recent posts...

Thursday, August 28, 2008

$1,008 ~ மகேஷ்வரிக் கடவுளைக் காண ஆகும் செலவு

hinduப் பத்திரிகை படிக்கும்போது, கூகிள் விளம்பரங்கள் பல இடம்,வலம்,மேல், கீழ் என நாலாப் பக்கங்களிலும் மின்னும்.
ஊர்ல பேப்பர்ல கிடைக்கும் hindu தரமா இருக்கும். (செய்திகள சொல்லலை, பேப்பரின் தரம்).
ஆனா, ஆன்லைனில், இவர்களின் பத்திரிக்கை, கேவலமான, layoutம், குப்பை கிராஃபிக்ஸும் கொண்டு காட்சி தருகிறது.

ஆனாலும், நாளுக்கு ஒரு தரம், எட்டிப் பாத்து, பதிவு எழுத எதாவது மேட்டர் மாட்டுதான்னு பாக்கரது வழக்கம் ;)

இன்னிக்கு எட்டிப் பாக்கும்போது, ஒரு அரிய அரிய அரிய கூகிள் விளம்பரம் கண்ணில் பட்டது.

யாரோ, ஸ்ரீ காலேஷ்வராம்,
இங்க அமெரிக்காக்கு வராராம்.
யாரோ, (கடவுள்) டிவைன் மதர் மகேஷ்வரியாம்,
கடவுளை நேரில் காண, சில வித்தைகள் இவர் கற்றுணர்ந்தவராம்,
அத்த எல்லாருக்கும் சொல்லித் தர வராராம்,
இரு நாள் பயிற்சியாம்,
$1,008 ஆகுமாம். (அதில் $855 tax deductible)



காலேஷ்வர் சார், நீங்க கடவுள காட்டுங்க, இல்ல தசாவதாரம் போட்டுக் காட்டுங்க, எனக்கு ஒரு கவலையும் இல்லை.
இஷ்டம் இருக்கரவங்க, துட்டு இருக்கரவங்க, உங்களுக்கு 1008 குடுத்துட்டு, மோட்சம் பாக்கட்டும்.

ஆனா, இதுக்கு எதுக்கு இந்த பாழாப் போன அரசாங்கம், tax சலுகை எல்லாம் தருதுன்னுதான் புரியல்ல.

எங்க ஊர்லயாவது, டமிலைக் காக்க, சினிமாக்கும் டமில் பேர் வெக்கச் சொல்லி, tax deductions எல்லாம் செய்யரோம்.

$1,008 குடுத்து ரெண்டு நாள் கிளாஸுக்கு வரவங்களுக்கு இன்னாத்துக்கு tax deduction?

ஸ்ஸ்ஸ்ஸ். மகேஷ்வரிதான் காப்பாத்தணும்.

யாராச்சும், கிளாஸ் அட்டெண்ட் பண்ணி பாஸாயி, டிவைன் மதர் பாத்தவங்க இருக்கீங்களா?

இல்லியா? God பாக்கணுமா? மேலே உள்ள படத்தை க்ளிக்கி கிளாஸ் விவரங்களைக் கண்டறிந்து சேருங்க.


(காலேஷ்வர் சார், 1008 * 10% = $100.8 )

நன்றி!

14 comments:

SurveySan said...

தெய்வ குத்தம் ஆயிடுமோ? :(

Tech Shankar said...



1008 பெரியார், இங்கர்சால் வந்தாலும் நாட்டு மக்களைக் காப்பாற்ற முடியாது போலிருக்குதே?

கடவுளைக் காண்பிக்கிறாராமா? அதுக்கு எதுக்கு இம்புட்டு காசு.
காசை வாங்காமக் கடவுளைக் காம்பிக்க மாட்டாராமா?

என்ன சார் கொடுமையாக் கீது.

1008$ ல வரிச்சலுகையாமா? எது எதுக்கெல்லாம் வரிச்சலுகையோ கொடுக்கிறாங்க போங்க.

"இந்த நாடும் நாட்டு மக்களும் _ _ _ _ போகட்டும்னு " , ஒரு படத்திலே வசனம் வரும்.

அதை இங்கே நினைவு கூற வைத்துவிட்டார்களே!


சரவணகுமரன் said...

ஹிந்துவ (பேப்பர) திட்டாதிங்க... கடைசில உங்களுக்கு ஒரு பதிவுக்கு மேட்டர் கொடுத்திருக்கே... :-)

திவாண்ணா said...

ஆமா, காசு வேணும்னா கடவுளையே கேட்டு வாங்கலாமே? இப்படி ஏன்? மேலும் கடவுளை கேட்டு நமக்கும் வாங்கி கொடுக்கலாமே? கமிஷன் வேணா தரேன்.
இவங்க மாதிரி என்னாலேயும் பேச முடியுமே. சர்வேசன் அங்கே ஏற்பாடு பண்ணறீங்களா? கமிஷன் தரேன்.
[:-))
ஆன்மிகத்துக்கு கேடே இந்த பிஸினஸ் ஆசாமிங்கதான்.

SurveySan said...

தமிழ்நெஞ்சம்,

totally true!

SurveySan said...

சரவணகுமரன்,

///ஹிந்துவ (பேப்பர) திட்டாதிங்க... கடைசில உங்களுக்கு ஒரு பதிவுக்கு மேட்டர் கொடுத்திருக்கே... :-)///

correct :)
but still... kuppai kuppaidhaan :0

SurveySan said...

திவா,

////ஆன்மிகத்துக்கு கேடே இந்த பிஸினஸ் ஆசாமிங்கதான்.////

YEP!

goma said...

நம் ஊரில், சில வால் அறுந்த நரிகள், இருக்கும் வரை ,மரை கழண்ட மனிதர்களும் ,இருப்பார்கள்.
வாலை அறுத்துக் கொண்டு "ஆமாம் கடவுள் தெரிகிறார்..."என்று சொல்லிக்கொண்டு திரிவார்கள்.நமக்குள்ளேயே கடவுள் இருக்கிறார் என்பதை மனிதன் என்று உணர்கிறானோ அன்றுதான் ஆன்மீகம் நிலைக்கும்

SurveySan said...

$1008 குடுத்து போறவங்க, கண்டிப்பா பழம் தின்னு கொட்டை போட்ட பசையுள்ள பார்ட்டிகள் தான்.

அவங்களுகுள்ளயே இந்த அறியாமை(?) இருக்குன்னா, சாமான்யன் திருந்த இன்னும் 1008 வருடங்கள் ஆகும்.

அது சரி said...

என்னது இவன் குருவா? என்ன கருமம்டா சாமி!

கடவுளையே பாத்தவனுக்கு காசு எதுக்கு? அதுவும் $1008? ஒரு டாலர் கொறச்சி குடுத்தா கடவுள பாக்க முடியாதோ??


இவனுங்கெல்லாம் எதுக்கு அமெரிக்கா வர்றானுங்கன்னு நமக்கு தெரியாதா?? அங்க எப்படின்னு எனக்கு தெரியல, ஆனா லண்டன் வந்தா, இவனுங்க போற மொத எடம் Soho. ஏன்னா, லண்டன்ல அது தான் ரொம்ப பாப்புலர் "அந்த" விஷயத்துக்கு.

அங்க போய் தான் இவனுங்க படைப்போட அழகை ரசிக்கிறது எல்லாம். இவனுக்கெல்லாம் 1008 டாலர்! இவனையெல்லாம் மோசடி வழக்குல உள்ள போட்டா என்ன??

ஆதிபகவன் said...

கடவுளைக் காட்ட $1008. ஏன்ன கொடுமைடா சாமி.

பேசாமல் மூணு ரவுண்ட் டபிள் ஸ்காட்ச் போட்டால் கடவுள் நேரடியாவே வருவார்.

இல்லாட்டி $1008ஐ எனக்கு கொடுங்க, நான் இவனுக்கு கடவுள காட்றேன்.

திருட்டுப்பசங்க எங்க இருந்துதான் கிளம்பி வருவானுங்களோ தெரியலை.

SurveySan said...

நண்பர்காள், அவன் இவன் என்ற ஏக வசனத்தைத் தவிர்க்கலாம்.
(தெய்வம் குத்தம் ஆயிடும்னு சொல்லல:) )

ஃப்ராடுத்தனம் பண்றவங்களுக்கும் மரியாதை கொடுக்கணும் என்பது நமது அரசியல் பண்பு :)

எங்கேருந்து, இவங்க கெளம்பிவராங்கன்னு யாராச்சும் புலனாய்வு பண்ணி கண்டுபிடிச்சு சொன்னா நல்லாருக்கும்.
நோண்டிப் பாத்தா, 8 வயசுலயே ஞானம் வந்துடுச்சு, மண்டையிலிருந்து விபூதீ குங்குமம் கொட்டிச்சு, அதான் சாமி ஆயிட்டாருன்னு புதுசா புருடா ஏதாவது தெரியவரும் ;)

TBCD said...

அங்கே இங்கே போக வேண்டாம், சர்வேசர், கொலைக்குற்றம் சாட்டப்பட்ட சாமியாருக்கே இன்னும் மவுசு இருக்காம்...அப்பறம் இவர்களைப் போன்றவர்கள் ஏன் வளர மாட்டார்கள்...

கொள்ளையடிப்பதில் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே முன்னுரிமை என்பதை உடைக்க அங்கிங்கெனாதபடி, புற்றீசல்கள் போல பல சாமியர்கள் வளர போன தலைமுறை சாமியார்களும் ஒரு காரணம்....

Tech Shankar said...



கும்பகோணம் ஏரியாப் பக்கம் வந்தீங்கன்னா.. கோவிலில் ஒரு சிறிய கதையைச் சொல்லிவிட்டு.. துட்டுப்போடுங்க.. 10 ரூபாய் (2001 ஆம் ஆண்டில்) கதையைச் சொல்லிட்டேன். துட்டுப்போடுங்க என்று மிரட்டினார்கள்.

இப்போது (2008) எவ்வளவு கேட்கிறார்களோ. அவர்களும் இங்கே (கு.கோ) இதே கடவுளைக் காண்பித்து $ கேட்கும் மன்னிக்கவும் INR கேட்கும் வழக்கத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள் தானே.

நாமாக விருப்பப்பட்டுப் போடுவது வேறு. அவர்களாக இவ்வளவு போடுங்க என்று மிரட்டுவது வேறு.

ஒன்று அவர்களுக்குப் புத்தி வரவேண்டும்.
இல்லை நமக்குப் புத்தி வரவேண்டும்.

இதுக்கு எத்தனை ஆண்டுகள் ஆகுமோ. அதுவரை உங்களது வேறு வேறு சர்வேக்களில் பங்குகொண்டு பொழுதைக் கழிக்க வேண்டியதுதானா! (நுனிப்புல் மேய்வதை நான் இன்னும் விடவேயில்லை)