
'அனாலஜி' வச்சு இலை மறைவு காயா இந்த விஷயத்தைப் பத்தி எழுதலாம்னு நெனைச்சேன். ஆனா, இருக்கர கொழப்பமே போதும், நான் வேர என்னத்துக்கு கொழப்பணும்னு, மனசுல பட்டதை, உள்ளதை உள்ளது படி, அப்படியே தட்டறேன், படிச்சுக்கோங்க.
சமீபத்திய பதிவுகள் சில படிச்சா தலை உண்மையிலேயே சுத்துது.
1) தமிழ்மணம் சென்ஸார் செய்வது பற்றி:இது தனியார் குழுமத்தால் லாப நோக்கமில்லாமல் (தற்போதைக்கு) தன்னார்வத்துடன் நடத்தப்படும் திரட்டி. சகல விதமான பயணரும் வந்து போகும் இடமாக, இவர்கள் இதை உருவாக்க நினைப்பதில் தவறொன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
'கெட்ட' வார்த்தைகள் சிலவற்றை முகப்பில் வராமல் தடுப்பது எந்த விதத்திலும் தவறாகாது.
வரவேற்கத் தக்கதும் கூட. (நானே கூட ஒரு புகைப்படக் குழுமத்தில் இருக்கிறேன். சமர்கிப்படும் புகைப்படத்தில் 'கேள்விக்குறியான' விஷயங்கள் இருந்தால், கண்டிப்பா, நாங்களும் சென்ஸார் செய்வோம். இதுல என்ன பெரிய ப்ரச்சனை இருக்கமுடியும்?)
தமிழ்மண சென்ஸார் இல்லாத காலத்தில் எனக்கே ரெண்டு மூணு தடவை தர்மசங்கடம் ஆயிருக்கு.
அலுவலக நண்பர்கள் சிலரிடம், தமிழ் பதிவுகள் பற்றி எடுத்துக் கூறி, திரட்டிகளை காட்டலாம்னு தமிழ்மணம் பக்கம் வந்தா, ஜூடான இடுகைகள் முழுக்க முழுக்க, 'பலான' மேட்டரே நிரம்பி வழிந்த நாட்களுண்டு.
இதைதான் கிழிக்கறீங்களா என்பது போல், அவங்க ஏளனமா பாக்கரதும், நாம டக்குனு ப்ரௌஸர மூடரதும் சில தடவை நடந்திருக்கு.
குறிப்பா, பெண் பதிவர்கள் நிலையை நெனச்சுப் பாருங்க? புருஷன் கிட்டையோ, வீட்லயோ, தானொரு ப்ளாகர் என்று கூறிக் கொள்ள முடியுமா? தமிழ்மண உரலை, தைரியமா ஈ.மடலில் அனுப்பி, வாசகர்களைச் சேர்க்க முடியுமா?
என்னை மாதிரி, நிஜப் பெயர் வெளியிடாமல் இருப்பவர்களுக்கும், கும்மி மட்டுமே அடிக்கும் தனிக்கட்டைகளுக்கும், இந்த 'கெட்ட' வார்த்தை பெரிய விஷயமா இருக்காது. ஏக்சுவலி, இது நமக்கு ஒரு பெரிய entertainmentம் கூட. ஆனா, பெரும்பான்மையான 'சாதா' ப்ரஜைக்கு, இதெல்லாம் அருவருப்பு.
ஓரக்கண்ணால், சைட் அடிப்பதர்க்கும், ஊரே பார்க்கும்போது, ஈஈஈ என்று பல்லிளித்து ஜொள் விடுவதர்க்கும் உள்ள வித்யாசம்.
'வெட்கம்' இல்லாதவங்க தான், ஈஈஈஈன்னு பல்லிளித்து ஊரே பார்க்கும் போது ஜொள்ளுவார்கள்.
சபை மரியாதை அறிந்தவர்கள் கொஞ்சம் டீஸண்டாதான் இருப்பாங்க.
2) தமிழ்மணத்தில் இணைந்து விட்ட ஒரே காரணத்துக்காக, மனதில் நினைத்ததைப் பற்றி எழுதாமல் இருக்கணுமா?கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான் இது. இணையம் தரும் அபரிதமான கட்டற்ற சுதந்திரம் லேசா இடிக்குது.
ஆனா, தமிழ்மணத்தின் கருவிப்பட்டையை உபயோகித்து, அவங்க திரட்டியில திரட்டப்பட்டு, அவங்க மூலமா வாசகர்கள் கிடைக்கணும்னா, அவங்க சொல்ற சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் ஆகணும். அதிலென்னங்க குழப்பம்?
எனக்கென்னமோ, அவங்க சட்டதிட்டங்கள் ஓரளவுக்கு ஞாயமானதாதான் தெரியுது. ரொம்பப் பெரிய சென்ஸார்ஷிப் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனா, சில சமயங்களில், எப்பவாச்சும், கொஞ்சம் 'ஏ' கலந்து பதிவுகள் போடும் பதிவர்களுக்கு இது நெருடலான விஷயம்தான்.
இந்த மாதிரி நேரங்களில், பதிவர்கள், நினைப்பதை எழுதுவது அவங்க சுதந்திரம்.
தமிழ்மணத்துக்கு, ஏதாவது பிடிக்கலண்ணா, (preferably, சிறு விளக்கம் தந்து), அதை * செய்து மறைப்பது, அவங்க சுதந்திரம்.
better yet, தமிழ்மணம், பதிவர்களுக்கு சில வசதிகள் செய்து கொடுக்கலாம்.
உ.ம். NotForThamizmanam னு லேபிள் வச்சு பதிவு போட்டா, இதை திரட்டாமல் இருக்கலாம்.
எப்பயாச்சும், 'ஏ' பதிவு போட விரும்பும் பதிவர்கள், இந்த லேபிளைப் போட்டு, இதை பொதுப் பக்கத்தில் தெரியாதவாறு பார்த்துக் கொள்ளலாம்.
3) படைப்பாளிகளின் சுதந்திரம்?தமிழ்மணத்தில் இணைந்துதான் வாசகர்கள் பெறணுங்கர கட்டாயம் இருந்ததுன்னா, யாரும் பெரிய படைப்பாளி இல்லீங்க.
எனக்குத் தெரிஞ்சு, நாம இங்க அடிக்கரதெல்லாம், சும்மா வெட்டிப் பேச்சும், கும்மியும்தான்.
நான் எழுத (ஹிஹி, எல்லாம் நேரம்) ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆகப் போவுது. என் கண்ணுல பட்டதெல்லாம், நல்ல பொழுதுபோக்குப் பதிவுகளும் (லக்கி, வெட்டி, கொத்ஸ், பெனாத்ஸ்,பாலா,கானா,... இந்த மாதிரி), ஓரளவுக்கு சுமார் கவிதைகளும் (ஷைலஜா, நிலவு நண்பன்,...), ஒரு சில 'விஷயமுள்ள' பதிவுகள் (விக்கிபசங்க, VSK, அனுராதா, தருமி, KRS, ...), பலப்பல கும்மி பதிவுகளும் (கோவி, ஆசிப், குசும்பன்,...), மிகச் சில சுவாரஸ்யமான குழுப்பதிவுகள் மட்டும்தான்.
பெரீரீரீரீய படைப்பாளிகங்கர பட்டம் தாங்கி, யாரும் தமிழ்மணத்துல திரியரதா தெரியல. யாரையாச்சும் மிஸ் பண்ணிட்டா சொல்லுங்க, படிச்சு பாக்கறேன்.
4) மொத்தத்தில் எரிச்சல் தரும் விஷயம்?தமிழ்மணம் systematicஆக சில விஷயங்களை செய்யாதது. குழுமத்தில் இருப்பவர்களின் Ego அவ்வப்போது வெளியில் எட்டிப் பார்த்து, 'சார்பற்ற' அவர்களது செயல்பாட்டை கேள்விக் குறியாக்குவது போன்ற செயல்பாடுகள்.
You have devised rules -> just enforce the damn thing and not make a big fuss about it when you implement it. எல்லா செயலபாட்டுக்கும் பத்து பக்க வெளக்கம் கொடுக்கப் போகும்போதுதான், ப்ரச்சனைகள் ஊதப்படுகிறது.
one-liner explanation would do. என்னக் கேட்டா, * போடுமி இடத்திலேயே ஒரு விளக்கத்தை அடைப்புக் குறீல போட்டுட்டா, வேலை முடிஞ்சது. உ.ம் (blocked).
இன்னும் நல்லா செய்யணும்னா, இதை systematicஆ செய்யலாம். தமிழ்மணப் பதிவர்கள் யாராவது 50 பேர், அந்த மஞ்சள் பொத்தானை ஒரு பதிவுக்கு அழுத்தினால், அதை முகப்பிலும்/சூடிலும்/பின்னூட்டப் பகுதியிலும் திரட்டாமல் விட்டுவிடலாம்.
யோசிங்க. எவ்வளவோ பண்ணிட்டோம், இதை சேக்க என்ன பெரிய கஷ்டம் இருக்கப் போவுது?
சூடான இடுகைகள் -> இத தூக்கணும்னு சொல்ல ஆசைதான். இந்த கட்டத்தில் இடம் பிடிக்கதான், ரூம் போட்டு யோசிச்சு எல்லாரும் தலைப்பு வைக்கறோம். ஆனா, personally, இது இல்ல்ன்னா, முகப்பே ஒரு 'விரக்தியா' இருக்கு. வெறும், பொழுது போக்குக்காக வாசிக்க வரும் பதிவர்களுக்கு, இது இல்லன்னா, ஒரு பெரிய இழப்புதான்.
இருந்துட்டுப் போவட்டும் - ஆனா, மேலே சொன்ன, systematic ரிமூவல் இருந்தா நல்லது. மஞ்ச ஐக்கானை கருவிப்பட்டையில் வைத்தல் கூடுதல் நலம். பதிவ படிச்சுட்டு க்ளிக்க வசதியா இருக்கும்.
ஸ்ஸ்ஸ்ஸ். இன்னும் நெறைய சொல்லிட்டே போகலாம்.
இப்போதைக்கு இது போதும்.
மொத்தத்தில்,
Everyone, Please Please, Grow Up! எனக்கு, personalஆ எரிச்சல் தரும் ஒரு விஷயம், ரோம் நகரம் எரியும்போது ஃபிடில் வாசிச்ச கதையா, நம்ம பதிவர்கள் பெரும்பாலானோர், இந்த மாதிரி விவகாரப் பதிவுகளில், தங்களின் உண்மையான கருத்தை பதியாதது. எல்லாரும், எல்லாத்தையும் படிக்கராங்க (அதனாலதான ஜூடாவுது?), ஆனால், கருத்ஸ் சொல்லாம எஸ்கேப் ஆயிடராங்க. உங்க கருத்த, அங்கங்க அப்பப்ப போட்டு ஒடச்சாலே, பல விஷயங்கள் உடனடியாக 'நேராக' வழி பிறக்கும்.
இது, இந்தப் ப்ரச்சனைக்கு மட்டுமல்ல, எல்லா 'வெவகாரப்' பதிவுகளுக்கும் பொறுந்தும்.
ஸோ, பின்னூட்டத் தயங்காதீங்க. அங்கங்க, அப்பப்ப உங்க கருத்தைச் சொல்லத் தயங்காதீங்க! ஊருக்குள்ளதான், ஒண்ணும் கேக்காம, நடப்பவை நன்மைக்கேங்கரமாதிரி, வாழப் பழகிட்டோம், இங்கையாவது, கேள்விகள் கேளுங்க, எதையும் ஊதவிடாதீங்க.
so, அங்கங்க, அப்பப்ப, சொல்ல வேண்டியதைச் சொல்லுங்க!! என் வழி தனி வழின்னு போகாதீங்க. Come out of your shell! :)
ஓஹோ, எல்லாரும், இப்படிதான் நெனைக்கறாங்களா, அப்ப நாம இப்படி இதை இனி செய்யமுடியாதுன்னு, தெரிய வேண்டியவங்களக்குத் தெரிஞ்சாலே, பாதி விஷயங்கள் காத்திறங்கிப் போகும் ;)
வர்டா,
நன்றி!
பி.கு: இதுக்கு ஒரு சர்வே போடலாம்னு நெனைச்சேன். ஆனா, நான் கிறுக்கனதையெல்லாம் படிச்சுட்டு, இதுவா அதுவான்னு கேட்டா சரிவராது. இன்னொரு நாள் பாக்கலாம் ;)