recent posts...

Thursday, August 12, 2010

பதிவுலகில் நானு - Q & A

புதுகைத் தென்றல் கேட்டுக் கொண்டதற்கிணங்கி, இங்கே என் ஆட்டோ பயோகிராஃபியை பதிகிறேன்.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
சர்வேசன் - Surveysan.

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா?
இல்லீங்கோ. புனைப் பெயர் இது.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
ஏதோ ஒரு படத்தின் விமர்சனம் தேடப் போயி, எதேச்சையாக, நெல்லை சிவா என்ற பதிவரின் டமில் பதிவு கண்ணில் பட்டது; அப்பாலிக்கா, தேன்கூடு, தமிழ்மணம், ஈ.கலப்பை, சாகரன், போட்டிக் கதைகள், அசுரன், லக்கி, வெட்டி,பாலா, செந்தழல் ரவி, செல்லா, அவிக இவிகன்னு, எல்லாம் ஒவ்வொன்றாய் பரிச்சயமாகி, நாமும் எத்தையாவது எழுதித் தொலச்சா என்னான்னு தொடங்கியது என் பதிவு.
எனக்கு பொது அறிவு கம்மி, எலக்கிய அறிவு ரொம்பவே கம்மி.
மத்த விஷயங்களிலெல்லாம் கூட அரைவேக்காடு தான்.
அலுவலகத்தில் ஆணி அதிகமாய் இல்லாதிருந்த கால கட்டம் அது. ரொம்ப ரூம் போட்டு யோசிச்சு, 'சர்வே' எடுத்து மக்களின் பல்ஸை அறிந்து, உலகுக்கு பொது சேவை செய்யலாம்னு முடிவு பண்ணி சர்வேசன் ஆரம்பிக்கப்பட்டது.


4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
பிரபலமடைய வைக்கணும்னு ப்ளான் பண்ணி ஒண்ணும் பண்ணலை. ஆனா, சர்வேசன் ஆரம்பிச்சதும், நேச்சுரலா அமைஞ்ச விஷயம், '2006ன் சிறந்த பதிவர்' தேர்ந்தெடுக்க தொடங்கப்பட்ட சர்வே.
அது, பரவலாய் பேசப்பட்டு, ப்ரபல்யம் கிட்டச் செய்தது என்று சொல்லலாம்.
அப்பாலிக்கா, ப்ளான் பண்ணி,ரெண்டு மூணு தபா நச் கதைப் போட்டிகள், தக்காளி.வெங்காயம்.உருளை புகைப்படப் போட்டி என்று நூதன முறையில் பல போட்டிகள் அரங்கேற்றப்பட்டது.
இடதுபுற, hall of fame'ல் இருப்பவர்கள் எமது போட்டிகளின், வெற்றியாளர்கள்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

சில பல சொந்த விஷயங்கள், உலக மக்களுக்கு எடுத்து விளம்பியிருக்கிறேன்.
வாழ்வில் நடந்த எட்டு விஷயங்களை எழுதச் சொன்னப்போ, எடுத்து வுட்டேன்;
என் 'கஞ்சத்'தனம் பத்தி சொல்லியிருக்கேன்.
நீதிமன்றம் ஏறி இறங்கியதை அளந்திருக்கேன், Stick shift ஓட்டக் கத்துக்கறதை பத்தி சொல்லியிருக்கேன், நண்பர்கள் பற்றி சொல்லியிருக்கேன்,
ரொம்ப முக்கியமா, தங்கமணி பத்தியெல்லாம் கூட பதிவெழுதிர்யிருக்கேன்.
எல்லாம் கூட்டிக் கழிச்சு பாத்தா, நான் முகமூடி போட்டுக்கிட்டு எழுதரதே வேஸ்ட்டுன்னு நெனைக்கறேன் ;)
இப்படி சொந்த விஷயம் எழுதினதால் ப்ரச்சனைகள் தான் அதிகம். குறிப்பா தங்கமணி பத்தி பொதுவில் எழுதியதால், ரெண்டு வாரத்துக்கு நல்ல சாப்பாடு கிடைக்கல்ல ;)


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பதிவின் மூலம், சம்பாதிச்சது, சில்லறைகள் தான் (கூகிள் ஆட்ஸ்). இதுவரை செலவானது, சில பல நூறு டாலர்கள். போட்டியில் வென்றவர்களுக்கான பண முடிப்புக்காக. ஆனா, பெரும்பான்மையான தொகை, நன்கொடைகளாகப் போயிருக்கு என்பது சந்தோஷமான விஷயம்.
எழுத ஆரம்பிச்சது, பொழுது போக்காகத்தான்.
எப்பயாச்சும் சமூக நலனுக்காகவும், சுய சொறிதலுக்காகவும், கிறுக்கறது உண்டு.
எத்தையாவது பண்ணனும்னு இன்னும் ஒரு நெனப்பு இருக்கு. ஆனா, எத்தையாவது பண்ணி முடிக்கரதுக்குள, இந்த ஜென்மம் முடிஞ்சுரும் போலருக்கு. அடிப்படையில் நான் ஒரு சோம்பேரி.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

குட்.கொஸ்ட்டியன். ஆனா, இதுக்கு முழுசா பதில் சொல்ல முடியாது.
இதுவே முகமூடி, இதுக்கு முன்னாலும் சில பல முகமூடிகள் இருந்திருக்கு. அதெல்லாம், சாய்ஸ்ல விட்டுக்க வேண்டியதுதான் ;)
சர்வேசன் - surveysan.blogspot.com
நேயர் விருப்பம் - http://neyarviruppam.blogspot.com/, பாடல்கள் அரங்கேற்ற இடம்.
சர்வேசன், ஆங்கிலத்தில் - http://justsurveys.blogspot.com/

அப்பாலிக்கா, கூட்டுப் பதிவுகள் சில:
தமிழில் புகைப்படக் கலை - http://photography-in-tamil.blogspot.com/
FixMyIndia ( இது தூங்குது ) http://fixmyindia.blogspot.com/


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

வார்த்தை வன்முறை செய்யும் சில பதிவர்களின் எழுத்துக்கள் எரிச்சலைத் தரும். ஆனா, அவங்களில் பலரும், அடங்கிட்டாங்க.
பொறாமையெல்லாம் வந்ததில்லை. ஒரு பெருமூச் வரும், சில பதிவுகளைப் படிக்கும்போது. இம்புட்டு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்காங்களேன்னு.
உ.ம் சொல்லணும்னா, டக்குனு தோணறது, தமிழ் சசி. எதை எழுதினாலும் கட்டம் கட்டி, அழகா தொகுக்கும் பா.பாலா (ஆளு, மிஸ்ஸிங் இன் ஏக்ஷன். ட்விட்டரில் பிஸி ஆயிட்டாரு), KRSன் பதிவுகள், ராமலக்ஷ்மிக்கு அசால்ட்டா வரும் கவிதைகள், அபி அப்பாவின் ஹாஸ்யம், etc.. etc..


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

Srishiv எமது முதல் பின்னூட்டக்காரர். அம்மாடி, நாலு வருஷம் ஆகப் போவுது. இன்னும், இந்த கொமெண்ட்டு வருதாங்கர எதிர்பார்ப்பு அடங்கலை.
இதுவரைக்கும், யாரும், ஆகாககாகான்னு பாராட்டியதா ஞாபகம் இல்லை. ஆனா, என்னையும் மதிச்சு சொச்சம் பேரு ஃபாலோயர்ஸா இருக்காங்களே, அத நெனச்சா, ஆனந்தக் கண்ணீரு வருது. :)
புதுகைத் தென்றல் போனா போவுதுன்னு கொடுத்த 'King' பதக்கம் ஞாபகத்துக்கு வருது. அம்புடுதேன்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

நான் ஒரு சாதாரணன். என்னைப் பத்தி தெரிஞ்சு யாருக்கும் ஒன்னியும் ப்ரயோஜனம் இல்லை. குறிக்கோளின்றிக் கெடுகிறவன்;
என்னைப் பத்தி தெரிஞ்சு நேரம் வீணாக்குவதை விட, வேர நல்லவங்களைப் பத்தியெல்லாம் எடுத்து வுட்டுருக்கேன், அதை எல்லாம் படிச்சு, பாஸிட்டிவ் திங்கிக் வளத்துக்கோங்க;
வாழ்க்கை வாழ்வதர்க்கே. அற்ப விஷயங்களுக்காக, நிம்மதியை தொலைக்காமல், ஒவ்வொரு நிமிடத்தையும், சந்தோஷமாய் செலவிடப் பழகுங்கள்!

என்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...

12 comments:

சசிகுமார் said...

அருமை

Unknown said...

//அம்மாடி, நாலு வருஷம் ஆகப் போவுது. இன்னும், இந்த கொமெண்ட்டு வருதாங்கர எதிர்பார்ப்பு அடங்கலை./

ஒளிவு.. மறைவில்லாத எதார்த்தமான பதில் ... இதுக்கு பாராட்டுக்கள்

Unknown said...
This comment has been removed by the author.
Thamiz Priyan said...

மீனு நழுவிடுச்சே... வட போச்சே... ;-))

அப்புறம் சதாமை என்ன செய்யலாம்? சர்வே காணோமோ.. சதாமைப் போட்டுத்தள்ளினதும் அதையும் காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சோ.. :)

SurveySan said...

நன்றீஸ்.

தமிழிப்ரியன், சர்வே கொம்பேனி இழுத்து மூடிட்டு என்னை எழுத்தாளனா ஆக்கிட்டாங்க ;)

SurveySan said...

லேட்ட்டஸ்ட் அடிஷன். ;)

//குறிப்பா தங்கமணி பத்தி பொதுவில் எழுதியதால், ரெண்டு வாரத்துக்கு நல்ல சாப்பாடு கிடைக்கல்ல ;)//

pudugaithendral said...

தொடர்ந்ததற்கு நன்றி,

உண்மைப்பெயரைச் சொல்லியிருக்கலாம்.
:))

ராமலக்ஷ்மி said...

உங்களை மாதிரி சரளமா ஸ்டைலா எழுத வரலையே எனும் ஏக்கம் எனக்கு உண்டு:)!

SurveySan said...

புதுகைத் தென்றல்,

////உண்மைப்பெயரைச் சொல்லியிருக்கலாம்.
:))///

;) surveysanல் மூணு எழுத்து அடங்கி இருக்கு. எனக்கும், சமீப காலமா, இந்த முகமூடிய கழட்டிடலாமான்னு ஒரு இது வருது. பாப்ப்போம்

SurveySan said...

ராமலக்ஷ்மி,

//உங்களை மாதிரி சரளமா ஸ்டைலா எழுத வரலையே எனும் ஏக்கம் எனக்கு உண்டு:)///

நம்பிட்டேன் ;)

வால்பையன் said...

நீங்க தான் விடாது கருப்புன்னு சொன்னாங்க, அதை பத்தி ஒன்னுமே சொல்லல!

:)

SurveySan said...

வால்பையன்,

விடாதுகறுப்பு மாதிரி எழுதணும்னா, நான் இன்னொரு பிறவி எடுத்து வந்தாதான் முடியும் :)