recent posts...

Tuesday, August 17, 2010

பள்ளி கால ஜோக்கு

சமீபத்தில், அருகாமையில் உள்ள நண்பர்கள் சிலர் ஒன்று கூடி பழைய கதை பேசிய போது, பள்ளி காலத்து நினைவுகளை அளவளாவிக் கொண்டிருந்தோம்.
அநேகமாய் எல்லோருக்கும், வாழ்வில் மிகப் பிடித்த காலம், பள்ளி பயின்ற காலமாய் தான் இருக்கும், அதுவும், எட்டாம் வகுப்பிலிருந்து +2 வரை ரொம்பவே பிடித்த காலமாய் இருந்திருக்கும்.
அளவளாவிய கும்பலில் எல்லோருக்கும் அப்படித்தான்.

அதுவும், தமிழ் வாத்தியார்களும், ஆசிரியைகளும், அனைவரின் வாழ்விலும் பசுமையான பல சுவாரஸ்ய நினைவுகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

பல நினைவுகளில், பரீட்சை எழுதியது, பிட் அடித்தது, அடுத்தவனை பார்த்து காப்பி அடித்தது, புக்கை மடியில் வைத்து காப்பி அடிப்பது, ஷூவுக்குள் பிட் வைத்தது, உச்சா ரூமில் புக் வைத்து, இடையில் உச்சா போய் படித்து வருவது என, வகைதொகையாய் காப்பி அடித்திருக்கிறார்கள் எங்கள் கும்பலில் எல்லோரும். நான் கெமிஸ்ட்ரியில் வீக்கு. பெரிய லெவலில் காப்பி ஆத்தியதால்தான் ஒவ்வொரு முறையும் முன்னேறி வந்திருக்கிறேன்.

கணக்கில் ஷார்ப்பு. +2 பரீட்சையில், என் கணக்கு பேப்பரை நண்பனுக்குக் கொடுத்து, மணி அடிக்கும் வரை திரும்ப வராததால், எல்லா பதில்களையும் சரி பார்க்க முடியாமல், சில்லி மிஸ்டேக்கில், 1 மதிப்பெண் இழந்து 100%ஐ தவற விட்டது (normalக்கு பதிலா tangent வரை கொண்டு வந்து, 1/x என்று மாற்றாத சிறு பிழை), கடைசி மூச் வரை மறக்க முடியாத நிகழ்வு. ஹ்ம்!


ஆங்கில வாத்தி, ஒரு வார்த்தையைச் சொல்லி, இதற்கு அர்த்தம் சொல்லுங்கன்னு, ஒவ்வொருத்தரையா எழுப்பி நிக்க வெப்பாரு. ஒரு பயலுக்கும் தெரியாது. மொத்த கிளாஸும் நிக்க, ஒரே ஒரு வடக்கிந்தியப் பொண்ணு மட்டும் எல்லா கேள்விக்கும் டான் டான்னு பதில் சொல்லி, ஸ்டைலா ஒக்காரும்.

இங்க் அடித்து, சைக்கிளில் காத்திறக்கி, அடுத்தவன் டிபின் பாக்ஸை காலி பண்ணி, ஜாலியாய் திரிந்த காலங்கள். அருமை அருமை.

ஹ்ம். இதையெல்லாம் பேசிக்கிட்டு இருக்கரப்போ, நண்பர் ஒருவர், அவரின் வகுப்பு மாணவனைப் பத்தி சொன்னாரு.
பயல், செம ரெகள பார்ட்டியாம். பரீட்சைக்கு, பிட்டு காப்பியெல்லாம் அடிக்க மாட்டானாம்.
படிப்பறிவும் கம்மியாம். ஆனா, என்ன கேள்வியிருந்தாலும், அளந்து கட்டி கதை எழுதுவாராம்.
அதாவது, பாபர் பத்தி எழுதணும்னா, முகலாய அரசர்கள் எல்லார் பேரும் போட்டு, கவாஸ்கர், கபில்தேவ் விளையாடியதையும் சேத்து, பெருசு பெருசா எழுதுவாங்களே அந்த கோஷ்டியாம் இவரு.
ஒரு தபா பரீட்சை ஹாலில் எல்லாரும் ஒக்காந்தாங்களாம்.
கேள்வித் தாளும் எல்லாருக்கும் கொடுத்தாங்களாம்.
எல்லாரும், கேள்வித் தாளை பாத்துக்கிட்டு இருக்கரப்போ, நம்மாளு, மட மடன்னு எழுத ஆரம்பிச்சாராம்.
அப்பரம் என்ன நெனச்சாரோ தெரீல, திரும்பி, பின் பென்ச்சில் இருக்கும் என் நண்பரிடம்,
"டேய் மச்சி, க்வொஸ்ட்டியன் பேப்பர் டஃப்பா இருந்தா சிக்னல் கொடு, நான் பாட்டுக்கு, ஈஸின்னு நெனச்சு, நெறைய எழுதிக்கிட்டே இருக்கப் போறேன்"ன்னு சொன்னாராம்.

அவ்வ்வ்!

10 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

என்னா எழுதி கிழிச்சே அப்படீன்னு யாரும் கேக்கபுடாது பாருங்க.. அனேகமா இப்ப அவரு பிரபல பதிவரா இருக்கணும்..

SurveySan said...

கண்டிப்பா பதிவரா இருக்க வாய்ப்பிருக்கு. கேட்டுப் பாக்கறேன் என்ன பண்றாருன்னு. பதிவிருந்தா, ஃபாலோ பண்ண ஆரம்பிக்கறேன். கண்டிப்பா சுவாரஸ்யமா இருக்கும் :)

SurveySan said...

நண்பர் சோக்கை சொல்லும்போது, எல்லாரும் வுழுந்து வுழுந்து சிரிச்சோம், கண்ணுல தண்ணி வரவரைக்கும்.
நான் எழுதினதை படிக்கும்போது அப்படிப்பட்ட சிரிப்பு வருதா? வரலன்னாலும், அப்படி சிரிங்க. சிரிக்கக் கூடிய ஜோக்குதான் இது :)

புதுகைத் தென்றல் said...

இனிமை நிறைந்த நினைவுகள் தான்.
அந்த ஜோக்கு மாதிரி இல்லாட்டியும் நானும் நிறைய்ய பக்கத்துக்கு எழுதின ஆளு தான். ஆனா மேட்டர் இருக்கும். அதை டெவலப் செஞ்சு நிறைய்ய பக்கத்துக்கு எழுதுவேன். பதிவர் ஆகும் அம்சம் அப்பவே இருந்திருக்கு. :))

ராமலக்ஷ்மி said...

//அதாவது, பாபர் பத்தி எழுதணும்னா, முகலாய அரசர்கள் எல்லார் பேரும் போட்டு, கவாஸ்கர், கபில்தேவ் விளையாடியதையும் சேத்து, பெருசு பெருசா எழுதுவாங்களே அந்த கோஷ்டியாம் இவரு.//

இது சூப்பர். எங்கள் பள்ளியில் ஒரு சரித்திர ஆசிரியையை அப்படி சொல்லுவார்கள். முதல் 4 வரியும் கடைசி 4 வரியும் கேள்விக்கு ஏற்ற முன்னுரை முடிவுரையாய் எழுதிவிட்டு நடுவில் அப்போதைய பட விமர்சனங்களைக் கூட எழுதலாம் என. பரீட்சித்துப் பார்க்கும் தைரியம் என் போன்ற பலருக்கு இல்லாமல் போனாலும் அதில் வெற்றி கண்டு முழு மதிப்பெண் வாங்கிப் பெருமைப்பட்ட மாணவியரின் ஆன்சர் பேப்பர்களை விழுந்து சிரித்து ரசித்திருக்கிறோம்:)! நல்ல கொசுவத்தி.

SurveySan said...

புதுகைத் தென்றல், ராமலக்ஷ்மி,

டாங்க்ஸ் :)
பக்கம் பக்கமா எழுதரவங்கள கண்டாலே எனக்குப் பிடிப்பதில்லை, பரீட்சையிலும் சரி, பதிவுலகிலும் சரி ;)

Anonymous said...

我是天山,等待一輪明月。......................................................................

எஸ்.கே said...

நன்றாக இருந்தது அந்த ஜோக்!

ராசராசசோழன் said...

விழுந்து விழுந்து சிரித்தேன்...அந்த ரகளை மாணவனை நினைத்து

SurveySan said...

நன்றீஸ் வருகைக்கு, எஸ்.கே , ராசராசசோழன்,