recent posts...

Tuesday, March 24, 2009

நான் கடவுள் - இரண்டாம் பார்வை & முடிவுரை

நான் கடவுள் திரைப்பார்வையில், அந்தப் படம் என்னை வெகுவாய் கவரவில்லை என்று சொல்லியிருந்தேன்.
ஆனா, நம் பதிவர் வட்டத்தில் பலருக்கும் படம் பிடித்திருந்திருக்கிறது.
52% சூப்ப்பர்னும், 21% சுமார்னும், 16% நல்லால்லனும் சொல்லியிருக்காங்க.


படத்தைப் பற்றிய பல்வேறு கருத்துக்கள் படித்து விட்ட நிலையில், படத்தை இரண்டாம் முறையாய் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது (டிவிடி).
எதுக்காக இல்லன்னாலும், சில விமர்ச்கர்கள் படத்ததப் பற்றி கூறிய சிலக் கருத்துக்களை, ரெண்டாவது தடவ பாத்து, ஊர்ஜீதப் படுத்திக்கலாம்னு நெனச்சிருந்தேன்.
சான்ஸ் கடச்சதும், பாக்கவும் செஞ்சுட்டேன்.

நான் ஊர்ஜீதப்படுத்திக்க/வெரிஃபை பண்ணிக்க நெனச்ச சில விஷயங்களும், ரெண்டாம் தடவ பாத்ததும், என் மனநிலையும், கீழே:

1) பைத்தியக்காரன் எடுத்து விளம்பிய, நான் கடவுளில் உள்ள குறியீடுகள்.
அதாகப்பட்டது, ஹீரோவை காட்டும்போது, காசியில் மட்டுமே, அவர் முதலில் காண்பிக்கப்பட்டு மற்றவர்கள் அப்பரமா காட்டப் படுவாங்க. மற்ற காட்சிகளில், மற்றவர்கள் முதலில் காண்பிக்கப்பட்டு, அப்பரமா ஹீரோவ காட்டுவாங்க. இங்க குறியீடு என்னான்னா, காசியில் மட்டுமே, ஹீரோ அவன் அவனா 'ஃப்ரீயா' இருக்கான், மத்த இடங்களில், அவன் மற்றவர்களின் பார்வையில் அளவிடப்படுகிறான், etc..

after 2nd look: எனக்கு அப்படியொண்ணும் தெரீல. ரெண்டு காட்சியில் அப்படி ஹீரோவை pan பண்ணி ரெண்டாவதா காட்டறாங்க. நீதிமன்றக் காட்சியிலெல்லாம், அவர் ராஜநடை போட்டு வரத தான் மொதல்ல காட்டறாங்க. மேலும் பல காட்சியிலும், ஹீரோவ மொதல்ல காட்டறாங்க. ஆனா, நைஸ் ட்ரை, பை.காரன் ;)

2) ஜெயமோகன் எடுத்துக் கூறிய விஷயம் - ருத்ரனுக்கு, அம்சவல்லி மேல் சிறிய பற்று இருந்ததாம். அவளுக்கு இவனால் விடுதலை, அவளுக்கு இவனால் விடுதலை வரப்போவுது என்பதெல்லாம் அவனுக்கு அப்பவே தெரிஞ்சுடுமாம். அதை, அவன் அம்சவல்லியை முதலில் பார்க்கும்போது, அவன் கண்ணில் காண முடியுமாம். இளையராஜாவும், பின்னணி இசையால் இந்த விஷயத்தை அற்புதமாய் கோடிட்டுக் காட்டராராம். அதைத் தொடர்ந்த காட்சியில், ருத்ரன், தீயின் முன்னமர்ந்து, விபூதியை பூசிக்கொள்ளும் காட்சியிலும், இந்தக் குறியீடு/இசை எல்லாம் உணர்த்தப்பட்டுள்ளதாம்.

after 2nd look: இது பயங்கர வில்லங்கமான குறியீடா இருக்கு. அம்சவல்லியே வலியப் போய் கெஞ்சிக் கூத்தாடி, காது பிஞ்சுக்கரமாதிரி அஞ்சு நிமிஷம், பெரிய பெரிய டயலாக் எல்லாம் பேசினப்பரம் தான், தாங்க முடியாம, ருத்ரன், அம்சவல்லியப் போட்டுத் தள்றான். அதைத் தவிர, அவர்களின் இரண்டாம் சந்திப்பில், அவளை காலால் எட்டி உதைத்து உதாசீனப் படுத்தறான். இதுல எங்க, ருத்ரனுக்கு 'பற்று' வந்தது, அதை இளையராஜா சொன்னாரு? அப்படியே சொல்லியிருந்தாலும், என் சிற்றறிவுக்கு சுத்தமா எட்டலை. அந்த சீனை மட்டும், ஒரு எட்டு தடவ ரீவைண்ட் பண்ணிப் பாத்தேன். ஹ்ம், என் தரம் இன்னும் ரொம்ப உயர வேண்டியிருக்கோ?

பி.கு: எனக்கு 6th sense, முதல் முறை பாத்ததும் புரிஞ்சுது, mementoவும் ஓரளவுக்கு புரிஞ்சுது. Rushmonம் விரும்பிப் பார்த்தேன். வீடு, எலிபத்தாயம் எல்லாம் கூட பார்த்திருக்கிறேன். நான் பாதியில் தியேட்டரை விட்டு எழுந்து வந்த ஒரே படம், உள்ளத்தை அள்ளித்தா. ஒலகத் தரம் வாய்ந்த படங்களை தேடிப் பார்த்தல் என் உப தொழில் ;)


3) சாரு நிவேதிதா, சொன்னது - பாலா எந்த அளவுக்கு நான் கடவுளை, உலகத் தரத்துக்கு எடுத்துள்ளாரோ, அதே அளவுக்கு இளையராஜா தன் தவறான பின்னணி இசையால் படத்தை பின்னுக்கு இழுத்துவிட்டார்.

after 2nd look: இத சொல்றதுக்கு, எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆனா, சாரு சொன்னது நூத்துக்கு 90% சரி! முதல் முறை பார்க்கும்போது, தியேட்டரில், ராசாவின் வழக்கமான, வயலின் குழைவும், உடுக்கையும், திருப்திகரமாவே இருந்தது. ஆனா, இரண்டாம் முறை பார்க்கும்போது, உண்மை உரைத்தது. ராசா கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்கலாம். ருத்ரன் + அம்மா மீட் பண்ர சீனெல்லாம், சவ்வு ரகம். இந்தப் படத்துக்கு, இசையை விட, அமைதி பெரிய பலமா இருந்திருக்கும்.
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, பிச்சைப் பாத்திரம் பாட்டு, சுத்தமா எடுபடலை.
சாரி, ராசா.

4) படத்தில் ஒட்டாமல் வரும் சில காட்சியமைப்புகள் பற்றி நான் சென்ற பதிவில் சொல்லியிருந்தேன். ஆரம்பத்தில், இது எடிட்டிங் சொதப்பலோ அல்லது சென்ஸார் கட்டிங்கோ என்று நினைத்திருந்தேன். ஆனா, அதற்குப் பின், இணணயத்தில் படித்த பேட்டியில், பாலா இதை வேண்டுமென்றே செய்திருந்ததாய் தெரிந்தது. அதாவது, வழமை போல், ஹீரோ வில்லனை துரத்திச் செல்வதெல்லாம் இல்லாமல், சட்டுனு மீட் பண்ணிப்பாங்க, அடிச்சுப்பாங்கன்னு இருக்கும். மொக்கையான சமாச்சாரம் எல்லாம் சேக்காம, தேவையானதை காட்டினன, நாம புரிஞ்சுப்போம், நாம ஒலகத்தரமான ரசிகர்கள்னு நெனச்சுட்டாராம் பாலா.

after 2nd look: ஹ்ம். சாரி பாலா, எம்மில் 90% ஆளுங்க இன்னும் அந்தளவுக்கு வரலை. காட்சி டு காட்சி கண்டிப்பா தொடர்பு இருக்கணும். குறிப்பா, அம்சவல்லி திடீர்னு ருத்ரன் முன்னாடி வந்து, வள வள வளன்னு டயலாக் பேசரதுக்கு முன்னாடி, ஒரு ஓடர சீனாவது காட்டியிருக்கணும். திடு திப்புனு, படத்தை முடிக்கும் அவசரம் தெரிந்ததால், ஒரே கொழப்பம் வந்துடும். தியேட்டர் காரன் கட் பண்றானா, நாம தான் தூங்கிட்டமா, சென்சார் சொதப்பிட்டானா, $10க்கு நட்டம் வந்துடுச்சா, வெயிட் பண்ணி டிவிடிலயே பாத்திருக்கலாமா..., இப்படி.
அடுத்த முறை, இப்படியெலாம் கட் பண்ணாதீங்க. 3 மணி நேரம் குடுத்தாலும், பாப்போம். நிறைவாக் கொடுங்க.


வேர ஏதாவது காட்சியில் டவுட்டு இருந்தா கேளுங்க, ரீவைண்ட் பண்ணிப் பாத்துட்டு வெளக்கிச் சொல்றேன் ;)

மொத்தத்தில், பல தடவை பாத்தும், நான் கடவுள், பிதாமகன் அளவுக்கு என்னை இழுக்கலை. குறிப்பா, பிதாமகன், டிவிடியில் பலப் பல தடவை பார்க்கலாம். நான் கடவுள், பல தடவை எல்லாம் பாக்க முடியலை. No catchy sequences in the movie that pulls you :(

22 comments:

SurveySan said...

பிடிச்சாலும் பிடீக்கலன்னாலும், அதுக்கு ஏத்த வாக்கை தமிழ்மண பட்டைல கீழா குத்துங்க. அப்பதான், எவ்ளோ பேரு என்னா நெனைக்கறாங்கன்னு தெரியும்.

எழுத்துப் பிழைக்கெல்லலம் மார்க் கொறைக்காதீங்க ;

SurveySan said...

cinema.tamilmanam.net crashes in IE8, and may be in other browsers too. pls pass on the message ;)

உண்மைத்தமிழன் said...

உங்களை யார் இரண்டாவது முறையாகப் பார்க்கச் சொன்னது..? அடுத்து 3-வது தடவையாவும் பார்த்தீங்கின்னா அதுக்கும் ஒரு பதிவு போடுவீங்களா..?

கொடுமை..!

கோவி.கண்ணன் said...

//"நான் கடவுள் - இரண்டாம் பார்வை & முடிவுரை"//

மூன்றாவது மற்றும் மேலும் பல பார்வைகளை எதிர்பார்க்கிறேன்.

எல்லாம் தேர்தல் 2009 ல் பிசியாக இருக்காங்க, நீங்க இன்னும் நான் கடவுள் ஆராய்ச்சியை விடலையா ?

இன்னும் இதுபற்றி ஒரு பதிவு போட்டால், நான் வந்து 'என்னது மகாத்மா காந்தி செத்துட்டாரா ?' ன்னு முதல் பின்னூட்டம் போடுவேன். ஆமா !

SurveySan said...

உ.தமிழன், மூன்றாம் லுக்கெல்லாம் முடியாது.படம் அந்தளவுக்கு நல்லால்ல.

தசாவதாரம், 2nd lookக்கு அப்பரம், இப்பெல்லாம் எல்லா படமும் ரெண்டு தடவ பாக்க வேண்டியிருக்கு :)

SurveySan said...

கோவி, தேர்தல் பத்தி எழுத அறிவு பத்தாது நேக்கு. அதான், சினிமாவ வச்சு வண்டி ஓட்டறேன் ;)

SurveySan said...

கோவி, "ஏன் ஓட்டு போடணும்"னு ஒரு பதிவு எழுதுங்களேன், ப்ளீஸ் :)

Poornima Saravana kumar said...

// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
உங்களை யார் இரண்டாவது முறையாகப் பார்க்கச் சொன்னது..? அடுத்து 3-வது தடவையாவும் பார்த்தீங்கின்னா அதுக்கும் ஒரு பதிவு போடுவீங்களா..?

கொடுமை..!//

ஹா ஹா

கோவி.கண்ணன் said...

//SurveySan said...
கோவி, "ஏன் ஓட்டு போடணும்"னு ஒரு பதிவு எழுதுங்களேன், ப்ளீஸ் :)
//

இது லொள்ளு, 1992க்கு பிறகு நான் வாக்கு அளித்ததே இல்லை. வாக்குச் சீட்டில் பெயர் இடம் பெறும் அளவுக்கு ஒரே இடத்தில் இருந்தது இல்லை. தற்போது சிங்கையில் பிறகு எங்கே வாக்களிப்பது, அப்பறம் எங்கே அதுபற்றி அறிவுறுத்துவது.

நீச்சல் பற்றி புத்தக பாடம் படித்துவிட்டு நீச்சல் சொல்லி கொடுக்க கிளம்ப முடியுமா ?
:)))))))))

பாலா said...

நானும் I, Almighty -ன்னு இந்த படத்துக்கு ஒரு விமர்சனம் எழுத ஆரம்பிச்சி, கொஞ்சத்தோட நிறுத்திட்டேன். :)

என்ன கொடுமை சரவணன் இது? படம் எடுத்திருங்களாம் படம். :(

SurveySan said...

கோவி,

///நீச்சல் பற்றி புத்தக பாடம் படித்துவிட்டு நீச்சல் சொல்லி கொடுக்க கிளம்ப முடியுமா ?
:)))))))))/////

இது கொஞ்சம் ஓவரா தெரீல?
எல்லா விஷயமும் அனுபவிச்சப்பரம்தான் எழுதணும்னா நடக்கர காரியமா?

ஓட்டு போடுவது அவசியம்னு நெனைக்கறீங்கலா இல்லியா? யெஸ்னா, அது ஏன்னு ஆராஞ்சு ஒரு பதிவு போடலாம்ல:)

SurveySan said...

ஹாலிவுட் பாலா,

///நானும் I, Almighty -ன்னு இந்த படத்துக்கு ஒரு விமர்சனம் எழுத ஆரம்பிச்சி, கொஞ்சத்தோட நிறுத்திட்டேன். :)
////

ஒலகத்துல, படிக்காத குழந்தையும், publish செய்யாமல் பதிவும் இருக்கக் கூடாது.
ஸோ, சீக்கிரம் publish ப்ளீஸ் :)

அமர பாரதி said...

//வள வள வளன்னு டயலாக் பேசரதுக்கு முன்னாடி, ஒரு ஓடர சீனாவது காட்டியிருக்கணும்// காட்டினாங்களே, திரை நிறைய புட்டம் நிறைத்து காட்டினாங்களே.

கோபிநாத் said...

\\டிவிடியில் பலப் பல தடவை பார்க்கலாம். நான் கடவுள், பல தடவை எல்லாம் பாக்க முடியலை\\

அண்ணாச்சி உங்களுக்கு முதல்லியே முன்ன உள்ள படம் போல இந்த படம் பிடிக்கல...இதை நீங்க எத்தனை முறை பார்த்தாலும் அதே போல தான் இருக்கும். இதுல யாரு என்ன விளக்கம் சொன்னாலும் உங்க பார்வை மறாது....அதான் சாரு சொன்னாது கூட உங்களுக்கு சரின்னு படுது ;))

வெட்டிப்பயல் said...

//SurveySan said...
கோவி, தேர்தல் பத்தி எழுத அறிவு பத்தாது நேக்கு.
//

athu thaan Therthal pathi ezhutha muthal thevai :)

SurveySan said...

amarabaraty,

//காட்டினாங்களே, திரை நிறைய புட்டம் நிறைத்து காட்டினாங்களே.//


engulukku adhellaam pathaadhu, moochu iraikka odanum ;)

SurveySan said...

gopinath,

////இதை நீங்க எத்தனை முறை பார்த்தாலும் அதே போல தான் இருக்கும். ///

dasavatharam appadi illiye :)

SurveySan said...

vettipayal,

///athu thaan Therthal pathi ezhutha muthal thevai///

hm. karpanai kudhiraya thatti vittuda vendiyadhudhaan ;)

கோபிநாத் said...

\\ SurveySan said...
gopinath,

////இதை நீங்க எத்தனை முறை பார்த்தாலும் அதே போல தான் இருக்கும். ///

dasavatharam appadi illiye :)
\\

ரைட்டு...

ஒருவேளை தசாவதாரம் நமக்கு பழக்கப்பட்ட ஆளுங்க மாதிரி இருக்கோ என்னாமோ அதனால ஈசியாக புரிஞ்சிக்க முடியுது. ஆனா அதையோ கூட என் நண்பர்கள் சிலர் அய்யோ புரியல புரியலைன்னு சொன்னாங்க.

நான் கடவுள் அகோரி, பிச்சைக்காரங்க அவர்களில் மற்றொரு முகம் இதை எல்லாம் நாம இப்பதானே பார்க்கிறோம் அதானல சட்னுன்னு மனசுல உட்கார மாட்டேன்கிதோ என்னாமோ.

ஆனா ஒன்னு அண்ணாச்சி பை.காரன் அண்ணாச்சி எனக்கு தெரிஞ்சி நன்றாக சொல்லியிருக்காரு.

ஆனா நீங்க எனக்கு புரியல புரியலனு சொல்லிறிங்க ஒருவேலை உங்களுக்கு புரிய வைக்க பாலாவுக்கு தெரியவில்லை போல!! ;))

SurveySan said...

/// ஒருவேலை உங்களுக்கு புரிய வைக்க பாலாவுக்கு தெரியவில்லை போல!! ;))//


:) saraasari aalunga enna maadhiri iruppaanga.
appa, yaarukku puriya padam edukkaraaru avaru?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ நீங்க திரும்ப விமர்சனத்தை விமர்சித்து எழுதியதும் நல்லதாப்போச்சு.. நானும் விமர்சனங்களை எல்லாம் படிக்காம ரொம்ப கவனமா இருந்து படத்தைப் பார்த்தா .. என்ன அதுல ஒன்னுமே இல்லை.. இசை கூட மனசில் நிக்கும்படி இல்லை.. சுத்தமா ப்ச் ன்னு ஆகிப்போச்சு... (நானும் உலகப்படங்களில் சிறந்தது என்று அறிவுஜீவிகள் நினைக்கிற படத்தையெல்லாம் பார்த்து ரசிக்கிறவ தான் .:) )

SurveySan said...

முத்துலெட்சுமி,

:) அப்பாடா, இப்ப்பதான் எனக்கு நிம்மதி. என் ரசனைதான் சரியில்லையோன்னு ரொம்ப நொந்து போயிருந்தேன் :)