recent posts...

Tuesday, March 10, 2009

புருனோவுக்கு நன்னி!

twenty-twenty மோதல் நடந்து முடிஞ்ச மாதிரி இருக்கு.

ஆனா, நல்ல விஷயம், இது ஜாலியான கருத்ஸ் மோதல்.

இன்னும் நல்ல விஷயம், நம்ம இணையதளங்கள், இப்பெல்லாம் ரொம்ப ஆரோக்யமா செயல் படுது. தனி மனித தாக்குதல்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போயிடுச்சு. (மரத்தை தொட்டுக்குனேன்).

எனக்கு மெத்தப் பிடித்த, 'கிங்'கின் ஒரு இசை ப்ரவாகத்துடன் முடிச்சுக்கறேன்.

புருனோவுக்கு நன்றி கூறி, அவருக்கு இதை சமர்ப்பிக்கிறேன். :)

Bruno sir, thanks for the active participation.

16 comments:

கோபிநாத் said...

ஆகா...சூப்பரு ;))

எனக்கு do anything ரொம்ப பிடிக்கும் ;)

பரிசல்காரன் said...

//நம்ம இணையதளங்கள், இப்பெல்லாம் ரொம்ப ஆரோக்யமா செயல் படுது. தனி மனித தாக்குதல்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போயிடுச்சு.//

மகிழ்ச்சியோடு வழிமொழிகிறேன். அப்படியே இருந்தாலும் அவற்றை பதிவர்கள் புறந்தள்ளி வருகிறார்கள்.

இந்த ஆரோக்கியமான நீயா நானாவில் முழு ஊக்கத்துடம் கலந்து கொண்ட டாக்டருக்கு (அவர் கருத்தில் எனக்கு உடன்பாடில்லையெனினும்) சர்வேசனின் சார்பில் பொன்னாடை அணிவிக்கிறேன்!

ஹாட்ஸ் ஆஃப் டாக்டர் சார்!

Unknown said...

அங்கே பின்னூட்டம் போட முடியாததாலே இங்கே போடுறேன். புருனோ ஃப்ராடுன்னு சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டாரு, அதே மாதிரி நீங்களும் எளராசா சிம்பொனி இசை அமைச்சாருன்னு சொல்லிக்கக்கூடாது. டீல்????

வெட்டிப்பயல் said...

Good work Surves and Thk u Doctor.

மணிகண்டன் said...

மேஸ்ட்ரோ, சிம்பொனி இளையராஜாவை பிராடு என்று கூறிய ப்ருனோவுக்கு நன்றி தெரிவித்த சர்வேசனை வன்மையாக கண்டிக்கிறேன் !

மணிகண்டன் said...

நன்றி தெரிவிக்காமல் நன்னி தெரிவித்து இருப்பதால் சர்வேசனை மன்னிக்கிறேன்.

கண்டனத்தை வாபஸ் பெறுகிறேன்.

கைப்புள்ள said...

போன பதிவுலேயே ஒரு கமெண்ட் போடனும்னு நெனச்சேன். இப்ப அந்த டாப்பிக் க்ளோஸ் ஆகிட்டதனால இங்கே போடறேன். Just for your information.

வருஷம் : 1992
இடம் : மியூசிக் அகாடமி, சென்னை

அப்போ நான் பத்தாவது படிச்சிட்டு இருந்தேன். ராயப்பேட்டையில இருக்கற எங்க ஸ்கூல்லேருந்து ஸ்கூல் யூனிஃபார்மோடவே ஆழ்வார்பேட்டையில இருக்கற மியூசிக் அகாடெமிக்குப் போனேன். கூட என் க்ளாஸ்மேட்ஸ் C.R.கோவிந்தராஜன், சையத் காஜா மொய்தீன் இருந்தாங்க. மியூசிக் அகாடெமி போன காரணம் - British Council Library நடத்தற குவிஸ் போட்டியில் பங்குபெறுவதற்காக. அந்த குவிஸ் நிகழ்ச்சியில் முதல் கட்டமாக ஒரு தகுதிச் சுற்று இருந்தது(Written Quiz). அதுல ஒரு பேப்பர்ல 25 கேள்விகள் ப்ரிண்ட் பண்ணி குடுத்துட்டாங்க. பதில் எழுதி தரனும். ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் Identify this musicனு போட்டுருந்துச்சு. மத்த கேள்விகளை எல்லாம் முயன்றோம். எங்க லெவலுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. திடீர்னு so and so கேள்வி ஒரு ஆடியோ கேள்வி...please identify this music அப்படின்னு ஆடிட்டோரியத்துல ஒரு இசை துண்டத்தை ஒலிபரப்புனாங்க. HMV நாய் மாதிரி உக்கார்ந்துருந்தேன். ரொம்ப பரிச்சயமா இருந்துச்சு. ஒரு நிமிஷ இசை துண்டத்தை ரெண்டு தடவை போட்டாங்க. பதில் எழுதி தந்துட்டு உக்கார்ந்துருந்தோம். ஒரு அரை மணி நேரத்துல சரியான பதில்கள் எல்லாம் என்னன்னு சொன்னாங்க. அந்த ஆடியோ கேள்விக்கான சரியான பதில் - Musical Symphony composed by Ilaiyaraaja played by The Royal Philharmonic Orchestra, London. தகுதிச் சுற்றுலேயே அவுட் ஆயிட்டோம், ஆனா அந்த ஆடியோ கேள்வி மட்டும் சரியா பதில் சொல்லிருந்தோம். அந்த சமயத்துல நியூஸ் எல்லாம் ஒழுங்கா படிச்சிட்டு இருந்ததாலயும், "Music had Ilaiyaraaja written all over it"ங்கிற காரணத்தாலயும் சரியான பதில் சொல்ல முடிஞ்சது. நான் ராஜாவின் ரசிகன் என்பதனால இது ஒரு 'figment of imagination' ஆகத் தோனலாம். இதே காரணத்தால தான் இவ்வளோ நாளா இந்த தகவலை பகிர்ந்துக்கலை. நாளைக்கு யாராவது ஒரு பதிவரின் கேள்விக்கு "It shows how the critics have crucified every blogger without exception!"னு என்னைப் பத்தி பதில் சொல்ல வேண்டிய நிலைமை வந்துடக் கூடாதேன்னு ஒரு எண்ணம் தான்...ஹி...ஹி...

SurveySan said...

அனைவருக்கும் நன்னி!

SurveySan said...

கைப்ஸ்,

நீங்க க்விஸ் போட்டிக்கு போனேன்னு சொன்னதாலோ என்னவோ, நீங்க சொன்ன மத்த விஷயமெல்லாம் நம்ப முடியாமல் பேந்த பேந்த முசிச்சுக்கிட்டு இருக்கேன்.... ;)
just kidding.

///Musical Symphony composed by Ilaiyaraaja played by The Royal Philharmonic Orchestra, London////

மெய்யாலுமேவா? ஆனா, பொதுவில் கிட்டாத ஆல்பத்தை பத்தி க்விஸ்ஸில் கேட்ட பெருந்தகை யாரு?

jokes aside, british council library யாராச்சும் போய் நோண்டினா, ஆல்பம் கிட்டினாலும் கிட்டுமோ? சென்னை வாசிகள் யாராச்சும் ட்ரை ப்ளீஸ், asap :)

தகவலுக்கு நன்னி!

SurveySan said...

கைப்ஸ், 1992 இடிக்குதே. :)

http://www.imdb.com/name/nm0006137/bio/
In 1993, he wrote a symphony for the London Philharmonic Orchestra in an amazing one-month span.

வெட்டிப்பயல் said...

//கைப்ஸ்,

நீங்க க்விஸ் போட்டிக்கு போனேன்னு சொன்னதாலோ என்னவோ, நீங்க சொன்ன மத்த விஷயமெல்லாம் நம்ப முடியாமல் பேந்த பேந்த முசிச்சுக்கிட்டு இருக்கேன்.... ;)
just kidding.//

Surveys,
Oru kaalathula enga thala ethanai Quiz nadathirukaru...

Thala,
neenga seekirame adutha poatiyai nadatha vendi irukumnu ninaikiren :)

SurveySan said...

KVR,

/// அதே மாதிரி நீங்களும் எளராசா சிம்பொனி இசை அமைச்சாருன்னு சொல்லிக்கக்கூடாது. டீல்????////

:) பொறுங்க. அதுக்குத்தான துப்பறிஞ்சுக்கினு இருக்கோம் ;)

கைப்புள்ள said...

//கைப்ஸ், 1992 இடிக்குதே. :)//

வருஷம் maybe தப்பாயிருக்கலாம். ஏன்னா நான் சொன்ன அந்த ரெண்டு பசங்களும் என் கூட பதினொன்னாவதும் படிச்சாங்க. மூனு பேரும் ஒரே க்ரூப் தான். ஆனா சொன்ன விஷயம் உண்மை தான். பீலா இல்லை.

SurveySan said...

கைப்ஸ், நன்றி! :)

british councilக்கு ஆளனுப்பிருக்கோம்ல ;)

தகிடு கண்டிப்பா அப்ப யார் கிட்டையோ இருக்கு.

ராசா வீட்டுக்கு ஒரு ஆளனுப்பவமா?

வவ்வால் said...

சர்வே,

ராஜா சிம்பொனி போட்டதாக சொல்வது டுபாக்கூர் தான், சிம்பொனிக்கு இசை அமைக்கும் ஆர்கெஸ்ட்ரா என தனியே உண்டு அவர்களைக்கொண்டு இசைக்குறிப்புகளை வாசிக்க வைத்து பதிவு மட்டுமே ராஜா செய்துள்ளார்.

ஒரு சிம்பொனி இசைக்குழுவில் 80 - 100 வாத்தியக்காரர்கள் இருப்பார்கள்(அப்படி இருந்தாலே பில் ஆர்மோனிக் ஆர்கெஸ்ட்ரா என்று தான் பெயர்), அவர்கள் பல சிம்பொனி இசைகளை பிசிறில்லாமல் வாசித்துக்காட்டி சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா என்ரு பெயர் வாங்கி இருப்பார்கள்.

லண்டணில் உள்ள ராயல் பில் ஆர்மோனிக் வாத்தியக்குழுவும் அத்தகையதே,இந்தியாவிலும் சிம்பொனி ஆப் இந்தியா என்ற பெயரில் ஒரு சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா 2006 இல் இருந்து துவங்கப்பட்டுள்ளது.இனிமேல் சிம்பொனி அமைக்க வெளிநாட்டுக்கெல்லாம் போக வேண்டியதில்லை.

யார் வேன்டுமானானாலும் கட்டணம் செலுத்தி இத்தகைய குழுக்களைக்கொண்டு இசைக்குறிப்பை வாசிக்க செய்யலாம், அவை எல்லாம் சிம்பொனி அல்ல!

சிம்பொனி என்ற அங்கீகாராம் கிடைக்க அந்த இசைக்குறிப்பினை சிம்பொனி தேர்வுக்குழு முன்னர் அரங்கேற்றி, முழு இசைக்குறிப்பையும் அவர்கள் ஆய்வு செய்து முழுக்க சொந்த இசை என ஒப்புதல் அளிக்க வேண்டும்.ராஜாவுக்கு அவர் இசைக்குறிப்பினை பொதிவில் வைத்து ஆய்வுக்கு உட்படுத்தும் தைரியம் போதவில்லை என நினைக்கிறேன், சிம்பொனிக்குழுவினை வைத்து வாசிக்க செய்து பதிவு செய்ததோடு சரி , விட்டு விட்டார், ஆனாலும் உள்ளூரில் சிம்பொனி அமைத்ததாக கதையை விரும்பியோ , விரும்பாமலோ பரப்பிவிட்டார், அவ்வளவே! உலக அளவில் சிம்பொனி அமைத்தவர்கள் பட்டியலில் ராஜாவின் பெயர் இல்லை என்பதை நீங்களே கூகிலில் தேடிப்பார்த்து உறுதி செய்துக்கொள்ளலாம்.

இதுப்பற்றி முன்னரே ஏதோ ஒருப்பதிவிலும் சொல்லி இருக்கிறேன்.நீங்கள் என்னடாவென்றால் துப்பறியும் சாம்புபைக்கூப்பிட வேண்டும் என்ரு சொல்லிக்கொன்டு இருக்கிறீர்கள், கூகிளில் தட்டினால் கிடைத்து இருக்குமே!

SurveySan said...

வவ்வால்,

இந்த பதினைந்தாண்டு ப்ரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்து ஒரு தீர்ப்பு சொல்லாமல் ஓயப் போவதில்லை.
:))
கூகிளில் ஒண்ணும் பெருசா ஆப்டலை.

ராசாவின் official site
http://www.raaja.com/irbio.html

அதில்,
"First Asian to compose Symphony (Symphony No. 1) with the Royal Philharmonic Orchestra (RPO) of London.""

என்று இருக்கிறது.

ஆனா, கொடுமை என்னன்னா,
London website உரலை தட்டினா ஏதோ டுபாங்கூர் சைட்டுக்கு போவுது. ஏதோ வில்லங்கம் இருக்கு.
http://www.rpofilmmusic.com/credits.html

அவர்களின் ஒரிஜினல் சைட்டுக்கு போய் சகட்டுமேனிக்கு தேடினாலும், ஒண்ணும் பேரலை.
http://www.rpo.co.uk/


நீங்க சொல்லும், இவர் வாசிச்சுக் கொடுத்தாரு, அந்த குழு அதை ஏத்துக்கலை, இல்ல, நொட்ட சொல்லி ரிஜெக்ட் பண்ணிட்டாங்கங்கர கூற்று, ஓரளவுக்கு நம்பும்படி இருக்கிறது.

நடந்தது என்ன?

விரைவில்! :)