recent posts...

Monday, April 30, 2007

ரஜினி இமைய மலையில், ஷராபோவா எங்கே?

சிவாஜி ஷூட்டிங் முடிச்சுட்டு ரஜினி இமைய மலைக்கு போயிட்டதா, நம் சற்றுமுன் குழுவினரின் செய்தி பார்த்தேன்.
நீங்களும் பாத்திருப்பீங்க.
அதுக்கென்ன இப்பொவா? பொறுமையா படிங்க. விஷயம் இருக்கு.

ஷராபோவா எங்கே போனாங்க?
என்ன கேட்டா? எனக்கெப்படி தெரியும்?

ரஜினி, ஷராபோவான்னு பேரெல்லாம் தலைப்புல போட்டாதான் ஓடோடி வரீங்க.
ஏங்க இப்படி இருக்கீங்க? என்னமோ போங்க.

வந்தது வந்தீங்க, இந்த அறிவிப்ப படிச்சு, உங்களுக்கு தெரிந்த குழந்தைகளுக்குத் தெரியப்படுத்தி, அவங்கள போட்டியில சேத்து விடுங்க :)

10 வயதுக்குட்பட்ட குட்டீஸ்களுக்கான பாட்டுப் போட்டி - "இணைய வாண்டு '07".

பெயர் கொடுக்கக் கடைசித் தேதி மே-15.
மற்ற விவரங்கள் இங்கே

அடிக்க வராதீங்க,

மீ த எஸ்கேப்!!!! :)

:))))))))))))))))

பி.கு: வெளம்பரம் கொடுத்து, ஆள் சேர்க்க உதவுங்கள்!! இதுவரை போட்டியில், அபி பாப்பா மட்டும் லைனில் வெயிட்டிங். $25, $15, $10 என்ற மூன்று பரிசுகள் உள்ளன. குழந்தைகளை தயார் பண்ணி போட்டிக்கு அனுப்புங்க. பெயர் பதிவு செய்யுங்கள். எவ்ளோ பேர் வராங்கன்றத பொறுத்து, ஓப்பன் சர்வே போடலாமா, அனானிமஸ் சர்வே போடலாமா, நடுவர் குழு வைக்கணுமா, வேற என்ன பண்ணலாம்னு யோசிக்கணும் :)

ஜமாய்க்கலாம் வாங்க!

Sunday, April 29, 2007

குட்டி வாண்டுகளுக்கான போட்டி

அடுத்ததா ஒரு புகைப்படப் போட்டி வெக்கரதுக்கு முன்னாடி, அனைவரின் வீட்டிலிருக்கும் குட்டீஸ்க்கு ஒரு போட்டி வச்சா என்னான்னு தோணிச்சு.

( புகைப்படப் போட்டிக்கு, போன முறை த.வெ.உ'வ ரூல்ல கொண்டு வந்த மாதிரி, இந்த முறை என்ன கொண்டுவரலாம்னும் ஐடியாஸ் வரவேற்க்கப்படுகின்றன. எல்லோருக்கும் சுலபமாக கிடைக்கக் கூடிய பொருளா இருக்கணும். நெட்ல சுட்டு குடுக்க முடியாத அளவுக்கு ஒரு ட்ரிக்கி படமா எடுக்கவும் சொல்லணும் :) ).

சரி, அத அப்பறம் பாக்கலாம். அதுக்கு முன்னாடி, அனைவரின் வீட்டில் இருக்கும் குட்டீஸ்களுக்கு ஒரு போட்டி வெக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.

10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போட்டியா இது இருக்கும்.

ஏதாவது ஓரு தமிழ் சினிமா பாட்ட பாடச் சொல்லி, அத ரெக்கார்ட் பண்ணி அனுப்பணும்.

கலந்து கொள்ள விரும்பும் வாண்டுகளின் பெயர்களை பின்னூட்டுங்கள். அவர்கள் வயதையும் குறிப்பிடுங்கள். எந்த ஊருன்னும் சொல்லுங்க.

அதே மாதிரி, மற்ற வாசகர்கள், வாண்டுகள் என்ன பாட்டு பாடினா நல்லா இருக்கும்னு டிப்ஸும் கொடுங்க.

மே 15 வரை பெயர் பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்படும்.
மே 31 வரை பாடல்களை பதிந்து அனுப்ப நேரம் கொடுக்கப்படும்.

ஜூன்ல சர்வே போட்டு. "இணைய வாண்டு '07" தேர்ந்தெடுத்து மகுடம் சூட்டி பரிசு கொடுத்திடலாம்.

முதல் பரிசு $25. இரண்டாம் பரிசு $15. மூன்றாம் பரிசு. $10.

(ஸ்பான்ஸர்ஸ் கெடச்சா, பரிசுத் தொகை கூட்டப்படும். இந்த சந்தர்பத்தில், ஒரு தொகையை, உதவும் கரங்கள் போன்ற தொண்டு நிறுவனத்துக்கும் கொடுக்க ஏற்பாடு செய்யலாம். அதற்க்கு ஸ்பான்ஸர் செய்ய விரும்புவர்களும் பின்னூட்டுங்கள் ).

தங்கமணீஸ், ரங்கமணீஸ், மாமாஸ், சித்தப்பாஸ், பெரியப்பாஸ், அத்தைஸ், சித்தீஸ், கஸின்ஸ், ப்ரதர்ஸ், ஸிஸ்டர்ஸ், .... உங்கள் வாண்டுகளை தயார் படுத்துங்கள்! ஜமாயுங்கள்!

Questions?


பாடத் தயாராயிருக்கும் குட்டி வாண்டுகள்

1) அபி பாப்பா ( வயது ? )
2) மாதினி (வயது 9)
3) அமுதசுரபி (வயது 8)
4) சர்வோதயான் (வயது ?)
5) விதுலா கார்த்திகேயன் (வயது ?)
6) My Friends' Sister (வயது 3)
7)
8)
9)
10)
..
...
------ -------- -------- --------- --------

போட்டிக்கு வெளம்பரம் தர, இந்த code copy/paste செய்து உபயோகிக்கலாம்:



:)

பி.கு: தங்கமணியோ ரங்கமணியோ, குழந்தை வாய்ஸ்ல, ஜானகி மாதிரி, பாடி அனுப்பக் கூடாது. அப்படியெல்லாம் தில்லு முல்லு பண்ணா தக்க தண்டனை வழங்கப் படும்.

பி.கு2: ரெக்கார்ட் பண்ண இலவசமா கிடைக்கும் mymp3 recorder உபயோகிக்கலாம்.

Saturday, April 28, 2007

ஒரு மலையாளப் பாட்டும், எனக்குப் பிடித்த ஐய்யப்பன் பாட்டும், இட்லியும் பொங்கலும் சுக்கு காப்பியும்...

கேரளாவில் குருவாயூரப்பன் மிகப் ப்ரசித்தின்னு எல்லாருக்கும் தெரியும்.

அந்த குருவாயூரப்பனை பற்றிய அழகான குறும்பாடல் ஒன்று மலையாளத்தில் உள்ளது. கேட்டிருப்பீங்கன்னு நெனைக்கறேன்.
'செத்தி மந்தாரம் துளசி' (chethi mandaram thulasi) என்று தொடங்கும் அருமையான பாடல்.
சுஜாதா பாடியுள்ள அதன் ஒலிவடிவம் இங்கே இருக்கு. கேட்டா சொக்கிப் போயிடுவீங்க.

----------- ----------- -------------
ஷக்தி, தனக்கு இந்த பாட்டு ரொம்ப புடுக்கிம்னு சொல்லி அவங்க பாடினத அனுப்பியிருக்காங்க. அதன் ஒலி வடிவம் இங்கே.

ஷைலஜாவும் இந்த பாட்ட அழகா பாடி அனுப்பியிருக்காங்க. அது இங்கே.
----------- ----------- -------------

இந்த பாடலின் ஒரிஜினல் ஒலிவடிவம் தேடும் போது, எனக்கு மிகவும் பிடித்த ஐய்யப்ப சுவாமியின் பக்தி கானம் கண்ணில் பட்டது.
"தேடி வரும் கண்களுக்கு ஓடி வரும் சுவாமி" என்ற இந்த பாடல் சொக்க வைக்கும் ரகம். பள்ளிக் காலத்தில் என் வீட்டிலும், நண்பர்கள் வீட்டிலும், ஊர் கோவிலிலும் நடக்கும் ஐய்யப்ப பூஜைகள் நினைவுக்கு வந்தது.
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்! $க்காக ரொம்பவே விஷயங்கள் மிஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பண்றோம். என்னமோ போங்க!
(குறிப்பா, பூஜை முடிந்ததும் கிடைக்கும், இட்லியும், பொங்கலும், சுக்கு காபியும். அடேங்கப்பா, என்ன சுவையா இருக்கும்).

ஐய்யப்ப பாடலின் தமிழ் வடிவம் கிடைக்கல. மேலே சொன்ன மலையாள பாட்டின் ஆல்பத்திலேயே, சுஜாதாவின் குரலில் அந்த பாடல் இங்கே. ரொம்ப அழகா பாடியிருக்காங்க.

அதையும் கேளுங்க. ஜோதியில் ஐக்கியமாவுங்க.

வேற யாராவது பாடி இந்த பாடல்களை அனுப்பினா, நேயர் விருப்ப பகுதியில், அரங்கேற்றம் பண்ணிடலாம்.

குருவாயூரப்பா!! சுவாமி சரணம்!

:)

பி.கு1: யாராவது கேரளா போயிட்டு வந்தா, இந்த சி.டி ஆல்பம் வாங்கிட்டு வாங்க மக்கள்ஸ். சுவாமி மேல பாரத்த போட்டு, mp3ய அனுப்பி வைங்க. :)

பி.கு2: Latest Survey பாத்தீங்களா? குழலி என்ன சொல்றார்னும் பாருங்க.

பி.கு3: கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே, VSK, சர்வேசன், ஷக்தி குரல் வண்ணத்தில் கேட்க்க இங்கே சொடுக்கலாம்.

பி.கு4: பாட்டுக்கு பாட்டு 24th பாடல் செ.ரவி பாட இன்னும் வரல. வேற யாராவது மேடை ஏறி பாடரதா இருந்தா, பாடிட்டு பாடல அனுப்புங்க. விவரங்கள் இங்கே.

:)

Friday, April 27, 2007

சேரனின் மாயக்கண்ணாடி - இதிலும் சாதீயமா?

----------------- --------------- ---------------------
சென்னைவாசியா? A1 positive இரத்த வகையா? இங்கே சொடுக்கி உடனே உதவவும்.
----------------- --------------- ---------------------
இனி, மேல படிங்க..

வேலை நிமித்தமாக சென்ற வாரம் San Francisco சென்றிருந்தேன். ஒரு குட்டி மாம்பலமே அங்க இருக்கு.
புதுப் படம் சென்னையில் ரிலீஸ் ஆகுதோ இல்லியோ, நம்ம குட்டி மாம்பலத்துல, DVD (திருட்டோ திருடாததோ) உடனே கெடச்சுடும்.

எல்லா படமும் தியேட்டர்ல வராத போது, இந்த DVD கிடைப்பது சௌகர்யம்தான்.

நண்பன் வீட்டுக்கு சாப்பிடப் போயிருந்த போது, மாயக்கண்ணாடி என்ற சேரனின் படத்தை திரையிட்டான்.

பொறுப்பான இயக்குனர்களின் மத்தியில், சேரனுக்கு ஒரு இடம் உண்டு. கருத்தாழமுள்ள சில படங்களைத் தந்தவர். பெரிய அளவில் க்வாலிட்டி படமா இருக்காதுன்னாலும், சலிக்காமல், அறுவருப்பு இல்லாமல் அழகாக செல்லும் படங்களைத் தந்தவர்.

மாயக்கண்ணாடி நல்ல படம். பெரிய அளவில் தொய்வில்லாமல், மெதுவா நகர்ந்து சுபமாக முடிஞ்சுது.
இளையராஜா சொதப்பிட்டாருன்னுதான் நெனைக்கறேன். குடுக்கர காசுக்குக்கேத்த மாதிரி தான் இப்பெல்லாம் பாடலின் தரம் இருக்கு.

படத்தின் கதை கிட்டத்தட்ட இதுதான். முடிதிருத்தகம் செய்யும் சேரனுக்கு, தானும் வாழ்க்கையில் பெரியாளாகி, கார் பங்களாவுடன் வாழணும் என்கிற ஆதங்கம். அதுக்காக இருக்கும் வேலையை விட்டு, சினிமாவில் சேர ட்ரை பண்றாரு + மற்ற பல வழிகளையும் முயற்ச்சி பண்றாரு. ஒண்ணும் சரியா வரல. கடைசியில், தனக்குள் இருக்கும் திறமை என்னவோ, அதை வைத்து முன்னேறுவதே சாலச் சிறந்தது என்பது போல் முடியும் படம்.

நல்ல கருத்து மாதிரிதான் எனக்குத் தோணிச்சு.

எனக்கு என்ன நல்லா வருமோ, அதை மெருகேத்தி முன்னேறுவது நல்லதா?
இல்ல, சீக்கிரம் பணம் செய்யணுங்கறதுக்காக, எனக்குத் தெரியாத விஷயங்களை ரிஸ்க் எடுத்து கத்துக்கிட்டு செய்யணுமா?

வாழ்க்கைப் பாதையில், ஒவ்வொரு தனி நபரின், வயது, திறமை, சுற்று, வாழ்க்கை சூழல், மற்ற பல விஷயங்களின் கலவை மேலே உள்ள ரெண்டில் எது சரி என்று தீர்மானிக்கும்.

சரி, அத்த வுடுங்க.
இந்த படத்த பாத்து குழலி சார், சேரன் மாயக்கண்ணாடி படத்தில், சாதீயத்தை புகுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார்.

(இப்ப தான் கொஞ்சம் அடங்கியிருக்கு சாதீயச் சண்டைஸ், அதுக்குள்ள திரும்பவான்னு நீங்க மொனகரது கேக்குது).

அவர் பதிவ படிங்க, அப்பாலிக்கா கீழ வாக்குங்க.


பி.கு:: VSK, சர்வேசன்(with a twist), மற்றும் ஷக்தி, பின்னி பெடலெடுத்து இருக்கும், ஷைலஜாவின் விருப்பமான, பி.சுசீலா பாடிய, கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே கேட்டீங்களா கேட்டீங்களா?

மிதக்கும் வெளிக்கு கொடுத்த அவார்டு பாத்தீங்களா?

நம்ம பட்டைய பாத்தீங்களா?

One Bedroom flat பாத்தாச்சா?

பி.கு: தமிழ்மண புது லுக்கு சூப்பரு!!!

Tuesday, April 24, 2007

நானும் பட்டைய போட்டுட்டேன்... (இது வேற பட்ட)

இது பட்டை வாரம்.

எல்லாரும் அவங்கவங்களுக்கு புடிச்ச மாதிரி ஒரு பட்டைய போட்டுட்டாங்க. எந்த பட்ட நமக்கு சரியா வரும்னு யோசிச்சுப் பாத்தேன். யோசிச்சேன் யோசிச்சேன் யோசிச்சுக்கிட்டே இருந்தேன்.

அத போட்டா, ஓவரா ஆயிடும்.
இத போட்டா, அவ்வளவு சரியாவும் இருக்காது.
ஒண்ணும் போடலன்னா, பட்டை வாரத்த அவமதிக்கர மாதிரி ஆயிடும்.

அதனால இத்த போடறேன்.
இதுவே எமது பட்டை. (கொழப்பம் தீரும்வரை) :))))


:))))))))))

டிஸ்கி: கொழப்பத்துக்கெல்லாம் காரணம், சொல்ல வந்தத 'தூய' மெட்ராஸ் தமிழ்ல எல்லாருக்கும் பிரியர மாதிரி சொல்லாம, புறநானூறு தமில்ல சொன்னதால கூட இருக்கலாம்.
சில பேர், பத்தி பத்தியா வெளக்கம் கொடுத்தாங்க. அப்படியும் கொழப்பம்தான்.
என்னது? தூங்கரவன எழுப்பலாம், தூங்கர மாதிரி நடிக்கரவன எழுப்ப முடியாதா?
அது சரி.
தூங்கி எனக்கென்னங்க கெடைக்கப் போது?

வந்தது வந்தீங்க கீழ ஒரு குத்து குத்தி பத்த வச்சுட்டுப் போங்க.



:))))

Friday, April 20, 2007

கானா பிரபாவுக்கு - HATS OFF!!!

தமிழ்மணமே சாதிச் சண்டை, மதச் சண்டை, ஐ.பி தகராறு என்று அல்லோலப் பட்டுக் கொண்டிருக்கும்போது, தென்றலாய் வருடும், நல்ல பதிவுகள் தருவது ஒரு சிலரே.

ஊர்ல ஆயிரம் ப்ரச்சனை, அலுவலகத்தில் தலைவலி, வீட்லயும் ப்ரச்சனை, தொலைக்காட்சியில் 24 மணி நேரமும் குப்பைக் கூளம் என்று திரும்பிய பக்கமெல்லாம் எரிச்சலூட்டும் விஷயங்கள். :)

இது போதாதுன்னு தமிழ்மணம் படிக்க வந்தா, சமீக காலமா, இங்கயும் ஜனரஞ்சகமான நல்ல பதிவுகள் மிஸ்ஸிங்.
ஒண்ணு, சண்ட போடறாங்க, இல்லன்னா வெத்து வெட்டு பதிவுகள் எழுதறாங்க.

சுவாரஸ்யமே இல்லாம ஆயிரமாயிரம் பதிவுகள் வருது. (என் பதிவும் இதில் அடக்கம்).

அட என்னங்கய்யா பண்றீங்க என்று கலங்கும் போது, மேலே சொன்ன, தென்றலாய் வருடி நிம்மதி தரும் பதிவுகள் அப்பப்ப வந்து ஒரு நம்பிக்கையை தருது, மன சந்தோஷமும் தருது.

அந்த தென்றலாய் வருடும் பதிவர்களில், சமீபமாய் முதல் இடத்தில் இருப்பவர் நண்பர் கானா பிரபா.

கானா பிரபாவின், சமீபத்திய முயற்ச்சியான 'நீங்கள் கேட்டவை' சூப்பர்.
பதிவர்கள் கேட்க்கும் பாடல்களை தேடிப் பிடித்து தொகுத்து வழங்குகிறார்.

என் all-time favourite பாடல், SPB, Yesudos பாடிய "என் காதலி யார் சொல்லவா" என்ற பாடலை, கண் சிமிட்டும் நேரத்தில் தேடிப்பிடித்து பதிவுல போட்டுட்டாரு.
பாட்ட கேட்டா மெய் சிலிர்க்குது போங்க. Really!!!!

நீங்களும் உங்க விருப்பத்தை கேளுங்க. ஆனந்தப் படுங்க.

சண்டை சலசலப்பை குறைப்போம். ஜாலியாக வாழக் கற்றுக் கொள்வோம்!

என்ஸாய் மக்கள்ஸ்!!!!!!

கானா பிரபா சாரே, Hats Off to you!

பளீர்னு அரஞ்சுட்டானேய்யா (One Bedroom flat)...

ஈமெயிலில் வந்தது:

ஹ்ம்.. இப்படியெல்லாம் ஆகக்கூடாது யாருக்கும் :(

நம்ம "எலே திரும்பி வருவியா மாட்டியா சர்வே பாத்து, வாக்கலன்னா வாக்கிடுங்க".

இனி கதைய படிங்க:

ONE BEDROOM FLAT... WRITTEN BY AN INDIAN SOFTWARE *ENGINEER *
*
As the dream of most parents I had acquired a degree in Software
Engineer and joined a company based in USA , the land of braves and
opportunity.
When I arrived in the USA , it was as if a dream had come true.

Here at last I was in the place where I want to be. I decided I would be
staying in this country for about Five years in which time I would have
earned enough money to settle down in India .

My father was a government not employee and after his retirement, the only
asset he could acquire was a decent one bedroom flat.

I wanted to do some thing more than him. I started feeling homesick and
lonely as the time passed. I used to call home and speak to my parents
every week using cheap international phone cards. Two years passed, two
years of Burgers at McDonald's and pizzas and discos and 2 years
watching the foreign exchange rate getting happy whenever the Rupee
value went down.

Finally I decided to get married. Told my parents that I have only 10
days of holidays and everything must be done within these 10 days. I got
my ticket booked in the cheapest flight. Was jubilant and was actually
enjoying hopping for gifts for all my friends back home. If I miss
anyone then there will be talks. After reaching home I spent home one
week going through all the photographs of girls and as the time was
getting shorter I was forced to select one candidate.

In-laws told me, to my surprise, that I would have to get married in
2-3
days, as I will not get anymore holidays. After the marriage, it was
time to return to USA , after giving some money to my parents and telling
the neighbors to look after them, we returned to USA .

My wife enjoyed this country for about two months and then she started
feeling lonely. The frequency of calling India increased to twice in a
week sometimes 3 times a week. Our savings started diminishing.
After two more
years we started to have kids. Two lovely kids, a boy and a girl, were
gifted to us by the almighty. Every time I spoke to my parents, they
asked me to come to India so that they can see their grand-children.

Every year I decide to go to India . But part work part monetary
conditions prevented it. Years went by and visiting India was a distant
dream. Then suddenly one day I got a message that my parents were
seriously sick. I tried but I couldn't get any holidays and thus could
not go to India . The next message I got was my parents had passed away
and as there was no one to do the last rights the society members had
done whatever they could. I was depressed. My parents had passed away
without seeing their grand children.

After couple more years passed away, much to my children's dislike and
my wife's joy we returned to India to settle down. I started to look for
a suitable property, but to my dismay my savings were short and the
property prices had gone up during all these years. I had to return to
the USA .

My wife refused to come back with me and my children refused to stay in
India. My 2 children and I returned to USA after promising my wife I
would be back for good after two years.

Time passed by, my daughter decided to get married to an American and my
son was happy living in USA . I decided that had enough and wound-up
every thing and returned to India . I had just enough money to buy a
decent 02 bedroom flat in a well-developed locality.

Now I am 60 years old and the only time I go out of the flat is for the
routine visit to the nearby temple. My faithful wife has also left me
and gone to the holy abode.

Sometimes I wondered was it worth all this? My father, even after
staying in India , had a house to his name and I too have the same
nothing more.
**
I lost my parents and children for just ONE EXTRA BEDROOM. **

Looking out from the window I see a lot of children dancing.
This damned cable TV has spoiled our new generation and these children
are losing their values and culture because of it. I get occasional
cards from my children asking I am alright. Well at least they remember
me.

Now perhaps after I die it will be the neighbors again who will be
performing my last rights, God Bless them. ** But the question still
remains 'was all this worth it?'
I am still searching for an answer................!!!!*

பி.கு: ஆயர்பாடி மாளிகையில் இராமனாதன், நானு, வல்லிசிம்ஹன் பாடினது இங்கே.

ஷைலஜா பாட்டுக்குப் பாட்டுல பாடின 'எண்ணப் பறவை' பாட்ட கேளுங்க. அடுத்ததா செந்தழல் ரவி பாடணும். பதிவர் சந்திப்பின் போது யாராவது, அவர 'த','தா','ஆ' ல ஒரு பாட்டு பாடி லைவ் ரெகார்டிங் பண்ணி அனுப்புங்க. டிமிக்கி குடுத்துக்கினே இருக்காரு. அடுத்தது நான் பாடணும்.

கடவுள் உள்ளமே கருணை வெள்ளமே பாட ஆள் கெடைக்கல. யாராவது முயற்ச்சி பண்ணுங்க.

எனக்கு பிடித்த படங்கள் வரிசைல உங்களுக்கு பிடிச்சதும் ஏத்துங்க.

.

Tuesday, April 17, 2007

Should ABDUL KALAM continue a 2nd term as POI?

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் கொடுக்கப்பட்டது
"Should Abdul Kalam continue a 2nd term as President of India" என்னும் சர்வே.

A whopping 87% responded saying YES.

கலாமின் இப்பொழுதைய பதிவிக்காலம் July 2007ல் முடிவடைகிறதாம்.

கலாமின் தனிப்பட்ட விருப்பம் ஆசிரியர் ஆவதாம்.

ஆனால், அவரின் பல அபிமானிகள், அவரை 2nd term பதவி ஏற்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நான் போட்டிருந்த சர்வேயில், இன்று வந்த பின்னூட்டத்தில் கீழிருக்கும் செய்தி இருந்தது. அதைப் பகிரவே இந்த பதிவு.
...

Dear Friends,
Here's a website which is a citizen's campaign to request, vote and bring back Dr Kalam as President for Second Term in Office - www.BringKalamBack.com.
We all know the power of his vision and the way he deliberates by providing all the necessary steps toachieve that vision. We need him with us for a few more years to show us the direction.The website will authenticate your registration by sending an email to confirmand vote after providing the necessary details for registration. You will get an email in your inbox to click and vote.
You'll get another email to request your friends to vote.2 - 4 weeks is the time we have to make this campaign a success. If you don't vote, we might be responsible in not having President Kalam for a second term in office. India's voting will be sent to President Kalam's office and various political parties.Who's the next President of India, YOU could get to decide?www.BringKalamBack.com

...

பின்னூட்டத்தில் இருக்கும் BringKalamBack.com எந்த அளவுக்கு 'மெய்யான' இணையப் பக்கம் என்பது எனக்குத் தெரியாது.

அதில் ஈ.மெயில் ஐ.டி கொடுப்பதும் கொடுக்காததும் உங்கள் இஷ்டம். You are on your own. யோசிச்சு செய்யுங்க.

இன்றைய நிலையில், என் தனிப்பட்ட கருத்து:

"கலாம் வந்தாரு. 5 வருஷம் பதவியில் இருந்தாரு.
நமக்கெல்லாம், ஒரு படித்த அறிவாளி ஜனாதிபதியா கெடைக்கறாரேன்னு ஒரு பெரிய கர்வம் இருந்தது.
கலாமும், நம் நம்பிக்கையை வீணாக்காமல், தடாலடி மேட்டரெல்லாம் பண்ணாரு.
குறிப்பா, வெறும் ரப்பர்-ஸ்டாம்பா இருக்காமா, நம்ம அரசியல் தலைவர்கள 'கேள்விகள் எல்லாம் கேட்க்க ஆரம்பிச்சாரு'. அதனால் பெரிய அளவில் நன்மை விளையலன்னாலும், ஓரளவுக்கு ஒரு வித்யாசம் தெரிந்தது.
அவரது பள்ளி விசிட் நல்ல மேட்டரு. அடுத்த தலைமுறையை தயார் படுத்தும் முயற்ச்சி பாராட்டத் தக்கது.

ஆனால், தேசிய அளவில் பெரிய மாற்றங்கள் வரணும்னா, ஆண்டாண்டு காலமா இருக்கும் தண்ணீர் பிரச்சனை, நதிநீர் இணைப்பு, சுகாதாரப் ப்ரச்சனைகள், அரசியல்வாதிகளின் தில்லாலங்கடி இதெல்லாம் கொஞ்சம் தூசு தட்டி சரி படுத்தணும்.
ஒட்டு மொத்த சிஸ்டத்தையும் சரி ஆக்கணும்.

அதைச் செய்ய, இன்னும் 'திடமான' தலைவன் வேணும்.
கோதால எறங்கி, மன்மோகன் சிங், சிதம்பரம், லல்லு, அத்வானி, etc.. etc.. இவங்க காதை திருகி ஒழுங்கா வேலை செய்ய வைக்க ஒரு லீடர் வேணும்.

குடிமகன் ஒவ்வொருவனையும், கேணைகளாகவே நினைத்து நடத்தி வரும் அரசியல் மொள்ளமாரித்தனத்தைத் தட்டிக் கேட்கும் 'முதல் குடிமகன்' வேணும்.

So, அடுத்த ஐந்து வருடங்களும் கலாமே, தொடரணும்னு என்ன கட்டாயம்?
I have nothing against Kalam. I admire him. I totally respect him. What he has done to our nation has no parallel among our 'other' citizens. I salute him for that.

But, His skills can be put to better use if he continues teaching or assisting our science factions.

அடுத்த ஜனாதியாக, புதியவரை தேர்ந்தெடுப்போம்.
கலாமைப் போலவே தேசத்தை நேசிப்பவரும், சுயநலம் இல்லாதவரும், தைரியசாலியும், புத்திசாலியும், கிடைக்காமலா போவார்?

இருக்காங்களா? யாரு?

இன்னா சொல்றீங்க? டூ மச்சோ?

:)

Sunday, April 15, 2007

டாப் Weirdaர் மகுடமளிப்பு விழா + INVITAtions

எல்லாரும் வியர்க விருவிருக்க வியர்டி முடிச்சாச்சு.

வியர்டினவங்க லிஸ்ட்ல, கொஞ்சம் டேஞ்சரஸ் வியர்டர்களை தனிப்பதிவுல போட்டு, அவங்கள்ள டாப்பு யாருன்னு பாத்தோம். அதோட ரிஸல்ட் சொல்ல இந்த பதிவு. :)

வியர்டுக்கெல்லாம் பெரிய வியர்டு, பதிவர் மிதக்கும் வெளியின்,
வகுப்பில் பெரியாரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு முத்தமிட்டுக்கொண்டிருப்பேன்.

33% ஓட்டு வாங்கியிருக்காரு.
வாழ்த்துக்கள் "மிதக்கும் வெளி" சார். கலக்கிபுட்டீங்க. :)

மொத்த ரிஸல்ட்ஸ் இங்கே பார்க்கலாம்.

பெரியார் அபிமானிகள் கொலைவெறியோட ஓட்டு போட்டதால் வெற்றி பெற்றாரா, இல்லை எதிர்ப்பாளர்களின் வாக்கால் வெற்றி பெற்றாரா தெரியல :)

எது எப்படியோ, அவருக்கு வாழ்த்துக்கள்.

இதற்க்காக ஒதுக்கி வைத்தது $25. இதனுடன் இன்னொரு $25 ம் சேர்த்து, உதவும் கரங்களுக்கு அனுப்பப்படும்.
"அனுஷா வாஸுதேவா நினைவாக" இதை அனுப்பி வைக்கிறேன்.
(ஏதோ நம்மால முடிஞ்சது).

வியர்டர்களை லிஸ்ட் எடுத்து தொகுத்து வழங்கிய எல்லெல்.தாஸுவுக்கு நன்றி. வாக்களித்தவர்களுக்கும் நன்றி.

...

இந்த வியர்டு மேட்டர் யார் ஆரம்பிச்சு வச்சான்னு தெரியல. அட்டகாசமா பொழுது போச்சு.
இப்ப அடுத்ததா அழகு அழகா நெறைய அழகு பதிவுகள் போடறாங்க. இந்த மாதிரி புது விதமா எழுதி ஜாலியா கொண்டு போலாம் தமிழ்மணத்த.
திரும்ப இந்த IP சண்டையெல்லாம் ஆரம்பிச்சு, சாக்கடையாக்காதீங்க சார்ஸ் அண்ட் மேடம்ஸ். STOP It please!!!!

...

வந்தது வந்தீங்க. ஆயர்பாடி மாளிகையில் பாட்டை இராமனாதனும், நானும் பாடியிருக்கோம். கேட்டு மார்க் போடுங்க.

சர்வஜித் புத்தாண்டுல எப்படி வாழணும்னு சில இலவச ஐடியாஸ் அள்ளி வீசியிருக்கேன், அதையும் படிச்சு கருத்த சொல்லுங்க.

சூப்பர் திரைப்படங்களின் அணிவகுப்பு இங்க இருக்கு. உங்களுக்கு பிடிச்சதையும் சொல்லுங்க.

சிவாஜி படத்துக்கு வரி விலக்கு கொடுக்கக்கூடாதுன்னு 81% பேர் சொல்லியிருக்கீங்க. இந்த வாரக் கடைசில பத்திரிகைகளுக்கு நம்ம கருத்த letter to editor க்கு அனுப்பறேன். நல்ல தீர்க்கமான கருத்த சொல்லுங்க.

...

Saturday, April 14, 2007

சர்வஜித்தா?

...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சர்வஜித்னா என்னாங்க அர்த்தம்? எங்க பாத்தாலும் சர்வஜித்து வாழ்த்துக்கள்னு போட்டிருக்கு.
நான் கூட இது ஏதோ சர்வேக்கள் பல போட வேண்டிய வருஷமோன்னு நெனச்சு ஒரு நிமிஷம் திகிலாயிட்டேன். (சரி சரி அடங்கறேன்).

வெவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க.:)

...

VSKன் பத்திரமாய் போய்வா என் கண்ணே படிச்சிருப்பீங்க.
12 வயது Anusha Vasudeva சொன்னதைப் போல்
...
"நாம் எவ்வளவு நல்லவர் என்பது முக்கியம் இல்லை;
எவ்வளவு நல்லது செய்தோமென்பதே"
--அனுஷா வாஸுதேவா"
...


நண்பர்களே, 12 வயது குழந்தைக்கு இருக்கும் பக்குவம் கூட இல்லாம, நாமெல்லாம் அலட்டுவது மனவேதனை தருகிறது.

இந்த ஆண்டிலிருந்தாவது, பக்குவமாய், பாசமாய், அமைதியாய், மற்றவருக்கு உதவும் வாழ்க்கையை வாழ முயற்ச்சிக்க அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். நானும் முயல்கிறேன்.


இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! இ.த.பு.வா!

...

இப்பதான் தமிழ்மண நிர்வாகிகளின் பொலம்பல்ஸ் பாத்தேன். கும்மி அடிப்பவர்களின் மத்தியில் தமிழ்மணம் மாட்டிக்கிட்டு படர கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்ல.
ஆனா, தமிழ்மணம் ஒரு technical aggregator. அவங்க அந்த வேலையை மட்டும் செஞ்சுட்டு, தன்னை பத்தி எவன் என்ன சொல்றான்னெல்லாம் கவல படாம இருக்கணும்.
இன்னிக்கு சில நூறு பதிவுகள் இருக்கும்போது, ஒவ்வொன்னா போய் பாத்து, "ஏய் நீ ஒழுங்கா எழுது", "நீ அப்படி எழுது/எழுதாத"ன்னு சொல்லலாம்.
நாளைக்கு சில ஆயிரம் பதிவுகள் வரும்போது, இதெல்லாம் சாத்தியம் அல்ல.
You should start to add 'automation' to block 'bad blogs'.
Google செய்யும் 'flagging' போல் ஏதாவது செய்ய யோசிக்க வேண்டும்.

அந்த automation செய்யப்படும் வரை, உங்கள் 'terms of use' மீறுபவர்களை, silentஆ aggregation செய்யப்படுவதிலிருந்து தூக்கிடலாம். No explanations needed.

...

இ.த.பு.வா! நல்லா இருங்க!

Friday, April 13, 2007

I love movies. So, add to the list.

சினிமா பாக்கரதுதான் என்னோட இஷ்ட ஹாபி.

என்ன படமானாலும், முழுசா பாப்பேன்.

என்னடா பொழப்பு இது, 24 மணி நேரமும் லேப்-டாப்ல தட்டிக்கிட்டு, பேசாம 'க்ரியேடிவ்' field பக்கம் போய் ஏதாவது வேலை செய்லாம்னு தோணும்.

இந்த ஒண்ணுத்துக்கும் ஒதவாத $ தான் விடமாட்றது.

இயற்கையிலேயே ஒடம்புல ஊறிப்போன, 'பயந்து வாழ்தலும்' ஒரு பெரிய தடை. Risk எடுக்க பயந்துகிட்டு, 'comfort zone' விட்டு வெளியில் வராமல், அப்படியே வாழ்க்கை ஓடிடும்னு நெனைக்கறேன்.

சரி, பொலம்பல் எதுக்கு, விஷயத்துக்கு வருவோம்.

சமீபத்தில் பார்த்ததில் மிகவும் ரசித்த படங்கள் சில கீழ தரேன். அதே ரேஞ்சுல, வேற ஏதாவது must-see படங்கள் உங்க மனசுக்கு தோணுச்சுன்னா சொல்லுங்க. பாக்கணும்.

-> Mystic River (Clint Eastwood directed) - கலக்கலான படம். இளவயதில், abuse செய்யப்படும் Tim Robbinsன் நிலமையை விளக்கும் டக்கர் சினிமா.

-> Million $ Baby (Clint Eastwood directed) - நீங்களும் பாத்திருப்பீங்க. பல எதிர்பார்ப்புகளுடன் வரும் ஒரு பாக்ஸிங் வீராங்கனையின் வாழ்க்கையில் அடிக்கும் திடீர் திருப்பத்தத விவரிக்கும் அருமையான் ட்ராமா. கடைசியில் கண்ணில் ஈரம் சொட்டும்.

-> In the Bedroom - மகனை பறிகொடுத்த பெற்றோரின் நிலையும், அவர்களின் பழிவாங்கலும். டமால் டிமீல்னு இல்லாம, அமைதியான படம். பார்க்கவேண்டிய படம்.

-> Saving Private Ryan - (Steven Speilberg)அஞ்சு ஆறு தடவ பாத்தாலும், சலிக்காத படம். வீட்டிலிருக்கும், Yamaha receiver/Bose speaker காசு கொடுத்து வாங்கினது வீண் போகலன்னு ஞாபகப் படுத்தும் படம். குறிப்பா கடைசி 20 நிமிடம், யப்பா!!!

-> Finding Nemo (Pixar) - நீங்களும் பாத்திருப்பீங்க. கார்டூன்னா எனக்கு கொள்ளை பிரியம். அலாதீன்ல இருந்து, Shrek வரைக்கும் எல்லாம் பிடிக்கும்.

-> Childrens of the Heaven (Iranian) - கெடச்சா பாருங்க. ரொம்ப கவித்துவமான படம். அண்ணன், தங்கையின் செருப்ப தொலச்சுடுவான். அத தேடி ஓடரதும், அதனால் நடக்கும் விஷயங்களும், இனிமையா சொல்லிருப்பாங்க. Iran ஏதோ, வில்லங்கமான ஊருன்னு ஊடகங்கள் காட்டுது. இந்த படம் பாத்தீங்கன்னா, அங்க எவ்ளோ இனிமையானவங்க இருக்காங்கன்னு புலப்படும்.

-> அழகி (தங்கர்பச்சான்) - தமிழ்ல பல பெரிய gapக்கு அப்பறம் வந்த அருமையான படம். ஒவ்வொரு காட்சியும் சலிக்காத கோர்வை. அதுவும், க்ராமத்து பள்ளிக்கூட சீனெல்லாம், மனப்பாடமே ஆயிடுச்சு. இந்த மாதிரி படம் எடுங்கப்பா, பாத்துக்கிட்டே இருப்போம்.

-> Black (ஹிந்தி) - சில பேருக்கு பிடிக்கலன்னாங்க. ஓவர்-ஏக்டிங் மாதிரி இருக்காம். ஓவர்-ஏக்டிங் இருந்தாலும், அதுவும் ஒரு அழகுதான் இந்த படத்துக்கு. படத்துக்கு பெரிய +பாயிண்ட், ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவு. ராணி முகர்ஜி படிக்கும், கல்லூரி முன்னால் அமிதாப்பும், ராணியும் பேசும் காட்சி வரும். அடேங்கப்பா.

-> தனியாவர்தனம் (மலயாளம்) - cousin ரெகமண்ட் பண்ணினதால தேடிப் பிடிச்சு வாங்கி பாத்த படம். மம்மூட்டியின் அசத்தல் நடிப்பில் அட்டகாசமான படம். மெதுவாக நகரும், கடைசியில், திக்குமுக்காட வைக்கும்.

-> மூன்றாம் பிறை - கமல், ஸ்ரீதேவி நடிப்பு ஒருபக்கம். ராஜாவின் இசைக் கோர்வை ஒரு பக்கம். பாலுமகேந்திரனின் ஆளுமை ஒரு பக்கம். இப்படி எல்லாம் படமே இப்ப வரதில்ல. :(

(list will grow).

Please comment with similar movies you liked. follow my format, so its easy to copy/paste into my content.

நன்றி!

Monday, April 09, 2007

சிவாஜி படத்துக்கு $$வரிவிலக்கு$$ கொடுக்கணுமா?

இணையத்தில் வந்த ஒரு செய்தியில், சிவாஜி படத்தில் எப்படி 'தமிழின்' முன்னேற்றத்தை தாங்கி பிடிக்கிறார்கள் சில பாடல்களில் என்று அலசி தள்ளியிருக்காங்க.

ஏதோ, மூன்லைட், சன்லைட்னு ஒரு பாட்டாம், ஆங்கிலக் கலப்பு அள்ளி வீசியிருக்காங்களாமே?

நல்லது.

நம்ம ஊர்ல திரைப்படத்துக்கு, தமிழ்ல பேர் வச்சா வரிவிலக்கு கொடுக்கறாங்களாமே?
தமிழை மேம்படுத்த உதவ தொடங்கின மஹாதிட்டம் இது.
'சிவாஜி' தமிழ் பெயரா?
தமிழ் பெயராவே இருந்தாலும், 'மூன்லைட், சன்லைட்' பாட்டெல்லாம் இருக்கே - அது பரவால்லியா?

ஆமா, திரைப்படம் எடுக்கரவங்களுக்கு மட்டும் எதுக்கு இந்த flexibility? மளிகை கட வச்சிருக்கரவங்க, கடைக்கு 'தங்கம் ஸ்டோர்ஸ்'னு வைக்காம, 'தங்கம் கடை'ன்னு தமிழ்ல வச்சா sales tax விலக்கு கிடைக்குமா? சினிமாக்கு மட்டும் எதுக்கு இந்த விலக்கு?

personally, எனக்கு இந்த 'வரி விலக்கு' திட்டம் மேல் துளி கூட நல்ல அபிப்ராயம் கிடையாது. இவங்க தமிழ்ல பேர் வச்சதால ஒண்ணும் தமிழ் வளரப்போவதும் இல்லை, இங்கிலீஷ்ல பேர் வக்கரதால தமிழ் அழியப் போவதும் இல்லை.
அரசு கஜானாக்கு வரவேண்டிய, வரிப் பணம் தான், சும்மா வீணாகுது.

சோ, சிவாஜி படத்துக்கு வரிப் பணம் தேவையா என்பதே, இந்த சர்வேயின் கேள்வி.
(100 பேருக்கு மேல, ஓட்டு விழுந்தா, இத ஒரு லெட்டரா மாத்தி, 'letter to the editor' of hindu, குமுடம், விகடன், தினகரன், தினமலருக்கு, ஊரில் இருக்கும் நண்பர் மூலமா, அனுப்பலாம்னு இருக்கேன். உங்க பின்னூட்டங்களோட சேத்து. so, நல்லா யோசிச்சு பின்னூட்டுங்க :) )



பி.கு:
ஆயர்பாடி மாளிகையில் பாடி அனுப்புங்க சாமிகளா

பாட்டுக்கு பாட்டுல, ஷக்தியின், அழகிய கண்ணே உறவுகள் நீயே, தொடர்ந்து ஸ்ரீஷிவ்(SriShiv) பாடணும். அவரை மேடைக்கு வரச் சொல்லுங்க ப்ளீஸ்

வியர்டு சர்வேக்கு வாக்கினீங்களா. பெரியாருக்கு முத்தம் லீடிங் த சார்ட்.

முக்கிய தீர்ப்பும், 40+ சர்வேயும் பாத்தாச்சா?

வர்டா! நம்மால முடிஞ்சது :)

Friday, April 06, 2007

டாப் வியர்டர் சர்வே + few titbits

Dr. LLதாஸு செய்த வியர்டு ஆராய்ச்சிய முடிச்சு வைக்க, ஒரு சர்வே போட்டு 'டாப் வியர்டு' ஐட்டம் யாருதுன்னு கண்டுபிடிக்க இந்த சர்வே.

நெறைய பேரு இன்னும் வியர்டிண்டே இருக்காங்க. அவங்களுக்கு தனியா, இன்னும் கொஞ்ச நாள் கழித்து இன்னொரு சர்வே அப்பாலிக்கா போட்டுடலாம்.

இப்போதைக்கு, கீழே இருக்கும் வியர்டர்களில், எது சாலச் சிறந்த வியர்டுன்னு தீர்ப்பு சொல்லுங்க.

அதிவாரியான வித்யாசத்தில் வெற்றி பெரும் நண்பருக்கு, என் hall-of-fame (இடது பக்கம் பாருங்க) லிங்கில் நிரந்தர இடம் கொடுத்திடலாம்.
ஏப்ரல் 14 அன்று ரிஸல்ட்ஸ் அறிவிக்கப்படும். டாப்-வியர்டர் சார்பா, ஒரு சிறு பரிசுத் தொகை, உதவும் கரங்களுக்கு அனுப்பப்படும். :) (நம்மால முடிஞ்சது).

டாப்-வியர்டராக வருபவர், தமிழ்மணத்தில் தொடர்ந்து பதிவுகள் எழுத அனுமதிக்கப்படுவார். ஆனா, அவங்க வியர்டு தன்மைய மாற்றிக் கொள்ள பரிசீலக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் படுவார்.

  • தனியா பேசிக்கறவங்கள கண்டாலே எனக்கு கொஞ்ச பயம். அதனால என் புத்தகத்தில், அந்த ரக ஆட்கள் தான் படு வியர்டு. (ப்ளூ-டூத் உபயத்தில், அப்படி பேசிக்கரவங்க, கணக்குல வரமாட்டாங்க).
  • தனியா பேசிக்கர கேட்டகரிய விட வியர்டான ஒருத்தர் இருக்காரு. இடி, மின்னல் இன்னா கலர்னு பாப்பாராம். மின்னல் கலர் பாப்பீங்க சரி. இடிக்கு எப்படியய்யா கலரு பாப்பீங்க? என்னமோ போங்க. very weird. :)
  • ஓணான் அடிச்சு அதுக்கு பீடி குடுத்தவங்கள, லிஸ்ட்ல சேத்துக்கல. மிருக வதை, நாட் குட் :(
  • பல வருடங்கள் திருமணம் ஆனவரு, இன்னும் கூட தன் x-காதலிய அவங்க பர்த்-டே அன்னிக்கு நெனச்சுப்பாராம். அனுபவிச்சாதான் புரியுங்கறாரு. டூ வியர்டு. குடும்பத்துல கொழப்பம் உண்டாக்கும், அந்த மேட்டரையும் சேக்கல :)

    சரி குத்துங்க.


    முக்கிய தீர்ப்புகள் படிச்சாச்சா?

    Free யா இருந்தா Chat corner வாங்க.


    ஹாப்பி வீக்.எண்ட்!

    .
  • Wednesday, April 04, 2007

    2 முக்கிய தீர்ப்புகள் + செ.ரவி விருப்ப 'தமிழ்மண' சர்வே

    இட ஒதுக்கீடு பிரச்சனைக்கான தீர்வு, பாக்கிஸ்தான் செய்யும் பொருளை வாங்கலாமா, சிவாஜி பாட்டு காசு கொடுத்து வாங்குவீங்களா என்ற மூன்று சர்வேக்களின் ரிஸல்ட்ஸ் கீழே அலசப்படுகிறது. அது தவிர, செந்தழல் ரவியின் விருப்பமாக, தமிழ்மணத்தின் 40+ பின்னூட்ட லிமிட் உங்களுக்கு பிடிச்சிருக்கா, தொடர்ந்து அது இருக்கணுமா என்றும் ஒரு புது சர்வே கீழ இருக்கு.

    1) இடஒதுக்கீடு பிரச்சனைக்கு தீர்வு என்ன என்று மக்கள்ஸை கேட்டதர்க்கு பதில் சொல்லிட்டாங்க.

    சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வேணுமா, இல்லை பொருளாதார அடிப்படையில் வேணுமா என்ற கேள்விக்கு, பொருளாதார அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு இருக்க வேண்டுமென்று பெரும்பான்மையானவர்கள் (44%) கருத்து தெரிவித்துள்ளார்கள்.
    29% சாதி அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு அமைய வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
    26% இட ஒதுக்கீடு சரியான ரிஸல்ட்ஸ் தரல. வேற ஏதாவது யோசிச்சு செய்யணும்னு சொல்லிருக்காங்க.
    மொத்தம் 102 வாக்குகள் பதிவாகியுள்ளன.
    இதில் ஒரு நல்ல விஷயம், யாரும் ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பாளி இல்லை. ஒடுங்கியவனுக்கு நன்மை விளையணும்னு தான் 100% ஆளுங்க நெனைக்கறோம். வழிமுறைகளில் தான் மாற்றுக் கருத்து இருக்கு.

    என் personal கருத்து - நானும் பெரும்பான்மையான கருத்துடன் ஒத்து போகிறேன். நான் இந்த டாப்பிக்ல கொஞ்சம் வீக்கு.
    என்னைப் பொறுத்தவரைக்கும், ஏழையா இருக்கரவனுக்கு வாழ்வதர்க்கு வழி அமைத்துத் தரணும்.
    அவன் எந்த சாதியானாலும், அவனிடம் மெரிட் இருந்தாலும் இல்லாமல் போனாலும் இதை தாமதிக்காமல் செய்யணும்.
    பாவங்க ரொம்ப காலமா கஷ்டப்படறாங்க. சாக்கடை சுத்தம் பண்ணி பிழைப்பவனுக்கும், மூட்டை தூக்கி உழைப்பவனுக்கும், கல்லுடைத்து கஷ்டப் படறவனுக்கும், அடுத்த வேளை உணவே கேள்விக்குறியாக இருப்பவனுக்கும் சீக்கிரம் நன்மை நடக்கணும்.
    Enough of this bloody dirty politics crap.
    பொருளாதார அடிப்படையில் ஏன் ஒதுக்கீடு இருக்கக் கூடாது, சாதியின் அடிப்படையில் ஒதுக்கீடு கொடுத்து ஏன் சாதியை இன்னும் தூக்கிப் பிடித்து சாதிக்கு சாகா-வரம் தரவேண்டும் என்று எந்த பதிவிலும் யாரும், இதுவரை உருப்படியா சொன்ன மாதிரி தெரியல. (no கும்மீஸ் here please :) ).

    ஒடுக்கப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு ‍- என்ன தான் தீர்வு -- RESULTS

    2) இவ்ளோ காலமா, ஷாப்பிங் போற எடத்துல, ஒரு பொருள் made in pakistanஆ இருந்தா, தேள் கொட்டின மாதிரி அதை எடுத்த எடத்திலேயே தூக்கிக் கடாசும் பழக்கம் இருந்தது. pakistan பொருள் மட்டும் இல்லை, பாக்கிஸ்தானியின் உணவகம், அவர் சம்பந்தப்பட்ட எதுவாயிருந்தாலும், இந்த தேள் கொட்டின எபெக்ட் தான்.
    அவனுங்க நம்ம விரோதிங்க என்பது, brain-wired செய்யப்பட்டதால் இந்த வினையோ?
    Made in Pakistan - பொருள் வாங்குவது O.Kவா என்று மக்கள்ஸை கேட்டதர்க்கு,
    59% கண்டிப்பா வாங்கலாம் என்றும்,
    37% வாங்கக் கூடாது , இது தேசத் துரோகம்னு சொல்லியிருக்காங்க.
    மொத்த வாக்குகள்: 90

    என் personal கருத்து - 59% ஆளுங்க தப்பில்லன்னு சொல்றீங்க. ரொம்ப சந்தோஷம். ஆனா, உங்க பேச்ச கேட்டு நான் ஒரு டீ-ஷர்ட் வாங்கி மாட்டிட்டு, நாளைக்கே கார்கில் மாதிரி அவனுங்க mis-adventure பண்ணா என்ன பண்றது? அந்த டீ-ஷர்ட் போடவே கூசுமே அதுக்கப்பறம். ( என் பாக்கி நண்பர்கள் ரொம்ப நல்ல பசங்கதான். நல்ல வேளையா அவனுங்களுக்கு தமிழ் படிக்க தெரியாது. என்னது? நான் எழுதரது தமிழ் இல்லியா? தங்கிலீஷா? அது சரி! :) )
    so, இப்போதைக்கு நான் 37% ஆளுங்க வழியே பின்பற்றலாம்னு இருக்கேன் :)

    'மேட் இன் பாக்கிஸ்தான்' பொருள் வாங்குவீங்களா? - RESULTS

    3) சிவாஜி படப் பாடல்கள், காசு கொடுத்து வாங்குவீங்களான்னு கேட்டிருந்தேன்.
    No Surprises here.
    61% ஆளுங்க, "காசா? நானா? ஹிஹி. ஒன்லி திருட்டு MP3 தான்," அப்படின்னு அடிச்சு சொல்லிருக்கீங்க.
    மொத்தம் 94 வாக்குகள் பதிவாயிருக்கு.

    ஆமா, சி.டி ரிலீஸ் ஆயாச்சே, காசு கொடுத்து வாங்கினவங்க, பின்னூட்டுங்க பாக்கலாம். download பண்ணவங்களும் ஒரு உள்ளேன் ஐயா சொல்லுங்க.

    என் personal கருத்து - இதெல்லாம் இரத்தத்துல ஊறிடுச்சுங்க. இன்னும் ரெண்டு தலைமுறை தாண்டினாதான் இந்த கேப்மாறித்தனம் மாறும்.
    RDO office, ரோட்டோர ட்ராபிக் மாமா, Registrar office, கல்லூரி சீட்டு, இங்கயெல்லாம் லஞ்சம் கொடுக்கரது எப்படி, சாதாரண மேட்டர் மாதிரி ஒரு தொனி உருவாயிடுச்சோ, அதே மாதிரி 'திருட்டு வழி' எங்கயெல்லாம் சுலபமா இருக்கோ, அதையெல்லாம் உபயோகிக்க நமக்கு கூச்சமே இல்லாம அல்வா சாப்பிடர மாதிரி ஆகிட்டு வருது.
    இந்த திருட்டு mp3, வி.சி.டி எல்லாம் எம்மாத்திரம்?
    வேணும்ணா, ரஜினி, ஷங்கர், கமல், மணிரத்தினம் மாதிரி ஆளுங்க சேர்ந்து லஞ்சத்த ஒழிக்க ஏதாவது பெரிய அளவுல social-service பண்ணட்டும், அப்பறம் வேணா நம்ம பயலுவ யோசிச்சு திருட்டு mp3 சுடரத நிறுத்துவாங்க.
    வாழ்க பாரதம் :)

    சிவாஜி படப் பாடல்கள் - சர்வே RESULTS

    4) இப்ப செந்தழல் ரவி மேட்டருக்கு வரேன்.
    தமிழ்மணத்துல ஒரு பதிவுக்கு 40 பின்னூட்டங்களுக்கு மேல வந்துட்டா, முகப்புலேருந்து தூக்கிடறாங்க.
    வெறும் 'ஜல்லி' மட்டும் அடிக்கர பதிவுகள பில்டர் செய்ய இது நல்ல வழிதான்.
    ஆனால், பாட்டுக்கு பாட்டு மாதிரி, உலக மக்களுக்கு மிகவும் தேவையான பதிவுகள் எல்லாம் 40+ லிமிட்னால வெளிச்சம் கெடைக்காம கஷ்டப் படுது :).
    அது தவிர, கொஞ்சம் லேட்டா வந்தா, சில நல்ல பதிவுகள் கண்ணில் படாமலேயே கூட போயிடுது. (வேற பக்கத்துல அத காட்டினாலும், யார் அங்கயெல்லாம் போய் பாக்கராங்க? முகப்பு முகப்புதான்.)
    தமிழ்மணம் இந்த 40+ நிலையை தொடரணுமா? உங்கள் கருத்த கீழ தட்டுங்க.




    ஜெய்ஹிந்த்!

    (பின்னூட்டுங்க. கமெண்ட் மாடரேஷன் இல்ல, சோ, யோசிச்சு ஊட்டுங்க, ப்ளீஸ். நன்றி)

    Tuesday, April 03, 2007

    புதிய பாடகிகள் அறிமுகம் + this years goal

    பாட்டுக்கு பாட்டு ஆரம்பிச்சு இதுவரை 21 பாடல்கள் ரிலீஸ் பண்ணியாச்சு.

    ஆஸ்தான அவைப் பாடகர்கள் ( நானு, ஷைலஜா, அனாமிகா, அப்பாவி, எஸ்.கே, ஷக்தி,...) எல்லாம் கொஞ்சம் பிஸியா இருக்காங்க. ( வேற சபால பாட போயிட்டாங்களா? ).
    அதனால, கொஞ்சம் ஸ்லோவா மூவ் ஆகுது தொடர்.

    சரி, என்னடா வண்டி நகராம இருக்கே, புது பாடகர்கள தேடலாம்னு இணையத்தில் தேடின போது, ஆடியோ ப்ளாகிங் (audio blogging) செய்து கலக்கிக் கொண்டிருக்கும், இரு பாடகிகள் கண்ணில் பட்டாங்க.
    Sowmya, Musical Watts என்ற இந்த இரு ப்ளாகர்ஸும், பின்னி பெடலெடுக்கறாங்க.

    Karaoke முறையில் பாடல்களை பதிந்து அருமையாக அரங்கேற்றுகிறார்கள்.

    சில பாடல்கள் எல்லாம் "அடேங்கப்பா" ரகம்.

    பாட்டுக்கு பாட்டுல, இவங்களோட ரெண்டு பாட்டை, நைஸா சேத்துட்டேன். கேட்டுப் பாருங்க.

    Audio blogging கலக்கலாக செய்து கொண்டிருக்கும், இன்னும் பலர் இருக்காங்க. (கீழே லிஸ்ட் தொகுத்துள்ளேன்).
    Karaoke டைப்பில் பாடல் பதிவது எப்படி என்று ஆடியோ ப்ளாகர் ஒருவரை கேட்டிருக்கிறேன். விவரங்கள் கிடைத்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    நேயர் விருப்பத்திலும், பாட்டுக்கு பாட்டிலும், தொடர்ந்து கலந்து கொள்ளுமாறு நம்மில் உள்ள பாடகர்களை கேட்டுக் கொள்கிறேன். (வெக்கப்படாம கோதால எறங்குங்க. பாடப் பாடத்தான், குரல் மெருகேறி, என்ன மாதிரி இல்லன்னாலும், ஓரளவுக்காவது நல்லா பாட முடியும் :)))) ).

    தமிழ்மண 40+ லிமிட்னால தேவையான வெளிச்சம் கிடைக்காமல் பா.பாட்டு இருக்குது. உங்கள் பதிவில் இந்த ( பா.பாட்டு banner உடன் ஒரு 'இலவச விளம்பரம்' கொடுத்தால், சாலச் சிறந்தது.

    பி.கு1: இந்த வருடக் கடைசியில், நம்மில் ஒரு 10 பேர் சேர்ந்து, ஒரு ரீ-மிக்ஸ் ஆல்பம் தயார் பண்ணி வெளியிடும் லெவலுக்கு நம்ம வளரணும். தயாராகுங்க. ஹிஹிஹி :)))))))))))

    பி.கு2: வில்லங்கமான சர்வே, மேட் இன் பாக்கிஸ்தான் - ஓ.கே? , சிவாஜி படப் பாடல்கள் - ஒரு $அலசல் -- சர்வேக்களில், எதிர்பார்த்ததுக்கு மாறாக (excluding சிவாஜி) results வந்திருக்கு. தீர்ப்பு விரைவில் வழங்கப்படும். வாக்காதவர்கள் வாக்குங்கள்!

    பி.கு3: Top Weirdu யாருன்னு கண்டுபிடிக்க ஒரு சர்வே போடறேன்னு சொன்னேன். Dr.எல்லெல்.தாஸு research பேப்பர்லேருந்து பத்து எடுத்து போடணும். நீங்களும் தாஸு மிஸ் பண்ணத லிஸ்ட்ல சேக்கலாம்.

    பி.கு4: வேற ஒண்ணுமில்ல, இது போதும் இன்னைக்கு :)

    ஆடியோ ப்ளாகர்ஸ் சிலரின் லிங்க்ஸ் உங்கள் பார்வைக்கு: ( I didnt verify all the links. so, dont try this at home :) )

    Sunday, April 01, 2007

    Googleன் இலவச wireless திட்டம்

    உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், இலவசமாக Wireless முறையில், இணையத்தில் இணைய, கூகிள் வழங்கும் TISP திட்டம்.

    only, google possible :)

    படிச்சுட்டு, இலவச connection தீரும் முன், sign-up for it.

    TISP பற்றிய செய்தி இங்கே - Click here

    அப்பாடி, இனி wireless செலவு மிச்சம். ஹி ஹி ஹி!