உமாசங்கர் IAS பற்றிய புலம்பல் பதிவில், மக்கள்ஸாகிய நம்மை மூன்று ரகமாய் பிரித்திருந்தேன்:
அ. லஞ்சம் வாங்குபவர்கள்.
ஆ. லஞ்சம் வாங்க வாய்ப்பில்லாததால் லஞ்சம் வாங்காதவர்கள்.
இ. லஞ்சம் வாங்க வாய்ப்பிருந்தும் லஞ்சம் வாங்காதவர்கள்.
இந்தப் பிரிவை நீங்களும் ஒத்துப்பீங்கன்னே நெனைக்கறேன். முதல் பிரிவில் இருக்கும் லஞ்ச/ஊழல் பெருச்சாளிகள், நம் அனைவருக்கும் ரொம்பவே பரிச்சயமானவர்கள். RTO ஆஃபீஸிலிருந்து, ரெஜிஸ்ட்ரார் அலுவலகம், போலீஸ் நிலையம், etc.. இங்கையெல்லாம் லஞ்சமா?/சம்பளமா? ங்கர வித்யாசமே மறைஞ்சு போகும் அளவுக்கு லஞ்சம் புரையோடிப் போயிடுச்சு.
தனியார் நிறுவனங்களிலும் லஞ்ச/ஊழல் கன்னாபின்னான்னு இருக்கு, கமிஷன் என்கிற பெயரில். சாமான்யனை டைரக்டா தாக்காது, ஆனா சுத்தி வளச்சு பாத்தால், லஞ்சம்/ஊழல் எந்த இடத்தில், எந்த உருவத்தில் வந்தாலும், கடைசியில சாமான்யன் எல்லாருக்கும் நாமம் தான் என்பதில் ஐயமே வேண்டாம்.
அரசாங்க/தனியார் பெருச்சாளிகள் செய்யும் லஞ்ச/ஊழல்கள் எல்லாம் எரிச்சலைத் தரக்கூடியவை.
சமீபத்தில் டாக்டர்கள் சிலர் செய்யும் கேப்மாரித்தனங்கள், சொந்த வட்டத்தில் இருந்து, காதில் விழுந்தது.
எவ்ளோ 'நார்மலா' இருந்தாலும், சிசேரியன் செஞ்சே ஆகணும்னு, கடைசி நிமிஷ டென்ஷன் ஏத்தி, துட்டு தேத்தும் gynecologists என்ற பெயரில் வலம் வரும் அற்ப பெருச்சாளி கழிசடை டாக்டர்கள், நம்மூரில் பலப் பல.
'கமிஷன்' துட்டுக்காக, அந்த மாத்திரை, இந்த மாத்திரை, இந்த டெஸ்ட்டு, அந்த டெஸ்ட்டுன்னு, பெரிய லிஸ்ட்டு கொடுத்து டவுஸரை கழட்டும் கேடி டாக்டர்களுக்கும் பஞ்சமே இல்லை.
அரசாங்க மருத்துவமனையில் வேலை செய்யும் தில்லாலங்கடி டாக்டர்கள், எல்லாருக்கும் ஒரு படிமேல். இவங்க சொந்தமா ஒரு கடையும் போட்டு வச்சிருப்பாங்க. சொந்தக் கடைக்கு வரும் கஸ்ட்டமர்ஸ்/நோயாளிகளை, சில சமயம், அரசாங்க மருத்துவமனைக்கு, வரச் சொல்லுவாங்க. அரசாங்க மருத்துவமனையில் இருக்கும் மருந்து மாத்திரை/இஞ்செக்ஷன் எல்லாம் எடுத்துப் போட்டுட்டு, காசை வாங்கி சொந்த ஜோபீல போட்டுப்பாங்க.
இந்த கேப்மாரித்தனம், 'சாதா' டாக்டர்கள் மட்டுமே செய்யும் வேலையில்லை. மெத்தப் படித்த டாக்டர்களும் இப்படித்தான்.
எனக்குத் தெரிந்த ஒருவருக்கு சமீபத்தில் ஒரு ஆப்பரேஷன் செய்ய வேண்டிய நிர்பந்தம். அங்க இங்க விசாரிச்சு எந்த டாக்டர் நல்லவரு, எந்த ஆஸ்பத்திரி நல்லதுன்னு விசாரிச்சாங்களாம்.
ரொம்பத் தெறமையான டாக்டரு ஒருத்தர் அரசாங்க ஆஸ்பத்திரில இருக்காரு. எல்லா வசதியும் அரசாங்க ஆஸ்பத்திரியலியே இருக்கு, அவருகிட்ட பண்ணிக்கோங்க, அவருக்கு வெறும் 20,000 கொடுத்தா போதும், சூப்பரா செஞ்சுக் கொடுத்துடுவாருன்னு சொன்னாங்களாம்.
படிச்சவங்களும், படிக்காதவங்களும், போன ஜெனரேஷனும், இந்த ஜெனரேஷனும், வருங்கால ஜெனரேஷனும், இப்படி ரூம் போட்டு யோசிச்சு யோசிச்சு ஊழலையும்/லஞ்சத்தையும் விடாம கடை புடிச்சுக்கிட்டே இருந்தா, உமாசங்கர்கள் எல்லாம் கூட 'adjust' செஞ்சுக்க வேண்டிய நாள் ஒரு நாள், நிச்சயமாய் வந்து தொலைக்கும்.
என் பங்குக்கு, இந்த லஞ்ச டாக்டர்கள் சிலரை பற்றி புகார் கொடுக்க முடிவு செய்திருக்கிறேன்.
அட்லீஸ்ட், ஒரு enquiry ஏதாவது செய்ய வச்சு, மண்டை கொடைச்சலாவது கொடுக்க வைக்கலாம்னு எண்ணம்.
ஒரு நிமிஷமாவது, யோசிக்க வைக்கணும் இவங்களையெல்லாம், கை நீட்டுவதற்க்கு முன்.
2 comments:
ஈ.
ஒன்னும் சொல்றதுக்கு இல்ல சர்வேசன். இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ சிகிச்சைன்னு தம்பட்டம் அடிசிக்கற மருத்துவமனை டெல்லி கிளைல ஒரு சிகிச்சையும் சென்னை கிளைல ஒரு சிகிச்சையும் ரெகமண்டு பண்றாங்க... ரெண்டுமே 100% வேறுபடுது... உயிர் மேல இருக்கற பயத்துல அவங்க சொல்ற எல்லா டெஸ்டையும் எடுக்க வேண்டியதா இருக்கு. வேணாம்னு போகவும் மனசு வரலை... இந்த பலவீனத்த தான் அவங்க பணமா மாத்தறங்க...
Post a Comment