

வாழ்க Paul Potts! very inspirational!

14 comments:

SurveySan said...

judgesம் நம்ம மாதிரியே 'முன் முடிவு' பண்ணினதால், பால் பாடியதும், அவங்க முகத்தில் தெரியும் ரியாக்ஷன்ஸ் அருமை.

SurveySan said...

Paul Potts பாடிய time to say good bye கீழே:
http://www.youtube.com/watch?v=IVxa6QqtF_M

Radha Sriram said...

Listen to Bocelli's or Pavarotti's Nessum DOrma....அழுகை அழுகையாய் வரும்...Paul's was pretty good.:):)

Anonymous said...

சூசன் பாயிலை விட்டுட்டீங்க.

SurveySan said...

Radha, Pavarotti is fabulous in Nessum Dorma. இப்பதான் கேட்டேன். என்ன ஒரு sincerity அவர் பாடரதுல? யப்ப்பா!
http://www.youtube.com/watch?v=O0Sx5lbVlQA

Bocelliன் Time to say good bye எனது பெரிய ஃபேவரைட்.

செம வசீகரம் இருக்கு அந்த இசையில்,ஒண்ணுமே புரியலன்னாலும் :)

ஒரு ஓப்ரா முழுசா போய் பாக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன். ஆனா, தங்கமணிக்கு புடுக்காது. :)

SurveySan said...

சின்ன அம்மிணி, சூசன் பாயிலும் பாத்திருக்கேன்.

என்னமோ தெரீல என்ன மாயமோ புரீல, என்னை பெருசா பாதிக்கலை அவங்க. இங்க அமெரிக்க சானலில் பாட வந்தாங்க ஒரு தபா.

SurveySan said...

ராதா, ஒரு விஷயம் இப்பதான் கவனிச்சேன். பாவரோட்டி பாத்தப்பரம் தான், paul potts பாடினதும், Nesson dormaன்னு தெரீஞ்சுக்கிட்டேன் ;)

அந்த பாட்டுல ஏதோ ஒரு பெரிய சங்கதி இருக்கு.

SurveySan said...

ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு நானும் பாட ட்ரை பண்ணேன் (அடங்கு).

கொரல் ஒடஞ்சதுதான் மிச்சம் ;)

ஆனா, அந்த சூட்டோட சூடா, ஒரு டமில் பாட்டை ரெக்கார்ட் பண்ணிட்டேன்.

நாளை பாடல் பதிவு, நேயர் விருப்பத்தில் வரும் :)
http://neyarviruppam.blogspot.com

Sampath said...

தல இவர் தான் Britain Got Talent வின்னர்னு நெனைக்கிறேன் சரியா? ...... இதே மாதிரி Americas Got Talent Season 4 வின்னர் Kevin Skinner வீடியோஸ் பாத்து இருக்கீங்களா? ... அவரோட audition பாருங்க நல்லா இருக்கும் ..... சீசன் 4 ல final வரைக்கும் ஒரு ஒபேரா சிங்கரும் வந்தாங்க .... அப்புறம் சூசன் பாய்ல் அமெரிக்கால பாடினது அந்த எபிசொட்ல தான் ....

SurveySan said...

Sampath, danks!

innikku night paathudaren ;)

CVR said...

Some how i felt all those guys were over reacting!!
May be its because of my lack of awareness into Opera

SurveySan said...

CVR, its a beautiful song. amaidhiyaa kettup paarunga.

did you like sarah brightmans 'time to say good bye?'. you should like that before you can like nessum dorma :)

பெசொவி said...

இதத்தான், நம்ம ஊரிலே "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குதாம் ஈரும் பேனும்"னு பெரியவங்க சொல்லி இருக்காங்க. ஆளப் பாத்து முடிவு பண்ணாதீங்க, உள்ள இருக்கற மேட்டர பாத்து முடிவு பண்ணுங்க.

உங்கள் வார்த்தையை வழி மொழிகிறேன்.

பெசொவி said...

அதுல இன்னொரு விஷயம் பாருங்க, அவர் பாடின போது இருந்த பீலிங்க விட, நடுவருங்க தீர்ப்பு சொன்னபோது இருந்த பீலிங் உண்மையிலேயே விவரிக்க முடியவில்லை.