recent posts...

Sunday, January 31, 2010

சிறுத்துப்போன ராஜாவும், கறுத்துப்போன வைரமுத்துவும்

எம்.ஜி.ஆரையும், சிவாஜியையும், கருணாநிதியையும், ரஜினியையும், கமலையும், இளையராஜாவையும், விஸ்வநாதனையும், ரஹ்மானையும், அவரையும், இவரையும், நம்மில் பலரும், 'அவன்' 'இவன்' என்ற ஏகவசனத்தில்தான் பேசுவோம்.
'என்னடா நடிக்கறான் அவன்', 'இப்படி சொதப்பறானே இவன்' இப்படி.

அதற்கு மனோரீதியான ஞாயம் என்னன்னா, நம்ம செலவு பண்ற காசுலதான அவங்க பெரிய ஆளாகியிருக்காங்கங்கர ஒரு எகத்தாளமாம். (எங்கியோ படிச்ச நினைவு). அது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம மரியாதை குடுக்கலைன்னா அவங்க ஒண்ணும் கொரஞ்சுடப் போரதில்லை.
மரியாதை சரி, ஆனா, அவங்களை சந்தர்ப்பம் கிட்டும்போதெல்லாம், விமர்சனம் என்ற பெயரில், அவர்களின் தொழிலை போட்டு கிழித்து தொங்கப் போட்டுவிடுகிறோம். தொழில் மட்டுமல்லாது, அவங்க சொந்த பந்த நிகழ்வுகளையும் விருப்பு வெறுப்புகளையும் கூட அலசி ஆராஞ்சு, விரிச்சு கரிச்சுடறோம்.

என்ன இருந்தாலும், அவர்கள் ஒவ்வொருவரின் சாதனையும் ஹிமாலய அளவிலானது. நாமோ ஒரு சிறு துரும்பு. நமக்கு அவங்களை தூக்கி நிறுத்திப் பார்க்க சுத்தமா தகுதியில்லன்னாலும், நாம் குலைப்பதை நிறுத்துவதில்லை.
சரி, இருந்தாலும், குலைச்சு வைப்போம்.

இளையராஜா. இசை ஞானி. எங்கேயிருந்தவர், என்னெல்லாம் செய்து, இப்ப எங்கையோ நிக்கறாரு. நம்மையெல்லாம் தன் திறமையால் வசியம் செய்து, ஆண்டாண்டு காலமாய் கட்டிப் போட்டவர், இன்னும் கட்டிப் போட்டுக் கொண்டிருப்பவர்.
பத்மபூஷன் கொடுத்திருக்காங்களாம், இவருக்கு. 1980களில் கொடுத்திருந்தால், தாரை தப்பட்டையோட கொண்டாடியிருக்கலாம். காலம் கடந்து கொடுக்கப்பட்டது. இவர் அதை வாங்காம ஒரு எதிர்ப்பை காட்டியிருந்திருக்கலாம். சரி, வாங்கிட்டு, ஒரு டாங்க்ஸ் சொல்லிட்டு அடுத்த வேலையை பாத்திருக்கலாம்.
எந்தளவுக்கு அற்புதமா இசை அமைக்கறாரோ, அதே அளவுக்கு, பேசத் தெரியாதவர். பேட்டி எடுக்க வந்த மீடியா காரர்கள்கிட்ட ஏதோ வொளரி கொட்டியிருக்காரு.
இந்த விருதை, இவருக்குக் 'கொடுத்தாங்களாம்', அதுவும், 'கேக்காமலையே கொடுத்தாங்களாம்'. மத்தவங்க 'கேட்டு வாங்கராங்கன்னு' குத்திக் காட்டறாரு. ஏன் இந்த அல்பத்தனம் ராசா?
மனசுல என்ன நெனச்சாலும், ஒரு 'ஞானி'யா இருக்கரவரு, அட்லீஸ்ட், வெளியில் பேசும்போதாவது, ஒரு சம்பர்தாய டாங்க்ஸும், விருது பெற்ற மற்ற்வர்களுக்கு ஒரு வாழ்த்தும், 'எல்லாப் புகழும் இறைவனுக்கே'ன்னு அமைதியா சொல்லிட்டுப் போவலாம்ல?
சின்னப் பசங்க மாதிரி வாய்ல வந்ததையெல்லாம் அபத்தமா வுளரிக் கொட்டி, ஏன் இப்படி சிறுசாயிக்கிட்டே இருக்கீங்க?
உங்களை எந்த அளவுக்கு ரசிச்சோமோ, அதே அளவுக்கு வெறுத்துடுவோம் போலருக்கேய்யா...
இதே பத்மபூஷன் ரஹ்மானுக்கும் கொடுத்திருக்காங்க. அவரின் பெருந்தன்மை, அவர் வாkகில் - I’m overwhelmed that I have received the honour at the same time that music composer Ilayaraja has received it. It is a great personal statement for me. He has played for my father Shekher, and I have played for Ilayaraja Sir. It is a family thing for me.


வைரமுத்து. அற்புதக் கவிஞர். சந்தேகமே இல்லை. ராசாவின் இசையால், வெளிச்சம் காட்டப்பட்டவர். நடுவில் ஏதோ ப்ரச்சனையால் இருவருக்குள்ளும் விரிசல் ஏற்பட்டது என்றளவுக்கு அனைவருக்கும் தெரியும். ராசாவும் 'ஈகோ' வளர்ப்பவர். இதில், ரெண்டு பேருக்கும் நட்டமில்லை. நமக்குத்தான் நட்டம் என்றளவில் இன்றுவரை நகர்கிரது.
சமீபத்தில், வைரர் ஒரு கவைதைப் புத்தம் எழுதியிருக்காராம். தன் வாழ்நாளில் தன்னை பாதித்தவர்கள் பட்டியலாம், கவிதை நடையில்.
ராஜாவைப் பற்றியும் ஒரு கவிதை.

அதில் ராசாவின் புகழை பாட ஆரம்பித்து, இடையில் ஒரு யூ-டர்ன் எடுத்து, ராசாவுக்கும் தனக்கும் இருந்த ஊடலை ஹைலைட் பண்ணியிருக்காரு. அதிலும், பொத்தாம் பொதுவா, ராஜா தனக்கேதோ வ்க்கீல் நோட்டீஸ் அனுப்பியதாகவும் சொல்லி, ஒரு தெளிவா எதையும் சொல்லி முடிக்காம, மொத்தத்தில் ராஜாவை villify பண்ணிட்டாரு. தனக்கு வர வேண்டிய வாய்ப்பையெல்லாம், ராஜா நம்பியார் மாதிரி நடுவுல பூந்து கெடுத்ததாகவும் குற்றச்சாட்டு.
குற்றச்சாட்டு எல்லாம் ஓகே தான், ஆனா, நடு நடுவில், நான் மட்டும் நல்லவன், ராஜா எவ்ளவோ கெடுதல் பண்ணாலும், இன்னும் ராஜாவை, நட்புடந்தான் பாவித்து வரென்னு ஒரு உளரல் வேர.
நல்லாருக்குய்யா நீங்க நட்புடன் ராசாவை பாவிப்பது. ராசாவை வில்லனாக்கி, கவிதை எழுதி, அதை புக்காவும் கொண்டு வந்துட்டீங்க. இதுல நண்பன்னு பில்ட்-அப் வேர.
ரொம்பக் கேவலம்.
இதுக்கு, நீங்க இன்னொரு வக்கீல் நோட்டீஸ் திரும்ப அனுப்பி, கோர்ட்டுக்கே இழுத்திருக்கலாம் (பண்ணாமயா இருந்திருப்பீங்க? அதன் முழு விவ்ரம் என்னான்னும் சொல்லலை)


மேன்மக்கள், சறுக்கினா, ரொம்பவே கேவலமா இருக்கேய்யா...

Wednesday, January 27, 2010

கற்பகம் ஸ்ரீராம் - எப்படிங்க இப்படி?


Goodnewindia மற்றும் PointReturn பற்றியெல்லாம் நான் ஏற்கனவே பதிந்திருக்கிறேன்.

சுருக்கச் சொல்லணும்னா, ஸ்ரீதரன் என்பவர், இந்தியாவின் பலப் பல மூலைகளுக்குச் சென்று, பிரபல ஊடகங்கள் முன் நிறுத்தாத, 'வெற்றியாளர்கள்' பலரை goodnewsindia.com தளத்தின் வழியாக நமக்கு அறிமுகப்ப்டுத்தினார். வெறும் அறிமுகத்தோடு மட்டுமல்லாமல், அந்த வெற்றியாளர்களின், குட்டிச் சுயசரிதையையும், அவர்கள் செய்த நல்ல விஷயங்களையும் முழு விவரங்களுடன் அழகாக பதிந்து வந்தார். தளத்தை படிச்சுப் பாருங்க, உங்களுக்கே மேட்டர் புரியும்.

சில வருஷங்களுக்கு முன், ஒரு புதிய முயற்சியை தொடங்கியிருந்தார் ஸ்ரீதரன். ஜமீன் எண்டதூர் என்ற கிராமத்துக்கு அருகில் உள்ள 17 ஏக்கர் வரண்ட பூமியை வாங்கி, அதில், காடு வளர்க்க முற்பட்டுள்ளார். அதாவது, அந்த நிலத்தில் குளம் அமைத்து, மரம் நட்டு, பராமரித்து, வரண்ட ப்ரதேசத்தை பச்சை மயமாக்கி, இயற்கைக்கே திருப்பித் தரும் ஒரு உன்னதப் பணியை துவங்கினார்.

அவரின் தளத்தையும், ட்வீட்டுகளையும் அடிக்கடி பார்ப்பதுண்டு.

68 வயதான ஸ்ரீதரன் அவ்வப்பொழுது, 'புலம்புவது', இவர் ஒரு வேகத்தில் துவங்கி நடத்திக் கொண்டிருக்கும் விஷயம், தொடர்ந்து, தான் திட்டமிட்டபடி நடந்து முடியுமா என்பது.
கிட்டத்தட்ட, தனி ஆளாக, சொந்தப் பணத்தில் இப்படி அகலக் கால் வைத்ததும், தனக்கு வயதாகிறது என்ற யதார்த்தமும், எளிதில், தன்னார்வலர்கள் இந்த மாதிரி விஷயங்களுக்குக் கிட்டாத நிலையும் அவரிடமிருந்து இந்த மாதிரி கவலைகள் வரக் காரணமாயிருந்திருக்கும்.

அவர் தளத்தில் இன்று கண்ட நல்ல செய்தி, மும்பையைச் சேர்ந்த கற்பகமும், ஸ்ரீராமும், இவருக்கு உருதுணையாக இருந்து, PointReturnல் காடு வளர்க்க, முழுநேரமும் தங்களை இணைத்துக் கொள்கிறார்களாம்.
படித்ததும், வாவ்வ்வ்வ்வ்னு உள்மனது சொன்னது.
மேலும் படித்தால், இருவரும் முப்பதுகளில் இருப்பர்வர்கள்.
ஐஐடி யில் முதுகலைப் பட்டம் பெற்று, கன்னாபின்னா என்று சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தவர்கள்.

அத்தனையும் விட்டு, இயற்கையின் மேல் இருக்கும் ஒரு ஈர்ப்பில், இப்படி வாழ்க்கை முறையையும் எதிர்காலத்தையும் தலை கீழாக புரட்டிப் போட்டு மாற்றிக் கொள்ள முடிகிறதே இவர்களால். எப்படிங்க இதெல்லாம்?
ஒரு வேலை விட்டு இன்னொரு வேலைக்குப் போகவே, என்னமா அலசறோம்.

இப்படி, மத்தவங்களுக்காக, சொகுசு வாழ்க்கையை உதறித் தள்ளி, எளிமையான எதிர்பார்பற்ற வாழ்க்கை முறைக்கு மாற, எந்த கடைல அரிசி வாங்கணும்?

கண்டிப்பா இந்த மேட்டரை முழுசா படிங்க.
நம்மாலான மானசீக வாழ்த்துக்களை மட்டும் தாராளமா அள்ளி வீசுவோம்.

kudos to Karpagam and Sriram.
I truly wish, one day, i can be as selfless as they have become. well, இந்த ஜென்மமான்னுதான் தெரியல்ல. :(

Tuesday, January 26, 2010

புதிய Mile Sur Mera Thumara

தூர்தர்ஷனை அறிந்தவர்கள், 'மிலே சுர் மேரா துமாரா' என்ற தேசிய ஒருமைப்பாட்டுக்கான பாடலை அறிந்திருப்பீர்கள்.

புல்லரிக்க வைக்கும் பாடல் அது. பீம்சேன் ஜோஷி தொடங்கி, பாலமுரளிகிருஷ்ணா, கமலிலிருந்து, டீ கடை நாயர் வரை எல்லாரும் அமக்களமா பாடி ஆடி கலக்கியிருப்பாங்க.

அந்தப் பாடலின் புதிய 'ரீ-மிக்ஸ்' வடிவம், பழைய தலைமுறையையும் புதிய தலைமுறையையும் கலந்தடித்து, வித்யாசமாய் வந்துள்ளது.

வழக்கம் போல், சினிமாக்காரர்களே அதிகமாய் வருகிறார்கள். சினிமா மட்டுமல்லாது, மற்ற துறை சார்ந்த பெருந்தகைகளை சேர்த்திருக்கலாம். ஆனா, நமக்கு யாருக்கும் அவங்கள தெரியாம, ஃபார்வர்டு அடிச்சு வீடியோவ முழுசா பாக்காம விட்டுடுவோம்.
ஸோ, மன்னிச்சிடலாம். :)

சல்மான் கான் வரும் நிமிடம், காது கேளாதவர்க்கான, சைகை மொழியில் அமைந்திருப்பது, குறிப்பிடத்தக்க புதுமை.





ஜெய்ஹிந்த்!

Monday, January 25, 2010

Y ஈஷா Y Y Y?

ஈஷாவுக்காக ஓட்டு போடச் சொல்லி பதிவியிருந்தேன். முதல் ஐந்தில் வந்து, $100,000 தொகையை வென்றிருக்கிறார்கள்.. $1மில்லியன் கிட்டாதது வருத்தமே.

அந்தப் பதிவில், ஈஷாவுக்கு எதிராக சில கருத்துக்கள் பதிந்திருந்தன.

பரணீ என்ற அன்பர், ஈஷா, காடுவளர்க்காமல், காடு அழித்தலில் ப்ரசித்தி பெற்றிருப்பதாக ஒரு கூகிள் mapன் நிரலை கொடுத்திருந்தார். அதைப் பாத்தா, பச்சைப் பசேல் காட்டுக்கு நடுவில், மொட்டை அடித்த மாதிரி ஒரு இடத்தில், ஈஷாவின் கூடாரம் தெரிகிறது.

இவங்க மரம் இல்லாத இடத்தில் பலப் பல மரங்கள் நட்டு வைக்கிறார்கள் என்று ஆங்காங்கே செய்திகள் படித்திருக்கிறேன். ஆனா, வச்ச மரத்தை பராமரிக்கறாங்களான்னு சிலர் கேள்வி கேட்டிருக்காங்க.
மரம் வெக்கராங்களோ, பராமரிக்கறாங்களோ, அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

பச்சைப் பசேல் காட்டுப் ப்ரதேசத்தில் கூடாரம் போட, இருக்கும் மரக்கங்களை வெட்டி அழிப்பானேன்? Y ஈஷா Y?

பணம் படைத்த இந்த மாதிரி 'தொண்டு' நிறுவனங்கள், வளர்ச்சி அடையாத வரண்டு பூமியில், காட்டை உருவாக்கி, அங்கு கூடாரங்கள் அமைத்தால், ஊரும் வளரும், அதைச் சுற்றிய கிராமங்களும் உயருமே?

இல்லியா? Am i missing something?





விளக்கம் தருவார்களா ஈஷா அன்பர்கள்?

நா..ண, நா..ண! :)

Wednesday, January 20, 2010

ஆயிரத்தில் ஒருவன் - செல்வராகவன் எப்படி எடுத்திருக்கலாம்?

எல்லாரும் தொவச்சு காயப்போட்டுட்டாங்க. சிலர் நல்லாருக்குன்னு சொல்லி இஸ்திரி போட்டு, பத்திரமா மடிச்சும் வச்சுக்கிட்டாங்க.

'எலிபத்தாயம்'னு ஒரு மலையாளப்(?) படம் அந்த கால b&w தூர்தர்ஷனில், வாராவாரம் போடுவாங்க. ஒருத்தரு காத்தால எழுந்துப்பாரு, எலிப் பொறியில் மாட்டியிருக்கும் எலியை எடுத்துப்பாரு. நடந்து போய் கொளத்துல முக்குவாரு. பல்லு தேப்பாரு. குளிப்பாரு. ஈரக் கோமணத்தோட வீடு வந்து சேருவாரு. இந்த மாதிரி அஞ்சு தபா பண்ணுவாரு. ஒவ்வொரு நாளின் சீனும் பதினைஞ்சு நிமிஷம் ஓடும். கடைசி சீன்ல, குளிச்சதும், கொளத்துலையே முங்கி செத்துடுவாரு. படம் முடிஞ்சுடும்.
அந்தப் படமும் பலராலும் பெரிய லெவலில் புகழப்பட்டு, பலப்பல அவார்டெல்லாம் சம்பாதித்தது.

என்ன சொல்ல வரேன்னா, ரசனைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்.
எனக்கு பிடிக்கரது உங்களுக்குப் பிடிக்காம போகலாம், உங்களுக்குப் பிடிச்சது எனக்கு பிடிக்காம போகலாம்.
ஆனா, உங்களுக்கும் எனக்கும் பிடிச்சதுதான், சிறந்த படமா, காலத்தை வென்று நிற்கும்.
பொழுது போலன்னா, அந்த டிவிடி எடுத்துப் பாக்கலாமேன்னு, திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் படங்கள் இவை.


ஆயிரத்தில் ஒருவன், அந்த வகைப் படம் அல்ல. வெறும் லாஜிக் ஓட்டைகளால் மட்டுமல்ல. பேசிக்கான அபத்தங்களால் அப்படி.
ரொம்ப சிம்பிளா ஒரு விஷயம். ரீமா சென், ஒரு கண்டிப்பான அதிகாரியின் பில்ட்-அப்போடு படம் துவங்கும். கார்த்தி ஒரு கூலித் தொழிலாளியாம். ஆனால், அடுத்த அஞ்சாவது நிமிஷம், 'அதோ அந்த பறவை'க்கு கார்த்தியும் ரீமாவும் கெட்டாட்டம் போடுவாங்க.
* 'ஹாலிவுட் தரத்தை' தொடணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு எடுக்கரவங்க, இந்த மாதிரி அபத்தங்களை தவிர்த்தல் நலம்.

அப்பரம் ரொம்ப முக்கியம் 'வக்கிரம் தவிர்த்தல்'. ஹீரோவும் ரெண்டு ஹீரோயினும் சும்மா நடந்து போகும்போது, ஒரு முன்னறிவிப்பே இல்லாமல், திடீர்னு ரெண்டு ஹீரொயின்ஸும் சண்டை போட்டுப்பாங்க. சென்ஸார் பீப் பீப் போட்டு ஒரு டயலாகும் கேட்காமலேயே, வக்கிரமான தேவையே இல்லாத சொறுகல் இது. என்ன சாதிச்சாரு அந்த சீனாலன்னு தெரியல. நெளிய வைக்கும் மேலும் பல காட்சிகள் படத்தில் இருந்தது (முச்சா, கெட்டாட்டம், கெட்ட பீப் டயலாக்,...)
* 'ஹாலிவுட் தரத்தை' தொடணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு எடுக்கரவங்க, இந்த மாதிரி வக்கிரத்தை தவிர்த்தல் நலம்.

அப்பரம் ரொம்ப ரொம்ப முக்கியமா, 'புரியர மாதிரி படம் எடுத்தல்'. படத்துக்கு ரொம்ப அருமையான கதைக் கரு இருந்தது. மறைந்து வாழும் சோழர்கள்; திரும்ப தஞ்சைக்கு எப்ப வரலாம்னு ஏக்கத்தோட ஒரு தூதனுக்காக வெயிட்டிங்க்; இந்தப் பக்கம் பழிவாங்கத் துடிக்கும் பாண்டியர்கள்; நடூல அகழ்வாராய்ச்சிக் குழுவு; ரெண்டு ஹீரோயின்; ஒரு ஹீரோ; அதகளம் பண்ணியிருக்க வேண்டிய கரு. பலப் பல குழப்பத்தாலும், மேலே சொன்ன ரெண்டு மேட்டராலும், படத்துடன் ஒட்டாமல் குழப்பத்துடன் பயணிக்கும் ரசிகன்.
சொல்ல வந்ததை தெளிவா சொல்லியிருந்திருக்க, இன்னும், கொஞ்சம் மாத்தி யோசிச்சிருக்கலாம்.
  • முதல் பாதியில் சோழனைத் தேடிச் செல்லும் 'அகழ்வாராய்ச்சிக்' கூட்டம், வழி நெடுகிலும் உள்ள ஏழு அபாயங்களைத் தாண்டிப் போயி, கடைசியில் அவங்க இடம் கண்டுபிடிக்கறாங்க. பிற்பகுதியில் சோழ கும்பலில் சேர்தலும், பாண்டிய கும்பலுடன் மோதலும், புரியாத டமிலில் இழுவையா நடக்குது.


  • காட்சிகளை மாத்தி மாத்தி ஒட்டியிருந்தா, படம் செமயா மெருகேறியிருந்துக்கும். முதல் பாதி, ரெண்டாம் பாதின்னு வெட்டாம, முதல் பாதியிலேயே, 'அகழ்வாராய்ச்சிக்' கூட்டம் ஏழில் முதல் நாலு கட்டத்தை கடப்பதும், நடு நடுவில், சோழர்களையும் மாத்தி மாத்தி காமிச்சிருந்திருக்கலாம். என்னடா நடக்கப் போவுதுன்னு ஒரு எதிர்பார்ப்பு இருந்திருக்கும் ரசிகனுக்கு. அப்பரம், மீதி மூணு அபாயங்களைக் கடந்து ஒரு கதவு கிட்ட வந்து, கதவை இடிச்சா, அந்தப் பக்கம் சோழர்கள் இருக்காங்கன்னு ஒரு 'ஷாக்' கொடுத்திருக்கலாம். அம்சமா இருந்திருக்கும்.


  • கிராஃபிக்ஸ்: இந்த மாதிரி கதைக்கு மிக அவசியம்தான். ஆனா, எது ஓரளவுக்கு நல்லா வருமோ, அதை மட்டும் கிராஃபிக்ஸ் செய்யணும். ஓவர் ஏம்பீஷியஸா கண்டதையும் முயற்சி செய்து, 'சப்'னு ஆக்கக் கூடாது. முதல் அபாயம் கடலிலிருந்து வரும் 'நெருப்பு மீன்', மட்டமான கிராஃபிக்ஸ். வெறும் சவுண்ட் எஃபெக்ட்ஸும் காமிரா ஆங்கிளிலுமே இதைவிட சிறப்பாய் செய்திருக்கலாம்


  • முக்கியமான மேட்டரு, சோழர்களை, தேவையில்லாமல், காட்டு வாசிகள் மாதிரி காட்டுவதை தவிர்த்திருக்கலாம். மறைஞ்சு வாழறாங்க, நல்லாவே கலாச்சார அடையாளத்துடன் வாழறாங்கன்னு, 'ரிச்சா' காட்டியிருந்திருக்கலாம். கறுப்பு சாயம் பூசி, காட்டுமிராண்டி மாதிரி காட்டியது அருவருப்பு.


  • கடைசி சண்டை துப்பாக்கிக்கும், கத்திக்கும் நடப்பது அருமை. தமிழுக்கு புச்சு. முந்தைய இழுவையால், ஈர்ப்பில்லாமல் செய்துவிட்டது. இதற்கு முன் நிகழ்வதை, crispஆக்கினா, இந்த கிளைமாக்ஸ் சண்டையும் பாண்டியர்ஸின் அட்டூழியங்களும் ஒரு பன்ச்சை கூட்டியிருக்கும்.



  • யோசிப்பாரா செல்வா?

    என் அதிகப் பிரசங்கித்தனத்தை பொறுத்தருள்க. உங்க அதிகப்பிரசங்கித்தனத்தை காட்ட, நீங்களும், யோசனைகளை அவுத்து வுடுங்க.
    காசு கொடுத்து படம் பாத்து பல்பு வாங்கியவர்கள் அனைவருக்கும் இதற்கு உரிமை உண்டு, கடமையும் கூட என்பது அடியேன் கருத்ஸ்! :)

    ஆனா, outside the box யோசித்து, புதுமையான கதைக் கருவை தமிழுக்குத் தந்த செல்வாவுக்கு நன்றீஸ்!

    Tuesday, January 19, 2010

    ஈஷாவுக்காக - இரண்டு நிமிஷமும் நாலரை கோடியும்

    வணக்கம். ஈஷா தொண்டு நிறுவனம் பத்தி கேள்வி பட்டிருப்பீங்க.
    எனக்கு நேரடியான தொடர்பு இல்லைன்னாலும், இதன் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவின் சில பல வீடியோக்கள் யூட்யூபிலும், இவரின் கட்டுரைகள் விகடன்/குமுதங்களிலும் படித்ததாய் நினைவிருக்கிறது.
    சாமியார்களுக்கு நம்மூரில் பஞ்சம் இல்லை என்றாலும், தாடி வைத்த சாமியார்களில், ஜக்கி வாசுதேவும், ஆர்ட் ஆஃ லிவ்விங்கின் ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ ரவிசங்கரும் செய்யும் அறப்பணிகள் வித்யாசமானவையாகவும், நல்லவையாகவுமே கண்ணில் படுகிறது.

    ஜக்கி வாசுதேவின், எளிமையான தோற்றமும், சாந்தமான புத்திசாலித்தனமான பேச்சும் பெரிய வசீகரம். என்ன பண்றாரோ இல்லியோ, அடிக்கடி, மரம் நடறாரு. இதுவரை பல கோடி மரங்கள் நட்டாச்சாம். இந்த ஒரு விஷயத்துக்கே அவருக்கு சபாஷ் சொல்லலாம்.

    சாமியார்கள், நம்மைப் போன்ற சாதா ஆசாமிகள்தான் என்று ஒரு பக்கம் நினைத்தாலும், சாதா ஆசாமிகளால், இவ்வளவு பெரிய கூட்டத்தை வசியம் பண்ணி, அதன் மூலம், பணம் ஈட்டி, பல நல்ல விஷயங்களைச் செய்ய முடிவதில்லை.

    நம்மால் நேரிடையாக நல்லது செய்ய முடியாவிட்டாலும், இந்த மாதிரி நிறுவனங்களுக்கு நம்மால் ஆன உதவி செய்வது அவசியம்.

    Chase Bank, உலகின் சிறந்த தொண்டு நிறுவனத்தை தேர்ந்தெடுத்து, அவங்களுக்கு $1மில்லியன் தராங்களாம்.
    கிட்டத்தட்ட 500,000 நிறுவனங்கள் அலசப்பட்டு, அதிலிருந்து 100ஐ தேர்ந்தெடுத்ததில், ஈஷாவும் முதல் நூறில் இருக்கிறது.
    இந்த நூறில், FaceBook வாக்குகளின் அடிப்படையில், முதலாம் இடத்தை பெறும் நிறுவனத்துக்கு இந்த $1மில்லியன் கிட்டும்.
    முதல் ஐந்துக்குள் வரும் நிறுவனத்துக்கு $100,000 கிட்டும்.

    கீழே உள்ள விவரங்களை அறிந்து, FaceBookல் இணைந்து (இணையாதவர்கள்), ஈஷாவுக்கு உங்கள் பொன்னான வாக்கை போட்டால், முதல் 100ல் இருக்கும் ஒரே இந்திய தொண்டு நிறுவனமான ஈஷா, வெற்றி பெறும் வாய்ப்பிருக்கு.

    தற்போது, அவர்கள் நாலாவது இடத்தில்.
    வாக்குகள் இன்னும் இரண்டு தினத்தில் மூடப்படும். உங்கள் இரண்டு நிமிஷம், ஈஷாவுக்கும் அதைச் சார்ந்தவர்களுக்கும், பெரிய மாற்றத்தை உருவாக்கலாம். உடனே ரியாக்ட்டவும்.

    Dear Friends,

    Isha Foundation needs your vote in the Chase Community $1 Million contest. It is the only India-based organization in the top 5 of the Final Round and your vote can make a difference to the lives of millions of people in rural villages and towns.

    Voting Ends on Fri, Jan 22.

    Through its various social outreach projects, Isha has reached out to more than 7 million people in 4,600 Indian villages. It has provided free health care treating over 1.5 million patients in villages, planted more than 8 million tree saplings (Project Green Hands) and provided free education to 1000s of children in the under served areas (with full scholarships through Isha Vidhya). As part of Isha Foundation's community efforts in the US, a free clinic was launched in 2008 offering free healthcare services for the poor and medically under served areas of rural Tennessee (Isha Care). This approach has gained worldwide recognition and reflects in Isha Foundation's special consultative status with the Economic and Social Council (ECOSOC) of the United Nations.

    To support Isha Foundation's endeavors, all that is required is a few mouse clicks to vote for Isha and there is no donation involved. You can help Isha Foundation win with just a couple minutes of your time!


    CLICK HERE TO VOTE FOR ISHA!


    Please spread the word and support this in anyway possible. It is a movement to strengthen the future of these rural children in India and an effort towards a better life.

    Lets Make it Happen !


    வாழ்க வளர்க!

    -சர்வேசானந்தா

    பி.கு: சில சாமியார்ஸெல்லாம் ஒரு 'தேஜஸ்'ஸுடன் பாக்கவே சாந்தமா இருக்காங்களே, அவங்களுக்கு கண்டிப்பா ஏதோ சக்தி இருக்குமான்னு dr.ருத்ரன் ஏதோ ஒரு பதிவில் அலசியிருந்தாரு. அதுக்கு பதிலா அவரே சொன்னது, நம்மை சுற்றி ஒரு லட்சம் பேரு நின்னுக்கிட்டு நம்மை கடவுள் மாதிரி பவ்யமா கவனிச்சுக்கிட்டு நாம சொல்றதை கேக்க க்யூவில் நின்னா, தெய்வீக லுக்கு விடரதுக்கு ஒரு கஷ்டம் இருக்காதாம் :)
    ஆனா, கோழியா? முட்டையா? எது ஃபர்ஸ்ட்டு வந்துதுன்னு யாருக்கு தெரியும்? :)

    Monday, January 18, 2010

    ஆயிரத்தில் ஒருத்தி - திரைப் பார்வை

    வழக்கத்தை விட அதிகமான டாலருக்கு கவுண்ட்டரில் டிக்கெட் வாங்கி படம் பார்த்து பல்பு வாங்குவது எமக்கொன்றும் புதிதில்லைதான். அந்த வரிசையில் ஆயிரத்தில் ஒருவனும் சேர்ந்தது என்பதை சொல்லப் பெரும் கடமைப் பட்டிருக்கிறேன்.
    வெள்ளிக் கிழமை வரவேண்டிய பொட்டி வராததால், சனிக்கிழமை எட்டு மணி ஆட்டம் ஹவுஸ்ஃபுல். அதுக்கு டிக்கெட் கிடைக்காம 11 மணி ஆட்டத்துக்கு போயிருந்தோம்.
    அம்பானிகள் திரையரங்குகளை வாங்க ஆரம்பிச்சிருக்கானுவ. எங்க ஊரு மொக்கை தியேட்டரை வாங்கியிருக்காங்க. வெளீல மட்டும் பளிச்னு பெயிண்ட் அடிச்சுட்டு, அரதப் பழசான ஸ்பீக்கரையும், ப்ரொஜெக்ட்டரையும் கொண்ட IMC6 Big Cinemasல ஆயிரத்தில் ஒருவன் பார்த்துத் தொலைத்தோம்.

    மூணு வருஷம் முக்கி முக்கி எடுத்து, பைசாக்கு ப்ரயோஜனமில்லாத ஒரு அவுட்புட். செல்வராகவனின் கலீஜ் டச்-அப் ஆங்காங்கே. முச்சா போகும் ஹீரோயின்; பச்சை பச்சை வசனங்கள்; அரை நிர்வாண ஹீரோயின்கள்.

    பல சேனல்களில், செல்வராகவனின், பேட்டிகளை பார்த்தபோது, என்னமோ தமிழர்களுக்கெல்லாம் நம்ம வரலாறும் நம்ம பராக்ரமும் தெரியாதுன்னும், அதை இந்தப் படம் எடுத்துக் காட்டி நம்மை எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கப் போவுதுன்னும் சொன்னாரு. நல்லா சிலிர்க்க வைக்கிறீங்கய்யா சிலிர்க்க.

    சோழ மன்னன் தன் மகனை ஒரு பெருசுகிட்ட கொடுத்துட்டு, இவனை காப்பாத்துங்கன்னு சொல்லிட்டு பாண்டியர்களிடம் போர்ல தோத்துடறாரு. பையனோட சேத்து பாண்டியர்களின் குலதெய்வ சிலையையும் சோழ குரு எடுத்துக்கினு எங்கியோ கண்ணு காணாம போயிடறாராம்.
    ப்ரதாப் போத்தன் இக்கால ஆர்கியாலஜிஸ்ட். இந்த சோழர்கள் எங்க போனாங்க என்ன ஆனாங்கன்னு தேடிக்கினு எங்கியோ வியட்நாம் தீவுல போயி, இவரும் காணாம போயிடறாரு.
    இவருக்கு பின்னால், ரீமா சென், கார்த்தி, பிரதாப் மகள் ஆண்ட்ரியா போறாங்க.
    இவங்க சோழர்களைப் பாக்கறாங்களா, அப்பரம் என்ன ஆகுது, எக்ஸ்ஸட்ரா எக்ஸட்ரான்னு, ஒரு நல்ல 'தீம்' தான் படத்துக்கு.

    ஆனா, அந்த 'தீமை' திரைக்கு சரியாக கொண்டு வரத் தெரியாமல்,மூணு வருஷம் பிராண்டியதால், திரையில் ஒவ்வொரு காட்சியும் டோட்டல் டேமேஜ். நமக்கும் டோட்டல் எரிச்சல். சோழர்களையும், சோழ மன்னரையும் காட்டுமிராண்டி மாதிரி காட்டி மனசை வேர ரொம்பவே நோகடிச்சிட்டாங்க.

    ரீமா சென், கார்த்தியுடன் சேந்து, 'அதோ அந்த பறவை போல', ரீமிக்ஸுக்கு குத்தாட்டம் போடரதுல இருந்து நம்ம நோகல் தொடருது.
    வியட்நாம் தீவுக்கு படகில் போகும்போது வரும் கிராஃபிக் காட்சியை பார்த்ததுமே, $12 எள்ளுதான் என்பது விளங்கியது. ரூ35கோடி செலவாம். ஹ்ம்!
    விட்டலாச்சாரியா படங்களில் கூட இதை விட இன்வால்வ்டா ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பண்ணியிருப்பாங்க.

    கார்த்தி - மூணு வருஷம் , ஜம்முனு மூணு படத்துல நடிச்சுட்டு நிம்மதியா இருந்திருக்கலாம். உப்புச்சப்பில்லா ரோல் இவருக்கு. பல காட்சிகளில் பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறார். கடைசி 30 நிமிடம் மட்டுமே ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு வழங்கப்பிட்டிருக்கு.

    ரீமா சென் - இவங்கதான் படத்தோட ஹீரோ! படம் முழுக்க வியாபிச்சிருக்காங்க. நல்லா திறமையை வெளிப்படுத்தியிருக்காங்க. ஒரு சில இடங்களில், வல்கரா இருந்தாலும், அருமையான நடிப்பு. வாய்ப்பை அருமையா உபயோகப்படுத்திக்கிட்டாங்க. அதிரடியா கலக்கியிருக்காங்க. படத்தில் உருப்படியான ஒரு விஷயத்தில், ரீமா சென்னும் ஒருவர். கார்த்தியை டம்மி ஆக்கிட்டாங்க பல இடத்தில்.

    ஆண்ட்ரியா - படத்துல எதுக்கு இருக்கராங்கன்னே தெரியாம, பல காட்சிகளில், சும்மாகாட்டி வராங்க. கடைசி அரை மணி நேரம் காணாமயே போயிடறாங்க.

    பார்த்திபன் - சோழ ராசாவா வராராம். கொமட்டிக்கிட்டு வருது சில காட்சிகளில். நம்ம கற்பனையில் இருக்கும், 'சுந்தர சோழரும், ராஜ ராஜரும்' புஸ்வாணமாக்கிய எரிச்சலோ என்னமோ, இவரை சுத்தமா புடிக்காம போயிடுச்சு. டான்ஸ் ஆடும்போதெல்லாம், ரெண்டு அரையலாம் என்றளவுக்கு எரிச்சல் வந்தது என்றால் மிகையல்ல.

    செல்வராகவன் - 7G எனக்குப் பிடிச்ச படம். அதிலும் கூட வளைந்து நெளிய வைக்கும் 10 நிமிஷம். அதை கூட 'செல்வா' டச்னு மன்னிச்சு விட்டு, படத்தை பலதடவை பாத்திருக்கேன். புதுப்பேட்டை கூட பிடிச்சிருந்தது. வித்யாசமா எடுக்கணும்னு, இப்படி ஓவரா கோட்டை கட்டப் பாத்தது நல்ல விஷயம்தான். பாராட்டப் பட வேண்டியதும் கூட. ஆனா, கற்பனை குதிரையை ஒழுங்கா ஓட்டத் தெரியோணும். கலீஜ் குதிரையை அடக்கப் பழகோணும். ஒரு வரட்டு மைல் கல்லை எட்ட, இப்படி ரெண்டு குதிரையையும் கன்னா பின்னான்னு ஓட்டி, இம்சை படுத்தக் கூடாது. இனி வரும் படங்களிலாவது, அதிமேதாவித்தனத்தை குறைத்து, தன்னடகத்துடன், ஸ்க்ரீன்ப்ளேயை அணுகவும்.

    சண்டைக்காட்சிகள் எல்லாம் இழுவை ரகம். ரத்த மணம்.
    ஒரே ஆறுதல், ஒரு சில 'செட்'கள். குகைப் ப்ரதேசம், சோழ கட்டிடங்கள் எல்லாம் நல்லா பண்ணியிருக்காரு ஆர்ட் டைரக்டர். காட்டு வாசிகள், சோழர்கள்னு எல்லாரின் காஸ்ட்யூமும், நல்ல தரத்தில் இருந்தது.

    படம் முழுக்க லாஜிக் ஓட்டைகள்; ஒட்டாத காட்சியமைப்புகள்;
    செல்வராகவனுக்கு ரொம்பப் பிடிச்ச பல படங்களின் சிறந்த காட்சிகளை ரீமேக்கனும்னு நெனச்சு பண்ணியிருக்காரு போல. கிளாடியேட்டர், மெக்கனன்ஸ் கோல்ட், அப்போகாலிப்ஸ், அது இதுன்னு ஒவ்வொரு காட்சியை எடுக்கப் பாத்து, எல்லா காட்சியிலும் அரைகுறை அவுட்புட்.

    நல்ல பாடல்களில், இரண்டு மட்டுமே படத்தில். ஜி.வி.பிரகாஷின் பாடல்கள் அருமையா வந்திருக்கு. பின்னணி இசையெல்லாம் கவனிக்க மூடே இல்லை. சோழரை காட்டும்போது, கிட்டார் அதிருது. என்ன லாஜிக்னு புரியல்ல.

    11மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய படம், லேட்டா 11:30 ஆரம்பிச்சதாலும், முதல் ரெண்டு மணி நேரம், தொய்வின் உச்சத்தில் நகர்ந்ததாலும், கிளைமாக்ஸின் அரைமணி நேரம், ஒரு deep meditative stateல் இருந்ததால், திரையில் என்ன நடந்ததுன்னு சரியா ஞாபகம் கூட இல்லை. கார்த்தி, சோழ இளவரசரை தூக்கிக்கினு ஸ்க்ரீன் அப்படியே ஃப்ரீஸ் ஆகி, 'சோழ மன்னனின் பயணம் தொடரும்..' போட்ட போது, மொத்த தியேட்டர் கும்பலும், 'ஐயோ! போதும்யா போதும்"னு அலறியதும் தான், என் deep meditative stateல் இருந்து வெளியில் வந்தேன்.

    ஹ்ம்! படத்துக்கு போறதுக்கு முன்னாடி விமர்சனம் படிக்காம போவணும் என்ற கொள்கையை ரிலாக்ஸ் பண்ணிக்கணும். முன்னாடியே மக்கள்ஸின் புலம்பலை படிச்சிருந்தா, சுதாரிச்சிருக்கலாம்.
    இனி ஒன்னியும் பண்ண முடியாது, உங்களில் சிலரின் $12 காப்பாற்ற உதவுவதை விட.

    Thursday, January 14, 2010

    தத்துவம்ப்பா...



    1) ஒரு ஊர்ல ஒரு முயல் இருந்துச்சாம். சதா சர்வ காலமும் ஒரு மரத்த சுத்தி இருக்கர புல் வெளீல மேஞ்சுக்கினே இருக்குமாம். நாள் முழுக்க அங்கையும் இங்கையும் ஓடி தின்னாதான், ஓரளவுக்காவது வயிறு நிரம்புமாம்.
    சாயங்காலம் ஆனா, நாள் முழுக்க நடந்த களைப்புல அக்கடான்னு வானத்தை பாத்துக்கிட்டு படுக்குமாம்.
    அந்த மரத்துக்குக்கு மேல ஒரு காக்கா இருந்துச்சாம். அது எப்பப் பாத்தாலும், ஒன்னியும் பண்ணாம, மரக் கிளைல ஜாலியா ஒக்காந்துக்கினே இருக்குமாம்.
    ஒரு நாள் காக்காவ பாத்த முயல், "காக்கா நீ மட்டும் ஒன்னியும் பண்ணாம ஒக்காந்த எடத்துலையே ஒக்காந்துக்கினு இருக்கியே, நானும் அப்படி வெட்டியா ஒக்காரலாமா"ன்னு.
    காக்கா "ஓ, தாராளமா இரேன்"னு சொல்லிச்சாம்.
    முயலும், "மரத்துக்குக் கீழ ஒய்யாரமா அக்கடான்னு ஒக்காந்துக்கிச்சாம்".
    கொஞ்ச நேரத்துல எல்லாம், அந்தப் பக்கமா வந்த நரி, முயலை லபக்னு கவ்விக்கிட்டு போயிடுச்சாம்.

    கதை கூறும் கருத்ஸ்?: வெட்டியா ஒக்காரணும்னா, பெரிய பதவில இருக்கணும். உங்க மேனேஜர் வெட்டியா இருக்கலாம். நீங்க இருக்கக் கூடாது.
    Moral of the story: To be sitting and doing nothing, you must be sitting very high up.

    2) ஒரு கோழி மாடு கிட்ட கேட்டுதாம், "மாடு, எனக்கு அந்த மரத்து மேல ஏறி உச்சில போயி நிக்கணும்"னு. மாடு சொல்லிச்சாம், "அதுக்கென்ன, சாணத்தைச் (B.S bull shit) சாப்பிட்டா, உனக்கு தேவையான சத்து கெடைக்கும், அப்பாலிக்கா மரத்துக்கு மேல சட்டுனு ஏறிடலாம்"னு.
    கோழியும், மாட்டு சாணத்தை தின்னுட்டு, கிடு கிடுன்னு மரத்துக்கு உச்சில போயி ஒக்காந்துக்குச்சாம்.
    அந்த நேரம் பாத்து அங்க வந்த கழுகு, கோழிய லபக்னு தூக்கிக்கினு போயிடுச்சாம்.

    கதை கூறும் கருத்ஸ்?: B.S கொஞ்ச காலத்துக்கு ஒதவி, உங்கள பெரிய பதவியில் ஒக்கார வைக்குமாம். ஆனா, ரொம்ப காலம், வெறும் B.Sனே இருந்தீங்கன்னா, அங்க நீங்க ரொம்ப காலம் தாக்குப் பிடிக்க முடியாதாம்.
    Moral of the story: B.S. might get you to the top, but it won't keep you there.

    ஓ,கே? இப்ப இதையும் படிங்க, சந்தோஷமா இருங்க. ஹாப்பி வெள்ளி!
    http://miami.craigslist.org/mdc/mis/1539838256.html

    Wednesday, January 13, 2010

    போதும் என்ற மனமே...

    ஒரு விஷயம் கவனிச்சுக்கிட்டு வரேன். ஒரு டி.ஷர்ட் வாங்கணும்னாகூட மேலையும் கீழையும் பாத்து, பல முறை யோசிச்சு, இந்தக் கடைய விட அந்தக் கடைல கம்மியா கெடைக்குதேன்னு கணக்கெல்லாம் போட்டு வாங்கறேன். கஞ்சத் தனம்னு சொல்ல முடியாது, சிக்கனம்னும் சொல்ல முடியாது. சம்பாதித்த பணம் இப்படி எடுத்து லூஸ்ல விடரதுக்கு முன், ஒரு பொறுப்பான ஆராய்ச்சின்னு வேணும்னா சொல்லிக்கலாம்.

    ஆனா, இப்பேர்பட்ட என்னை, இந்தப் பங்குச்சந்தை, ரொம்பவே வசியம் பண்ணிடுது.
    இம்புட்டு வருஷமா, அதுல நெரைய காசு விட்டும், துளி கூட வலியே தெரியலை.

    செலவு பண்ணும்போது, கரன்ஸியாவோ, க்ரெடிட்கார்டோ கைநீட்டி கொடுத்து வாங்கும்போது இருக்கும் ஒரு 'பயம்', இந்த ஆன்லைனில் விளையாடும் பங்குச் சந்தை சூதாட்டத்தின் போது இருப்பதில்லை.

    அது பாட்டுக்கு அனாமத்தா போவுது. ஓரிரு மணி நேரத்தில், போட்ட பணம் காணாம போவுது. கொஞ்சம் கூட பகீர் ஆகாம, நெதானமா, அடுத்த ஸ்டாக்கு வாங்க ஆரம்பிச்சட்டறேன்.
    கூட்டிக் கழிச்சு பாத்தா, பெரிய பாதகம் வரவில்லை என்றாலும், பைசாகு பிரையோஜனமில்லா, இந்த break-even நெலமைக்கு செலவு செய்யும் நேரம் அதிகம்.

    இதுல லாபம் ஈட்ட பல வழி இருக்கு. Covered Calls பாத்திருபீங்க. இது ஒரு வழி.

    ஆனா, பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட, மிக மிக மிக மிக மிக மிக முக்கியமான ஒரு தேவை DISCIPLINE. அஃதாவது, ஒழுக்கம்!

    அதான் நம்ம கிட்ட எதுக்குமே இல்லியே, இதுக்கு மட்டும் எப்படி வரும்?

    வரணும்! இல்லன்னா, காசு போட்டதும் தெரியாது, போனதும் தெரியாது.

    அமிதாப் பச்சனின் சில பதிவுகள் சுவராஸ்யமானவை. இந்த வயதிலும், அவரின் உழைப்பு ஆச்சர்யம். ஊர விட்டு ஊரு சுத்திக்கிட்டே இருக்காரு. ஏகப்பட்ட புதுப் படங்கள், டிவி நிகழ்ச்சிகள், திறப்புவிழாக்கள், விளம்பரங்கள்னு துள்ளிக்கிட்டே இருக்காரு.

    இந்தப் பதிவில் ( http://bigb.bigadda.com/?p=4289 ), ஒரு விஷயம் மேலோட்டமா சொல்றாரு. 1970களில், பம்பாயின் அருகில் இருக்கும் லோனாவ்லாவில், 20000ரூபாய்க்கு அவர் நிலம் வாங்கி வைத்திருந்தாராம். இந்த காட்டுப் பிரதேசம் எங்க முன்னேறப் போவுதுன்னு நெனச்சு, கொஞ்ச நாள்ளையே வந்த வரை லாபம்னு ஒரு லட்சத்துக்கு வித்துட்டாராம். இன்னிக்கு அந்த இடம் பலப் பல கோடிகள் பெறும். இதை நெனச்சு பெருமூச் விடறாரு.

    எப்பேர்பட்ட பணம் கொழுத்த ஆளா இருந்தாலும், 'போதும்'னு நெனைக்க மாட்றாங்க.
    20,000 ஒரு லட்சம் ஆனது, 400% லாபம். கிட்டிய வரை லாபம்னு அவருக்கு திருப்தி ஏற்படலை. இன்னிக்கு அது கோடிகள் தான், ஆனா, இதே, அந்த எடம் உருப்படாம போயி, 20,000ரூ 5,000 ஆயிருந்தா, என்னாயிருக்கும்?

    பங்குச் சந்தையில், இந்த 'போதும்' என்ற மனம் ரொம்ப ரொம்ப முக்கியம்.

    1000ரூ கொடுத்து ஒரு பங்கு வாங்கினா, பங்கை வாங்கும்போதே, உங்களுக்கு எவ்வளவு லாபம் வந்தா போதும்னு தீர்மானிக்கணும்.
    அதே நேரம், இந்தப் பங்கை வாங்கியதில் எம்புட்டு நஷ்டம் சந்திக்கத் தயார்னும் முடிவு பண்ணிக்கணும்.
    10% லாபம் வந்தா போதும்யா..
    5%க்கு மேல நஷ்டம் வந்தா தாங்க முடியாதுய்யா...

    அஃதாவது, 1000ரூ, 1100ரூ ஆச்சுன்னா, வந்த வரை போதும்னு, காச எடுத்துக்கிட்டு எஸ்கேப்!
    1000ரூ 950ரூ ஆயிடுச்சுன்னா, விட்ட வரைக்கும் போதும்னு, காச எடுத்துக்கிட்டு எஸ்கேப்பு!

    இந்த மாதிரி ஒரு கணக்கு வச்சுக்கணும். இந்த கணக்கை, சாஷ்டாங்கமா ஃபாலோ பண்ணனும்.

    பங்கை வாங்கும் போதே, மேற்கூரிய கணக்கில், ஒரு 'விற்பனையும்' போட்டுடணும். அப்பதான், பெரிய நட்டமும் வராது, வந்த லாபம் சறுக்குவதர்க்கு முன், போட்ட பணத்தையும் லாபத்தையும் எடுக்கவும் முடியும்.

    போதும் என்ற மனம் இல்லாமல், ஒழுக்கமும் இல்லாமல், நெக்குலுடன் திரிபவர்கள், பங்குச் சந்தையை தவிர்த்தல் நலமோ நலம்!

    இல்லன்னா, டங்குவார் கிழிஞ்சிரும்! அம்புடுதேன்!

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    பி.கு: அமெரிக்க பங்கில், Pfizer (PFE), நல்ல ஸ்டாக்கா தெரியுது.
    உங்களுக்குத் தெரிஞ்சத பத்த வச்சுட்டுப் போங்க.

    Sunday, January 10, 2010

    தொலைந்த இனிமைப் பொழுதுகள்...

    இன்னாடா ஆச்சு இவனுக்கு, கவித்துவமா தலைப்பு வச்சிருக்கானேன்னு டெரர் ஆகவேணாம். உங்கள்ள பலரும் இன்னும் கிருஸ்மஸ்,புதுவருஷ 'ஹாலிடே' மூட்ல இருந்து வெளீல கூட வந்திருக்கமாட்டீங்க. அதன் தாக்கம் PiTல் இம்மாத போட்டிக்கு வந்த படங்களைப் பாத்தாலே தெரியுது. எப்பவும் தோராயமா எழுபது படங்கள் வரும், இந்த மாசம் இதுவரை ரெண்டு வந்திருக்கு :)

    என் 'ஹாலிடே' மூடெல்லாம், ஜனவரி 3ஆம் தேதி ஞாயித்திக் கெழமையே காணாமப் போச்சு. அன்னிக்கு புடுங்க ஆரம்பிச்ச ஆணி, ராப்பகலா, தூக்கம் இல்லாம இன்னும் புடுங்கிக்கிட்டே இருக்கேன். பெப்ரவரி வரை இந்த ஆணிப் பிடுங்கல் தொடரும். ரொம்பவே படுத்தறானுவ ஆஃபீஸ்ல.

    தலைப்புக்கு வருவோம்.

    இம்முறை ஊருக்கு போயிருந்த போது, மரம் பிடுங்கி நட்டல் மற்றும் லஞ்ச எதிர்ப்பு மற்றும் துயாய் பார்த்தல் மற்றும் தஞ்சை பார்த்தல், இவற்றையெல்லாம் தவிர உருப்படியாய் செய்த இன்னொரு வேலை, Moser Baer மலிவு விலைக்கு விற்கும் பல பழைய DVDக்களை வாங்கி அடுக்கியது. அநியாயத்துக்கு சகாய வெலைக்கு விக்கறானுவ.
    கலைஞர் ஆட்சியில் எல்லாமே சீப்பா கெடைக்குதுன்னாங்க, DVDவாங்கும்போதுதான் அதன் அர்த்தம் புரிந்தது.
    40 ரூபாய்க்கு ஒரே டிவிடில அஞ்சு படம் போட்டுத் தரானுங்க.

    இங்க இருக்கர ஒரு அம்மணிக்கு பழைய படம் வேணும்னாங்க.
    ஒரே டிவிடில, பாசமலர், பச்சைவிளக்கு, படிக்காத மேதை, ராஜபாட் ரங்கதுரை, ஞானஒளி கெடச்சுது. இது அத்தனையும் ஒரே வாரத்துல பாத்து, இப்பெல்லாம் அவங்க சிவாஜி மாதிரிதான் பேசராங்க எல்லார் கிட்டையும். தலைவரின் தாக்கமே தாக்கம்.

    என் பங்குக்கு, சலங்கை ஒலி முதல், சுப்ரமணியபுரம் வரை எல்லாத்தையும் புடிச்சாந்தேன்.

    மிக முக்கியமாய், ராஜாவின் பழைய பாடல்கள் DVD. முத்தான பாடல்கள். ஒரே கொடுமை, வீடியோல சில பாட்டெல்லாம் போட்டு பாக்கணும்னா, பதிவு எழுதிக்கிட்டே பாட்ட மட்டும்தான் கேக்கணும். ஹிப்பித்தலை ஹீரோவும், பவுடர் பூசிய ஹீரோயினும், லலலலலா கூட்டமும் சகிக்காது.

    ஒரே ஆசுவாசம், என் ஆல்-டைம்-ஃபேவரைட், ஜானி படப் பாட்டு 'காற்றில் எந்தன் கீதம்'. ஒவ்வொரு முறை பாக்கும்போதும், ஜானகியின் ஆரம்ப ஆலாபனை ரீவைண்ட் பண்ணி ஒரு பத்து தபா பாக்க வைக்குது. ஸ்ரீதேவி, மழை, ரஜினின்னு அந்த பாட்டு ஒரு சுப்ரீம் மேஜிக்கல்!

    இப்ப, நெஜமாவே தலைப்புக்கு வருவோம்.

    இந்த பாட்டு கேக்கும்போது பழைய ஞாபகங்கள் பல வந்துது. பள்ளிக் காலங்களில், எங்க தெரு மூலையில் ஒரு நண்பன் இருப்பான். ஸ்ரீதர். அவன் இருக்கும்போது, நானும் இன்னும் இரு நண்பர்களும் பொடி நடையா அவங்க வீட்டுக்கு போவோம். ஸ்ரீதர் எங்களை விட நாலஞ்சு வயசு பெரியவன்.
    நாங்க +1 படிக்கும்போது, அவன் நல்ல வேலைக்கு போய் நெரைய சம்பாதிக்க ஆரம்பிச்சிருந்தான்.
    எங்களுக்காக பெருசா செலவு பண்ணலன்னாலும், எங்களுக்குப் பிடிச்ச இளையராஜா பாட்டுக்காக கன்னா பின்னான்னு செலவு பண்ணுவான். ஸ்பீக்கர், ஸ்டீரியோ சிஸ்டமெல்லாம் வாங்கவும் செலவு பண்ணுவான்.
    ராசா பாட்டு எல்லாத்தையும் வச்சிருப்பான். அதுவும், அ,ஆ,இ,ஈ, க,ச,ப,மன்னு அட்டவனை போட்டு ஒரு ட்ரங்கு பெட்டீல எல்லா கேசட்டையும் பத்திரப் படுத்தி வச்சிருப்பான். அவன் கிட்டயிருந்துதான் எனக்கும், 'ஜானகி' பைத்தியம் வந்துடுச்சு.

    அவங்க வீட்டு மொட்ட மாடீல ஸ்பீக்கர போட்டு, 'மாப்ள என்ன பாட்டு கேக்கலாம்'னு ஒவ்வொரு பாட்டா நேயர் விருப்பம் கேட்டுப் போட்டுக் காமிப்பான். ஒவ்வொரு பாட்டிலும் இருக்கும் வயலின் பிட், வீணை பிட், மற்ற பாட்டு சங்கதிகள் எல்லாம் அருமையா எடுத்துச் சொல்லுவான். தளபதி படத்துல வரும் சுந்தரி கண்ணால் ஒரு சேதிக்கு, 'மச்சி, ராசா இந்த பாட்டுக்கு படத்துல ஒரு மூஜிக்கும், கேசட்டுக்கு வேரயும் போட்டிருக்கணும். படத்துல போர் சீனுக்கு சரியா இருக்கு, ஆனா கேசட்ல அடிக்கடி கேக்கும்போது இந்த போர் மூஜிக் சலிப்பா இருக்கு'ம்பான். இந்த அலசல்களைத் தவிர மத்த அரட்டை விஷயங்களும், அரங்கேறும்.
    வெள்ளி இரவுகளி, மொட்டை மாடியில் வானத்தப் பாத்தபடி நாலு பேரும் படுத்துக்கிட்டு, நட்சத்திரம்/நெலாவெல்லாம் பாத்துக்கிட்டு பாட்டு கேப்போம் பாருங்க. அடேங்கப்பா! ரம்யமான நாட்கள் அவை.

    இப்ப என்னதான் எல்லா Mp3யும் ஓசியில் கிட்டி, எல்லா பாடல்களும் சுலபமாய் கிட்டி, வீட்டில் விலை உயர்ந்த ஸ்பீக்கரும் சிஸ்டமும் இருந்தாலும், அந்த கேசட் ப்ளேயரில், static சத்தத்துடன் ஒரு ராசா பாட்டை கேட்கும் சுகம் எதிலும் வருவதில்லை.

    தொலைந்த இனிமைப் பொழுதுகளை, மீட்க முயற்சிக்கலாம் - மீண்டும் ஸ்ரீதர், மற்றும் நண்பர்களை கூட்டு சேர்த்து. ஸ்ரீதர் இப்ப படிச்சு பெரியாளாகி வேர எங்கையோ போய் செட்டிலாயிட்டான். இந்த அவசர வாழ்க்கையில், ஆளுக்கொரு மூலையில், அவங்கவங்க விஷயத்துல பிசியாயிட்டாங்க. வந்தாலும், அவசரகதியில் பேசி, 'மச்சி டிராஃபிக் இருக்கும். கெளம்பரோம்'னுதான் முடியுது இந்த கால சந்திப்புகள் எல்லாம். மொட்டை மாடியும் போச்சு, வானத்துல நட்சத்திரமும் போச்சு.

    ஹ்ம்!

    Monday, January 04, 2010

    Matter இல்லாமல் Meter - தஞ்சை படங்கள்

    மொக்கைக்கு இன்னொரு பேராக, 'Matter இல்லாமல் Meter' என்ற பெயரில், எழுத்து வரட்சி வந்து, பதிவுக்கு விஷயம் ஒன்றும் இல்லாதபோது, எத்தையாவது இப்படி பதியலாம் என்று ஐடியா.

    தஞ்சை பெரிய கோயிலின் Pseudo-HDR படம் பாத்திருப்பீங்க. 'சாதா' படங்களை விட இந்த HDR படங்கள், பார்வையாளரை, சட்டுனு இஸ்கும் திறன் பெற்றது.
    .

    இனி, தஞ்சையை சுற்றிவந்தபோது எடுத்த மத்த படங்கள் சில.

    பெரிய கோயில். வானம் வசப்படவில்லை. செயற்கையா சிருஷ்டிச்சாதான் உண்டு.


    Gimpயது.

    இருட்டாய் இருந்த படம். Adobe LightRoomல், மிகச் சுலபமாய், recovery உபயோகித்து, மீட்டெடுத்தது.
    தலைகீழ நின்னும் வானத்தை கொண்டு வர முடீல.
    பக்த கோடிகள்.
    'வாடா மாப்பிள, வாழப்பழத் தோப்புல வாலிபால் ஆடலாமா... எப்டீ எப்டீ'ன்னு இந்த பொண்ணுக ரெண்டும் சூப்பரா பாடிக்கிட்டு ஆடிக்கிட்டு இருந்தது.
    தஞ்சை அரண்மனையாமாம். அம்புட்டு ஒண்ணும் பெருசா தெரீல.
    அரண்மனை அந்தப்புரம்?
    அரண்மனைக்கு வெளியில்.